இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 19, 2023

வாழவந்தானும், வாத்து மடையனும்


ணக்கம் வாழவந்தான் அண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா வாத்து மடையா நல்லா இருக்கேன்டா.. என்ன இந்தப்பக்கம் ?
சில சந்தேகங்கள் வந்துச்சு உங்கள்ட்ட கேட்டுப் போகலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன் ?
 
பொது இடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சு வீடு கட்டுனா தப்பாண்ணே ?
ஆமாடா பிறகு நீதி மன்றம் ஆணையிட்டு வீட்டை இடிச்சு தரை மட்டமாக்கிட்டு போயிடுவாங்க...
அப்படீனாக்கா... புறம்போக்கு இடத்துல மதுரையில கட்டி இருக்காங்களே... சென்னை ஐகோர்ட்டு அதை யாருண்ணே கேட்கிறது ?
? ? ?
 
மின்சாரக் கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்தா தப்பாண்ணே ?
ஆமாடாத்தம்பி பிறகு காவல்துறையில புகார் கொடுத்து அவங்க வந்து கைது பண்ணிட்டு போயிடுவாங்க...
அப்படீனாக்கா... புறம்போக்கு இடம்னு தெரிஞ்சும் பணம் கட்டுனா இணைப்பு தர்றாங்களே அவங்களை யாருணே கைது செய்வாங்க ?
? ? ?
 
நாம சில நேரம் டாஸ்மாக் போயிட்டு வரும்போது போதையில சாலையில போற பேருந்தை நிறுத்தி வச்சா தப்பாண்ணே ?
பின்னே தப்பு இல்லையா பிறகு வண்டியில இருக்கிறவங்களே.. உன்னை தூக்கிட்டு போயி காவல் நிலையத்துல ஒப்படைச்சுருவாங்களே...
நாம ஒரு வண்டியை நிறுத்துறதே தப்புனா... அரசியல்வாதிங்க வரும்போது  நூத்துக்கணக்கான வண்டிகளை, ஆம்புலன்ஸை காவல் அதிகாரிங்களே நிறுத்தி வைக்கிறாங்களே... இவங்களை யாருணே தூக்கிட்டு போவாங்க ?
? ? ?
 
ஒரு மனுசனை வெட்டுறது தப்பாண்ணே ?
என்னடா கேள்வி கேட்கிறே... ?  கொலை செய்யிறது குற்றமில்லையா ? அந்த மாதிரி யாரையுமே வெட்டுறது தப்புதான், பிறகு ஜெயிலுதான்.
அப்படீனாக்கா, நம்ம சொடலை லாரியில அடிபட்டு செத்துப் போனவனை மார்ச்சுவரியில் வச்சு கூறு போட்டு பொட்டணமா கட்டித் தந்தாங்களே அது தப்பு இல்லையாண்ணே ?
? ? ?
 
போதையில தள்ளாடி நடந்து போனதுக்கு என்னோட சகலையை காவல் நிலையத்துக்கு கூட்டிட்டு போறாங்களே ஏண்ணே ?
தம்பி பொதுமக்களுக்கு இடையூராக நடந்துக்கிறது தப்புத்தானே அதனாலதான் காவல்துறை கைது செய்யிறாங்கடா...
அப்படீனாக்கா... டாஸ்மாக் கடையில ஜெயில் கம்பிக்குள்ளே நின்னு விக்கிறாரே அவரை யாருணே கைது பண்ணுவாங்க ?
? ? ?
 
ஏண்ணே வெடிகுண்டு வீசுனா தப்பாண்ணே ?
என்னடா முட்டாள்த்தனமா கேட்கிறே.. வெடிகுண்டு வீசி மக்கள் செத்துப் போனால் உன்னை சும்மா விடுவாங்களா ?
வெடிகுண்டு வாங்கிட்டு வந்துதானே வீசுறான்... அப்படீனாக்கா... வெடிகுண்டை தயாரித்து விற்கிறானே அவனை ஏண்ணே கைது பண்ணி உள்ளே போடலை ?
? ? ?
 
என்னண்ணே எதுக்குமே... பதில் சொல்ல மாட்றீங்க ?
தம்பி தப்பை தப்பு இல்லாம செய்தால் எதுவுமே தப்பு இல்லைடா.. இதுதான் இந்தியாவில் அரசியல்வாதிகள் வகுத்த சட்டம்.
? ? ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

Share this post with your FRIENDS…

44 கருத்துகள்:

  1. இந்தியாவில் உங்களை போல கேள்வி கேட்பதுதான் தப்பு ஆனால் அதே நேரத்தில் நீங்கள் சங்கிகள் குருப்பாக இருந்தா எல்லாம் சரிதான்

    பதிலளிநீக்கு
  2. கேள்விகள் சரிதான். இன்னும் கேட்க வேண்டிய கேள்விகள் நிறையவே இருக்கின்றனவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்போம் ஜி கேட்ட கேள்விகளுக்கு வாழவந்தான் அண்ணன் இன்னும் பதில் தரவில்லையே...

      நீக்கு
  3. காணொலியில் அந்த பெண் போலீசின் தர்மசங்கடம், தவிப்பு தெரிகிறது. தவிர்க்க முடியாத சங்கடங்கள்.. அமைச்சர் எத்தனை கார்களில்தான் வருவார்.. அதுவரை அந்த உயிர் காத்திருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  4. ஏன் அண்ணே எனக்கு மட்டும் இப்படி குண்டக்க மண்டக்க சந்தேகம் எல்லாம் வருது?

    அதுவா! இந்த கில்லர்ஜியாநந்தா கிட்டே வந்தாலே ஞானோதயம் தானே வரும்டா

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதுவும் நல்லதுதான்.
      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. ஆட்சி மாறும்போது இதே அமைச்சன் ஆம்புலன்ஸில் காத்துக்கிடக்கணும். காப்பாற்ற அவகாசம் இல்லாமல் துடிதுடித்துச் சாகணும். இது நம் ஆசை. நிறைவேறாத ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் எனது ஆசையும் இதுவே...

      தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  6. வயற்றெரிச்சலான கேள்விகள்..

    விடைகள் கிடையாது..

    பதிலளிநீக்கு
  7. தவறை தவறு இல்லாம செய்தால் சரி..

    இதுதான் நிலை..

    பதிலளிநீக்கு
  8. "நீங்க Andi Indian" - நம்ம 'ஜி'-ன் தொண்டர்கள்...

    பதிலளிநீக்கு
  9. நல்ல கேள்விகள். இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும்! குறிப்பிட்ட கட்சி என்று சொல்வதற்கு இல்லை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தும் உண்மைதான்...

      நீக்கு
  10. இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கலாம். ஆனால் கேட்ட கேள்விகளுக்கே சரியா பதில் வரலையே.... இந்தியாவில் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கேள்விகளுக்கா பஞ்சம் ? பதில் வரட்டும் பார்ப்போம்.

      நீக்கு
  11. கவுண்டமணி-செந்தில் இல்லாட்டில் என்ன.. வாழவந்தானும் வா ம.. உம் இருக்கின்றனர் ஹா ஹா ஹா.
    ஒவ்வொரு விசயத்தையும் தொகுத்தெடுத்துக் கொமெடிபோல அழகாக எழுதியிருக்கிறீங்கள் மிக அருமையாக இருக்கு.

    கீழிருந்து மேலே 3 வது மட்டும் புரியவில்லை... டாஸ் மார்க், ஜெயில் கம்பி ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டில் சாராயக்கடையில் கம்பி போட்டு ஜெயில் போலவே இருக்கும். அதன் உள்ளே நின்று கவுண்டர் வழியேதான் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

      நகைக்கடைகள் வியாபாரம்கூட திறந்த வெளியில்தான் இருக்கிறது.

      நீக்கு
  12. வீடியோ பார்க்க மிகவும் கெட்ட கோபமாக வருது, ரத்தம் கொதிக்குது, அங்கு எப்படி இப்படிச் செய்கிறார்கள், இதுக்கு ஆராவது வழக்குப் போடலாம்.. அம்பியூலன்ஸ் ஐ எந்நாட்டிலாவது மறிச்சு வைப்பார்களோ... அதுக்கு மரியாதை கொடுக்காதோர் எப்படி நாட்டுக்கு மரியாதை குடுப்பினம்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கேள்விகள்.
    இதற்கு வாழவந்தான் பதில் கூறினால் அப்புரம் அவரும் வாழமாட்டாரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வதும் சரிதான்.

      நீக்கு
  14. அது சரி அண்ணே! ஒரு சிலர் ஏனோ இப்போத் தான் இதெல்லாம் நடக்கிற மாதிரியும் முன்னாலே பாலாறும், தேனாறுமா ஓடிக் கொண்டிருந்தாப்போலயும் பேசறாங்களே! அது ஏன் அண்ணே!
    அதுவா? அது அப்படித்தான் தம்பி. நாம எது வேணாப் பண்ணலாம். இப்போ ஆட்சி செய்யறவங்க அதைத் தட்டிக் கேட்கலாமா? அது பெரிய தப்பு இல்லையோ? அதான்! (இப்போதைய அரசியல் காட்சிகள் நினைவில் வந்தால் நான் பொறுப்பு இல்லை.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவு கவுண்டமணியும், செந்திலும் பந்தப்பட்டது.

      ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும் பந்தப்படாதது.

      நீக்கு
  15. கில்லர்ஜி!! ஹாஹாஹாஹா வாழவந்தான் ஏன் பதில் சொல்லலைன்னு தெரியுது...சொல்ல மாட்டாரே! அவரென்ன லூஸா? சொன்னா என்ன ஆகும்னு தெரியாதா...ஆனா அந்தத் தம்பிக்கு இப்பத்தான் இதெல்லாம் கண்ணுல பட்டுச்சு போல....சரி...இன்னும் கேட்கச் சொல்லுங்க அந்த தம்பிய நிறைய இருக்கு...இப்பத்தான் உலகத்தை பார்க்குறார் போல...அவரு என்ன கேட்டாலும் பதில் எதுவும் கிடைக்காது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      வாத்து மடையன் அமெரிக்காவிலிருந்து வந்து இருப்பாரோ...

      நீக்கு
  16. ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டது....உள்ளார படுத்திருப்பது சாதாரண ஜனம் கில்லர்ஜி....அதுக்குத்தான் காசு கொடுத்திருக்காங்களே...காத்திருக்க....அப்புறம் என்ன??

    இதுக்குக் காரணம் அந்த ஜனமும்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சாதாரண மனிதன்தான் இவனின் பவர் தனக்கு தேர்தல் நேரத்தில்கூட புரியவில்லையே...

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நன்றாக யோசித்து எழுதியுள்ளீர்கள்.

    நல்ல கேள்விகள் பெயர்தான் அவருக்கு மடையன் என்கிற மாதிரி இருக்கின்றனவே தவிர அவர் நல்ல புத்திசாலிதான் . அவர் கேள்விக்கு இவரால் பதில் தர இயலவில்லையே...! ஏனெனில் இவரும் வாழ வந்தவர்தானே ... (சோழவந்தான் என்னும் ஊர் பெயர் நினைவுக்கு வருகிறது.) பொறுப்பான பதிலை எப்படி இவரிடமிருந்து பெற முடியும்?

    காணோளி பயங்கரம். ஒரு உயிரின் மதிப்பு அவ்வளவுதான் போலும்...! என்னவோ போங்க..! ஒன்றும் ஜீரணிக்க இயலவில்லை...!

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      இந்த நிலைக்கு வாக்கு அளித்து நாம்தானே காரணம்...

      நீக்கு
  18. சிந்திக்க வைத்த சிரிப்பு. நன்றி

    பதிலளிநீக்கு
  19. ஹா...ஹா....நல்ல கேள்விகள் பதில்கள்.

    பதிலளிநீக்கு
  20. இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் யார் பதில் சொல்ல முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நீங்கள் பதில் சொல்லுங்கள்.

      நீக்கு
  21. காணொளி கண்டதும் ஆத்திரம் கொண்டேன்... ஆம்புலன்சில் படுத்திருப்பது பெரும்பாலும் முன்னாள் அமைச்சராகத்தான் இருக்கும் என்று ஒருவாறு ஆறுதல் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது எண்ணம் போல் இருந்தால் நல்லதுதான் நண்பரே...

      நீக்கு
  22. கேள்விகள் நியாய மானது.
    காணொளி வருத்தமாக இருக்கிறது. அந்த மைச்சர் அப்படி வருகிறார்? மனிதாபிமானம் இல்லையே ! முதலில் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எல்லாம் பதவி படுத்தும்பாடு.

      நீக்கு