இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 15, 2023

நஞ்சில்லா லஞ்சம்

ணக்கம் நட்பூக்களே... நமது நாட்டில் ஆர்.டி.ஓ. என்று சொல்லப்படும் வாகன பரிசோதனைத்துறை என்னதான் செய்கிறது ? இந்தியன் திரைப்படத்தில் ஷங்கர் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார். வேன் முழுவதிலும் உள்ள குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்து விடும். பணத்தை கொடுத்தால் பேருந்துகள் பரிசோதனைக்கு வராமலேயே தேர்வாகி விடும் அதன் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதால் வந்த இடர்பாடுகள்.
 
மனசாட்சி இல்லாதவர்களால்தான் இவ்வகையான விபத்துக்கள் நிகழ்கின்றன பணம் கிடைத்தால் போதும் நாளை நமது குடும்ப உறுப்பினர்களும் இதில் பயணிக்ககூடுமே என்ற சிந்தை கிடையாது. இந்த லஞ்ச பணத்தை இவர்கள் சேர்ப்பது யாருக்காக ? மனைவி, மக்களுக்காகத்தானே... அவர்கள் நலமுடன் வாழ வேண்டாமா ? இந்த பாவத்தின் சம்பளம் இவர்களது குடும்பத்தை காக்குமா ? இந்த லஞ்சப்பணம் நஞ்சில்லையா ? ஆயினும் இவர்களும் இறைவனை தொழுவதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
 
இதில் இந்த அலுவலர்கள் காலையில் வேலையை தொடங்கும் முன்பு சாமி படங்களை வணங்குகின்றார்கள். இவர்களின் வேண்டுதல் எப்படி இருக்கும் ? இன்றைக்கு லஞ்சம் நிறைவாக கிடைக்க வேண்டும் என்பதாகத்தானே... நமது மக்களில் பெரும்பாலானோருக்கு இறைபயம் என்பது கிடையாது பிறகு எதற்கு இறை வணக்கம் ? அது கண்துடைப்பு ஆம் சமூகப்பார்வைக்காக நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இருந்தால் இவர் நல்ல மனிதரென்று பிறர் கருதக்கூடும் அதன் வழியே இந்த திருட்டு வாழ்க்கை.
 
இதோ இந்த கானொளியில் வரும் காட்சியை பாருங்கள், ஏதோ ஆட்டு மந்தையை கொட்டி விட்டு செல்வது போன்றே இருக்கிறது. நல்லவேளை உயிர்ச் சேதமில்லை அவ்வகையில் நன்று. இந்த தவறுகளை சீர் படுத்துவது யாருடைய வேலை ? அரசாங்கம்தானே... அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிகிறது கட்சியை சார்ந்தவன் சாகும்வரை நமக்குதான் ஓட்டுப்போடுவான், மக்கள் அந்த நேரத்தில் இலவசமாக அதை தருகிறோம், இதை தருகிறோம் என்று சொன்னால் பழையவைகளை மறந்து விட்டு வாக்களிப்பார்கள்.
 
மேலும் கடைசி தருணத்தில் தலைக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தால் போதும் பிறகு வட்டியும், முதலுமாக இருபது மடங்கு சம்பாரிக்கலாம். இதைத்தான் திராவிடக்கட்சிகள் இரண்டும் செய்து வருகிறது. நான் ஒருமுறை சத்திரக்குடியிலிருந்து பெரியப்பாவின் ஊருக்கு கருப்ப்பிள்ளைமடம் நகரப்பேருந்தில் சென்றேன் சாலையில் செல்லும் போது பேருந்தின் கூரையும் தனியாக ஆடிக்கொண்டே வந்தது நான் பயந்து கொண்டே சென்றேன் வேறு வழியில்லையே ஒருமுறை சென்றதற்கே இப்படி எனில் இந்த பகுதி மக்கள் தினம் இதில்தானே போய் வருகின்றார்கள்.
 

தமிழனுக்கு மறதி பெறுகி விட்டது இதற்கான மருந்து சாப்பிட்டால்தான் தமிழகம் இனியாவது நல்ல மனிதர்களின் ஆட்சியை காணலாம். அந்த மருந்தை சாப்பிடக்கூடாது என்றுதான் டாஸ்மாக்கை திறந்து வைக்கின்றார்கள். இனியாவது சிந்திக்கணும் இல்லையேல் மரணம் வரையில் வாழ்க கோஷமிட்டு சாக வேண்டியதுதான்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

Share this post with your FRIENDS…

52 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ் மீதான் இங்கின 1ஸ்ட்டூஊஊஊஊஊ பூஸோ கொக்கோ..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கைக்கு நிறையப் பிள்ளைகள் உண்டுன்னு சொல்லுவாங்க. அதிராதான் முதலாவதா?

      நீக்கு
    2. கில்லர்ஜி.. இது உங்கட பக்கம்..:) ச்சோஒ இதுக்கு நீங்கதேன் பதில் ஜொள்ளோணும்.. நான் ஏற்கனவே ஜொள்ளிட்டேன்ன்ன்:)))

      நீக்கு
    3. அதிராவைப்பற்றி நண்பர் கூமுட்டை அவர்களுக்கு தெரியும்.

      நீக்கு
    4. ஆண்டவா முச்சந்தி வைரவா.. இது என்ன புயுப் புரளியைக் கிளப்பி விடுறீங்க கில்லர்ஜி... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    5. ஆம் உண்மைதான் போகப் போகத் தெரியும் இந்த (வலை)பூவின் வாசம் புரியும்

      நீக்கு
  2. நஞ்சிருக்கிற லஞ்சமும் இருக்குதோ கில்லர்ஜி?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா ஆமாம் ஜாங்கிரி தடவி இருப்பார்கள்.

      நீக்கு
  3. வீடியோ பார்த்தேன், அது என்னமோ நம்பும்படியாகவே இல்லை, முதல் வீடியோ ஏதோ மிக்ஸ்ஸிங் போலவே இருக்கு, அப்படித்தலை கீழாக நடுரோட்டில் கவிழுது, ஆனா எல்லோரும் சும்மா எழும்புகிறார்கள், ஒருவர்கூட எழுந்திருக்க முடியாமல் இல்லை.. இது பொய்.

    2வது , லொறி பார்க்க சிரிப்போ சிரிப்பாக வருது, றைவர் கலைத்துக்கொண்டு போகிறார் எஞ்சினை ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா இப்படியான வண்டிகள் நிறைய உண்டு, இரண்டாவது கேரளா வண்டி பார்த்தீர்களா ? அதுபோல்தான்...

      விழுந்தவர்களில் கத்திரிப்பூ சேலை உடுத்தி வைர நெக்லஸ் போட்டு இருந்த வயதான அம்மாவை தூக்கி விடுகிறார்கள் பாருங்கள்.

      மேலும் எல்லோருக்குமே ஊமைக்காயம் ஏற்பட்டு இருக்கும்... நீங்கள் எப்படி எங்களைப் போன்ற அப்பாவிகளிடம் பேசும் பொழுது ஊமைக்குத்து விடுறீங்க... அதுபோல இதுவும் வெளியில் தெரியாது.

      முதல் வருகைக்கு நன்றி அதிரா.

      நீக்கு
    2. என்னாதூஊஊஊஊ ஊமைக்குத்தோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ.. இப்பவே நான் தேம்ஸ்ல..... இல்ல வாணாம்ம்.. இப்ப ரெம்ம்ம்ம்ப வெயிலா இருக்கு:), அதனால கொஞ்சம் குளிரட்டும் தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்:))..

      வைர நெக்லெஸ் போட்டுக்கொண்டு லொறியில வந்தாவோ[காரில் போகாமல் அவ்ளோ அடக்கொடுக்கமாக்கும்:) அது நிட்சயமா கில்லர்ஜியின் உகண்டாச் ஜொந்தக்காரராகத்தான் இருக்கும்:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
    3. வைரநெக்லஸ் போட்டு இருந்தாலும் அதிராவைப் போல் அலட்டிக் கொள்ளாத நல்ல பெண்மணி உகாண்டாவேதான்...

      நீக்கு
    4. சே சே சே... ஸ்மாட்டாக் கதைக்கிறேன் என நினைச்சு:), எப்ப பார்த்தாலும் பொல்லுக்கொடுத்து அடி வாங்குவதே நேக்குத் தொழிலாப்போச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்[ஹையோ இது நேக்குச் சொன்னேன்:)]

      https://i.ytimg.com/vi/cm74P-llas4/maxresdefault.jpg

      நீக்கு
    5. ஹா.. ஹா.. உகாண்டா பூனை மாதிரி இருக்கிறதே...

      நீக்கு
    6. ஆஆஆஆ கில்லர்ஜி சிரிப்பதை இப்போதான் பார்க்கிறேன்ன்.... இப்படியே எப்பவும் ஹப்பியா இருங்கோ கில்லர்ஜி.

      நீக்கு
  4. லஞ்சம் என்பது தமிழக ஆள்வோரின் உடம்பின் அங்கமாக மாறி விட்டது.  இதை மக்களும் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.  தங்களை ஆள்பவர்கள் சுத்தமாக இருக்கவேண்டும், நல்ல திட்டங்கள் தீட்ட வேண்டும் என்று நினைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ஆம் நகமும், சதையும் போலாகி விட்டது

      நீக்கு
  5. முதல் காணொலி வாயைப் பிளக்க வைக்கிறது.  குப்பை கொட்டுவது போல கொட்டிச் செல்கிறார்கள்.  அதன் இரண்டாம் பகுதி சிரிப்பைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மக்கள் மக்குகளாக இருந்தால் இப்படித்தான்.

      நீக்கு
  6. 250 ரூபாய் நோட்டு யாரிடம் இருந்து லஞ்சம் வாங்கினீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கவில்லை ஐயா கொடுக்கிறேன்.

      பண விசயத்தை இப்படி பொதுவெளியில் போட்டு உடைக்க கூடாது மின்னஞ்சலில் கேட்டு இருக்கலாம்.

      நீக்கு
  7. லஞ்சம் உலகம் முழுதும் பெருவாரியான நாடுகளில் நிறைந்துள்ளது.
    நிறைய மனிதர்களுக்கு தங்களுக்கு உன்மையில் எது எவ்வளவுதான் வேண்டுமென்று புரிந்துகொள்ளும் அறிவாற்றல் வரும் வரை இது தீரப்போவதில்லை.
    டாஸ்மார்க்கிலும் பத்து ரூபாய் அதிகம் லஞ்சமாக வாங்கப்படுவதைக் கண்டோம். எனவே அங்கும் மக்களுக்கு விடிவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆசைக்கு எல்லை வகுத்து வாழும் மனிதர்கள் இல்லை

      ஆகவே லஞ்சம் நஞ்சாக விழிகளுக்கு புலப்படுவதில்லை போலும்...

      நீக்கு
  8. லஞ்சம் வாங்குபன் லஞ்சம் கொடுத்துத்தான் அந்தப் பதவியைப் பெறுகிறான். பதவி கொடுப்பவனும் லஞ்சம் வாங்குகிறான். அவன் அவனுக்கு மேலே உள்ளவனுக்கு அதைக் கொடுக்கிறான். அவனும் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிறான்[உண்டியல் காணிக்கை].
    லஞ்சம் கடவுளுக்குக் காணிக்கை ஆக்கப்படுவதால் ‘நஞ்சில்லா லஞ்சம்’ என்று நீங்கள் தலைப்புக் கொடுத்தது சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கூமுட்டை
      உலகின் முதல் லஞ்சமே தெய்வத்துக்கு மனிதன் உடைத்த சிதறு தேங்காய்தான் நண்பரே...

      நீக்கு
  9. கில்லர்ஜி நஞ்சில்லா லஞ்சமா!!! ஹாஹாஹா லஞ்சமே நஞ்சுதானே! அதுவும் ரத்தத்திலேயே ஓடுதே...தலைமுறை தலைமுறையாய் வேறு தொடர்கிறதே...அப்புறம் எங்க நஞ்சில்லா லஞ்சம்! அட போங்கப்பா....மக்கள் லைசன்ஸுக்குப் பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்லி பலரும் திரண்டு எழுந்தாதான் நடக்கும்...இல்லைனா லைசன்ஸ் கிடைக்காது. என் அனுபவமும் உண்டு. நானும் நேரடியாகச் சென்று பார்த்த போது....ஹையோ அலையவிட்டாங்க பாருங்க....நொந்து விட்டேன்.

    படத்துல காமிக்க்றது எல்லாம் சும்மா படம் ஓட......அப்படிச் சொல்றவங்க நிஜவாழ்க்கையில் என்ன செய்யறாங்கன்னு நிக்க வைச்சுக் கேட்கணும்....அது சரி சங்கரை அப்ப பேட்டி எடுத்தவங்க இந்தக் கேள்விய கேட்டதாக நினைவே இல்லை....காட்சியைப் புகழ்ந்தாங்க ஆனா கேட்டதே இல்லை. நான் பேட்டி எடுத்திருந்தா கண்டிப்பா கேட்டிருப்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்பது எழுதாத சட்டமாகி விட்டது.

      திரைப்படம் என்பது மிகைப்படுத்தப்பட்ட போலி நிழல் இது ரசிகன் என்ற பாமரனுக்கு விளங்காது. இவனுக்கு இராணுவவீரர்களின் துயரம் தெரியாது அதே நேரம் அவனது ஆதர்ஷநாயகன் திரையில் செய்தால் நம்புவான். காரணம் இவனது ''வளர்ச்சி'' அவ்வளவுதான்.

      நீக்கு
  10. காணொளியில் முதல் பகுதி - இப்படியுமா? ஆனா யாரும் நசுங்கியது போலவே தெரியலையே கில்லர்ஜி...குப்பைய கொட்டுவது போல கொட்டிட்டிப் போறாங்க....ஆனா மக்கள் உடனே எழுந்துக்கறாங்களெ! ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்தாலும் மூச்சு வாங்கிடுமே....புரியலை

    இரண்டாவது பகுதி ஆ...!!!.....

    என்னவோ போங்க......ஒழுங்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர் வேலை, போலீஸ் வேலையே லஞ்சம் விளையாடுது...இதுல நஞ்சில்லா லஞ்சம் எங்கிட்டு?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பல ஊர்களில் இப்படி வாகனங்களை கண்டு இருக்கிறேன். வரும்முன் காப்போம் என்பது நமது மக்களுக்கு தெரியாது

      நீக்கு
  11. லஞ்சம் - எங்கேயும் எப்போதும் லஞ்சம். அதனை சட்டப்படி சரியானது என்று சொல்லிவிட்டாலும் சொல்வார்கள். அதிலும் நம் தமிழகத்தினைப் போல எங்கேயும் இல்லை! இறப்புச் சான்றிதழுக்குக்கூட லஞ்சம் கேட்கும் கேடுகெட்ட ஊர் நம்முடையது!

    காணொளி - இரண்டாம் பகுதி சிரிக்க வைத்தது! முதலாவது - வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. // நமது மக்களில் பெறும்பாலானோருக்கு இறைபயம் என்பது கிடையாது... //

    பலருக்கும் பயம் வருவதாலே இறைபக்தி பீறிட்டு எழுகிறது + பொய் ஒழுக்கம் +++++

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தும் உண்மையே...

      நீக்கு
  13. // பெறும்பாலானோருக்கு //

    று --> ரு

    பதிலளிநீக்கு
  14. பரவாயில்லை, தட்டுமுட்டுச் சாமான்கள்தான் விழுது என்று பார்த்தால்...எல்லாம் மனிதர்கள். அடப்பாவிகளா... மனசாட்சி இல்லாமல் இப்படி ஓட்டறாங்களே... அடுத்த காட்சி அதைவிட. வண்டியின் எஞ்சின் பகுதி மாத்திரம் பிச்சுக்கிட்டு தனியா ஓடுது. RTO ஆபீஸ் லஞ்சத்தில் திளைக்குது என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      மக்கள் திருந்தாத வரையில். அரசியல்வாதிகள் மாறப்போவதில்லை

      நீக்கு
  15. அன்னன்னைக்கு செஞ்ச பாவங்களை மன்னித்துவிடு என்று சொல்லத்தான் வேஷத்தோடு கோயிலுக்குப் போறாங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் பாவமன்னிப்பு போலத்தான் இருக்கும்

      நீக்கு
  16. லஞ்சம் ஒழியும் காலம் வருமா

    பதிலளிநீக்கு
  17. //சமூகப்பார்வைக்காக நெற்றியில் விபூதி, சந்தணம், குங்குமம் இருந்தால் இவர் நல்ல மனிதரென்று அனைவரும் கருதக்கூடும் என்று பொய் வேடமிட்டு அதன்வழியே திருட்டு தொழிலை அரங்கேற்றுகின்றனர்//

    மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள வாசகத்தை படிக்கும்போது என்னுடைய மனக்கண்ணில் அமைச்சர் "செந்தில் பாலாஜி" வந்துபோகிறாரே!!??... எனக்குமட்டும்தான் அப்படியா?... அல்லது இதை படிக்கும் எல்லோருக்கும் அப்படியா?... ஒருவேளை இது என்னுடைய "மனப்பிராந்தி"யாக இருக்குமோ?

    ("மனப்பிராந்தி" என்றவுடன் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கும் "டாஸ்மார்க் பிராந்தி" தங்கள் மனக்கண்ணில் வந்துபோனால் அதற்கு நான் பொறுப்பல்ல...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      எனக்கு கூத்தாடன் செந்தில் தெரியும், மற்றும் பழைய கூத்தாடன் பாலாஜி தெரியும்.

      மற்றபடி எனக்கு மனப்பிராந்தியும் இல்லை விஸ்கியும் இல்லை நண்பரே

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. என்னால் நேற்று வலைப்பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    தங்கள் ஆதங்கம் புரிகிறது. லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் கைகள் நீளாமல் இருக்க முடியுமா? லஞ்சம் தருபவர்களுக்கும் அந்த நேரம் ஆதாயமாகத்தானே அமைகிறது.. . என்னவோ ஒன்றும் சொல்வதற்கில்லை.

    காணொளி கண்டேன். குலை நடுக்கம் ஏற்படுகிறது. எப்படிதான் சிறு அடிகள், ரத்த காயமின்றி அனைவரும் எழுந்து நடமாடுகிறார்கள். விந்தையாகத்தான் இருக்கிறது. மனிதருக்கு மிருக குணங்கள் உண்டென அறிந்துள்ளோம். மனிதரே மிருகங்களாக மாறுவதை இன்றுதான் காண்கிறேன். எங்கிருந்துதான் இந்த காணொளிகளை பெற்றீர்களோ?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தாமதமானால் என்ன வந்து விடுகின்றீர்களே... அதுவே பெரிய விடயம். தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  19. காணொளியைப் பின்னர் தான் பார்க்கணும். இப்போத் தமிழ்நாட்டு நிலைமையை நினைச்சுப் பார்க்கத் தோன்றும் பதிவு. ஊழல் செய்தாலும் காப்பாற்ற ஆட்கள் இருந்தால் போதும் என்றிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      எல்லாம் மக்களின் கையில் இருக்கிறது

      நீக்கு
  20. லஞ்சம் இது தானே எங்கும் ஆடுது.
    இரண்டாவது காணொளி சிரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. லஞ்சத்தை ஒழிக்க முடியாது. அதிகமாகி கொண்டே தான் இருக்கும் போல!

    பதிலளிநீக்கு