இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 27, 2022

இசை ஞானம்

 
ல்லா மனிதர்களும் ஏதோவொரு வேலை செய்கிறோம், அவரவர்களின் முயற்சியோ, விருப்பமோ, அல்லது விதி என்றும் குறிப்பிடலாம். இதில், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர் என்பது இறைவனின் ஆசீர்வாத் ஆட்டோ மாவு இருந்தாலே அதில் வெற்றி காண முடியும். சங்கீதம் என்பது உணர்வுப் பூர்வமான விடயம் இது எல்லா மனிதர்களுக்கும் வந்து விடாது. எனக்கு சிறிய அகவையிலிருந்தே இசை ஞானம் உண்டு. ஆனால் ஆசை மட்டுமே இருந்தது ஆனாலும் முயற்சிகளும், அதற்கான சூழல்களும் அமையவில்லை.
 
எனது மனதில் ஓர் தீர்மானமானது நமக்குதான் இயலவில்லை, நமது குழந்தைகளை நிச்சயமாக நாம் நினைத்தபடி உருவாக்குவோம் என்பதே அது. ஆனால் என்னவள் மறைந்த பிறகு நான் அபுதாபியில் இருந்ததால் எனது குழந்தைகளை நான் போராடி மீட்பதிலேயே ஆறு வருடங்கள் கடந்து விட்டது, மீட்ட பிறகும் அவர்களை வளர்ப்பதில் போராட்டம்.
 
பணமல்ல பிரச்சனை ஆனால் பணம்தான் பிரச்சனை. ஆம் எல்லாவற்றையும் பணத்தால் அடித்தேன். இந்தப் போராட்டத்தில் நான் நினைத்தபடி குழந்தைகளை வளர்ப்பது எப்படி ?
 
எனது மனதில் மீண்டும் ஓர் தீர்மானமானது நமது பிள்ளைகளைத்தான் நாம் நினைத்தபடி வளர்க்க இயலவில்லை. நமது பெயரன், பெயர்த்திளை தொடக்கம் முதலே அந்த வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அது. ஆனால் நிகழ்வது என்ன ?
 
வாழ்க்கையில் எதையுமே திட்டமிட்டுவதில் பயன் என்ன ? இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நிகழ்கிறது. இதற்கு பிறகு நான் எதையும் தீர்மானிப்பது நிச்சயம் முட்டாள்த்தனம்தான். இனி அடுத்த வகைக்கு வாய்ப்பே இல்லை.
 
அபுதாபியில் எனக்கு இதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் பணம் ஒன்றே குறிக்கோள் என்ற எனது முட்டாள்தனமான முயற்சியால் அதை தவற விட்டு விட்டேன். அலுவலக வேலை முடிந்து இடைநிலை வேலையாக சங்கீத பள்ளியில் குழந்தைகளை அழைத்து வந்து விடுவது. மேலும் இத்தனை அகவைக்குப் பிறகு முயற்சி வெற்றியாகுமா ? என்ற ஐயப்பாடு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. வெளியில் சொல்லவும் வெட்கமாக இருந்தது.
 
இருப்பினும் கழிவறையில் ஒலியெழுப்பும் பழக்கம் மட்டும் விட முடியவில்லை. ஓர்முறை பள்ளியில் கழிவறையிலிருந்து வந்த குரலைக் கேட்ட மலையாள பாட்டு வாத்தியார் வெளியில் நின்று கொண்டு இருக்கிறார். வெளியில் வந்த நான் சற்றே வெட்கப்பட்டேன். உனக்கு சாரீரம் நல்லா இருக்கு முயற்சி செய்திருக்கலாமே... இப்பவும் காலம் இருக்கு தொடங்கு என்றார்.
 
இந்தப் பாட்டோட வரிகள் உனக்கு தெரிந்து இருப்பதே ஆச்சர்யமான விசயம் என்று தட்டிக்கொடுத்தார். ஆனால் அது... நான் அரபு நாட்டு வாழ்க்கையை முடித்து விட்ட தருணம். அத்தோடு எனது ஆசை கடற்கரை மணலாய் உதிர்ந்து சிதறி விட்டது.  அவருக்கு நான் பாடியது (?) பிடித்துப் போக முக்கிய காரணம் அது...
 
ஆத்யமாய்... கண்ட நாள் பாதி விரிஞ்நு நின் பூமுகம்
கைகளில் வீணொரு மோஹன வைடூர்யம் நீ... ப்ரியசகி...
Lyrics: Kaithapram Damodaran Namboothiri
ആദ്യമായ് കണ്ടനാള്‍ പാതിവിരിഞ്ഞു നിന്‍ പൂമുഖം
കൈകളില്‍ വീണൊരു മോഹന വൈഡൂര്യം നീ... പ്രിയസഖീ...
 
என்ற எனக்கும் பிடித்த மலையாளப் பாடல். 1996-ல் வெளியான தூவல் கொட்டாரம் என்ற திரைப்படத்தில் கவிஞர் கைதப்ரம் அவர்கள் எழுதி ஜோன்ஸன் இசையமைத்து, கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ்.சித்ரா பாடியது.
 
இந்த வேலையின் காரணமாகத்தான். பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரி கிருஷ்ணன், பாடகிகள் சித்ரா,  உஷா உதுப் நடிகை சுகன்யா இவர்களை காணும் சூழ்நிலை வந்தது. இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம், மற்ற விபரங்கள் எல்லாம் தெரிய வந்தது. இவர்களின் சம்பளம் ஸ்விஸ் வங்கியில்தான் போடவேண்டும். விசா, தங்கும் செலவு, ஊர் சுற்றும் செலவு, உணவு செலவு, விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து, திருப்பிக் கொண்டு விடவேண்டும். சுகன்யாவை அழைக்க நான்தான் போனேன் புகைப்படம் எடுக்க விருப்பமில்லை காரணம் உங்களுக்கு தெரியும்.
 
நான் சொல்வது 2007-ஆம் ஆண்டுகளில் உள்ள சம்பள விபரம். - எஸ்.பி.பி – 12 லட்சம், கே.எஸ்.சித்ரா – 8 லட்சம், உசா உதுப் – 5 லட்சம், ஹரி கிருஷ்ணன் – 5 லட்சம், சுகன்யா 3 லட்சம். இரவு பத்து மணிக்கு தொடங்கினால் இரண்டரை மணிக்கு முடித்து விடவேண்டும். இதில் சுகன்யா நடனம் ஆடியதே சரியாக மூன்று நிமிடம் மட்டுமே... பிறகு எதற்கு வரவேண்டும் ?
 
காரணம் எனக்குத் தெரியும் ஆனால் இங்கு எழுத முடியாது. விழாவால் வசூல் குறைவாகி நஷ்டம் வந்து மும்பையில் இருந்த தனது இரண்டு வீடுகளை விற்றார் என்பதும் எனக்கு தெரியும் நானறிந்து இப்படி பிழைத்த மலையாளி இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
 
மேலும் எனது அனுபவத்தில் மலையாளிகள் இசை ஞானம் மற்றும் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள், நான் மேலே சொன்னது போல சங்கீதம் என்பது இறையருள் உள்ளவர்களுக்கே வரும் இங்கு கீழே சிறிய நான்கு நிமிடக் காணொளியில் கிருஷ்ணனைக் குறித்த பாடலொன்றை மூவர் பாடியும் அந்தப்பாடலை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிகழ்வுகள் மூன்றுமே மூன்று இடத்தில் நிகழ்ந்தவை. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா ? இவர்கள் மூவருமே மூன்று மதங்களை சார்ந்தவர்கள்.
 
இவர்களால் ஏன் பாடலை பூர்த்தி செய்ய முடியவில்லை ? இசையுணர்வு ஆம் சங்கீதத்தின் ஆளுமை இவர்களின் குருதியில் கலந்து ஒடுகிறது. இன்னொரு ஆச்சயர்யம் இவர்கள் மூவருமே குழந்தைகள் என்பதுதான். இசை ஞானம் உள்ளவர்கள் கேட்கும்போது நிச்சயமாக விழிகளில் நீர்த்திரைகள் விழும்.

சாம்பசிவம்-
ஆசை இருக்கு மரம் ஏற, உந்தி ஏற ஜீவன் இல்லையே.... நினைப்பு பொழைப்பை கெடுத்துறாம...
 
சிவாதாமஸ்அலி-
இந்த மாதிரி திறமை உள்ளவர்களை வா தலைவா அரசாள அப்படினு சொல்ல மாட்றாய்ங்களே... கூத்தாடன் மட்டும்தான் வேணும் போல....
 
ChavasRegal சிவசம்போ-
நமக்கு குவாட்டர் இறக்குனா... பாட்டு தானா வரும்... ஆனா எவன் கேட்குறதுக்கு இருக்கான்...

കില്ലർജി ദേവകോട്ടൈ
 
இதோ ஆத்யமாய் கண்ட நாள் யூட்டியூப் பாடலின் சுட்டி... திரைப்படம் அல்ல, புதுமணத்தம்பதிகள் பாடும் பாட்டு.- https://www.youtube.com/watch?v=rnqsEl3srSo
 
காணொளிகள்


Share this post with your FRIENDS…

34 கருத்துகள்:

  1. காணொளி ஒலிகளை பின்னர் மொபைலில்தான் கேட்க வேண்டும்.  நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் சுவாரஸ்யம்.  சொல்லாமல் மறைத்த விஷயமும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  2. உங்கள் அனுபவக் கட்டுரைகள் மிக நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து அனுபவப் பதிவுகள் எழுதுங்க

    எப்போதுமே அவரவர் மனங்களுக்கு ஏதேனும் நியாயங்கள் இருக்கும். அதை விமர்சிப்பானேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. பணம், மனங்களை வாங்காது. இது முக்கியமான நீதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பணத்தை பெரிதாக நினைத்து உறவுகளுக்கு கொடுக்காமல் இல்லையே... உழைத்ததை அள்ளி இறைத்து விட்டேனே...

      இப்பொழுதுதான் தெரிகிறது பணம் முக்கியம் என்பது.

      நீக்கு
    2. துபாய்ல வேலையா, மிடில் ஈஸ்ட்ல வேலையா... பணத்தை வெட்டி எடுக்கறாங்க என்ற நினைப்பு எல்லோருக்கும் இருக்கு. அதனால நாம் கொடுப்பதன் அருமையும், அதைச் சம்பாதிக்க நாம் படும் கஷ்டங்களும் யாருக்கும் தெரிவதில்லை கில்லர்ஜி. பசங்களோ, பணத்தின் அருமை தெரியாம இருந்துடுவாங்க. என்ன பண்ணறது?

      நீக்கு
    3. உண்மை இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள்

      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
    4. நெல்லை டிட்டோ அப்படியே உங்க கருத்துக்கு....

      இந்த நாடுன்னு இல்லை வெளிநாட்டில் வேலை செய்தாலே இந்த ஒப்பீனியன் தான் பலருக்கும் இங்கே...ஆனால் அதில் உள்ள கஷ்டங்கள் பணி புரிபவர்களுக்குத்தான் தெரியும்...கடைசி கருத்தையும் ரொம்பவே நிறைய டிட்டோ செய்கிறேன்

      கீதா

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. காணொளிகள் அருமை..
    இனிமை..

    பதிவில் நியாயமான ஆதங்கம்..

    எல்லாம் வல்லான் வகுத்த வழி..

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வது புரிகிறது... காணொளிகள், குறிப்பாக இரண்டாவது மிக அருமை...

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜி உங்கள் மனம் புரிகிறது. உங்கள் ஆதங்கமும். ஆமாம் இசை அறிவு இருந்தாலும் அதைக் கற்க கொடுப்பினை வேண்டும். எனக்கும் இசை முழுமையாகக் கற்றுக் கொள்ள இயலவில்லை. என் சூழல் அப்படி. என் மகனுக்கு என்னை விட இசைஞானம் அதிகம். அதுவும் வீணை நன்றாக வாசிப்பான், ஆனால் அவனாலும் முழுமையாகக் கற்க இயலவில்லை...சூழல் இருந்தும் நாங்கள் கொடுத்தும் கூட...அவன் தன் விருப்பப் பாடத்தில், தொழிலில் குறிக்கோளுடன் இருந்ததால்...எனவே அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் எதற்கும் கொடுப்பினை வேண்டும்.

      நீக்கு
  7. முதல் காணொளி கண்டு நிஜமாகவே கண்ணீர் வந்துவிட்டது. ஹப்பா குழந்தைகளுக்கு என்ன ஒரு ஹை பிச் போகுது!! மேல் ஸ்தாயி செமையா வருது.....அனாயாசமாகப் பாடுறாங்க....மேல் ஸ்தாயியில்! உணர்வு பூர்வமாகப் பாடும் போது உணர்ச்சித் ததும்பலில் பாட இயலாமல் போகிறது பாருங்கள்...ஆமா எனக்கும் கூட கண்ணில் நீர் வந்துவிட்டால் பாட முடியாது. இப்போது சுத்தமாகப் பாட முடியவில்லை ஜி.

    சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னை அழைத்திருந்தார். அவர் வியந்துவிட்டார் என் குரல் கேட்டு. என்னாச்சு உங்க குரல்...இப்படி ரஃபா ஆகிடுச்சு....முன்ன எல்லாம் நல்ல இனிய குரலா இருக்கும் இப்ப ரொம்ப மாறிருக்கு அடையாளமெ தெரியாத அளவு என்றார்.

    என்ன சொல்ல?!!!!!

    இரண்டாவது காணொளி கேட்டுவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தற்போது இந்த காணொளியை பார்ப்பது இல்லை காரணம் மனம் கனத்து விடுகிறது.

      நீக்கு
    2. புரிகிறது கில்லர்ஜி...

      கீதா

      நீக்கு
  8. ஹயோ இரண்டாவது காணொளி அந்தக் குட்டிப் பொண்ணு செல்லக் குட்டி செமையா பாடுது ஐந்து வயதே ஆன அந்தச் செல்லக் குட்டி ப்ரக்யா பாராட்ட வார்த்தைகள் இல்லை கில்லர்ஜி!!! என்ன ஒரு ஞானம் இந்த வயசுல!!!! குரல், தாளம், லயம், ஸ்ருதி அதுவும் சுவரம் பாடும் அளவு ஞானம்....ஹையோ செம!!!

    இதே போல மலையாளக் குட்டி ஒண்ணு மேக்னா பாடுது கேட்டிருக்கீங்களா? அதுவும் ரொம்பச் சின்ன வயசுலேயே பாடத் தொடங்கிடுச்சு. இப்ப மேக்னா 7 வயது என்ன ஒரு குரல், நெளிவு சுளிவுகள் எல்லாம் அப்படி அனாயாசமாக வருது....நீங்களும் கேட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவளும் சொன்ன பதில் ரொம்ப சின்ன வயசுலருந்தே பாடத் தொடங்கிட்டேன்னு...ஹாஹாஹா இந்தக் குட்டிப் பொண்ணு சொன்னது போல!!! ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்தேன் ஜி. பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் கேட்டதற்கு ப்ரக்யா "பௌத் ஸோட்டாசே" என்றுதான் மிகப்பெரிய நகைச்சுவை.

      மேக்னா வின் வளர்ச்சியை கவனித்து வருகிறேன்.
      இதெல்லாம் இறைவனின் அனுக்கிரகம்.

      நீக்கு
    2. ஹாஹாஹா ஆமாம் "பஹூத் சோட்டாஸே' ஆமாம் அதேதான் மேக்னாவும் சொன்னாள் அதான் நானும் சிரித்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
  9. உங்கள் திறமைகளில் ஒன்று இசைப்பது என்று தெரிகிறது.
    இப்போதும் பாட்டு கற்றுக் கொள்ளலாம். பாடுங்க மன அமைதி கிடைக்கும்.
    இசை மனதை அமைதி படுத்தும், கவலை மறக்க செய்யும்.

    பேரன் பேத்திகள் பாடுவதை கேட்கும் போது எல்லா கவலைகளும் மறந்து போகும்.

    போன காலங்களை மறந்து விடுங்கள், இருக்கும் காலத்தில் முயற்சி செய்யுங்கள்.
    கண்டிப்பாய் உங்கள் ஆசைபடி குழந்தைகள் பாட்டு கற்றுக் கொண்டு பாடுவார்கள்.நீங்கள் கேட்பீர்கள்.

    நீங்கள் பகிர்ந்த காணொளிகள் இரண்டும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. இசை, மொழி, மதம் கடந்தது. குழந்தைகள் மெய் மறந்து பாடுகிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகள் பாடும் அந்த காணொளிகள் இரண்டும் அருமை...

    உங்கள் குரல்கூட இனிமையானது என்று கூறியுள்ளீர்கள்... அந்த மலையாள வாத்தியார்கூட உங்கள் பாடலைக்கேட்டு மெய்மறந்ததாக கூறியுள்ளீர்கள்... அந்த மலையாள வாத்தியாருக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க வேண்டாமா? எத்தனையோ வீடியோ கிளிப் போடுகிறீர்கள்.. ஒரு தடவை நீங்கள் பாட்டு பாடி ஒரு வீடியோ போடுங்களேன்... நாங்களும் உங்கள் குரலின் இனிமை கண்டு பரமானந்தம் அடைகிறோமே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பழைய பதிவு ஒன்றில் சிறிய அளவில் பாடி இருக்கிறேன் தலைப்பு "எனக்குள் ஒருவன்"

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  12. மார்கழி இசை மாதத்துக்கு ஏற்ற அனுபவப் பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது கவித்துவமான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  13. அனைத்து நல் உள்ளங்களுக்கும் "சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்" நிறுவனத்தின் மகிழ்ச்சி பொங்கும் "ஆங்கில புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள்... https://www.scientificjudgment.com/

    "Happy New Year 2023" Wishes from "Scientific Judgment" to all friends...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

      நீக்கு
  14. உங்கள் எண்ணம் போல குழந்தைகள் பாடல்கள் கற்று பாட வாழ்த்துகள்.
    காணொளிகள் அருமை இனிமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு