இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 20, 2023

சதிலீலாவதி

அவன் கடற்கரை மணலில் நின்று நூல் விட்டுக் கொண்டு நின்றான், பட்டம் எங்கேவென்று தேடினேன். பிறகுதான் தெரிந்தது அவன் நூல் விட்டது படகின் ஓரம் நின்ற படகோட்டி பெண்ணுக்கு...
 
அவன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தான், வந்து நின்ற பேருந்தில் அழகி ஒருத்தி டாட்டா காட்டியதும், மகிழ்ச்சியாக குறுக்கு சந்தில் நடந்து மறைந்து போனான்.
 
அவன் அந்த சாலையில் நடந்து போனவளை நிறுத்தி கடிதம் ஒன்றை கொடுத்து சென்றான், அவள் மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றாள் பிறகுதான் தெரிந்தது அவர் கூரியர் சர்வீஸ்.
 
அவன் சைட்டுக்கு போறேன் என்று சொன்னான், நான் கட்டிட பொறியாளர் என்று நினைத்தேன், பிறகுதான் தெரிந்தது, அவன் கல்லூரி வாசலில் நின்று பெண்களை சைட் அடிக்கவென்று.
 
அவன் மனைவியை துணிக்கடை வாசலில் விட்டவன், நாளை வந்து கூட்டிப் போகிறேன் என்று சொல்லித் சென்றான், பிறகுதான் தெரிந்தது மனைவி தீபாவளிக்கு ஜவுளி எடுக்க வந்தது.
 
அவன் மனைவியிடம் சொன்னான் உங்கள் வீட்டுக்கு வந்து கல்லு திங்க மாட்டேன் என்று, பிறகுதான் தெரிந்தது மாமியார் வீட்டில் பொங்கல் சாப்பிடமாட்டான் என்பது.
 
அவன் அவளது மனைவி லீலாவதியை சதிகாரி என்றே அழைத்தான், அதற்கு அவளும் கோப்பபடவில்லை பிறகுதான் புரிந்தது அவள் வேலைக்கு செல்லாத ஹவுஸ் வைஃபாம்.
 
அவன் மனைவி எந்த ஹோட்டலில் சாப்பிட்டீர்கள் ? என்று கேட்டதற்கு தைரியமாக சொல்ல மாட்டேன் என்றான், பிறகுதான் தெரிந்தது உணவகத்தின் பெயரே அதுவென்று.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
இவன் எந்த ஊருனு தெரியலையே... நம்மளைப் போலவே தைரியசாலியா இருக்கிறானே....?

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை.
    சொல்லமாட்டேன் ரசித்தேன்.
    கடைபேர் அதுவுவா? எந்த ஊர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இது எந்த ஊரென்று தெரியாது. ஆனால் மதுரையில் இதே பெயரில் செருப்புக்கடை ஒன்று உள்ளது புகைப்படம் எடுத்து வைத்து இருக்கிறேன் பதிவுக்காக...

      நீக்கு
    2. மதுரையில் எந்த இடத்தில் இந்த கடை இருக்கிறது?

      நீக்கு
    3. மஹாலுக்கு அருகில் சமிக்ஞைதிடல் ஓரத்தில்...

      நீக்கு
    4. மஹால் போனால் கண்கள் கடையை தேடும்

      நீக்கு
    5. மகாலுக்கும், பெரிய சர்ஜ்சுக்கும் இடையில் சிறிய சர்ஜ்சின் எதிர்ப்புறம் இருக்கிறது.

      சரியாக ஜிகிர்தண்டா கடையின் ஓரத்தில்...

      நீக்கு
    6. ௭ங்௧ள் ஊரில் "சென்ரல் ஜெயில்" என்ற பெயரில் ஒரு துணி ௧டை உள்ளது.

      நீக்கு
    7. அங்கு வேலை செய்பவர்கள் குற்றவாளிகளோ...?

      நீக்கு
  2. சதி லீலாவதிக்கான விளக்கம் மட்டும் பொருந்தவில்லை அல்லது எனக்குப் புரியவில்லை!  மற்ற அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கொஞ்சம் அழுத்தமாக பாருங்கள் புரியலாம்.

      நீக்கு
  3. என்னமோ ...

    உலகில் என்ன மாதிரி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது...

      நீக்கு
  4. அனைத்தையும் ரசித்தேன். உங்கள் கண்களில் வித்தியாசமான பெயர் தப்புவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்துக்கு நன்றி

      நீக்கு
  5. ரசிக்க வைத்தன. நன்றி

    பதிலளிநீக்கு
  6. எண்ணம் வேறு... உண்மை வேறு... அருமை...

    பதிலளிநீக்கு
  7. ஹாஹாஹா உணவகம் பெயர் - சொல்ல மாட்டேன்!!!! வித்தியாசமான பெயர்....உங்ககிட்ட சிக்கிடுச்சு!!!

    அது சரி , ஹவுஸ் வைஃப் லீலாவதி ஏன் சதிகாரி? அது மட்டும் புரியலையே...

    மத்தது எல்லாம் ரசித்தேன் கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      "சதி" என்றால் மனைவிதானே ? சதிகாரி வீட்டுக்காரி.

      நீக்கு
  8. சதி லீலாவதி? ஏன் சதிகாரினு சொல்றாங்க? ஏன்னு புரியலை. பொதுவாக எல்லாம் நன்றாக இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      சதி லீலாவதி என்பது மனைவி லீலாவதி என்றுதானே அர்த்தம்.

      சதிகாரி - வீட்டுக்காரி

      நீக்கு
    2. கணவன் , மனைவியை சதி, பதி என்று சொல்வார்கள்.
      சதி லீலாவதி பெயர் காரணம் அறிந்தேன்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி சகோ. திருச்சிகாரவுங்களுக்கு தெரியாதாமே... இஃஹி இஃஹி

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மதியம் எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன். உடனே பதிவுக்கு பதில் கொடுக்க முடியாதபடிக்கு வேலைகள் வந்து விட்டன.

    சதிகாரி.. வீட்டுக்காரியைதான் பதி, சதி என்ற கருத்தில் "அவன்" அப்படி அழைக்கிறான் என அப்போதே நினைத்தேன். அப்படியே என தாங்களும் கருத்தில் சொல்லி விட்டீர்கள்.எல்லாம் நல்ல கற்பனை.. முதலும், கடைசியும் மிகவும் ரசிக்க வைத்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சதிகாரியை சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  10. அடடா! ரசனை. இப்படி எல்லாம் உங்களுக்குத்தான் ஆப்பிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு