இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 10, 2023

மரசாட்சி


னசாட்சி இல்லாத மனிதா
எனது அழும் குரல் விழுதா
உனது செவியென்ன பழுதா
 
என்னை விற்றால் பணமா
இதெல்லாம் ஓர் குணமா
இதுதான் மானிடர் மனமா
 
ஓடுகிறது எனது ரத்தம்
எனது பிள்ளையோ சத்தம்
என் மேல் என்ன குத்தம்
 
உனக்கு தேவை தனம்
தேவையில்லை வனம்
நீயும் ஓர்தினம் பிணம்
 
எனக்கும் உயிர் அறியாதா
நீ சிந்தித்தால் புரியாதா
உன் மூளைக்கு தெரியாதா
 
எங்களுக்கும் வலி உண்டு
உனக்கு வலிக்காதா மண்டு
நீயும் போவாய் மாண்டு
 
என் மனமென்றும் உறுதி
இன்றே எனக்கு இறுதி
முடிந்தது எனது குருதி
 
உங்களுக்கு நான் மரம்
எமக்கு பிறவியே வரம்
இதுவே எங்கள் அறம்
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
மரம் வளர்த்தால் மழை பெறலாம், ஆனால் மனம் வேணுமே...

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. நகரத்திற்கான வளர்ச்சி என்று வரும்போது மரங்களைத் தடையாக்க் கருதி வெட்டிவிடுகின்றனர். இதுபோல வனத்தையும் சுருக்கவேண்டி வந்துவிடுகிறது. விளைநிலத்தையும் சுருக்குகிறார்கள். அப்புறம், வெடி வெடித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், பிள்ளையாரை நீர்நிலையில் கரைக்கக்கூடாது என்கிறார்கள். மெரீனா கடற்கரையை சமாதியாக்குகிறார்கள். நீர்நிலை இருந்த இடங்களையெல்ஙாம் ப்ளாட் போட்டு விற்றுவிட்டார்கள். என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      இதில் அரசியல்வாதிகள் வெற்றி பெற்றால் போடும் வெடிக்காமல் மாசு படாது என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. போட்டீர்கள் ஒரு பதிவு 
    சொன்னீர்கள் அதில் ஒரு முடிவு 
    இருக்குதே அதில் தெளிவு.

    பதிலளிநீக்கு
  3. செதுக்கியனால் ஆனான் தந்தை 
    சிற்பம் மனதில் சிந்தை 
    மனிதன் என்றும் ஆட்டு மந்தை 

    பதிலளிநீக்கு
  4. மரசாட்சி பேசுகிறது 
    மனிதனை ஏசுகிறது 
    நினைக்க மனம் கூசுகிறது.

    பதிலளிநீக்கு
  5. மனம் முழுவதும் பணம்
    இதுதான் மனிதனின் குணம்
    பேராசை இவன் இனம்
    அநியாயங்கள் தினம் தினம்.

    பதிலளிநீக்கு
  6. கவிதை மிக அருமை. படமும் அருமை.
    மானிடர் மனத்தை பற்றி மரசாட்சி மிக அழகாய் பேசுகிறது.
    மனிதனுக்கு அவன் நலம் பற்றி மட்டுமே குறிக்கோள்.
    சுற்று சூழல் பற்றி அவனுக்கு என்ன கவலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. மரத்தின் மனச்சாட்சி மரசாட்சி உருக்கம் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. மரசாட்சியின் உருக்கம் மனிதன் உணர்ந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நலமா? எப்படியிருக்கிறீர்கள்.? நீங்கள் அபுதாபிக்கு வேலை சம்பந்தமாக போயிருக்கிறீர்கள் என்பதை பல பதிவுகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். இருப்பிட வசதியெல்லாம் பழையபடிக்கு சௌகரியமாக உள்ளதா?

    பதிவு அருமை. கவிதை நன்றாக உள்ளது.தங்கள் கவிதையை படித்ததும், மரங்களின் மனதை மனிதன் என்றுதான் உணர்வானோ என்ற ஏக்கம் மிகுந்த தவிப்பு பிறக்கிறது. ஆழமான கவிதைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலம், நலமறிய அவா!

      தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்து விசாரித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி, நன்றி

      நீக்கு
  10. கில்லர்ஜி, நல்லாருக்கு கில்லர்ஜி உங்கள் வரிகள்...என்ன சொல்ல...செய்வதும் மனுஷந்தான் அதை அப்புறம் திட்டுறதும் மnu ஷந்தான்... இயற்கை எவ்வளவு கற்றுக் கொடுத்தாலும்...நாம திருந்தப்ப போவதில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு