இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 27, 2023

சந்தியில் நிற்கும் சந்ததி

ணக்கம் நட்பூக்களே... இன்றைய நிலையில் நடுத்தர வர்க்கம், மற்றும் அடித்தட்டு மக்கள் அனைவருமே கஷ்டமான வாழ்க்கையே வாழ்கிறோம். இதற்கு அடிப்படை காரணம் என்ன ? நாம் இதனைக் குறித்து ஆலோசித்து இருக்கின்றோமா ? நாளைய நமது சந்ததிகளின் வாழ்வாதாரத்தைப்பற்றி நினைக்கின்றோமா ? நமக்கு பொறுப்புணர்வு இல்லையா ?
 
இதன் அடிப்படை காரணம் விலைவாசி ஏற்றம்தானே... இதற்கு காரணமானவர்கள் நாடாளும், பிரதமர் முதல் வார்டு உறுப்பினர்கள்வரை இவர்களெல்லாம் மக்களின் பணத்தை அரசு விழா என்ற பெயரில் ஊதாரித்தனமாக செலவு செய்வது, மற்றும் பொதுச்செலவுகளின் பணத்தில் மூன்றில் இரண்டு பங்கை தங்களுக்குள் பங்கீட்டுக் கொள்வது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.
 
காரணம் அவர்கள் தேர்தலில் நிற்பதற்காக கோடிக்கணக்கில் சொத்துக்களை விற்று முதலீடு செய்து நமது வாக்குக்கு வாக்கரிசி போடுவது வரை செலவு செய்கின்றார்கள். அதை திருப்பி வட்டியோடு எடுக்க வேண்டாமா ? அரசியலுக்கு அன்று தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து தனது செல்வங்களை செலவு செய்து வந்தார்கள். ஜவர்கர்லால் நேரு உள்பட இன்று அதே வாரிசுகள் இத்தாலியில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர். இங்கு கொள்ளையடிப்பதில் யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.
 
இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஸ்விட்சர்லாண்ட் வங்கிகளில் கட்டாயமாக கணக்கு இருக்கிறது பிற தேசங்களில் சொத்துக்கள் இருக்கிறது, எந்த நேரமும் எந்த நாட்டிலும் குடியுரிமையை பெறும் வலிமையை வளர்த்துக் கொள்கின்றார்கள். காரணம் திடீரென நாம் செய்த தவறுகளுக்கு அடுத்து கொள்ளையடிக்க வந்தவர்கள் தான் யோக்கியன் யோகமூர்த்தி என்பதை மக்களிடம் காண்பிக்க அவர்களது ஊழலை வெளிப்படுத்துவது போன்ற சித்து வேலைகளை நடத்துவார்கள்.
 

அந்நிலை வந்தால் சகலை நித்தியைப்போல் திடீரென்று காணாமல் போய் விடுவார்கள். இப்பொழுதெல்லாம் அயல் தேசங்களில் தீவுகளை வாங்கிப் போடுவது சாதாரணமாக போய் விட்டது கார்த்திக் சிதம்பரம் மட்டுமல்ல பல மந்திரிகளுக்கும் ஆஸ்த்திரேலியாவில் தீவுகள் இருக்கிறது. சரி இவ்வளவு பணமும் கொள்ளையடிக்கும் உரிமையை கொடுத்தது நாம்தானே ? கொள்ளையடித்தவன் என்று அறிந்தும் மீண்டும், மீண்டும் நாம் இவர்களுக்கே வாக்கு அளிப்பது நமது அறிவீனம்தானே... ?
 
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் அதாவது அரசியல்வாதிகள் முதல், தொழிலதிபர்கள் வரை போட்டு இருக்கும் பணம் இந்தியாவுக்கு வந்தால் ? ? ? பட்ஜெட் போடாமல் மக்களிடம் எந்த வகையான வரிகளும் வசூலிக்காமல் அடுத்து முப்பது வருடங்களுக்கு செலவு செய்யலாம் என்று நமது கணக்கீட்டாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். சரி இந்த பணம் வங்கியில் போட்டவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்லாமலேயே வைத்து இருந்தனர், இருக்கின்றனர்.
 
ஆம் இவர்கள் தங்களது குடும்பத்துக்குகூட தெரியாமல் போட்டு வைத்தவர்களும் உண்டு பலரும் இறந்து விட்ட நிலையில் அந்தப்பணம் அந்த நாட்டையே சேரும், சேர்ந்து கொண்டும் வருகிறது. வெட்டியாக அந்தப்பணம் வங்கிகளில் இருந்து வட்டி கிடைக்கலாம் ஆனால் பயன் ? மேலும், மேலும் பணத்தை அங்கு கொண்டு போய் கொட்டும்போது அவைகளை எடுக்க வேண்டிய சூழல் அமைவது இல்லை. இன்றும் டிஜிடல் இந்தியாவில் ஒருவேளை உணவோடு உறங்குபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி விட்டது.
 
இப்படி பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் பணம் வெட்டியாக உறங்குகிறது இவைகளை அந்த நாடு உபயோகப்படுத்திக் கொண்டு வருகிறது. கேட்பாரில்லை எதற்காக இவ்வளவு பணம் ? கொரோனா காலகட்டத்தில் இத்தாலியில் மக்கள் மடிந்து விழுந்து சாகும் பொழுது மக்கள் யூரோக்களை வீதியில் வீசினார்கள் எடுப்பார் யாருமில்லை நகராட்சி ஊர்தியில் பணத்தை வாரி அள்ளினார்கள் என்பது வரலாறு.
 
எனக்கு அந்த நேரத்தில் தோன்றிய யோசனை எவ்வளவு பணம் வைத்து இருக்கின்றார்கள் இந்த திமுக. கம்பெனியிலிருந்து நயா பைசாவை மக்களுக்காக கொடுக்கவில்லையே... ஒருவேளை அவர்களுக்கு நம்பிக்கை இருந்து இருக்கிறது போலும் நாம் இறக்க மாட்டோம் மீண்டும் ஆட்சியை பிடிப்போம், மீண்டும் பணம் சேர்ப்போம் என்று... அசைக்க முடியாத நம்பிக்கை ராம்கோ சிமெண்ட் மாதிரி.
 

//ஒரு மனிதன் ஒருமுறை ஏமாந்தால் ஏமாளி இரண்டுமுறை ஏமாந்தால் முட்டாள்// என்பது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாக்கு ஆனால் நாம் எத்தனை முறை ஏமாந்தோம் ? கஜினி முகம்மதுவையே தோற்கடித்து செல்கிறோம். இதிலிருந்து மீள வேண்டும் நமது சந்ததிகளையாவது நாளை நல்வாழ்வு வாழவைக்க வேண்டுமென்ற சிந்தை மக்களுக்கு இனியாவது வருமா ? நமக்காக வேண்டாம் நமது சந்ததிகளுக்காக...
 
2012-ல் நான் Sweet Day in SWITZERLAND போயிருந்தபோது யூரோவை ஃப்ராங்காக மாற்றுவதற்கு வங்கிக்கு சென்று இருந்தேன் அப்பொழுது இந்த வங்கி கணக்கு துவங்குவது பற்றிய விபரங்களை அங்கிருந்த வங்கி அதிகாரியிடம் கேட்டேன் அவர் நேரம் முடிந்து விட்டது நாளை வாருங்கள் என்று சொன்னார். எனக்கு அன்றே ஜெர்மனி திரும்ப வேண்டியது இருந்ததால் ஏற்கனவே பதிவு செய்த பயணச்சீட்டு ஆகவே நேரமின்மை காரணமாக புறப்பட்டு வந்து விட்டேன்.
 
ஸ்விஸ் வங்கியில் பணம் அளவு கடந்து மீறிப்போவதால் முட்டாள் மக்களிடம் இனி பணம் போடவேண்டாம் என்று சொல்வது முட்டாள்த்தனம் ஆகும் என்பது ஸ்விஸ் நாட்டானுக்கு தெரியும். ஆகவே நான்கு வருடம் முன்பு அந்நாட்டு மக்களிடம் கருத்தெடுப்பு எடுத்தது. அவர்கள் மக்களை மனிதர்களாக மதிப்பவர்கள். இங்குள்ள குடியுரிமை உள்ளவர்களுக்கு மாதாமாதம் அவர்களது வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட பணத்தை (ஸ்விட்சர்லாண்ட் ஃப்ராங்க்) போடுவற்கு மக்களிடம் கருத்து கேட்டபோது அறுபத்து ஒன்பது (69) விழுக்காடு மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர், அதற்கு விளக்கமும் கொடுத்தனர்.
 
இப்படி இலவசமாக பணம் கிடைத்தால் மக்களிடம் உழைக்கும் எண்ணங்கள் குறைந்து போகும், சோம்பேறிகளாக ஆக்கி விடும், மேலும் இதையே காரணமாக வைத்து சிறிய மக்கள் தொகையுள்ள நமது நாட்டில் பிற நாட்டவர் குடியுரிமை பெற்றுக் கொண்டு இப்பணத்தை மொத்தமாக அழித்து நாட்டையே கடனாளியாக்கி விடுவார்கள். குறிப்பாக மோடி ஆட்கள் ஆகவே இது வேண்டாத வேலை என்றனர்.
 
ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் ? ஓசியில் எதைக் கொடுத்தாலும் வாங்கி குடிப்போம். இலவசம்தான் நம்மை இந்நிலையில் வைத்து இருக்கிறது. மோடி சொன்னாருனு பதினைந்து லட்சத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டுப் போட்டோம். நம்ம மண்டை ஓட்டையே துளையிட்டு மூளையை எடுத்துட்டாய்ங்கே... நாங்க ஆட்சிக்கு வந்தால் அலைபேசி தருவோம், நீ நல்ல ஆட்சியை வேலை வாய்ப்பைக் கொடு நாங்கள் உழைத்து வாங்கி கொள்கிறோம்.
 
எவ்வளவோ இலவசங்கள் தருகிறோம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் யாருமே இதுவரை மருத்துவத்தையோ, கல்வியையோ குடிநீரையோ தருவதாக சொல்லும் அறிவு இல்லையே... ஏன் ? சொல்ல வைக்கும் அறிவு நம்மிடம் இல்லாததே காரணம். ஒருநாள் சம்பளம் ஆயிரத்தை பெறும் மனிதன் வெறும் ஐநூறு ரூபாய்க்கு ஐந்து வருடத்துக்கு தன்னை அடிமை என்று முத்திரை குத்திக் கொடுத்து வருகிறான். இனியாவது சிந்தி இல்லையேல் சந்தியில் நிற்கும் நமது சந்ததி.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
இந்த ஆளு சும்மாவே இருக்க மாட்டாரோ... நீ சொல்றதை சொல்லு நான் போறேன் டாஸ்மாக்கு...
 
காணொளி

Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

  1. நல்லதொரு பதிவு. மக்கள் மாற மாட்டார்கள். ஆட்சியாளர்களும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு. மக்களுக்கு சொல்லவேண்டியது சொல்லி விட்டீர்கள்.
    காணொளியும் நன்றாக இருக்கிறது.
    நீங்கள் சொல்வது போல கல்விக்கும், மருத்துவத்திற்கும் உதவும் அரசுக்கு ஓட்டு போடுவோம் என்று மக்கள் சொல்லலாம்.
    மக்களின் நலம் விரும்பும் ஆட்சி, தன்னலமற்ற ஆட்சி, மக்களின் வரி பணத்தை வீணாக்காத ஆட்சி மலர வாழ்த்துவோம்.
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. தங்களின ஆதங்கம் புரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. இலவசம் பற்றி நீங்கள் சொன்னது பொட்டில் அறைந்தாற்போல இருக்கு நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. நல்லதொரு சிறப்பான பதிவு..

    காணா விழிகள்
    கேளாச் செவிகள்
    இயங்கா மூளை..

    வால்க இண்டியா..
    வாள்க டமில் நாட்..

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் கில்லர்ஜி! போட்டுத் தாக்கிட்டீங்க! போங்க! தாப்பா குத்தும் போது யோசிக்கணும் மக்கள். யோசித்தால் பிழைத்தோம். யாரும் மாறப் போவதில்லை. எதுவும் மாறப் போவதில்லை. யாருக்கும் வெட்கமில்லை! இலவசம் கொடுத்து வாங்குபவர்களுக்கும் சரி அதை வாங்குபவர்களுக்கும் சரி, ஊழல் செய்பவர்களுக்கும் சரி ஐயோ நாம கொள்ளை அடிச்சது வெளிய வந்து நாறுதேன்னு யாருக்கும் வெட்கமில்லை. ஏனென்றால் இதுவே வாழ்க்கை யதார்த்தம் என்று மாறிப் போனதால்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. தேவையான பதிவு தான். ஆனால் சொல்லி இருப்பதைக் கேட்க ஆட்கள் இருக்காங்களா? அப்புறமா செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.

    இந்தப் பதினைந்து லக்ஷம் விவகாரம் முன்னரே பேசப்பட்டு விளக்கங்கள் கொடுத்தும் இன்னமும் அதையே சொல்லிட்டிருக்காங்களே! இதே போல் தான் "நீட்" தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண் என்பதன் உள் அர்த்தத்தை யாரும் புரிஞ்சுக்காமல் நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் போதுமாம் எனப் பேசிக்கொண்டு திரிவதும்! :( அமைச்சர்களோ அதுக்கும் மேலே புத்திசாலிகளாய் இருக்காங்க! என்னத்தைச் சொல்வது! தலையில் அடிச்சுக்கறதைத் தவிர்த்து வேறே ஏதும் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்கு பதினைந்து லட்சம் வந்துருச்சுனா... நான் புலம்ப மாட்டேன்ல....

      நீக்கு
    2. தமிழ்நாட்டின் அவலங்களை நினைச்சே பார்ப்பதில்லையா கில்லர்ஜி? எழுதக் கை துருதுருவென வந்தாலும் வீண் பிரச்னை என்பதால் அடக்கிக் கொண்டிருக்கேன். உங்களைப் போன்றவர்கள் மத்திய அரசையே குற்றம் சுமத்தாமல் கொஞ்சம் தமிழகத்தையும் கூர்ந்து கவனியுங்கள்.

      நீக்கு
    3. ஸ்விஸ் வங்கிப் பணத்தைப் பிரிச்சுக் கொடுத்தால் இந்திய ஜனத்தொகையில் ஒருத்தருக்குப் பதினைந்து லட்சம் வரை கொடுக்கலாம் என்று தான் பேசப்பட்டது. அதே போல் "நீட்" தேர்வில் ஜீரோ மதிப்பெண் என்பதும் இங்கே நிஜம்மாகவே மதிப்பெண் பெறாமல் ஜீரோ எடுத்தவங்களையே அர்த்தப்படுத்திக்கிறாங்க. ஜீரோ வாங்கினவங்களுக்கெல்லாம் மருத்துவத்தில் இடம் கிடைக்காது. இங்கே உள்ள தலைவர்களும் சரி, மக்களும் சரி அதன் உள்ளார்ந்த பொருளைப் புரிஞ்சுக்கறதே இல்லை. :(

      நீக்கு
    4. என்னையும் சராசரி அரசியல் தொண்டன் என்றுதான் நினைக்கின்றீர்கள்.

      மீள் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  8. நம்ம வெங்கோலன் அழிய வேண்டும்... இல்லையெனில் நாடு அழியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் மாற்றம் வரும் ஜி

      நீக்கு
    2. செங்கோல் கேள்விப்பட்டிருக்கிறேன்... அது என்ன "வெங்கோலன்"???... பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியவரை குறிப்பிடுகின்றீர்களோ?...

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. தங்கள் மனதின் ஆதங்கத்தை நல்ல விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொரு மனிதர்களின் தனிப்பட்ட சுயநலங்கள் என்றுமே மாறாதது. மக்களுக்கும் விழிப்புணர்ச்சி வந்து மனம் திருந்தினால்தான் உண்டு. அது எப்போதோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. சொல்வது ரொம்ப சுலபமா இருக்கு

    பதிலளிநீக்கு