இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 16, 2022

உண்மையை உடையப்பா

 ர் வெற்றிகரமான திரைப்படம் எடுப்பதற்கு அடித்தளம் எது ? கதைக்களம் உண்மைதானே... அதாவது கதாசிரியர் அதற்கு முன் பணம் வேண்டும் என்பது வேறு விடயம். பிறகு கூத்தாடன், கூத்தாடி, இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், புகைப்படக்காரர்கள், வசனகர்த்தா, நடன இயக்குனர், சண்டைக்காட்சி அமைப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி, இன்னும் எத்தனையோ தொழில்நுற்ப கலைஞர்கள் இணைதல் வேண்டும்.
 
கதாசிரியர் கதை எழுதி எல்லோருக்கும் பிடித்தவுடன் பெயர் சூட்டுவார்கள் எப்படி ? கதையோடு இணைந்து, இசைந்து வருவது போல்தான் வைப்பது வழக்கம். இதில் முக்கியமானவர் தயாரிப்பாளர் என்னும் முதலாளி. இவர்கள் இல்லை என்றால் திரைப்படத் தொழில் கிடையாது இதுதான் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்றைய நிலைப்பாடு என்ன ? சாநாயகன் என்பவர்கள் நடிப்பார்கள் இவர்கள் முதல் படத்தில் தயாரிப்பாளரிடம் பவ்யமாக இருப்பார்கள். இந்த அத்தனை தொழிலாளிகளின் உழைப்பில் திரைப்படம் வெற்றி பெற்று விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
 
அந்தப்படம் தமிழகத்தில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் என்னும் அறியாமைகளால் கசாநாயகனுக்கு மன்றங்கள் அமைப்பார்கள் இதனுடைய முதலாவது முதல் யாருடையது தெரியுமா ? இந்த அறியாமைகளின் தந்தையர்களின் உழைப்பு. பிறகு இவர்கள் அந்தக் கசாநாயகனைத் தேடி சென்னைக்கு போவார்கள், நாங்கள் உங்களது தீவிர ரசிகர்கள் மன்றங்கள் அமைக்கிறோம் நீங்கள் வந்து திறந்து வையுங்கள். என்றதும் அவனுகளும் உங்களைத்தான்டா எதிர்பார்த்தேன் என்று அவர்களுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து குறிப்பிட்ட தேதியில் வந்து திறப்பு விழா நடத்தி விட்டு போவதுதான் கடைசி அடுத்த படமும் வெற்றி.
 
பிறகு இவனது படங்களுக்கு பதாகைகள் வைப்பதும், பாலூற்றுவதும், அதனால் சிலர் தனக்கே பாலூற்றிக் கொண்டு தன்னை பாழாக்கி கொள்வதும் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழர்கள் செய்து வருகிறார்கள். அந்தக் கசாநாயகன் சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி கோடிகளை கடந்து போய்க் கொண்டே........... இருக்கிறான். இவன் நிறுத்த மாட்டான் காரணம் அறியாமை ரசிகர்கள். ஊர் முழுக்க மட்டுமல்ல, உலகம் முழுக்க தனது பணத்தை முதலீடு செய்வான். சரி இவனது இன்றைய நிலைப்பாடு என்ன தெரியுமா ?
 
முதலில் இவனை வைத்து படம் எடுத்தாரே... அவர் இவனது படப்பிடிப்பு தேதிக்காக அலைந்து கொண்டு இருப்பார். இவனுக்காக வசனகர்த்தாக்கள் பஞ்ச் டயலாக் என்ற பெயரில் அரசியல் பிரவேசம் செய்வது போல எழுதிக் கொடுப்பார்கள். இவர்கள் மட்டுமா ? பாடலாசிரியர்களும் இவனுகளுக்காக தனது அறிவை, புலமையை இந்த அறிவற்ற ஜீவிகளுக்காக மனசாட்சியை அடகு வைத்தோ அல்லது கிரையத்துக்கோ இவனுகளிடம் கொடுத்து விடுவார்கள். நானறிய பண்டைய அரசர் காலம் முதல் இந்தப்புலவர்கள் தனது வயிற்றுப்பசிக்காக அறிவை விற்றே வாழ்ந்து வந்து இருக்கின்றார்கள். அதனுடைய வம்சா வழியே இந்தக்கால கவிஞர்களும் இவ்வழி வாழியவே இவர்களது செயல் என்று சொல்ல வலிக்கிறது எம் மனம்.
 
சரி இதெல்லாம் கசாநாயகன் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குள் வந்து நிற்கிறது. அதாவது இவர்களின் திட்டத்தைப்பற்றி மூத்த பத்திரிக்கையாளர் திரு சவுக்கு சங்கர் அவர்கள்தான் அடிக்கடி சொல்வார். ரிடையர்ன்மெண்ட் ஜாப் ஆம் அதாவது தனது திரைப்பட மார்க்கெட் சரிந்து விட்டால், அடுத்த வருமானத்திற்காக மட்டுமல்ல, தனது சம்பாத்தியத்தை பாதுகாத்துக் கொள்ளும் திட்டம்தான் இந்த அரசியல் வருகைக்கான வார்த்தை ஜாலங்கள். இதன் வல்லமை நமது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு புரியாது காரணம் இவர்கள் குஞ்சுகள். சமீபத்தில் ஒர் கட்டுரையில் படித்த வாசகம் ஞாபகம் வருகிறது இதோ...
 
//திரைப்படக் கூத்தாடிகள் சொன்னால் மலத்தைக்கூட சர்க்கரைப் பொங்கல் என வாங்கி சாப்பிடும் ஒரு பெருங்கூட்டம் இங்குதான் உள்ளது//
 
முன்பு நிகழ்ந்த நிகழ்வு இவர்தான் கசாநாயகன் என்று தீர்மானம் கசாவும் வந்து அமர்ந்து இருக்கிறார் கூட்டம் எதற்காக தெரியுமா ? பெயர் சூட்டுவதற்கு எத்தனையோ நபர்கள் எவ்வளவோ பெயர் சொல்கிறார்களாம் கசாவிடமிருந்து இசைவு வரவில்லை. காலையில் தொடங்கியது மதிய உணவும் வந்து எல்லோரும் உண்டு களித்தாகி விட்டது மீண்டும் கூட்டம் ஆரம்பம். எவ்வளவோ நபர்கள் எத்தனையோ பெயர் சூட்டுகிறார்களாம். கசாவிடம் இசைவில்லை. திடீரென்று கசா எழுந்து நிற்கிறார் எல்லோரும் திகைத்து பார்க்கிறார்களாம். வடையப்பா அவ்வளவுதான் வாயிலிருந்து முத்து உதிர்ந்ததும் கூட்டம் ஆர்ப்பரித்ததாம் கசா வெளியேறி ஃபாரின் பென்ஸில் ஏறி பறந்து விட்டாராம்.
 
உடனே கதைக்குழுவினர் வடையப்பாவை சுடத் தொடங்கினார்களாம். அந்தப் படத்தையும் மகா வெற்றி பெறத்தானே வைத்தோம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? மக்களை மாக்கான்களாக இந்த திரைப்படக் கூத்தாடிகள் நினைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். கதைக்குத்தானடா பெயர் வைக்க வேண்டும், பெயருக்கு கதை எழுதுறீங்களேடா... ரொம்ப படுத்தாதீங்கடா... எங்களுக்கு மனசு வலிக்குதுடா தமிழனை மனுஷனாக பாருங்கடா...
 
Chivas Regal சிவசம்போ-
நேர்ல, உட்கார்ந்து பார்த்தது போலவே சொல்றாரே.. இதைத்தான் கூட்டதுல கட்டிச் சோற்றை அவுத்து விடுறதுனு சொல்றது.
 
காணொளி

Share this post with your FRIENDS…

41 கருத்துகள்:

  1. உடையப்பா
    உடையப்பா
    உண்மையைப் போட்டு
    உடையப்பா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி முடிந்தவரையில் உடைப்போம்.

      நீக்கு
  2. ஜி.. நீங்களும் உங்க தளத்தை உள்ளாடை வெளம்பரத்துக்கு உட்டுட்டீங்களா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வீட்டு விளம்பரங்கள்தாம் வருகிறது. ஒரு தடவை தப்பித் தவறி க்ளிக் பண்ணிட்டோம்னா எங்க போனாலும் இத்தகைய விளம்பரங்கள் வரும்.

      நீக்கு
    2. குவைத்ஜி
      அந்த வகையானவைகளை தடுத்து இருக்கிறேனே...

      நீக்கு
    3. தமிழரே தீவாளி நேரத்துல எதையாவது வாங்கிப் போடுங்க...

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவில் தங்களின் ஆதங்கம் புரிகிறது. அறியாமையில் உழலும் மக்களை திருத்த அந்த மகேசன்தான் வர வேண்டும். காணொளியும் கண்டேன். தெளிவான பேச்சு. அனைவரும் புரிந்து கொண்டால் நலம். வேறு என்ன சொல்வது?

    தங்கள் பதிவில் இப்போது ஒரே விளம்பரமாக வருகிறதே? கைப்பேசியில் படிக்கும் போது கொஞ்சம் தடுமாற்றம் தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி

      தீவாளி நேரம் யாவாரம் ஆவது போல...

      நீக்கு
  4. காணொளியில் // ஒரு மனிதனின் செயல் // என்று சொல்வதெல்லாம் அற்புத வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் சிறந்த மனிதர்.

      நீக்கு
  5. நல்ல பதிவு. ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    காணொளியில் நன்றாக சொல்கிறார்.
    விளம்பரங்கள் உங்கள் தளத்தில் வருகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ காணொளி கண்டமைக்கு நன்றி. ஆம் விளம்பத்துக்கு அனுமதி கொடுத்தேன்.

      நீக்கு
  6. உள்ளாடை விளம்பரங்கள் தானே ஊரைக் கெடுப்பதற்கு..

    இங்கேயும் அப்படியோ - என்று நினைத்து விட்டேன்...

    சரி.. வந்தால் பார்த்துக் கொள்ளலாம் (?)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜி ஆபாச விளம்பரங்கள் வராது அதனை தடுத்து இருக்கிறேன்.
      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. கில்லர்ஜி சூப்பர் பதிவு. நீங்க கூவுவதைக் கூவுங்க. வேற என்ன சொல்ல?

    திரைப்படம் பார்ப்பதில் தவறில்லை ஆனால் கதாநாயக நாயகிகளின் பின்னே அலைவதுதான் அதிலேயே மூழ்கி இருப்பதுதான். தங்கள் வாழ்க்கையையே தொலைப்பதுதான்..வேதனை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் திரைப்படத்தை பொழுது போக்காக உபயோகப்படுத்துவதில் தவறில்லை.

      நீக்கு
  8. பதிவு பார்த்து விளம்பரம் வருதோ!!! ஹாஹாஹாஹா மேல கீழ சைட்ல எல்லாம் செருப்பு.....டேய் எவனாச்சும் காலைல 4 மணிக்கு எந்திரிச்சு சினிமா பாக்க போனீங்க....செருப்பு பிஞ்சுரும்!! செருப்படி கிடைக்கும்னு மறைமுகமா சொல்வது போல!!!!!

    காணொளியில் உங்களின் குரல் அவர் மூலம் ஒலிக்கிறது!! குரல் என்பது நீங்கள் சொல்லும் கருத்துகள்...

    காணொளி செம. அருமை. ..அவர் கேட்பது போல காலைல சினிமா பார்க்கப் போறவன் வீட்டில அம்மாக்கு உதவியிருப்பானா....அதை விடுங்க அவன் தன் வாழ்க்கையை முன்னேத்திக்கணும்னு நினைச்சு படிக்கலாமே எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு...

    என்னவோ போங்க. கீதாக்கா நேத்து ஆதங்கப் பதிவு போட்டிருந்தாங்க.. சினிமாவும் அந்த நிகழ்வுகளுக்குக் காரணம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் காணொளியில் இருப்பவரிடம் நான் பேசும்போது இதே வார்த்தையைத்தான் சொன்னேன். எனது எண்ணங்களை உங்கள் வார்த்தையில் கேட்பது போலிருந்தது என்று.

      என்னது திருச்சிகாரவுங்க... திரைப்படத்தைப்பற்றி பதிவு போட்டாங்களா ? நான் கவனிக்கவில்லையே... இதோ போகிறேன்.

      நீக்கு
  9. அந்த பெயர் வைத்த படம் படையப்பாவா....அதுக்கா இவ்வளவு ஆர்பாட்டம் ஒரு பெயர் வைக்கவா...!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படையப்பா என்று நான் எப்ப சொன்னேன் ? வடையப்பா என்றுதானே சொன்னேன். தேவையில்லாமல் என்னை வம்பில் மாட்டி விடாதீர்கள்.

      நீக்கு
  10. அருமையாக சீறி இருக்கிறார் அறத்தமிழன்.  நூறு சதாகிவிதம் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நல்ல கருத்துகளை சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  11. இன்று உங்கள் தளத்தைத் திறந்தால் ஒரே விளம்பர மயம்.  மேலே கீழே என்று செல்போன் மனை விற்பனை விளம்பரங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தீவாளிக்கு அள்ளுங்க... அள்ளுங்க... அள்ளிக்கிட்டே இருங்க.

      நீக்கு
  12. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கில்லர்ஜி பாசையில மொழி பெயர்ப்புப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை என்னால..:))
    நடிகை - கூத்தாடி
    நடிகர் - கூத்தாடன்.. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா, உங்களுக்கு கூத்தாடன்-கூத்தாடி காணும்போது நக்கலாக தெரியுதோ ?

      நேரில் கண்டால் அங்கிள் என்று ஜொள்ளுவது....

      நீக்கு
    2. சே..சே.. நேரில் எப்ப காணப்போகிறேன் கில்லர்ஜி:)).. திருப்பதி வெங்கடேஸ்வரரைக் கூடப் பார்த்திடலாமாம் ஆனா இவிங்களைப் பார்க்க முடியாதாமே.. ஹையோ கில்லர்ஜி கலைக்கப்போகிறார்:)).. அது.. மரியாதை மனதில இருக்குது:)).. அங்கிள் அண்ணா ஆன்ரி தேன்ன்ன்ன்:))

      நீக்கு
    3. நீங்கள் கூத்தாடிகளுக்கு மரியாதை கொடுப்பீங்களா ?

      நீக்கு
    4. டெபினிட்லி:)) டெபினிட்லி:)).. ஹையோ ஆண்டவா நான் ஆக்கிஸ்டானுக்கே ஓடிடுறேன்ன்ன் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    5. நல்ல வார்த்தை பேசுங்க... எதற்கு ஆக்ஸிடெண்டு ?

      நீக்கு
  13. எதை எப்பூடிப் போட்டுடைத்தாலும் கில்லர்ஜி, அது நடப்பதுதான் நடக்குது, அது என்னமோ போன பிறப்பில வாங்கி வந்த வரம், சாபம்... ஆரும் சொல்வதைச் சொல்லுங்கோ என, அவர்கள் கோடி கோடியாக உழைத்துக் கொண்டிருக்கினம் இதுதானே உண்மை, இந்த ஜென்மத்தில் பிறந்த பயனை அனுபவிக்கிறார்கள்...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பிறவிப்பயன்தான் வேறென்ன சொல்வது ? இருந்தாலும் இம்பூட்டு ஜம்பலம் ஆவாது.

      பாக்கிஸ்தானிலிருந்து... வருகை தந்தமைக்கு நன்றி அதிரா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாகிஸ்தானிலிருந்தோ:)).. மெதுவாப் பேசுங்கோ கேட்டிடப்போகுது:), எங்கட பிரதமர் அறிவிச்சிருக்கிறா.. பாகிஸ்தானிலிருந்து வந்தோரைத் திருப்பி அனுப்பப்போகிறேன் என...

      நீக்கு
  14. நம் கதாநாயகர்கள் கில்லர்ஜியின் கசையடியால் கசாநாயகர்களாக துவண்டுபோனது பார்க்க பரிதாபம். பாவம் நம் கதாநாயகர்கள்... சாரி கசாநாயகர்கள்...

    பதிவுலக நாயகன் கில்லர்ஜி அவர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!!... ஹேப்பி தீபாவளி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையில் கசையடி கொடுக்க வேண்டியது கசா''நாயகர்களுக்கு அல்ல!
      அறியாமை ரசிகன்களுக்குதான்.

      தங்களுக்கும் இனிய தீபஆவளி வாழ்த்துகள்.

      நீக்கு
  15. விளம்பரங்கள் எனக்குத் தெரியலை. பரவாயில்லை. உங்கள் பதிவில் உண்மையில் திருந்த வேண்டியது ரசிகர்களே! உண்மையைப் புரிஞ்சுக்காமல் கண்மூடித்தனமாகக் கதாநாயகர்களை ஆதரிக்கிறாங்களே! :( நீங்க எவ்வளவு சொன்னாலும் மேலும் மேலும் இதான் நடக்கும்.நடக்கிறது/நடக்கவும் போகிறது. திருந்தாத ஜன்மங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விளம்பரங்கள் தெரியவில்லையா ? நீங்கள் கல்யாண் ஜூவுல நகைகளை அள்ளி எனக்கும் பலன் கிடைக்கும் "னு நினைச்சேனே...

      நாம் என்னதான் கத்தினாலும் இவனுகள் காதில் ஏறாது.

      நீக்கு
  16. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு. அதற்கு மேல், கசாநாயகனுக்கு பால் ஊத்துவது, கொடி பிடிப்பது, கதாநாயகிகளுக்கு கோவில் கட்டுவது என்பது, தங்கள் தலையில் களிமண் மாத்திரம் இருப்பதால், தங்கள் இருப்பை உலகுக்குத் தெரியவைக்க நினைக்கும் அசடுகளின் வேலை. துரதிருஷ்டவசமாக ஏராளமான அசடுகள் தமிழகத்தில் உள்ளனர். வேறு என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      இந்த அசட்டு கசடுகளை களை எடுக்கணும்.

      அதுக்கு ஒருத்தன் பிறக்காமலா இருப்பான் ?

      நீக்கு