இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 23, 2023

கொல்லங்குடி, கொலைகாரன் கொங்குமுடி

 

தொப்பமுத்தண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா, கொங்குமுடி நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்கணும்...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
 
உப்பு எப்படிணே கரையுது ?
தம்பி கொங்கு உப்புக்குள்ளே ஐதராக்சைடு சத்து இருக்குதுடா அதனாலதான் கரையுது.
அப்படீனாக்கா... காக்கா ஏண்ணே கரையுது ?
? ? ?
* * * * * * * 01 * * * * * * *
 
தீக்குச்சி எப்படிணே எரியுது ?
தம்பி அதுல பொட்டாசியம் குளோரைடும், ஆன்டிமனிட் ரைசல்பைடும் இருக்குதுடா அதனாலதான் எரியுது.
அப்படீனாக்கா... நான் சொந்த வீடு கட்டுனா அடுத்த வீட்டுக்காரன் வயிறு எப்படிணே எரியுது ?
? ? ?
* * * * * * * 02 * * * * * * *
 
பட்டாசு எப்படிணே வெடிக்குது ?
பட்டாசுக்கு உள்ளே சல்பர் ரசாயனம் இருக்கு, அதுல தீ வச்சால் வெடிக்கும்.
அப்படீனாக்கா... தீ வைக்காம டயர் ஏண்ணே வெடிக்குது ?
? ? ?
* * * * * * * 03 * * * * * * *
 
அந்த சர்க்கஸ்ல குரங்கு பபூனுக்கு பயந்து ஏண்ணே ஆடுது ?
இல்லைனா... தினம் சாப்பாடு கிடைக்காதுல அதனாலதான் ஆடுது.
அப்படீனாக்கா... தினமும் மூணு வேளை சோறு போட்டும் எங்க தாத்தாவுக்கு பல்லு ஏண்ணே ஆடுது ?
? ? ?
* * * * * * * 04 * * * * * * *
 
ஏதாவது பிரச்சனை வந்தால் சிக்கல்’’னு எதுக்குணே சொல்றாங்க ?
பிரச்சனை இடியாப்பம் மாதிரியிருக்கும் அதான் சிக்கல்னு சொல்றாங்க.
அப்படீனாக்கா.... நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரம் ஊரை ஏண்ணே சிக்கல்’’னு சொல்றாங்க ?
? ? ?
* * * * * * * 05 * * * * * * *
 
அருவாள் எடுத்துக்கிட்டு வயலுக்கு போறாங்களே எதுக்குணே ?
விவசாயம் செய்தாங்கள்ல நெற்கதிரை அறுக்கத்தான்டா...
அப்படீனாக்கா.... உங்கள்ட்ட பேசினா அறுக்கிறான்’’னு ஏண்ணே சொல்றாங்க ?
? ? ?
* * * * * * * 06 * * * * * * *
 
சின்னக் குழந்தைகள் ஏண்ணே அடிக்கடி அழுகுது ?
தம்பி குழந்தைக்கு பசிக்கும் அதனால பால் கேட்டு அழுகுதுடா...
அப்படீனாக்கா.... பழைய தக்காளி ஏண்ணே அழுகுது ?
? ? ?
* * * * * * * 07 * * * * * * *
 
மீன் செத்தால் கருவாடுனு பழமொழி சொல்றாங்களே ஏண்ணே ?
தம்பி மீன் செத்துப் போனாலும் அதை காயவைத்து உப்பு போட்டு வச்சா கருவாடாகிடும் அதுக்குத்தான்டா இந்த பழமொழி.
அப்படீனாக்கா.... கடல்ல புடிச்சு வர்றதுக்கு ஒரு வாரமாகி மீன் கரைக்கு கொண்டு வரும்போது செத்ததுதானே அதை ஏன் கருவாடுனு சொல்லலை ?
? ? ?
* * * * * * * 08 * * * * * * *
 
ஆடு, மாடு விற்கிற இடத்துல கறிக்கடைனு ஏண்ணே போட்டு இருக்காங்க  ?
தம்பி அது இறைச்சி விற்கிற இடம் அதனோட கறியை விற்கிறதாலதான்...
அப்படீனாக்கா.... வாழைக்காய், கத்திரிக்காய், புடலங்காய், பாகற்காய், மாங்காய் விற்கிற இடத்துல காய்கறினு ஏண்ணே போட்டு இருக்காங்க ?
? ? ?
* * * * * * * 09 * * * * * * *
 
என்னணே பதில் சொல்லாம முழிக்கிறீங்க ?
ரயிலு வந்தால் குறுக்கே பாய்ஞ்சுடலாமேனு நினைக்கிறேன்டா...
அப்ப சீக்கிரம் வாங்கண்ணே தண்டவாளத்துப் பக்கம் போவோம், நீங்க பாஞ்சதும் பார்த்துட்டு ஜோலிக்கு போறேன் எனக்கு இன்றைக்கு சம்பளதேதி வீட்டுல பொஞ்சாதி காத்துட்டுக்கிட்டு இருப்பா...
? ? ?
* * * * * * * 10 * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
இந்த கொங்குமுடி, கொலைகாரப்பாவியா இருப்பான் போலயே...?

Share this post with your FRIENDS…

25 கருத்துகள்:

  1. செந்திலும் கவுண்ட்டமணியும் நினைவுக்கு வருகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. எனக்கு இன்றைக்கு சம்பள தேதி வீட்டுல பொஞ்சாதி காத்துட்டுக்கிட்டு இருப்பா...

    அருமை..
    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. நீங்க பாஞ்சதும் பாத்துட்டு ஜோலிக்குப் போறேன் - ஹா ஹா ஹா. கவுண்டமணி செந்தில் நினைவுதான் எனக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  4. உங்கள் பாணி கவுண்டமணி செந்தில் காமெடி ரசித்தேன் கில்லர்ஜி.

    கணினி எப்ப மூடும்னு தெரியலை பவர் வோல்டேஜ்....ட்ராப்....அப்பப்ப போய் போய் வருது...கணினியில் பவர் இல்லை...மூடிடும் கோமதிக்காவுக்கும் இத சொல்லி இங்கு ஒரு கருத்து போட்டு போய்டலாம்னு...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆசானே ஏன் காக்கா கரையுதுன்னு சொல்றோம்
    அதுவா, அது மற்ற காக்காய்களைக் கூப்பிடுது.
    அப்போ அழுவரனைப் பார்த்து கரையுரான் ன்னு சொல்றோம்?
    ....
    ஆசானே ஏன் வயிறு எரியுது ன்னு சொல்றோம்?
    அதுவா வயத்துல அமிலம் சுரக்குதுல்ல அதனாலே தான்.
    அப்படீன்னா பச்சைமிளகாயை கடிச்சுட்டு எரியுதுன்னு ஏன் சொல்றோம்?


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது நகைச்சுவையும் சிறப்பு.

      நீக்கு
  6. கேள்விகளும், பதில்களும் அருமை, நல்ல சிரிப்பு.
    கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை நினைவுக்கு வந்தது எனக்கும்.
    அடுத்தவன் சாகபோகிறேன் என்றாலும் பார்த்து விட்டு போகிறேன் என்கிறாரே!
    சிவ சம்போ நினைப்பு சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. கில்லர்ஜி என் கருத்தைக் காணவில்லைய்ே!!!

    வழக்கம் போல செந்தில் கவுண்டமணி கேள்வி பதில் நேரம் ரசித்தேன் கில்லர்ஜி..கடைசி பாயறதுதான் பஞ்ச்!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இதுதான் கருத்து வேறு இல்லையே...

      தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. ரொம்ப அப்பாவியா கேள்விகள் கேட்டே தொப்பமுத்து அண்ணனைத் தற்கொலைக்குத் தூண்டிய கொங்குமுடி வெறும் கொலைகாரன் அல்ல, பொல்லாத குள்ளநரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

      நீக்கு
  9. சிந்தனையும் சிரிப்பும் சேர்ந்த பதிவு . நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  10. எனக்கு செந்தில்/கவுண்டமணீ நகைச்சுவையே பிடிக்காது. பார்க்கவே மாட்டேன். வாழைப்பழ காமெடி தவிர்த்து மற்றவை பார்த்ததில்லை. அதுவும் கரகாட்டக்காரன் படம் பார்த்ததால் பார்க்க நேர்ந்தது. ஆகவே இதுவும் அத்தனை ரசிக்க முடியலை. தப்பாய் நினைக்காதீங்க! என்னோட ரசனை அம்புடுதேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது மனதில் பட்டதை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிலேதும் சொல்ல முடியாத அளவிற்கு நல்ல கேள்விகள். கடைசியில் தொப்பமுத்து அண்ணனை தற்கொலை செய்து கொள்ளும் முயற்சிக்கும் வழி அமைத்து விட்டாரே கொங்குமுடி தம்பி. பொல்லாதவர்தான்.. தங்கள் கற்பனையை ரசித்தேன். பெயர்கள் ஊருடன் அமையுமாறு எப்படித்தான் தங்களுக்குள் வருகிறதோ? உங்களது அபார கற்பனா சக்திக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு