இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 22, 2023

உடைத்தாயே உன் வாழ்க்கை


     ந்த வகையான பிரச்சனைகள் நாட்டில் பல இடங்களிலும் இப்படி நிகழ்கிறது இதற்கு காரணம் பெற்றோர்கள்தானே ? திருமணம் நிச்சயிக்கும் முன்பே மணப்பெண்ணிடம் மட்டுமல்ல, மாப்பிள்ளையிடமும் இன்று தீர்க்கமாக கேட்க வேண்டியது இருக்கிறது இல்லையெனில் இப்படித்தான் இருபுறமும் மனஉலைச்சலும், சண்டையும், அவமானங்களும் வந்து சேரும்.
 
இப்படிச் செய்த இந்தப்பெண் முதலிலேயே சொல்லி இருக்கலாமே என்று நம்மில் பலரும் நினைக்கலாம் பெண்ணின் சூல்நிலை என்னவோ ? இப்பெண்ணை அழைத்துப் போக வந்தவன் தாமதித்து இருக்கலாம். இதென்ன தமிழ்ப்படத்தின் திரைக்கதையா ? பெண்ணின் அப்பாவையே ஒரு கை பிடிங்க என்று கேட்டு பெண்ணை மூட்டையில் கட்டி தூக்கிச் செல்வதற்கு...
 
பழைய காலம் மாதிரி இப்பொழுது இல்லை எல்லாமே சுமூகமாக பேசி முடித்து ஆடம்பரமாக செய்த திருமணங்களே மூன்றே மாதத்தில் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் செல்வது சாதாரண நிகழ்வாகி விட்டது. இப்பொழுது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் சதி செய்வதும் சாதாரண நிகழ்வுதான். ஆகவே பெற்ற மகளாக இருந்தாலும் இன்றைய சூழலில் சாட்சி வைத்துக் கொண்டே சம்மதம் கேட்பது நல்லது.
 
இப்படி செய்தால் நம்மைப் பெற்றவர்களின் நிலை என்னாகும் ? எவ்வளவு மனிதர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நிற்பார்கள் ? என்ற சிந்தனை எல்லாம் இன்றைய தலைமுறையினரிடம் இல்லை. இதன் அடிப்படை காரணம் கல்வித்துறையில் நீதி போதனை கிடையாது. பெற்றோரும் அதிக செல்லம் கொடுத்து குழந்தைகளை கெடுத்து விடுகின்றார்கள். தான் செய்தது தவறென்று உணரும் பொழுது எல்லாமே முடிந்து காரியங்கள் கை மீறிப்போய் விடும்.
 
இந்த அனுபவசாலிகள் சொல்வதை மற்றவர்களும் கேட்பதில்லை எல்லா மனிதர்களுக்கும் பட்டாலே உணர்வு வருகிறது. கண் போன பின்னே சூரிய நமஸ்காரம் போல... திருமணம் என்பதை கடமை என்றே பெற்றோரில் சிலரும், பிள்ளைகளில் சிலரும் கடத்தி விடுபவர்கள் உண்டு. திருமண பந்தம் என்பது தனது வாழ்வின் அடுத்தவொரு அத்தியாயம் தொடங்குகிறது என்பதை உணர வேண்டும்.
 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. – குறள் - 45
கில்லர்ஜி அபுதாபி

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. சாட்சி வைத்துக்கொண்டு சம்மதம் கேட்பது... இது ஆணுக்கும் பொருந்துமல்லவா?

    காரணம் பெற்றோர்களா? பட்டுச்சேலை வாங்கிக்கொடுக்காமல் ஜீன்ஸ் பேன்ட் வாங்கிக்கொடுத்திருந்தால் டக் என்று மணமேடைக்குத் திரும்பியிருப்பாளோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு

  2. @ நெல்லை..

    // பட்டுச்சேலை வாங்கிக்கொடுக்காமல் ஜீன்ஸ் பேன்ட் வாங்கிக் கொடுத்திருந்தால்///

    லெக்கின்ஸ் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

    மாணவிகள் லெக்கின்ஸில் வந்து பதற்றத்தை உண்டாக்குகின்றார்கள்..

    பதிலளிநீக்கு
  3. கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம்..

    கலியின் கட்டளை இது..

    பதிலளிநீக்கு
  4. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கருத்தைக் கேட்க வேண்டும், அவரது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பெண்ணின் திருமணம் என்பதைத் தங்களின் கௌரவப் பிரச்சினையாகப் பார்ப்பதால் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. சிறு வயதிலிருந்தே "இல்வாழ்க்கை என்றால் என்ன ?" என்பதையாவது கற்றுக்கொடுக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. இதில் யார் பக்கம் பிழை என தெரியவில்லை பெண் தனது பெற்றோரிடம் முன்பே எடுத்துச் சொல்லி இருக்கலாம். இப்படி நடப்பது எல்லோருக்குமே சங்கடமான நிலைதான்.

    பதிலளிநீக்கு
  7. மன உறுதியுடன் தன் கருத்தை தைரியமாக எடுத்து சொல்லி இருக்க வேண்டும். இப்படி செய்வது எல்லோரும் சங்கடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் சிலருக்கு தைரியம் வருவதில்லை.

      நீக்கு
  8. யார் மேல் தப்புனு சொல்ல முடியலை. என்றாலும் பெண்ணையும் கேட்டுக் கொண்டே திருமணம் நிச்சயம் செய்யணும் என்பதென்னமோ உண்மை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      எனது அனுபவத்தில் சொல்கிறேன், ஆண் - பெண் இருவரிடமும் கையெழுத்து வாங்கிய பிறகுதான் தாலி கட்ட அனுமதி கொடுக்க வேண்டும்.

      நீக்கு
  9. சூல்நிலை என்று உள்குத்து வைத்து எழுதி இருக்கிறீர்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி சூழல் சொல்ல முடியாமலும் இருந்திருக்கலாம்.

      நீக்கு
  10. இது மாதிரி சம்பவங்கள் மட்டுமல்ல, கள்ள உறவுகளும், அதன் காரணமாக கணவன் மனைவி ஒருவரை ஒருவர் கொல்லுவதும் அதிகரித்துள்ளது.  நம்முடைய நீதிமன்றங்களில் ஒன்று திருமணத்துக்குப் பின் வேறொருவருடன் தொடர்பு என்பது குற்றமல்ல.  பெண் என்ன அடிமையா என்று கேட்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நீதிபதிக்கு என்ன பிரச்சனையோ அல்லது சட்டம் அப்படிப்பட்ட புரிதலைத்தான் அவருக்குத் தந்திருக்கிறதோ என்னவோ.

      அது சரி...சட்டப்படி நடக்க ஒவ்வொரு குடிமகனும் அடிமையா என்ன? (என்று ஒரு நீதிபதியும் கேட்க மாட்டார் என்று நம்புகிறேன்)

      நீக்கு
    2. நம் நாட்டில் இப்போது சாதாரணமாக போய் விட்டது ஜி

      நீக்கு
  11. //இதென்ன தமிழ் படமா... பெண்ணின் அப்பாவையே ஒரு கை பிடிங்க என்று கேட்டு மணப்பெண்ணை மூட்டையில் கட்டி தூக்கி செல்வதற்கு???!!!....
    ஹ...ஹாஹா... நல்ல காமெடி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு