இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 28, 2023

பாத்திரம் காலி

ணக்கம் நண்பர்களே... ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை’’ என்ற கவிஞர் வாலியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

இதோ எனது பாடல்...
 
மன்னன் என்னும் தைக்குழந்தை
பெண்கள் வெல்லும் பூங்கொழுந்தை
எண்ணம் சிந்தும் பெண் அமுதை
கண்டு கொள்ளும் உன் மமதை
 
கையிரெண்டை நான் தடுத்து
வாடுகின்றேன் ஆராரோ
பைங்கிளியே தாலேலோ
மாயவனே தாலேலோ
 
மன்னன் என்னும் தைக்குழந்தை
பெண்கள் வெல்லும் பூங்கொழுந்தை
எண்ணம் சிந்தும் பெண் அமுதை
கண்டு கொள்ளும் உன் மமதை
 
என் கடியில் நீ கிறங்க
உன்னிரண்டும் தான் தயங்க
என்ன பாவம் செய்தேனோ
உன்னை இன்று வெல்வேனோ
 
என் கடியில் நீ கிறங்க
உன்னிரண்டும் தான் தயங்க
என்ன பாவம் செய்தேனோ
உன்னை இன்று வெல்வேனோ
 
ஊழ் இறப்பும் அணைந்திருக்கும்
பந்தம் எந்த பந்தமம்மா
நாளிருக்கும் வாழ்வரைக்கும்
நெஞ்சம் எந்தன் தஞ்சமம்மா
 
வண்ணமிடும் பைகளிலே
பாடிவரும் கிள்ளையிது
என் அருகில் நீ இருந்தால்
ஆபத்தின் தொல்லை அது
 
சாவித்ரி தந்திரத்தை
நச்சரிக்கும் பித்தனம்மா
கேட்ட தாரம் அடைக்கும்வரை
என்னுறக்கம் மறக்குதம்மா
 
ஊஞ்சல் கண்டு நீ ஆடி
பொய் குளத்தில் நீராடி
வஞ்சியவள் தரும்போது
பூசை தரும் பலர் பாடி
 
பொட்டழகன் பெண்களுக்கு
பை தொடுத்து விழுங்கட்டுமா
உங்கள் பாட்டும் தேடுமென்று
தொட்டு நானும் போடட்டுமா
 
மன்னன் என்னும் தைக்குழந்தை
பெண்கள் வெல்லும் பூங்கொழுந்தை
எண்ணம் சிந்தும் பெண் அமுதை
கண்டு கொள்ளும் உன் மமதை
 
கையிரெண்டை நான் தடுத்து
வாடுகின்றேன் ஆராரோ
பைங்கிளியே தாலேலோ
மாயவனே தாலேலோ
 
ஆராரிரோ
ஆராரிரோ
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1976
படம்: பத்ரகாளி
பாடலாசிரியர்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா
 
பாடல் பதிவு நீண்டு விட்டதால் கவிஞர் வாலி அவர்களின் வரிகளை நீக்கி விட்டேன்.
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=_GNXi6UgZEo
நன்றி – கில்லர்ஜி அபுதாபி

Share this post with your FRIENDS…

14 கருத்துகள்:

  1. வழக்கம் போல் மாற்றிப் பாடியிருக்கீங்க.. .!!!!!!

    அருமையான பாடல். மிகவும் பிடித்த பாடல். நல்ல ட்யூன், நல்ல ராகம். மாற்றிய வார்த்தைகளும் மெட்டில் பொருந்திருக்கின்றன.

    என்ன பாவம் செய்தானோ? செய்தேனோ? செய்தேனோ வந்தா சரியாயிருக்குமோ கில்லர்ஜி?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்துப்படி மாற்றி விட்டேன்.

      உண்மையான வரிகள் "செய்தேனோ" ஆகவே இப்படி எழுதினேன்.

      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. குறும்பு.
    குறும்பு தான்..

    பதிலளிநீக்கு
  3. வாலி வரிகளைவிட பாடல் வரிகள் பொருத்தமாக இருந்துவிட்டதால் வாலி வரிகளை நீக்கிவிட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே பதிவு நீண்டதால் உண்மையான வரிகளை நீக்கினேன்.

      நீக்கு
  4. உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் மாற்றி எழுத முடியும். மூலப் பாடல் மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. மாற்றி எழுதிய பாடல் நன்றாக இருக்கிறது.
    பாத்திரம் காலி படத்தில் இடம்பெற போகிறதா இந்த பாடல்?
    மேலே உள்ள படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அப்படியொரு படம் வந்தால் உபயோகமாக ட்ரீம்

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சிரித்துக்கொண்டே படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு