இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 01, 2023

வேப்பமரத்து மாரியாத்தா

 
மீபத்தில் ஓர் ஊரில் மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு போயிருந்தேன். தெருவின் அகலம் சிறியதுதான் பதினாறு அடிகள் உள்ள குறுகிய தெரு. ஒரு வாகனம் போனால் மற்றொரு வாகனம் வழி விடுவது கடினமான காரியம். காரணம் நமது மக்கள் எல்லா ஊர்களிலும் தனது வீட்டின் வாயிற்படியிலிருந்து சுமார் ஐந்து அடிகள் ஆக்கிரமித்துக் கொள்வது நமது தமிழர் பண்பாடுதானே....
 
பக்கத்து வீட்டின் வாயிற்படியில் ஓர் வேப்பமரம் இருந்தது, அதுவும் சாலையில்தான் இருக்கிறது அந்த வீட்டுக்காரர்களோ, அல்லது தெருவாசிகளோ, யார் செய்ததோ தெரியவில்லை வேப்பமரத்தில் சிவப்பு துணியை சுற்றி, மஞ்சள், குங்குமம் சாத்தி வழக்கம் போல மாரியம்மாள் ஆக்கி விட்டார்கள். அதையும் வழக்கம்போல மக்கள் வணங்கிச் செல்கிறார்கள். சரி அந்த வீட்டின் வாயிற்படியில்தான் அந்த தெய்வம் (?) இருக்கிறது. அதாவது கோலம் போடும் இடத்தில். வீட்டில் சுத்தம் இல்லாத காலத்தில் அப்பெண்கள் எப்படி அதனைக் கடந்து வருவார்கள் ?
 
அடுத்த விடயம்தான் எனது மனதை உறுத்தியது அதாவது அந்த மரத்தோடு ஒட்டி நெகிழி பதாகைகளின் சுற்றலோடு ஓர் சிறிய கழிவறை. அதில் சமூகப்போராளி நமீதா இருந்ததையும் எமது விழிகள் கவனித்தது. அதாவது குளிப்பது மற்றும் அவசரத்துக்கு, ஆனால் கழிவறை அல்ல காரணம் இது இருப்பது தெருவில்தான். சரி ஒருபுறம் மாரியம்மாள் இருக்க, மறுபுறம் குளித்துக் கொண்டு கழிவுநீரை வார்த்து விடுவது முறையான பக்தியா ?
 
நமக்கு மன்னர்கள் காலத்தில் கட்டி வைத்த கோயில்கள் போதாதா ? அவைகளை வணங்கி, பராமரித்து பாதுகாத்து வரலாமே... எதற்காக இந்த தவறுகளை மக்கள் செய்கின்றார்கள் ? மாரியம்மாள் தெய்வம்தானே ? இப்படி இழிசெயல்கள் செய்யும் மக்களை காப்பாளா ? புதிது, புதிதாக கோயில்கள் கட்டி பயன்னென்ன ? உண்மையான பக்தி இல்லையே... புதிதாக கட்டும் கோயில்கள், புதிப்பிக்கும் பழைய கோயில்கள் இவைகளில் டைல்ஸ், மார்பிள், கிராணைட் கற்கள் பதிக்கின்றார்களே இது முறையா ? அல்லது செலவு கணக்கு காண்பித்து கொள்ளை அடிப்பதற்க்கான வழி முறைகளா ?
 
பழைய கோயில்களில் தரிசனம் முடிந்தவுடன் கோயிலை மூன்று தடவை பிரகாரம் சுற்றி வரவேண்டும் என்ற சம்பிரதாயத்தை நமது முன்னோர்கள் நமக்கு கடைப்பிடிக்க வைத்தார்களே அதன் காரணமென்ன ? அப்பொழுதுதான் தெய்வம் நமக்கு பலனைத்தரும் என்றா ? இல்லை, காரணம் கோயில் பிரகாரம் சுற்றும் நடைபாதை முழுவதும் கரடுமுரடான அகலமான முண்டுக்கல் பதித்து இருந்தார்கள். அதில் நடக்க வைக்க வேண்டும் என்பதற்காக. மற்றபடி தெய்வம் இப்படி சொல்லவேயில்லை.
 
பண்டைய மக்கள் காலையில் கோயிலுக்கு சென்று தரிசிப்பதை கடமையாக கருதி கட்டாயமாக சென்று வந்தார்கள். நமது முன்னோர்கள் தாம் மூன்று முறைகள் சுற்றி வரும்போது இதில் தினந்தோறும் நடந்து வந்தால் ? சுமார் ஒரு மைல்கள் நடந்து இருப்போம். இப்படி கல்லில் நடப்பதால் காலுக்கு இன்று அக்குபஞ்சர் என்று சொல்லப்படும் சிகிச்சையை தானாகவே செய்து வந்தோம் இதனால் முழங்கால் வலிகள் வராது, கால்களும் வலுப்பெறும்.
 
அதனை மறந்தோம் இன்று மூட்டுவலி தைலங்களை தொலைக்காட்சி விளம்பரங்களில் போலிகளில் எந்த போலி நல்ல போலி என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்தக் கோயில்களில் நவீனமாக டைல்ஸ், மார்பிள், கிராணைட் கற்கள் பதிப்பதுகூட மக்களுக்கு வியாதிகளை வரவைத்து வைத்தியம் பார்க்க வைக்கும் மறைமுக சதி என்றே இருக்கும். இதனுள் பள்ளிவாசல்கள், சர்ச்சுகளும் அடங்கும். இதன் பின்னே உலகலாவிய அரசியல் சதிகள் இருக்கும் என்பதே எனது திண்ணமான எண்ணம்.
 
பக்தி தேவைதான் அவைகள் பிற மதங்களில் பார்வைக்கு கேலிக்கூத்தான விடயங்களை உறுதி படுத்தக்கூடாது என்பதே எமது தாழ்மையான கருத்து. தேவகோட்டையில் நானூறு ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தோடு கூடிய பெரிய சிவன் கோயில் இருக்கிறது. இங்கு கந்தர்சஷ்டி திருவிழா எல்லா வருடங்களும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகத்தினரால் இன்றும் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது. இதில் எனக்கு வருத்தம் என்னவென்றால் சாதாரண தினங்களில் இங்கு மக்கள் வருவதில்லை.
 
ஆனால் எனது வீட்டின் அருகில் கட்டியுள்ள சாய்பாபா கோயிலுக்கு கூட்டம் தெருவே அடைக்கும் அளவுக்கு மக்கள் வருகிறார்கள். சிவன் வழங்காத அருளை நேற்று வந்த சாய்பாபா தருகிறாரா ? சாய்பாபா வாழ்ந்து மறைந்த ஓர் மாமனிதர் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். பதிவு நீண்டு விட்டதால் இதனைக் குறித்து விரைவில் மீண்டும் எழுதுகிறேன்.
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
எல்லோருக்கும் பிரச்சனை எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை.
 
காணொளி

Share this post with your FRIENDS…

23 கருத்துகள்:

  1. முதற்கண் காணொளியை படுத்துக் கொண்டு பார்க்கும் வகையில் அமைத்ததற்கு என் அன்பான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது காணொளி இல்லையே. அவங்க கருத்தைக் கேட்கும் ஒலிதானே... அதை ஏன் படுத்துக்கிட்டுப் பார்க்கணும்? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. காணொளியின் சாராம்சத்தில் எனக்கு முழு உடன்பாடு.

      நீக்கு
  2. கோவில் விஷயத்தில் நீங்கள் சொல்லும் அத்தனையையும் எனக்கும் உடன்பாடே...  போரூர் பால  ஏரியை ஒட்டி ஒரு சிறிய சிவன் கோவில் உள்ளது.  ஜலகண்டேஸ்வரர்.  மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது.  நீர்நிலையை ஒட்டி கோவில்கொண்டிருக்கிறார் இல்லையா? 

    ஏற்கெனவே மெட்ரோ பணிகள் காரணமாக குறுகிய சாலையில் இட நெருக்கடி இருக்கும் நேரத்தில் சில நாட்களாக கோவில் வாசலில் ஒரு தூண் போல நிறுவி யாக குண்டம் போல வைத்திருக்கிறார்கள்.  என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற... முட்டுச் சந்தைப் பார்த்திருக்கும் வீடு என சிறிய பிள்ளையாரை காம்பவுண்டில் பதித்து, அதற்கும் பூசை செய்ய குருக்களை நியமித்து.... நூறு மீட்டர் தாண்டி இருக்கும் பாரம்பர்ய கோவிலுக்கு தினமும் போவார்களா என்பது தெரியலை

      நீக்கு
  3. ஆனால் இங்கு நீங்கள் சொல்லி இருப்பது பக்தியில் சேராது. பிழைப்புக்கு வழி. சில்லறை சம்பாதிக்க உதவும்.

    பதிலளிநீக்கு
  4. நம் கலாச்சார பழக்க வழக்கங்களில் இல்லாத எதுவுமே வருவதற்குக் காரணம் அரசியல் மற்றும் வேறு நோக்கங்கள்தாம். நம் கலாச்சாரத்தைப் பேணாமல், புதுக் கலாச்சாரத்தைத் தழுவுவது உள்நோக்கமுடையது போலியானது, நாம் நம் அடையாளத்தை ஒழித்துவிட்டு வேஷம் போடுவது.

    இதையே நாம் இழந்த உணவுக் கலாச்சாரத்திலும் காணலாம். ஐம்பது வருடங்களில் நம் உணவுக் கலாச்சாரம் அழிந்துவிட்டது. இதிலும் அரசியல்தாம் நெடிதாக எழுதலாம். பன்றிக்கான உணவை அதிகமாக விளைவித்து அதை என்ன செய்வது என யோசித்து அதையும் மக்கள் தலையில் விரைவில் கட்டிவிடுவார்கள். நேத்திக்கு மிஞ்சின சாத்த்துல தயிர் விட்டு வெங்காயம் மிளகாய் தொட்டுட்டு சாப்பிட்டேன் என்று சொல்லுவதே வெட்கக்கேடான விஷயமாக ஐம்பது வருடங்களில் மாறிவிட்டது. குடி கலாச்சாரம் முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது.

    உங்கள் பதிவில் இன்னும் பல விஷயங்கள் சேர்த்து தொடராக்கிவிடலாம்.

    பதிலளிநீக்கு
  5. கூரத்தாழ்வானின் கண் பார்வை பறிக்கப்பட்டதற்கு அவர் - போன ஜன்மத்தில எவர் திரு நாமத்தைப் பார்த்து கோணல் என்று சொன்னேனோ தெரிய வில்லை.. இந்த ஜென்மத்தில் பார்வை போய் விட்டது - என்றாராம்..

    இந்த ஜென்மத்தில அவங்க அவங்க அதை அதை அனுபவிச்சிக்கிட்டுப் போவட்டும்.. ன்னு போயிடனுமாம்... நல்லது சொன்னாக் கூட பாவமாம்...

    ஆனா வாய் சும்மா இருக்க மாட்டேங்குதே..

    இன்னா நைனா பண்றது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அதனால்தான் இந்த மாதிரி பதிவுக்கு கருத்து எழுதுவதும் தவறாகப் போய்விடும் என்று எனக்குத் தோன்றியது

      நீக்கு
  6. கூரத்தாழ்வார் ஸ்ரீ ராமானுஜருடைய சிஷ்யர்..

    பதிலளிநீக்கு
  7. கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்....

    கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்...

    இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
    அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்...

    பதிலளிநீக்கு
  8. மன்னர்கள் காலத்தில் திருக்குறள் எங்கே போனது...?

    பதிலளிநீக்கு
  9. மன்னர்கள் காலத்தில் நூலாண்டிகள் நினைத்தது நடந்தது ஏன்...?

    குறிப்பு : இன்று வரை...

    பதிலளிநீக்கு
  10. முன்னோர்கள் காலத்தில் என்றால்...

    சும்மா 200 ஆண்டுகள் எனும் எண்ணம் இயல்பானது...

    2000 ஆண்டுகள் எனும் எண்ணம் இருந்தால்...

    முந்தைய கருத்துரையை மறுபடியும் வாசிக்க...

    பதிலளிநீக்கு
  11. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலைதான்

    பதிலளிநீக்கு
  12. கில்லர்ஜி கோயில் ப்ற்றியவை நீங்க சொல்லிருப்பது எதுவுமே பக்தியில் வராது. பக்தி என்பது அப்படிச் சொல்லி இப்போது வணிகம். உங்க கருத்துகளுக்கு அதான் அந்த வேப்ப மரம் எல்லாம்....டிட்டோ.

    இங்க இந்த ஊர்ல பாத்தீங்கனா பல மரங்களுக்கும் நூல் சிவப்பு நூல் கட்டிடறாங்க கொஞ்ச நாள்ல மஞ்சள் பூசி, ஏதாவது சாமி படத்தை வைச்சு, அப்பப்ப சீசனுக்கு ஏற்ப பூஜை எல்லாம் செஞ்சு என்னென்னவோ செய்யறாங்க....அப்புறம் வீட்டுல வேண்டாம்னு சாமி படங்களை சுவர் ஓரமா வைச்சுட்டுப் போயிடறாங்க....கொஞ்ச நாள்ல அது பூஜை இடமாகுது.

    அப்புறம் பார்க்ல பெரிய பெரிய புற்று....கரையான் புத்து, நான் முதல்ல பார்த்தப்ப அது சாதாரணமா இருந்துச்சு அப்புறம் பாத்திங்கனா உடனே மஞ்சள் குங்குமம் நூல் எல்லாம் கட்டி பூஜை நடக்குது!!! என்னத்த சொல்ல?

    நிறைய நான் சொல்லுவேன் ஆனா தவிர்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. வேப்பமரத்தை காக்க அதை அம்மனாக பாவிக்கலாம். . மதுரையில் நெசவாளர் காலனியில் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் மரம் இருக்கும். மரத்துக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வணங்குதல் இன்றும் நடக்கிறது. அந்த குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் காலை ஊதுபத்தியை ஏற்றி கையில் வைத்து கொண்டு மரத்திற்கு காட்டி விட்டுதான் மற்ற வேலைகளை தொடருவார்கள். அது அவர்கள் நம்பிக்கை.

    முன்பு பதிவில் போட்டு இருக்கிறேன் படங்களுடன்.

    குடிசையில் ஒரு அறை தான் இருக்கும், அதில்தான் பூஜைஅறை, , சமையல் அறை, படுக்கை அறை.

    கழிவறை, குளிக்கும் அறை இல்லாமல் வாழும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    இறைவன் அவர்களை தண்டிக்க மாட்டார். சுத்தம் மன சுத்தம் போதும் ஜி.

    ஆதி காலத்தில் மனிதன் மரம், சூரியன், என்று இயற்கையை தான் வழிபட்டான், பிறகுதான் உருவ வழிபாடுகள் வந்தன.

    "ஆலயம் தொழுவது சாலவும் நன்று "என்று ஒளவையார் சொன்னது போல கோவிலுக்கு தினம் போய் வலம் வருவது நல்லதுதான். முன்பு அப்படித்தான் போய் கொண்டு இருந்தேன். கால்வலி இடுப்பு வலி இல்லாமல் இருந்தது. இப்போது
    கடவுளை மனதில் இருத்தி வழிபட்டால் போதும் என்று இருக்கிறது.

    முன்பு இருக்கும் பழைய கோவில்களே போதும். அதை பழுது பார்த்து அதற்கு நித்திய பூஜைகள் நடக்க உதவினால் போதும். புதிது புதிதாக கோவில்கள் வந்து கொண்டே இருக்கிறது.

    கோவையில் சிறு வயதில் இருந்த போது சாய்பாபா கோவில் உண்டு. கோவிலை வைத்து சாய்பாபா காலனி உருவானது. இப்போது நிறைய பிள்ளையார் கோவில் போல பாபா கோவில்கள் வந்து இருப்பது உண்மைதான்.

    திருப்புகழ் வகுப்புகளும் எல்லா வீடுகளும் கோவில்களிலும் நடக்கிறது நகரத்தார்களால்., எல்லா கோவில்களிலும் வழிபாட்டுக்கு நகரத்தார் பங்கு இருக்கும்.

    நீங்கள் சொல்வது போல மக்கள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு , மற்று நம்பிக்கை தருவது வழிபாடு.

    பக்தி வியாபாரம் ஆகாமல் வழிபாட்டுக்கு மட்டும் கோவில்கள் இருந்தால் நல்லது.
    யார் மனதையும் புண்படுத்தாமல் எந்த மதத்தையும் இகழாமல் அமைதியாக அவர்களுக்கு தெரிந்த வகையில் இறைவனை வழிபட்டால் போதும்.











    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப மெச்சூர்டான கருத்துகள் கோமதி அரசு மேடம். பாராட்டுக்கள்

      நீக்கு
    2. எனக்கும் இதே கருத்துகள் தான்..

      நீக்கு
  14. நூலாண்டிகளத் தான் ஒழிச்சாச்சே..

    நூலாண்டிகள் காலத்துல பண்ணுனதை விட
    இன்னிக்கு கொடுமையும் கொடூரமும் அதிகமா இருக்கே..

    அத்துக்கு இன்னாங்கோ பண்றது?!..

    பதிலளிநீக்கு
  15. ///கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்..///

    தம்பி
    வாலாண்டிகள் பேர்ல எத்தன எத்தன காலேஜி..


    வாலாண்டிகளோட
    காலேஜி எதிலயாவது காசு இல்லாம சொல்லித் தாரானுங்களா?..

    பதிலளிநீக்கு
  16. கோமதி அரசு அவர்களது கருத்துக்கள் நன்று.

    பக்தி என்பது வியாபாரமாக மாறிவிட்ட காலம்தான் இது.

    பதிலளிநீக்கு