இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 02, 2023

ஓரியூர், ஓட்டுனர் ஓடத்துரை

இது ஆங்கிலோ இண்டியன் கவிதை.
 
     Money
01. இது எனது குடிசை வீடு
ஆம் காசுக்கேற்ற கூடு
 
     Marriage
02. சுந்தரி கழுத்தில் தாலி
சுந்தரின் சுதந்திரம் காலி
 
      Kiss
03. என்ன நள்ளிரவில் சத்தம்
புது மனைவியின் முத்தம்
 
     Dress
04. எனது ஆடையில் கறை
நீக்கப்போறேன் ஆற்றங்கரை
 
    Tree
05. வானிலிருந்து திடீர் ஒலி
ஆம் ஒரு பனைமரம் பலி
 
     Woman
06. ஆற்றில் குடத்தோடு மங்கை
எனது மைத்துனரின் தங்கை
 
     Way
07. ஓட்டுனருக்கு புதியது வழி 
நடத்துனருக்கு தலை வலி
 
    Warning
08. என்னை நிராகரித்தால் கவிதா
சன்னியாசி ஆகிறேன் காவி தா
 
    Angry
09. இயக்கமில்லை வீட்டில் அடுப்பு
இளவேணிக்கு வந்தது கடுப்பு
 
    Beer
10. உணவுக்கு கிடைக்காது  பணம்
குடிப்பதற்கு கிடைக்கும் பானம்
 
    Mixing
11. ஆற்றில் கலந்தது ஆலைக் கழிவு
அதனால் ஊர் மக்களுக்கு அழிவு
 
    Millionaire
12. அவன் மிகப்பெரிய செல்வந்தன்
இவன் பேச்சில் சொல்வேந்தன்
 
    Stops
13. விரைந்து வந்து நின்றது ரயில்
ஏறிச் சென்றாள் வள்ளி மயில்
 
    Actor
14. திரையில் வந்தது நடிகர் கமல்
கை தட்டினான் ரசிகன் விமல்
 
    V.O
15. பேருந்தில் போனார் பண்ணை
பேத்தியும் போனாள் சென்னை
 
    Sales
16. விவசாயமில்லை விற்றார் மாடு
வளர்ப்பதற்கு வாங்கினார் ஆடு
 
   Study
17. ஆணுக்கு கொடுத்தனர் கல்வி
பெண்ணை கெடுத்தனர் கலவி
 
   Heat
18. தலை மேலே விழுந்தது பல்லி
பதறி அலறி விழுந்தாள் அல்லி
 
  Black
19. குறுக்கே வந்தது வெள்ளை பூனை
திரும்பி சென்றது கருப்பு யானை
 
   Opposite
20. எதிர் வீட்டில் பார்த்தான் ஜன்னல்
எஸ்தரின் பார்வையில் மின்னல்
 
     Dance
21. மேடையில் ஆனந்தியின் ஆடல்
மேளத்தோடு மேனகாவின் பாடல்
 
     Sald
22. மிதிவண்டியில் மூடையோடு சுப்பு
விற்றுக் கொண்டு போனார் உப்பு
 
     Mango
23. மரத்திலிருந்து விழுந்தது மாங்கா
மேலேறி பறித்து போட்டாள் கங்கா
 
    Song
24. பேருந்து விரைந்தது தேவகோட்டை
ஓடத்துரை போட்டார் தேவாபாட்டை
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

36 கருத்துகள்:

  1. ரசனை!  ஒரே நேரத்தில் இதே போல எப்படி இவ்வளவு யோசித்தீர்கள்?  

    பதிலளிநீக்கு
  2. கையில் இல்லை கரை --  நீங்கள் நினைத்த பொருள் வர கறை தான் வரவேண்டும் என்று நினைக்கிறேன்! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரையேறி விட்டேன் ஜி

      நீக்கு
    2. ஓ...  அப்படி மாற்றி விட்டீர்களா?  கில்லாடி..  வேகமாக வெவ்வேறு ஐடியாக்கள் சட்சட்டென உதிக்கின்ற உங்களுக்கு...

      நீக்கு
    3. இந்த கருத்தை துண்டைப் போட்டு மூடி வைக்கோணும், அதிரா பார்த்தால் கண்ணேறு படும்.

      நீக்கு
    4. போடுறதுதான் போடுறீங்க பிங் கலர்த்துண்டாப்போட்டு மூடுங்கோ ஹா ஹா ஹா

      நீக்கு
    5. இன்று தெற்கே சூலம் பிங்க் கலர் ஆகாது.

      நீக்கு
  3. குடிப்பதற்கு கிடைப்பதும் பணம் என்றே இருந்தால் இன்னும் பொருத்தம்!  உணவுக்கு கிடைக்காத பணம் குடிபப்தற்கு மட்டும் கிடைத்து விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இரண்டிலும் பணம் வேண்டாம் என்பதற்காக...

      நீக்கு
  4. நிறைய ரசிக்க வைத்தன.  சில சிரிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான சிந்தனை. ஓசை நயம். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கவிதையை இரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. அருமை..
    அருமை..

    இதெல்லாம் தங்களுக்கே உரித்தானது..

    பதிலளிநீக்கு
  7. நினைத்தால் கவிதை வந்து விடுகிறது உங்களுக்கு.
    அருமையாக இருக்கிறது.
    இரண்டு படங்கள் தனி தனியாக எடுத்து இணைத்து விட்டீர்கள் ஒரே படமாய் இல்லையா? குடிசை வீட்டிலிருந்து பஸ் இடித்து கொண்டு நிற்பதை கவனிப்பது போல!
    நன்றாக உள்ளது படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கு நன்றி.

      ஆம் இரண்டு படங்கள்தான் இணைத்து இருக்கிறேன்.

      நீக்கு
  8. சரவெடி கில்லர்ஜி!!! ரசித்தேன் டப் டப் டப்னு தெறி! எல்லாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அடுத்தடுத்து வரும் அலை
    கில்லர்ஜிக்கு அடுக்குமொழி வந்த கலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. கைவந்த கலை - கை விட்டுப் போச்சு!!

      கீதா

      நீக்கு
    3. குறுங்கவி அருமை

      நீக்கு
  10. செல்வந்தன், சொல்வேந்தன், தாலி காலி, ஆடல் பாடல், ஒலி பலி, இப்படி பல ரசித்தேன் ..குடி - பணம் பானம் அந்தக் கண்ணி மட்டும் கொஞ்சம் சரவெடியின் இடையில்;புசுபுசுத்த கண்ணி?!!!!! அவன் பிறப்பால் அலி
    பாவம், சமூகத்தின் கைகளில் பலி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்துக்கு நன்றி

      நீக்கு
  11. அசத்தல்...

    மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது இரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குட்டி கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது. இசைவான சொற்களை ஒன்று போல் அடுத்தடுத்து தொகுத்தது மிக அருமையாக உள்ளது. "அடுக்கு மொழி கவிஞர்" என தங்களுக்கு பட்டம் தரலாம். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களோ ? தங்கள் திறமையை கண்டு வியக்கிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      கவிதையை இரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  13. அனைத்தும் ரசிக்க வைக்குது, எப்படி இப்படியெல்லாம் தொகுக்கிறீங்கள் எனத் தெரியவில்லை, இதற்கும் நிறையப் பொறுமை வேணும் யோசிக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா கவிதையை இரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  14. 8ம் நம்பரில ஒரு எழுத்து மாற வேண்டும்.. அதில் ல் வராது ள் தான் வரோணும் , அப்போதான் வசனம் சரியாகும்...

    எனக்கு டமில்ல டி ஆக்கும்:), அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ எடிட்டர் அது Warning (நிராகரித்தால்) சரிதானே ? உங்களுக்கு யானக்கண் (ஞானம்)

      நீக்கு
  15. ஓவ்வொரு தரமும் பார்த்து வியக்கிறேன். நல்ல தமிழ் ஞானம் உங்களீடம். எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க! அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு