இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 13, 2023

நாதன் தாள் வாழ்க !

 

வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய நாதனை எதிர் வீட்டு ஆச்சி பூச்சியம்மாள். எங்கே போறே என்று கேட்காமல் விபரமாக கேட்டது.
ஏண்டா பேரான்டி கடைப்பக்கமா போறியா ?
 
ஆமா ஆச்சி ஏன் ?
வரும்போது வாழைக்காய் வாங்கிட்டு வாயேன் பஜ்ஜி சுட்டு தர்றேன் நீதான் விரும்பி சாப்பிடுவியே...
சரி ஆச்சி வாங்கிட்டு வர்றேன் எவ்வளவு வாங்கணும் ?
சீப்பா ஒரு சீப்பு வாங்கிட்டு வா.
சரி.
 
ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஆச்சிக்கு உறவுகள் துணை யாருமில்லை எல்லோரும் அம்பேரிக்காவில் குடித்தனம். உறவென்று உதவி செய்ய நம்பிக்கையான நாதன் மட்டுமே உண்டு. பணம் வங்கியில் கிடக்கிறது தேவையானதை நாதன்தான் எடுத்து வந்து கொடுப்பான். அவ்வப்போது பெயரன், பெயர்த்திகள் நினைவு வந்தால் அவர்களுக்கு செய்து கொடுப்பது போல் நாதனுக்கு செய்து கொடுத்து அவன் தின்பதில் அழகு பார்ப்பாள்.
 
காலையில் எழும்போதே பட்சி சொல்லிட்டு இன்று ஆச்சி ஏதாவது செய்யும் என்று காரணம் காகம் கரைந்து கொண்டே இருந்தது. சிலருக்கு விருந்தாளி வரும் நாதனுக்கு காகம் இப்படியொரு காட்சி தரும் சம்பவம் நிகழும் வாட்சில் நேரம் பார்த்தான். சரியாக நேற்று இந்நேரம் காண்பித்தது. நூலகத்தில் கடந்த வாரம் வாங்கி இருந்த தி.ஜா.வின் மோகமுள் நூலை மறக்காமல் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
 
வழியில் தெருமுனை கட்சி அலுவலகத்தில் இரண்டு அல்லக்கைகள் வாதம் செய்து கொண்டு இருந்தார்கள். நூலகத்து வேலையை முடித்து விட்டு அப்படியே வெள்ளையன் ஊரணி காய்கறி மார்க்கெட்டில் வழக்கமாக வாங்கும் வாழைக்காய் மண்டிக்கு போனான்.
 
அப்புச்சி வாழைக்காய் எவ்வளவு ?
நேற்று விலைதான்.
வேலைக்கார அண்ணாச்சி ஒரு சீப்பு தூக்கி வந்து ஸ்கூட்டியில் வைத்தார் ஆச்சி வீட்டில் கொடுக்க ஆச்சி அடுப்பை பற்ற வைத்தாள். நெல்லைத்தமிழர் வீட்டுப்பக்கமாக வந்தால் பஜ்ஜி சாப்பிடலாம் தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னியோடு வாங்கோ...
 
கில்லர்ஜி அபுதாபி

Share this post with your FRIENDS…

16 கருத்துகள்:

  1. ஊருக்கே பஜ்ஜி செய்யலாம் போலவே... ரெண்டு கல்யாணம் தாங்கும்!

    பதிலளிநீக்கு
  2. ஆச்சி ஒரு சீப்பு தான் கேட்டார், வாழைத்தாரே வாங்கி வந்து விட்டாரே! நாதன்.
    படத்துக்கு ஏற்ற பதிவு அருமை.
    ஆச்சிக்கு நாதன் துணை இருக்கும் போது என்ன கவலை !

    பதிலளிநீக்கு
  3. யம்மாடியோவ் இம்புட்டுப் பெரிசா பெரிய வாழைக்குலையே வாங்கிட்டாரே. நாதனுக்குக் கல்யாணமோ! இல்லை ஊருக்கே தீபாவளியா!!

    எதுவா இருந்தா என்ன!! எங்க எல்லாருக்கும் ஒரு ப்ளேட் பஜ்ஜி அனுப்பிடச் சொல்லுங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இந்தக் காய் பழத்துக்கானது. இது மொந்தங்காய் அல்ல. பஜ்ஜி செய்ய முடியாது. பத்து நாள் கழித்து வந்தால் ஆளுக்கொரு வாழைப்பழமும், வாழைப்பழம் போட்டுச் செய்த அப்பம் இரண்டும் கையில் தரலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா ? தங்களது தகவலுக்கு நன்றி தமிழரே...

      நீக்கு
  5. நான் பெரிய வாழைக்குலைகளைப்்படம் எடுத்திருக்கிறேன். அபூர்வம் அது.

    பதிலளிநீக்கு

  6. அபுதாபியில் மழையா?? சூடா பஜ்ஜி கேட்குது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மையிலேயே நேற்று முன்தினம் சகோதரி (நண்பர் வீட்டில்) பஜ்ஜி செய்து கொடுத்தது‌

      நீக்கு
  7. ஆச்சி வாழக்காய் கேட்டதற்கு இம்மாம் பெரிய வாழைத் தார்!.

    படத்துக்கு ஏற்ற பதிவு அருமை..

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு