இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 17, 2023

குருவும், சீடர்களும்

தேவோங்கிகோட்டை நகரில் ஞானகுரு என்ற ஒருவர் இருந்தார் அவரிடம் பனிரெண்டு மாணாக்கர்கள் வெகு காலமாக சீடர்களாக இருந்து பாடம் கற்று வருகின்றார்கள். காலம் கடந்து விட்டது ஆகவே இன்று சீடர்களிடம் ஞானப்பரீட்சை வைத்து பட்டயம் வழங்கி மோட்ஷம் கொடுத்து அனுப்ப தீர்மானித்தார். அனைவரையும் அரசமரத்தடியில் அமரச் சொன்னார். இதோ

செங்குன்றா... இரண்டாம் குலோத்துங்க சோழர் சைவமா ? வைணவமா ?
அவரு அசைவம் குரு.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
கலிவரதா... உனது ஞானத்தில் ஆதி கடவுள் ஜோதி உருவத்தில் தெரிகிறதா ?
எனக்கு ஜோதிகாதான் தெரிகிறது குருவே.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
புவிக்காலா... அறிவு ஞானத்தால் தெளிவு பெறுவது எப்போது ?
குவாட்டர் போதையும் தெளிந்த பிறகு குருநாதா.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
சித்தமுத்தா... இயலும், இசையும், வசப்படுவது எப்படி ?
கெனிக்கென் பீர் அடிச்சா வசப்படுத்தலாம் நாதா.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
இளந்திர சேனா... இறைவனை தொழும்போது மதி சிதைவது எதனால் ?
யூட்டியூப்பில் பிட்டுப்படம் பார்க்கிறதால குருவே.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
பரந்தாமா... புசிக்காமல் பசியை மறப்பது எப்படி ?
தலப்பாக்கட்டியில காடை பிரியாணி துன்னா, மறக்கலாம் குரு.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
சம்பா... சமீபத்தில் கண்டு குசலம் விசாரித்த இரத்த உறவுகள் யார் ?
நமீதா குருநாதரே.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
வலம்புரி... ஒன்பது கிரகங்களையும் சுற்றி வந்த, பதி விரதை யார் ?
நயன்தாரா குருவே.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
சத்தியமுத்து... பூலோக பிரபுவும், தேவலோகமும் கூடினால் ?
பிரபுதேவா வருவார் குருஜி.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
மார்க்கண்டேயா... திருமால் துயிலும்போது மார்பில் விழுந்தது எது ?
மார்பிள் இல்லை டைல்ஸ்தான் குருதேவா.
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 
பூமந்திக்காலா... பாற்கடலில் தேவர்கள் கடைந்தபோது அவர்களுக்கு உதவியது யார் ?
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குருநாதரே.
? ? ?
* * * * * * * * * * 11 * * * * * * * * * *
 
மாடக்கூத்தா... சூத்திரர்கள் என்று சொல்வது எந்த சமயம் சார்ந்தவர்களை ?
அவர்கள் சூ…….துக்காப்பு உள்ளவர்கள் குருவே.
? ? ?
* * * * * * * * * * 12 * * * * * * * * * *
 
மாடக்கூத்தனின் பதிலால் குருநாதருக்கு சினம் சிரசுக்கு ஏறிய மறுநொடி...
மாமாங்கமாக என்னிடம் ஞானம் கற்றும் எதுவுமே தெரியாத இந்த மொத்த ஜடங்களும், இந்த கமண்டலத்துக்குள் சென்று பூதம் ஆகக்கடவது...
 

கண்ணை மூடி ஒரு கைகயை உயர்த்தி சொன்னதுதான் தாமதம் குருநாதர் அருகிலிருந்த கமண்டலத்துக்குள் பனிரெண்டு சீடர்களும் பறந்து வந்து உள்ளே சென்றனர். மூடியை அடைத்த குரு கமண்டலத்தை ---தூ--- என்று எச்சியை துப்பி விட்டு, பக்கத்தில் இருந்த தேனம்மை ஊரணியின் மையத்தில் வீசிய பிறகும் தனது சினம் தனியாமல் கைலாசாவை நோக்கி நடையை கட்டினார் சங்கரபதிக்கோட்டை வழியாக...
 
சிவாதாமஸ்அலி-
மாடக்கூத்தன் குருவுக்கிட்டே இவ்வளவு குசும்பை காட்டலாமா ?
 
சாம்பசிவம்-
மாடக்கூத்தன் கில்லர்ஜியைப் போல வெகுளியாக இருக்கிறானே... பாவம்.

Share this post with your FRIENDS…

34 கருத்துகள்:

  1. குரு எவ்வழியோ அவ் வழிதானே இருப்பார்கள் சீடர்கள்!
    சீடர்களை சபித்து கமண்டலத்தில் அடைத்தது என்ன நியாயம்?
    அதுவும் கைலாசவை நோக்கி நடை கட்டி விட்டாரே!
    நல்ல நகைச்சுவை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.
    பிரேமானந்த சாமியார் மாதிரி மேல் படம் இருக்கிறது. சீன தேசத்து கமண்டலம் மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      படத்தை கூர்ந்து பாருங்கள் யாரென்று தெரியும்.

      நீக்கு
  2. யார் வந்து அந்தக் கமண்டலத்தைத் திறந்து பூதங்களுக்கு சாப விமோசனம் கொடுக்கப் போகிறார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணி வற்றிய பிறகு யார் கண்ணிலாவது படட்டும் ஜி

      நீக்கு
  3. பழைய கமண்டலத்துக்கு புது கமண்டலம் என்று ஒரு அராபிய இரவுக் கதையையும் புகுத்தி அடுத்த பதிவு தொடங்கலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உடனே எழுதி விடலாம்.
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. ஒன்பது கிரகங்களையுமா இல்லை ஒன்பது நடிகர்களையுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஜியிடம் கூத்தாடன்களைப்பற்றி பேசலாமா ?

      நீக்கு
    2. நெல்லை.....ஹாஹாஹா நயனத்தை அப்படிச் சொல்லாதீர்கள்!!! அந்த நயனத்தாலேயே முறைச்சுடுவாங்க!!!!

      கில்லர்ஜி அப்ப சிஷ்யன்கள் மட்டும்தான் பேசலாம் போல....ஜோதிகான்னு!!!! நமீதான்னு!!! ஹிஹிஹி...அப்புறம் ஏன் சிஷ்யகோடிங்களை கமண்டலத்துக்குள்ள அடைச்சாரோ!!!

      கீதா

      நீக்கு
    3. ஆம் குருஜி ஆன்மீக கேள்வி மட்டும்தானே கேட்கிறார்.

      பதில்கள் எல்லாமே தவறுதான்.

      நீக்கு
  5. ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அப்படியா ? மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  6. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன், கில்லர்ஜி!!! ஆனா கடைசி மட்டும் புரியலை மாடக்கூத்தன் பதில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நம்ம வாக்கு பலிச்சிருச்சு!!!!! கொஞ்ச நாள் முன்ன சொல்லிருந்தேன் என்று நினைக்கிறேன் கில்லர்ஜி சாமிஜி ஆயிடலாம்னு....இந்த சாமிஜி நீங்கதானே கில்லர்ஜி!!! ஹிஹிஹிஹி படம்!!!

    வரும்படி பரவால்லியா? அதான் கைலாசா நோக்கிப் பயணமோ..என்ன டீலோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எனது படம்தான் சகோ கோமதி அரசு அவர்களுக்கு தெரியவில்லை.

      நீக்கு
    2. எனக்கு தெரிந்தது, அந்த தலை அமைப்பு, உடை கலர் பிரேமானந்தா என்றேன், பெரிய மீசை அவருக்கு கிடையாது.
      உங்களுக்கு சாமியார் ஆகும் விருப்பம் இருக்கா? கீதா சொல்வது போல!
      புது தீவை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது ஏற்கனவே தேர்ந்து எடுத்து விட்டீர்களா?

      நீக்கு
    3. வருக சகோ
      ஆம் கச்சத்தீவைத்தான் நேரம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.

      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. சீடர்களின் பதில் ஹா...ஹா.

    இறுதியில் கமண்டலத்தில் அடக்கம். பூதம் எப்போது மறுபடி வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஊரணி வற்றிய பிறகு பிராப்தம் இருந்தால் திறக்கும்.

      நீக்கு
  9. கமண்டலத்தை பக்கத்தில் இருந்த தேனம்மை ஊரணியின் மையத்தில் வீசிய பிறகும் தனது சினம் தணியாமல் "கைலாசா"வை நோக்கி நடையை கட்டினார் என்று குறிப்பிட்டுள்ளீர்களே?.... ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் "அந்த" குரு நம்முடைய "நித்தியானந்தா சுவாமி" அவர்களோ?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நித்தியானந்தா - ரஞ்சிதா இவர்களின் பெயர்களே எனக்கு தெரியாது.

      நீக்கு
  10. இதற்குள்ளேயும் ஞானம் இருக்கின்றது குருவே!..

    பதிலளிநீக்கு
  11. நமீதா, நயன் என்று பல்வேறு ஞானங்கள் - இந்தப் பாருலகில்!..

    பார்ப்பவர் பார்வைக்கு ஒவ்வொன்றும் மாறுபடும்...

    பதிலளிநீக்கு
  12. சிரிப்பதற்கு மட்டுமல்ல..

    சிந்தனைக்கு உரிய பதிவு!..

    பதிலளிநீக்கு
  13. பரமார்த்த குரு ஞாபகம் வந்தது. நல்ல நகைச்சுவை

    பதிலளிநீக்கு
  14. ஹஹஹா ரசித்தேன் நண்பரே. அப்புறம் பாற்கடலில் தேவர்களுக்கு உதவியது யார் என்றும் இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஏதோ நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்லி வைப்போம்.

      நீக்கு
  15. நல்ல ஞானம் போங்க! விவிசி. விவிசி! எப்படித்தான் இம்மாதிரி யோசிக்கிறீங்களோ! கைலாசா ஐநா சபையில் இடம் கேட்டிருக்கு, தெரியுமா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் நானும் படித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு