இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 21, 2024

வச்சானே சாப்ட்டீங்களா...


டம் மூணாறு மூன்ஷி மூன்று ஸ்டார் ஹோட்டல் அறை எண் 1002 உள்ளே இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, பாடல் எழுதுவதற்காக காத்திருக்கின்றனர்.

கவிஞரே சுச்சுவேஷன் இதுதான் நாயகன் காதலியால புத்தி சுவாதீனமாயி மூளை கெட்டு பைத்தியம் புடிச்சு மெண்டல் மாதிரி பேசி லூசு ஆயிடுறான். அப்போதைக்கு காதலி தன்னோட பாட்டாலே அவனை பழையவைகளை நினைவுக்கு கொண்டு வந்து சட்டையை கிழிச்சுக்கிட்டு ஓட வச்சுடுறா.. அப்படி ஒரு பாடலை எழுதுங்க....
ம்... சரி Chivas Regal ஆர்டர் சொல்லியாச்சா ?
 
இதோ வந்துரும்...
மாஸ்டரே இதுக்கு என்ன ட்யூன் போடப் போறீங்க ?
ஸ்ரீராம்ஜியிடம் கேட்போம் வரட்டும் நீங்க எழுத ஆரம்பிங்க...
ரைட்டு எழுதிடுவோம்...
 
ச்சான் நான் வந்தேன் தானே
பழசை நீ மறந்தாய் தானே
பிச்சிப்பூ நீயும் போட்டாயே பிச்சு
நச்சுதான் உன்னை போட்டானே
அண்ணேன் இன்னும் நான்
மறக்கலியே நீயும் மறக்கலியோ
 
பழசை நீ மறந்தால் என் வாழ்வு
மீண்டும் மலரத்தான் போகுதய்யா
ஜொலிக்கத்தான் வேண்டுமய்யா
உனை கொல்லத்தான் தோணுதய்யா
லூசுப்பயலாட்டம் நீ ஓடித்திரிந்தால்
வாசு எனக்காக காத்திருக்கான்
 
உன்னை தலையில தான் போடணும்
பிழையில்லாமல் நான் செய்யணும்
ஏசி காரிலே நான் போகணும் அதில்
பிச்சை கேட்டுதான் நீயும் வரணும்
இதுதான் என் ஆசை வேணுமா பூசை
உனை கண்டா நான் காண்டாவேனே
 
மச்சான் நான் வந்தேன் தானே
பழசை நீ மறந்தாய் தானே
பிச்சிப்பூ நீயும் போட்டாயே பிச்சு
நச்சுதான் உன்னை போட்டானே
 
எப்படி ஓகேயா ?
சூப்பர் பாட்டு கவிஞரே.. மச்சானை பார்த்தீங்களா... மாதிரியே இருக்கு ஒரு ரவுண்டு வரும்
 
கில்லர்ஜி அபுதாபி
 
இணைப்பு –
https://www.youtube.com/watch?v=GxC6yUK2tro

18 கருத்துகள்:

  1. ம்.... சினிமாக் கவிஞர் ஆயிடறதுன்னு தீர்மானிச்சிட்டீங்க போலிருக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      ஏன் நான் வரப்படாதுங்களா ?

      நீக்கு
  2. மச்சானைப் பார்த்தீங்களா டியூனா?  அபீசியலாக இளையராஜாவின் முதல் பாடல்!

    பதிலளிநீக்கு
  3. கீழே உள்ள லிங்க் பார்க்கும்வரை "மச்சானை வச்சிக்கடி முத்தான முடிச்சுலதான்" எனும் பாடலோ என்று பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இந்தப் பாடலின் மெட்டிலுமா வருகிறது ?

      நீக்கு
  4. ஏற்கனவே பைத்தியம், மீண்டும் பைத்தியமாக செய்வது! தெளிய வைத்து அடிப்பது என்று இதை தான் சொல்வார்களோ!
    நன்றாக கவிதை எழுத வருகிறது உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      "தெளிய வைத்து அடிப்பது"
      ஹா.. ஹா.. ரசித்தேன்.

      நீக்கு
  5. அட... ஆஸ்பத்திரிக்கு போயி மருத்துவருக்கு பீஸ் கொடுக்காம, மருந்து மாத்திரை சாப்படாம பைத்தியம் குணமாவது இந்த பாட்டால்தானா...? ரெம்ப நல்லாயிருக்குக்கு கவிஞரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. கில்லர்ஜி இந்தமுறை கடைசில பாட்டைச் சொல்லியிருக்கீங்க! சிச்சுவேஷன் சாங்க்...ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்...பேசாம திரைப்படத்துக்கு நீங்க எழுதலாம்னு!!

    இந்தப் பாட்டை எனக்கு டக்கென்று எந்தப்பாட்டாக இருக்கும்னு யூகிக்க முடியலை. கடைசில பார்த்த பிறகுதான் புரிந்தது.

    பைத்தியம், மென்டல் என்று நாம் வெகு சாதாரணமா வழக்கில் சொல்லி பயன்படுத்தினாலும் எனக்கு அப்படிச் சொல்வது மனசுக்கு ரொம்பக் கஷ்டமாகிடும் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாடலை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      கவிஞர்கள் எல்லா வார்த்தைகளையும் அலசினால் தான் பாடலோ, கவிதையோ பிறக்கும்.

      நாம் அதிலிருந்து விலகி விடுவோம்.

      நீக்கு
  7. Situation song நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுகள் கில்லர் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பாடலின் சிச்சுவேஷன் பற்றி மிக அருமையாக விமர்சனம்.. ஆகக்கூடி கதாநாயகனுக்கு என்றுமே தெளிய வைக்க முடியாத மனநிலைமையை உண்டாக்கும் வண்ணம் காதலி பாடும் பாடலாக இருக்க வேண்டுமென இயற்றச் சொல்கிறார் போலும்.. :)))

    தங்கள் பாடலும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். விரைவில் திரைப்படங்களுக்கு பாடல் எழுதி தரும் பாடலாசிரியராக ஆக வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  9. Situation பாடல் நன்றாக இருக்கிறது கில்லர்ஜி. பாடலாசிரியர் கில்லர்ஜி என்று சொல்லிக் கொள்ளலாம்,

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு