கருவக்
காட்டுக்கு விறகு வெட்ட போற புள்ளே
நானும் வாறேன் ஒத்தாசையா வெட்டித் தாறேன்
கருவாப்பய நீ வெட்டியாக நீயும் வேணாம்
கணக்கு பண்ணத்தானே நீயும் வாறே தெரியாதா
உதவி செய்யத்தானே
சத்தியமா சொல்றேன்டி
பக்குவமா புரிஞ்சு நீயும் மச்சானை கூட்டிப்போடி
உபத்திரமாகத்தானே நீ
இருப்பே கருவாயா
உன்னை எனக்கென்ன தெரியாதா நீ போயா
பொழுதடைஞ்சா பொரி உருண்டை வாங்கித் தாறேன்
பொன்னுத்தாயி என்னை பக்குவமா கூட்டிப்போடி
பொல்லாத ஆளு நீ பொரி
உருண்டை எனக்கெதுக்கு
பொடி நடையா நீயும் வந்த வழி மடங்கிப் போயா
விறகு கட்டை தூக்கி
வாறேன் என்னை விரட்டாதடி
ராசு மாமா பெத்தெடுத்த நாட்டுக்கட்டை நீதான்டி
முறுக்கு மீசக்காரா அத்தை
பெத்த மூர்த்தி மச்சான்
மூர்க்கத்தனமான செஞ்சுடுவே முந்தாநாளு போல
கல்லு மனசுக்காரி கலட்டி
நீயும் விடாதடி
கன்னி உன்னை கண்ணியமா கட்டி காப்பேன்
கள்ளு குடிச்சு புட்டு
மல்லுக்கட்ட நீயும் நிப்பே
கருவாயா உன்னை கூட்டி நானும் போக மாட்டேன்
எல்லை கருப்பசாமி
சத்தியமா சொல்றேன்டி
ஏத்துக்கடி ஏர்வாடி டூரிங் டாக்கீசுக்கு போவோமடி
என்ன படத்துக்கு என்னை நீ
கூட்டிப் போவே
இதம்பாடல் கட்டழகா ஏங் கருத்த மச்சான்
காதலுக்கு மரியாதை
படத்துக்கு போவோமடி
காதல் கண்ணழகி கருவாச்சி உன்னைத்தான்டி
தன்னானே தானத்தன்னே
நானத்தன்னே நன்னானே
தன்னானே தானத்தன்னே நானத்தன்னே நன்னானே
மூர்த்தியும்,
பொன்னுத்தாயியும் சந்தோஷமாக பாடட்டும்..
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
சினிமாவுக்குனு சொன்னதும் கவுந்துட்டாளே கருவாச்சி ?
நானும் வாறேன் ஒத்தாசையா வெட்டித் தாறேன்
கணக்கு பண்ணத்தானே நீயும் வாறே தெரியாதா
பக்குவமா புரிஞ்சு நீயும் மச்சானை கூட்டிப்போடி
உன்னை எனக்கென்ன தெரியாதா நீ போயா
பொன்னுத்தாயி என்னை பக்குவமா கூட்டிப்போடி
பொடி நடையா நீயும் வந்த வழி மடங்கிப் போயா
ராசு மாமா பெத்தெடுத்த நாட்டுக்கட்டை நீதான்டி
மூர்க்கத்தனமான செஞ்சுடுவே முந்தாநாளு போல
கன்னி உன்னை கண்ணியமா கட்டி காப்பேன்
கருவாயா உன்னை கூட்டி நானும் போக மாட்டேன்
ஏத்துக்கடி ஏர்வாடி டூரிங் டாக்கீசுக்கு போவோமடி
இதம்பாடல் கட்டழகா ஏங் கருத்த மச்சான்
காதல் கண்ணழகி கருவாச்சி உன்னைத்தான்டி
தன்னானே தானத்தன்னே நானத்தன்னே நன்னானே
சினிமாவுக்குனு சொன்னதும் கவுந்துட்டாளே கருவாச்சி ?
வணக்கம் ஜி !
பதிலளிநீக்குபாட்டு அசத்தலா இருக்கே ஜி கடைசியில் இருவரியில் சந்தம் ஹா ஹா ஹா கலக்குங்க ஜி
வாழ்க நலம் !
வருக பாவலரே தங்களது உடனடி வருகைக்கு நன்றி
நீக்குமூர்த்தி - அவர் காதலி - காதல் கிளிகள் மகிழ்ச்சியாக வாழட்டும்!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசினிமாங்கற
பதிலளிநீக்குஆக்டோபஸ்
எல்லா கப்பலையும்
கட்டிப் போட்டுடுது..
கவுந்துடாம தப்பிச்சா பெரிய விஷயம்!..
ஆமாம் ஜி கூத்து தமிழர்களின் நாடி, நரம்புகளில் ஊறிப்போன விடயம்.
நீக்குமுயற்சி செய்து தற்போதைய காலத்துக்கான பாடலாசிரியர் ஆகிடுவீங்க போலிருக்கே
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது வாக்கு பலித்தால் வருடம் முழுவதும் சுலைமானி பரிசு வழங்குவேன்.
நீக்குஹா ஹா ஹா....இந்த சுலைமானி பேரைக் கேட்டு எத்தனை வருடங்களாகிவிட்டன
நீக்குநான் தற்போது குடிப்பது சுலைமானியே...
நீக்குபொன்னுதாயியும், மூர்த்தியும் மகிழ்ச்சியாக பாடி கொண்டு வாழட்டும் பல்லாண்டு.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
நல்ல சினிமாக்களை பார்க்கலாம் தப்பில்லை. நல்ல சினிமா பாடல்களை கேட்கிறோம்.
நல்ல சினிமாவுக்கு அழைத்து செல்லட்டும் மூர்த்தி , இல்லையென்றால் பொன்னுதாயி ஒரு சினிமா உண்டா? ஒரு டிராமா உண்டா ? என்று புலம்புவார்.
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
வருக சகோ கவிதையை இரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅருமையாக இருக்கிறது ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குநாட்டுப்புறப் பாடல் அருமை
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி
நீக்குபொன்னுத்தாயி/மூர்த்தி என்னும் அழகான பெயர்கள் இருக்கையிலே எதுக்குக் கருவாச்சி/கருப்பன் எல்லாம். பாடல் அருமை. முனைந்தால் பெரிய பிரபலமான பாடலாசிரியர்களுக்குப் போட்டியாக வரலாம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குஅதெல்லாம் "சும்மா"
ஆம்பளைக்கு மாமன் மகளை கண்டால் கை சும்மா இருக்காது.
பொம்பளைக்கு அத்தை மகனை கண்டால் வாய் சும்மா இருக்காது.
வைரமுத்துவின் கருவாச்சி காவியத்திற்கு போட்டியா?
பதிலளிநீக்குவாங்க ஐயா சம்பந்தமே இல்லாத விடயத்தை பொருத்தியமைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாடல் அருமையாக உள்ளது. ஆண் ஒவ்வொன்றும் சொல்வதும், பெண் அதற்கு மறுப்பு தெரிவிப்பதுமாக கவிதை வடிவில் நன்றாக எழுதி உள்ளீர்கள். இறுதியில் சினிமா என்றதும் சந்தோஷமாக அத்தைப் பையனும், மாமா மகளும் மனமொத்து இணக்கமாகி விட்டார்கள். நல்ல ஒற்றுமையுடன் வாழ்க அவர்கள்.
இருவருக்குள்ளும் பிணக்குத் தீர்த்து சேர்த்து வைத்த தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். கவிதை நன்றாக எழுதி உள்ளீர்கள். அனைவரும் சொல்வது போல் விரைவில் திரைப்படங்களுக்கு நல்ல பாடல் எழுத தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை விரிவாக அலசி கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅருமை கவிஞரே
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்குவளர்ந்துவரும் வருங்கால திரையுலக பாடலாசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு