அவனோடு ஓடி விட நினைத்தாள் அவள்
அவளை விட்டு ஓட்டம் எடுத்தான் அவன்
உண்மையானவன் என்று நினைத்தோமே
உடலையும் கொடுத்திழந்து விட்டோமே
தினமும் கண்ணே மணியே என்றானே
திக்கற்ற நிலைக்கு வைத்து விட்டானே
இனி எனது வாழ்க்கை நிலையென்ன
இப்படியே காலம் கடத்திட இயலுமா
வலியை மறந்து வாழ்ந்து விடலாம்
வயிற்றை மூடி மறைக்க முடியுமா
மூத்தோர் சொல்லை கேட்கவில்லையே
மூலையில் கிடந்து அழுதால் போதுமா
அம்மாவிடம் சொல்லி அழுது விடலாம்
அப்பாவும் தாங்கி வாழ்ந்து விடுவாரா
வாழ்ந்தது போதுமென முடிவெடுத்து
வாசலை கடந்து வெளியே வந்தவள்
கண்டாள் அவனை இதோ என்னவன்
கண்ணீர் விட்டு கட்டிப் பிடித்தழுதாள்
ரயிலுக்கு புறப்பட்டபோது கலவரத்தில்
ரயில் மாறி பணத்தினை இழந்த கதை
பவித்ராவுக்கு பக்குவமாய் சொல்லி
பயந்திருந்தவளை தெளிவாக்கினான்
பெற்றோரிடம் பேசி முடித்து விட்டேன்
பெண் கேட்க நாளையே நான் வருவேன்.
கில்லர்ஜி அபுதாபி
அவளை விட்டு ஓட்டம் எடுத்தான் அவன்
உடலையும் கொடுத்திழந்து விட்டோமே
திக்கற்ற நிலைக்கு வைத்து விட்டானே
இப்படியே காலம் கடத்திட இயலுமா
வயிற்றை மூடி மறைக்க முடியுமா
மூலையில் கிடந்து அழுதால் போதுமா
அப்பாவும் தாங்கி வாழ்ந்து விடுவாரா
வாசலை கடந்து வெளியே வந்தவள்
கண்ணீர் விட்டு கட்டிப் பிடித்தழுதாள்
ரயில் மாறி பணத்தினை இழந்த கதை
பயந்திருந்தவளை தெளிவாக்கினான்
பெண் கேட்க நாளையே நான் வருவேன்.
ஸூப்பர். சின்னஞ்சிறிய கதை ஒன்றை வித்தியாசமான முறையில் வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல, பாஸிட்டிவ் முடிவு கொடுத்ததற்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சுருக்கமான கவிதை போன்ற கதை. இறுதியில் நல்லபடியாக நடப்பது கண்டு பவித்திரவுக்கு மட்டுமின்றி நமக்கும் மட்டற்ற சந்தோஷம். சிறப்பாகவும், புதுமையாகவும் எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஇது போன்ற ஒரு அனுபவம் எனக்கு உண்டு. கல்யாணம் ஆனபின். இரண்டாவது பிரசவத்திற்கு மனைவியின் வீட்டிற்கு மனைவி, மூத்த மகன், நான் எல்லோரும் ரயிலில் சென்றோம். நடுவில் தண்ணீர் பிடிக்க நான் இறங்க ரயில் புறப்பட்டுவிட்டது. கையில் டிக்கெட்டு பணம் எதுவும் இல்லை. ஆனால் கடைசியில் எப்படியோ எல்லோரும் ஒன்று சேர்ந்தது ஒரு பெரிய கதை.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
நீக்குஅருமையான கவிதை வடிவில் கதை.
பதிலளிநீக்குதை பிறந்தால் வழி பிறக்கும்.
தை மாதம் கல்யாணம் இருவருக்கும்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசூப்பர் கில்லர்ஜி. கதையே கவிதையாகவா....கவிதையில் கதையா!!
பதிலளிநீக்குகீதா
வருக கவிதாவின் கதை என்று சொல்லலாமா ?
நீக்குஅருமையான சிறிய ஆழமான க(வி)தையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் கில்லர்ஜி. பவித்ராவின் வாழ்வு அவ்வளவுதானா என்று எண்ணிய போது நல்ல முடிவு. இனி கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குபடிக்கும் போது எங்கே போய் முடியப்போகிறது என நினைத்தேன். சுபத்தில் முடிந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு‘வாழ்ந்தது போதுமென முடிவெடுத்து, வாசலைக் கடந்து வெளியே வந்தவள்[வந்தாள்]... ’ என்பதோடு முடித்திருந்தாலும் மனதைக் கலங்கவைக்கும் கவிதைக் கதையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம் கில்லர்ஜி.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்கு