இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 25, 2024

டீக்கடை அரசியல்


வான் டீக்கடை அரசியல் அலசல்...
 
ஏண்ணே கொ.இ.க தலைவர் அளவுக்கு மீறி அளந்து விடுறாரே இது நியாயமா ?
எவன்தான் பொய் பேசலை.. ? வியாபாரத்துல எல்லா வியாபாரியும் பொய் பேசுனாத்தான் வாழ முடியும்டா...
 
வியாபாரமும், அரசியலும் ஒண்ணாணே ?
ஆமாடா பின்னே முதல் போட்டதை எடுக்க வேண்டாமா ?
 
அஞ்சு வருசம் முடியப்போகுது இன்னமும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலையே அடுத்த தேர்தல்ல மக்கள் எப்படிணே வாக்களிப்பாங்க ?
ஃபேர் அன் லவ்லி கம்பெனிக்காரனும்தான் ஆறே வாரங்களில் சிகப்பழகுனு சொல்லி விக்கிறான் நானும் பிறந்ததுலேருந்து பார்க்கிறேன் எவனும் சிகப்பானதாக சரித்திரமே இல்லை அதனோட வியாபாரம் படுத்தா போச்சு அட போடா... காசை வீசுனா ஓட்டு.
 
அப்படீனாக்கா... வாக்குறுதிகளை நிறைவேற்றவே மாட்டாங்களாண்ணே ?.
நீ மண்ணுக்குள்ளே போறதுவரை எவனும் எதையும் நிறைவேற்றமாட்டான்.
 
அப்ப நாடு முன்னேற என்னதாண்ணே தீர்வு ?
உன்னோட வீட்ல மாமியார்—மருமகள் பிரச்சனையை தீர்க்க முடியுதா ?
 
அது தீருவதற்கு வழியே இல்லையேணே... ?
அது போலத்தான் இதுவும், மருமகளால பிரச்சனை வருதுனு மகனுக்கு கல்யாணம் செய்யாமல் இருக்கோமா... இல்லையே அது மாதிரித்தான்.
 
தேர்தல் வந்தா, ஓட்டுப் போட்டு விட்டு ஒதுங்கிடணும்னு சொல்றீங்க...
நாம ஒதுங்க வேண்டாம் அடுத்த தேர்தல் வரும்வரை அவங்களே நம்மளை ஒதுக்கி வச்சுடுவாங்க...
 
ஏதாவது நல்ல வழி சொல்லுங்கண்ணே... ?
தேர்தல் வரும் முன்பு அனைத்துக்கட்சி தொண்டர்களையும் பொடாவுல கைது பண்ணி ஆறு மாதத்துக்கு உள்ளே தள்ளிடணும் தேர்தல் வேலை செய்ய எவனும் கிடைக்கமாட்டான், அதுபோல ஊடகங்களையும் மூடிடணும்.
       
கில்லர்ஜி அபுதாபி

28 கருத்துகள்:

  1. வாக்குறுதிகள் சம்ப்ரதாயம் என்பது வாக்காளர்களுக்கே தெரிந்து விட்ட விஷயம்.  என்ன..  ஐநூறு ரூபாய்க்கும் பிரியாணிக்கும் வாக்கை விற்பதுதான் சோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதிலென்ன சோகம் ? வெட்கப்படுவோம்.

      நீக்கு
  2. பேர் அந்த லவ்லி நல்ல உதாரணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பெனிக்கு லிங்க் அனுப்பி விடாதீர்கள் ஜி

      நீக்கு
  3. //  அவங்களே நம்மை ஒதுக்கி வச்சுடுவாங்க //

    ஹா..  ஹா..  ஹா..  உண்மைதான்.  அப்போ மட்டும் சில வாக்காளர்கள் பொங்குவார்கள்!

    பதிலளிநீக்கு
  4. கடைசியில் சொல்லி இருப்பது நல்ல யோசனைதான்.  இன்னும் சில யோசனைகளும் சொல்லலாம்.  எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போய்விடும்!  எல்லாவற்றுக்கும் குறுக்கு வழி வைத்திருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகில் அனைத்திலும் குறுக்கு வழி தேடுபவன் நம் இந்தியன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஜவான் டீக்கடை அரசியல் அலசல் நன்றாக உள்ளது.

    ஃபேர் அன் லவ்லி விளம்பர கருத்தை கூறியது சிரிக்க வைத்தது. வியாபாரமும் , அரசியலும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்தானே..! மன்னராட்சி வேண்டாமென்று மக்களாட்சி க்கு மாறியது மக்கள்தான். இனி மக்களாக பார்த்து திருந்தினால் மட்டுமே நல்லது நடக்கும். நல்லதே விரைவில் நடக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இப்படி விளம்பரம் செய்தாலும் ஃபேர் அன் லவ்லி கம்பெனி ஏதாவது தருமா ?

      நீக்கு
  6. ஹாஹஹா நானும் உங்களை போல் (காப்பி அடிச்சு) எழுத முயல்கிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. Fair & Lovely சிறப்பான உதாரணம்.

    “அவர்களே நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள்….” சரியாகச் சொன்னீர்கள்….

    கடைசியில் தந்திருக்கும் ஐடியா சிறப்பு.

    அரசியல் சாக்கடையாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. மாற்றம் நிச்சயம் வரப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அரசியல் இன்னும் நாறும் போலயே....

      நீக்கு
  8. நண்பரே ! யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் நிலை மாறாப் போவதில்லை ! புராணங்களில் சொல்வது போல் கடவுள் மறுபடியும் எதாவது ஒரு அவதாரம் எடுத்து வந்தால் நாட்டிற்கு ஏதாவது நல்லது நடக்கலாம். நண்பரே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தாங்கள் சொல்வது போல்தான் நடக்கணும்.

      நீக்கு
  9. சிரித்துவிட்டேன். Fair and lovely உதாரணம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக எல்லோரும் சேர்ந்து எனக்கும், Fair and lovely கம்பெனிக்கும் பகையை வளர்த்து விட்ருவீங்க போலயே....

      நீக்கு
  10. ஹாஹாஹா....வேண்டியது கிடைச்சதும் தள்ளி வைச்சுடுவாங்கதான்...அதானே நடக்கிறது.

    கடைசில சொன்னது நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்க எதிர்பார்ப்பு ரொம்ம்ம்ம்ம்ம்ம்பக் கூடுதல் கில்லர்ஜி!!!! ஹாஹாஹாஹா

    எலலமே வியாபாரம்தானே கில்லர்ஜி, fair and lovely மாதிரி நிறைய...

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பொதுநலத்துக்காக இப்படி ஆசைப்படக்கூடாதா ?

      நீக்கு
  11. டீக்கடையில் தான் நாட்டு நடப்பு அலச படும்.
    அருமையாக அதை விவரித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. தொண்டர்களை உள்ளே தள்ளிவிடலாம்[சாத்தியம் இல்லை என்றாலும்]. ஊடகங்களையும் மூடிடலாம். சரி.

    எஞ்சியிருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும்[பெரும்பாலும் கட்சிக்காரர்கள்] ஓட்டுப் போடும் வாக்காளர்களும்.

    வாக்காளர்களில் எவ்வளவு பேர் யோக்கியர்கள்?

    இவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்றால்[ஓட்டுக்குப் பணம் வாங்காதவர்கள்] கட்சி சார்ந்த அயோக்கியர்களுக்கு ஓட்டுப்போடுவதைத் தவிர்க்கலாம்.

    தவிர்த்தால்[பொதுமக்களிலும் யோக்கியமானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்ப்பதால்] தேர்தலே நடக்காது; ஜனநாயகம் செத்துப்போகும்.

    அப்புறம்?

    கூச்சல், குழப்பம், அடிதடி, குத்துவெட்டு, கொலைகள் என்று நாடு நாசாமாய்ப் போகுமா?

    நிறையவே யோசிக்க வைத்துவிட்டது கில்லர்ஜி உங்களின் இந்தப் பதிவு.

    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  13. என்னதான் பொடாவுல அடைத்தாலும், ஊத்தி மூடினாலும் மாற்று வழி கண்டுபிடித்துவார்கள் நண்பரே! அம்புட்டு அறிவு இருக்கு அவர்களிடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்து உண்மைதான் ‌

      நீக்கு
  14. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. நாட்டு நிலைமையை நகைச்சுவையோடு சொன்னீர்கள் . நன்றி

    பதிலளிநீக்கு