இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 06, 2023

மடியில் கனமில்லை, மனதில் பயமில்லை

திரைப்படக் கூத்தாடன் திரு.எஸ்.வி.சேகர் அவர்களோடு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும் மேல் காணும் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர்மீது எனக்கு மரியாதை வந்து விடும். அதிமுகவில் எத்தனை பேர் இருந்தார்களோ அவ்வளவு பேர்களும் அடிமைகள்தான். ஏதோ உடலுறுப்பு வகையில் ஆண்வர்க்கம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் அவர்கள் கூத்தாடி செல்வி ஜெயலலிதாவிடம் எவ்வளவு சாதாரணமாக நின்று கொண்டு பேசுகின்றார். இதற்கு ஒரு இராயல் சல்யூட். மடியில் கனமில்லை மனதில் பயமில்லை என்பது போல்தான் இருக்கிறது. அடுத்த படத்தில் பாருங்கள் வரிசையாக கூனிக்குறுகி கூன்பாண்டியர்களைப் போல... இதில் எனக்கு ஆச்சர்யம் என்ன தெரியுமா ? இவர்கள் தனியாக ஏதாவது கூட்டங்களுக்கு போனால் அதில் இவர்களுக்கே முதலிடம் இவர்கள் காலிலும் விழும் அடிவருடிகள். இதைக்காணும் பொழுது சிரிப்புதான் வரும்.

இவர்கள் மிகவும் கேவலமான இழிபிறவிகள் இதில் இவர்களுக்கு பட்டங்கள் சொல்லி வரவேற்பு எப்படி ? கழகத்தின் போர்வாள், தமிழகத்தின் விடிவெள்ளி, அஞ்சாநெஞ்சன், மாவீரன், என்று வர்ணனைகள். விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் போலிருக்கும். சரி செல்வி ஜெயலலிதா அவர்களின் முன்னால் இப்படி நிற்பது அவருக்கு பிடிக்காத விடயம் இருப்பினும் எஸ்.வி.எஸ். அவர்களுக்கு கிடைக்க காரணம் ? இருவரும் ஓரினம் என்ற கோட்பாடா ? என்று என்னிடம் கேட்க கூடாது

இனி இவர்கள்தான் நம்மை ஆளப்போகின்றார்களா ? தொண்டன் உண்மையாக இருந்தால் தலைவன் சரியாக நடப்பான் இதுவே அரசியலின் அரிச்சுவடி. தலைவன் தவறு செய்கின்றான் என்பது கண்கூடாக தெரிந்திருந்தும் அவனுக்கு கீழ்படிந்து இருக்கும் அடிமைகள் வாழும் நாட்டில். சுயகௌரவம் உள்ளவர்களும் அவ்வழியில்தான் செல்ல வேண்டும் வேறு வழியில்லை. என்ன செய்தாலும் மக்கள் பணம் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்பது அரசியல்வாதிகளின் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.

ஆகவே பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்கிறான். அந்தப்பணம் சம்பாரிக்க எல்லா உணர்வுகளையும் கலைந்து செயல்படுகிறான். சுயகௌரவம் என்பது முதலில் தொண்டனுக்கு வந்தால்தான் தலைவனுக்கும் வரும் காரணம் தலைவன் என்பவன் தொண்டனிலிருந்து சென்றவனே... இனியெனும் சோற்றில் கல் உப்பு போட்டு உண்போம்.

கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. எஸ் வி சேகர், ஒய் ஜி மகேந்திரன் போன்றோரெல்லாம் சிறு வயதிலிருந்தே ஜெ வை அறிவார்கள,, சாதாரணமாகப் பழகியிருக்கிறார்கள். சோவும் அப்படித்தான். எஸ் வி சேகர் அதிமுகவில் சேர்ந்திருந்தாலும் காசுக்காகச் சேரவில்லை, தொகுதியில் எம் எல் ஏவாக இருந்தபோதும் காசு அடிக்கவில்லை. அதனால் அவரால் சாதாரணமாக ஜெ வுடற் இருக்க முடிந்தது (அவரும் ஜெ வை அம்மா அல்லது மேடம் என்றே விளிப்பார்). (ஆனாலும் அரசியலில் எப்படி நடந்துகொள்ளணும் என்பது எஸ் வி சேகருக்குத் தெரியாது. ஆணவம், தன் சாதி என்ற உணர்வினால் பிற்பாடு அவர் பிரகாசிக்கவில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. அரசியலில் எஸ் வி சேகர் நேர்மையான மனிதர் என்பதால் பொருத்தமில்லாத மனிதர். அவர் எந்தக் கட்சியிலும் நிரந்தரமாய் இருந்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நேர்மையான மனிதர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

      ஓர் முறை அலைபேசியில் பேசி இருக்கிறேன் பாராட்டுவதற்காக....

      நீக்கு
  3. அப்போது நடந்ததை விடுங்கள்..  இப்போது வெளிப்படையாக ஊழல் செய்கிறார்கள், தவறு செய்கிறார்கள்  சட்டத்தினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, மக்களும் ஏதோ மீம்ஸ் பார்பபதுபோல் வேடிக்கை பார்த்து சிரிக்கிறார்கள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேடிக்கை பார்த்து சிரிக்கிறார்கள்.//

      இல்லை, வேடிக்கை பார்த்து சிரிக்கிறோம் ஜி

      நீக்கு
  4. சிப்பு சேகர், தனியாக ஒரு கட்சி தொடங்குவதாக தகவல்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஜாதிக்கட்சி தொடங்கி சாதித்தவர்கள் இல்லை

      நீக்கு
  5. நீங்கள் தேர்ந்து எடுத்த படங்களும், அரசியல் அவலங்களையும் பார்க்கும் போது

    வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை நினைவுக்கு வருகிறது.


    //அரசேற்ற சிலருக்குப் பயதொடுங்கி
    அறிவுடையோரும் அடிமை வாழ்வை ஏற்றார்.
    அரசுமுறைத் தூய்மைபெற சிற்றுர் மக்கள்
    அறிவு பொருள் நிலை கடமை உயர்த்த வேண்டும்
    அரசாட்சி மூலம் பின் ஆன்ம வாழ்வை
    அடையலாம் அறிஞர்களே வாரீர் சேர்வீர்.//

    நல்ல மனிதர்கள் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் அறிவடையோர்
    அரசியலுக்கு வர வேண்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பொருத்தமான மகரிஷியின் பாடலை எடுத்து வைத்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. அருமையான பாடல் கோமதிக்கா...

      கீதா

      நீக்கு
  6. நேர்மை, நாவடக்கம், நல்ல செயல்கள் இவை முக்கியம் ஒரு தலைவனுக்கு. இது இல்லாத யாரையும் தலவனாக ஏற்க முடிவதில்லை.

    அதெல்லாம் சரிதான் கில்லர்ஜி இப்படி விளக்குமாத்தை உதாரணம் சொல்லி அத கீழாக்கிட்டீங்களே! வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா..

    பின்ன அது எல்லா இடத்தையும் சுத்தம் செய்ய உதவுகிறது இல்லையா? அதுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவதில் தவறே இல்லை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் விளக்கமாறு உயர்வானது தான் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. அரசியலின் நெடி சற்று தூக்கலாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே உண்மையைதானே சொன்னேன்.

      நீக்கு
  8. கில்லர்ஜி.. செத்த பாம்பை அடிக்கப்பிடாது:).. உயிரோடிருந்து படமெடுக்கும் பாம்புகளைப் பார்த்து அடியுங்கோவன்...ஈஷா யோகா சாமியார் போன்றோரை.. ஹையோ ஆரோ கலைக்கினம் என்னை.. மீ மதுராவுக்கு ஓடிடுறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தொட்டில் ஆட்டிய அதிரா... நான் அடித்துதான் பாம்பு செத்தது சமீபத்தில் சிவன் ராத்திரி என்ற பதிவில் இந்த பாம்பை அடித்தேன்.

      நீக்கு
  9. எஸ்விசேகரெல்லாம் ஒரு மனுஷனா? எனக்கு அவர் மேல் மதிப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இவர் பல கட்சிகளில் இருந்தாலும் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர்.

      ஆனால் உண்மையானவர்.

      நீக்கு
  10. சிறப்பான பதிவு..
    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு