இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 04, 2022

ஆயுதபூஜை

 
     ணக்கம் நட்பூக்களே... உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எமது இதயப்பூர்வமான ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். ஆயுதமும் நமக்கு இறைவனே என்பது நமது முன்னோர் வாக்கு. உலகம் அமைதி பெற உலக மேலாளன் அருள் பெறுவோம்.
 
சிற்பிக்கு உளி இறைவன்
நெசவாளருக்கு தறி இறைவன்
கொல்லருக்கு இரும்பு இறைவன்
விவசாயிற்கு கலப்பை இறைவன்
வியாபாரிகளுக்கு தராசு இறைவன்
கொத்தனாருக்கு கரண்டி இறைவன்
மின் ஊழியருக்கு திருப்புளி இறைவன்
ஓட்டுனர்களுக்கு வாகனமே இறைவன்
தொழிலாளருக்கு இயந்திரமே இறைவன்
எழுத்தாளர்களுக்கு எழுதுகோலும் இறைவன்
எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையும் இறைவனே...
 
‘’தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’’
 
ஆயுதங்களுக்கு பூஜை செய்யும் உலகிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் எல்லா மகிழ்வும் பெற்று... 

வாழ்க வளமுடன், நாளும் நலமுடன்.
 
கில்லர்ஜி தேவகோட்டை

40 கருத்துகள்:


  1. கில்லர்ஜி அட்மின் போட்ட பதிவு போல இருக்குதே

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். வரிகளில் இருக்கும் மரியாதை காணொளியில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சரி செய்து விட்டேன்

      நீக்கு
    2. காணொளி? எனக்கு எதுவும் வரவில்லை. தாமதமான வாழ்த்துகள்.

      நீக்கு
    3. காணொளி நீக்கி விட்டேன்

      நீக்கு
  3. இணைய பதிவாளர்களுக்கு கைபேசியும் கூகுளுமே இறைவன்... இல்லையா?

    பதிலளிநீக்கு
  4. நிறைவான பதிவு..

    அன்பின் நல்வாழ்த்துகள்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. ரென்னாடுடைய சிவனே போற்றி..

    திருநீற்றின் வாசம்
    இங்கே மணக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. எழுத்தாளர்களுக்கு எழுதுகோலும் இயற்கையுமே இறைவன்....

    அருமை..

    பதிலளிநீக்கு
  7. ஆயுத பூஜை கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இனிய சரஸ்வதி பூஜை, மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள். கவிதை வரிகள் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் ஜி !

    இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்!
    நாமளும் நம்ம கணனிக்கும் கைப்பேசிக்கும் ஆயுத பூஜையைப் போட்டிட வேண்டியதுதான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே தங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  10. கவிதையிலேயே "படிகள் அமைத்து" கொலு வைத்து விட்டீர்கள்.அருமை!......ருத்ரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கவனப்பார்வைக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  11. ஏன் ஆயுதபூஜைக்கு சிறீ சிவசம்போ அங்கிள் எதுவும் சொல்லவில்லைப்போலும்??:) ஒருவேளை திருந்திவிட்டாரோ ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா நலமா ?
      உங்கள் அங்கிள் டாஸ்மாக் கடையில் இருப்பாரோ ?

      நீக்கு
  12. எல்லா செல்வமும் வளமும் சந்தோசமும் எனக்கே கிடைத்துவிட்டால் மற்றவர்கள் அல்லல்படக்கூடாது என்ற பரந்த மனப்பானமையால் ஆயுத பூஜை கொண்டாடவில்லை நண்பரே! மிசின்களை சுத்தப்படுத்தினால் அழுக்கு போய்விடும்..பிறகு ஓட்டுவதற்கு மக்கர் செய்யும் என்ற அனுபவத்தால் அதற்கும் பூஜை செய்யவில்லை... வெறும் பொரி மட்டும் மற்றவர்களுக்கு பகிரப்பட்டது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பொரி கொடுத்து வாடிக்கையாளர்களை பொறி வைத்து பிடியுங்கள்.

      நீக்கு
  13. அருமை. முதலில் அடுப்புக்கு வயிறுதானே முதல் :))
    ஆயுத பூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  14. நல்லா எழுதியிருக்கீங்க கில்லர்ஜி...

    கொலுப்படி போல!!! அமைப்பு கிட்டத்தட்ட..!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நல்லவேளை குழப்படி போல... என்று சொல்லவில்லை.

      நீக்கு
  15. கவிதைப்படிகளில் ஏற்றிய தமிழன்னையின் கொலு மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி. பெருகட்டும் உங்கள் கற்பனை வளம்!

    பதிலளிநீக்கு