இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 24, 2022

உளவு பார்த்த எலி

ணக்கம் நண்பர்களே... இந்த மல்லிகை மனச என் மாமன் பறிக்க’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
சொந்த அல்லிகை அனுச என் காமன் உறிக்க
யோசனை இல்லை, பாசமும் இல்லை
பந்தலில் வச்சு என் கதி கொல்ல
நநநநா... நநநநா... நநநநா... ஆ... நநநநா...
ஏக்கமும் தொல்லை ஏக்கமும் தொல்லை
பருத்தியோரம் தாக்கமும் இல்லை
நநநநா... நநநநா... நநநநா... ஆ... நநநநா...
சொந்த அல்லிகை அனுச என் காமன் உறிக்க
 
கனியாய் எண்ணி ஓட ஆஹா இணையாய்
தந்தானடி தள்ள ஓய் அத்து கோர்த்தானடி
தன்னை ஆ... கருகி போனதடி மானம்
பையை இடிச்சு தள்ள இணைச்சான்
பாதம் புடிச்சு அதை இடிச்சான் என் சுமையோட
நானந்த போகத்தில் அலைந்தேனடி கை
விரலாலே உரைமீது பாலங்கள் இரைத்தேனடி
சொந்த அல்லிகை அனுச என் காமன் உறிக்க
 
காலும் பள்ளத்திற்குள் ஓட ஹா... ஆ...
வாலும் கல்லில் ஒன்று வைக்க ஹா... ஆ...
கையில் தோல் புட்டு இடிக்க
மாலை தந்தானடி கொடுக்க
பஞ்சு பதமா, கள்ள விதமா
பல்ல கடிச்சு தள்ள கொடுத்தான்
நித்தம் புசிந்தோடும் சாதத்தில்
முதல் என்னை கொடுத்தானடி
பித்தம் இது போல கல்லொன்று
வைக்கணும் என்றானடி
 
சொந்த அல்லிகை அனுச என் காமன் உறிக்க
யோசனை இல்லை, பாசமும் இல்லை
பந்தலில் வச்சு என் கதி கொல்ல
நநநநா... நநநநா... நநநநா... ஆ... நநநநா...
ஏக்கமும் தொல்லை ஏக்கமும் தொல்லை
பருத்தியோரம் தாக்கமும் இல்லை
சொந்த அல்லிகை அனுச என் காமன் உறிக்க
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1984
படம்: உறவைக் காத்த கிளி
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.ஜானகி
 
இதோ டி.ராஜேந்தரின் பாடல் வரிகள்
 
இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
வாசனை முல்லை, வாசமும்மில்லை
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல
நநநநா... நநநநா... நநநநா... ஆ... நநநநா...
தூக்கமும்மில்லை, தூக்கமும்மில்லை
ராத்திரி பூரா தூக்கமுமில்லை
நநநநா... நநநநா... நநநநா... ஆ... நநநநா...
இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
 
கனியாய் கன்னி மனம் போக, ஆஹா துணையாய்
வந்தானடி மெல்ல, ஏய் உத்து பார்த்தானடி
என்ன ஆ... உருகி போனேனடி நாண...
கையை புடிச்சி, மெல்ல அணைச்சான்,
காத கடிச்சு கதை படிச்சான் கண் இமை மூட
ஆனந்த யோகத்தில் மிதந்தேனடி கால்
விரலாலே தரைமீது கோலங்கள் வரைந்தேனடி
இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
 
தாழம் கொல்ல பக்கம் போக, ஹா.. ஆ...
பாழும் முள்ளில் ஒன்று தைக்க, ஹா... ஆ...
காலில் வலி பட்டு துடிக்க,
காளை வந்தானடி எடுக்க
கொஞ்சம் பதமா, நல்ல இதமா,
மெல்ல புடிச்சு முள்ள எடுத்தான்
இரத்தம் கசிந்தோடும் பாதத்தில்,
இதழ் தன்னை வைத்தானடி
நித்தம் இது போன்ற முள்ளொன்று
குத்தட்டும் என்றானடி
 
இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
வாசனை முல்லை, வாசமும்மில்லை
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல
நநநநா... நநநநா... நநநநா... ஆ... நநநநா...
தூக்கமும்மில்லை, தூக்கமும்மில்லை
ராத்திரி பூரா தூக்கமுமில்லை
இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=Tn2AKaL7wSc
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
டி.ஆர். போலவே ஒன்பது எழுத்தில் தலைப்பு வந்துடுச்சே...
 
Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி. ஒரிஜினல் பாடலையே கேட்டதாக நினைவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இந்த பாடல் கேட்டதில்லையா ?

      நீக்கு
  2. இந்தப் பாடலே மனசில் நின்றதில்லை. அந்த டியூனுக்கு இன்னொரு பாடலா? தாங்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இது நல்ல பாப்புலரான பாடல்தான்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்தப்பாடல் இதுவரை கேட்டதில்லை. எனினும் அந்தந்த பாடலுக்கு தகுந்தபடி வார்த்தைகளை மாற்றிப் போடும் உங்கள் கற்பனாசக்திக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நல்லா உறிச்சிட்டீங்க ஜி... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  5. 84 ல் வெளி வந்திருக்கின்றது..

    அப்போது சிங்கப்பூரில் இருந்தேன்..

    பாடலைக் கேட்டதாக நினைவில் இல்லை..

    தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. படமும் தெரியாது, பாடலும் தெரியாது. ஆகக் கூடி நீங்க உல்டா செய்திருப்பதை நான் எப்படி ரசிப்பது? :))))))) ஆனால் தலைப்பு நல்லா இருக்கு. ரசனையோடு கொடுத்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. கில்லர்ஜி இந்தப் பாட்டு கேட்டதில்லை ஜி..யுட்யூப் போய்ப் பார்த்து, கேட்டேன் ஒரு வேளை மறந்துவிட்டதோ எனக்கு எப்போதும் வார்த்தைகள் வைத்து பாடலைக் கணிக்க முடியாது ஒரு சில பாடல்களைத் தவிர...அப்படிப் பார்த்தும் கேட்டுமே கேட்ட நினைவில்லை ஜி. படம் பெயர் உட்பட.

    பாடல் வரிகளை வாசித்து விட்டு உங்க உல்டாவை வாசித்தேன் உங்கள் முயற்சிக்கு வழக்கம் போல் பாராட்டுகள்!

    தலைப்பு வித்தியாசம். ரசித்து சிரித்துவிட்டேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்படத்தில் தான் டி.ஆர். தனது மகனை தூக்கிக்கொண்டு...

      "அடங்கொப்பன் மவனே ங்கொப்பன் மவனே டண்டண்னக்கரா"

      என்று சொந்தக்குரலில் பாடி இருப்பார்

      நீக்கு
  8. சரி, டி ராஜேந்தர் படத்துல பெண்களை இப்படி எல்லாம் காட்டமாட்டார்னு ஒரு கருத்து உண்டே.....இதுல எப்படி?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரது படத்திலும் ஆபாசம் உண்டு அதை பக்குவமாக, செண்டிமெண்டாக மறைத்து இருப்பார்.

      நீக்கு
  9. இப்போதுதான் பாடலை கேட்டேன். அந்த பாடலுக்கு ஏற்ற உல்டா பாடல் எழுதி விட்டீர்கள்.
    திறமைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. இரண்டு பாடல்களுமே அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  11. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு