இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 19, 2024

விந்தை மனிதர்கள்

01.  தனது மகளுக்கு திருமணம் முப்பது பவுன் நகை போடுவதாக வாக்கு, சற்றே பற்றாக்குறை மனைவியிடம் கொஞ்சம் நகைகள் கேட்ட கணவனிடம் என்னோட நகையை நான் தரமாட்டேன் என்று சொன்ன பெண்மணியை கண்டு விட்டேன்.
 
02.  தன்னோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து குழந்தைகளுக்கு மணம் முடித்து பெயரன், பெயர்த்திகளை கண்டு இறந்து பூமிக்குள் சென்ற ஆறு மணி நேரத்தில் அடுத்த பெண்ணை தேடிச்சென்ற கணவனை கண்டு விட்டேன்.
 
03.  தன்னோடு சமூகப் பார்வைக்காக ஐந்து சதவீதம் மட்டுமே அதையும் விருப்பமின்றி வாழ்ந்த மனைவி குழந்தைகளை விட்டு, இறந்து இருபது ஆண்டுகள் கடந்தும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையாக வாழ்ந்த கணவனையும் கண்டு விட்டேன். 
 
04.  தனக்காக வாழாமல் குடும்பத்தின் பலரின் நலனுக்காக உழைத்து வாழ்ந்தவனை உதவி பெற்ற அனைத்து உறவுகளும் துளியும் நன்றியின்றி துரோகம் செய்த குடும்ப உறுப்பினர்களை, ரத்த உறவுகளையும் கண்டு விட்டேன்.
 
05.  இவ்வளவு காலமும் தனக்கு உறவுகளால் கிடைத்த மரியாதை தனது நல்ல குணத்துக்காக என்றே நம்பி வாழ்ந்தவனுக்கு பொருளாதாரம் சரிந்த பின்தான் தெரிந்தது தனது பணத்துக்காகத்தான் என்பதை அறிந்த மடையனையும் கண்டு விட்டேன்.
 
06.  முப்பத்து ஐந்து வருடங்களுக்கு மேல் சொந்த சகோதரனாகவே கருதி வாழ்ந்தவன், தனக்கு துரோகம் செய்து விட்டானே என்று மனம் புழுங்கி இன்றுவரை காரணமே அறியாமல் விழித்து நிற்கும் மனிதனையும் கண்டு விட்டேன்.
 
07.  ஐம்பது வயது வரையில் கலங்காதவன் தனது வீட்டுக்கு வந்த புது உறவின் வரவால் இறுதி காலம்வரை தனிமையில் கண்ணீர் சிந்தும் நிலைக்கு வாழ்வு தள்ளப்பட்டதை ஜீரணிக்க இயலாமல் தவிக்கும் மனிதனையும் கண்டு விட்டேன்.
 
08.  எந்த உறவுமே கிடைக்கவில்லை இறுதியில் கிடைத்த இந்த உறவுகளாவது தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று முழுமையாக ஆசைப்பட இந்த உறவும் காணவே முடியாது போனதால் கலங்கிய மனிதனையும் கண்டு விட்டேன்.
 
09.  நல்ல வாழ்வை, வருமானத்தை இழக்க வைத்து வேலையை விட்டு வர வைத்தது தன்னை ஏமாற்றத்தான் என்பதை இங்கு வந்த பிறகே புரிந்த கொண்ட தனது அறிவு இவ்வளவு இழிவானதா என்று வருந்திய மனிதனையும் கண்டு விட்டேன்.
 
10.  தனக்கு துரோகம் செய்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்வதும், துரோகத்தையே நினைத்து தனது சந்தோஷமும், உறக்கமும் இழந்து போனதும் இறைவன் நமக்கு கொடுத்த கொடையா என்று குழம்பும் மனிதனையும் கண்டு விட்டேன்.
 
கில்லர்ஜி புதாபி
  
சிவாதாமஸ்அலி-
நல்லவன் வாழ்வான் இதுதான் இறுதி தீர்ப்பு

14 கருத்துகள்:

  1. வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு உயிரும் இணைந்திருந்தாலும் தனித்த உயிரே. அந்த ஆன்மா என்ன செய்கிறதோ அதற்கேற்ற பலனைப் பெறும். அவ்ளோதான்.

    ஒவ்வொருவருக்கும் தாங்கள் செய்த செயலுக்காக இறைவன் முன் பதில் சொல்லியே ஆகணும்.

    அதனால் கலக்கம் வேண்டாம். காக்காய் குருவிகளை இறைவன் இனம் காண வைத்து, உங்கள் கையால்தான் உங்களுக்கு உணவு, யாரையும் இரக்கத் தேவையில்லை என்று வைத்திருக்கிறானே... சந்தோஷம் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. சிவாதாமஸ் அலி சொல்வது போல நல்லவன் வாழ்வான் .
    செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் .உங்கள் எண்ணங்களில் தோன்றிய அனைத்தையும் படிக்கும் போது வருத்தம் ஏற்படுகிறது.
    கடவுள் நினைத்தால் ஒரு நொடியில் அனைத்தையும் மாற்றலாம்.
    மாறும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. மனிதர்களின் பல படிமங்களை கண்டு, நல்லவன் வாழ்வான் என்றும் புரிந்து கொண்டு விட்டீர்கள். வேறு என்ன வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. அவர்கள் விந்தை மனிதர்களாக எனக்கு தெரியவில்லை கள்ளம்கபடமற்ற (ஏமாளி) நல்ல மனிதர்களாக தெரிகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.மனிதர்கள் உருவங்கள் ஒன்றுபோல இருநதாலும், ஒவ்வொரு மனித தன்மைகளும் வெவ்வேறானவைதான். இறைவன் அவ்வாறான குணங்களை பிறவியிலேயே அருளி விடுகிறான். இதைதான் "தொட்டில் பழக்கம்" என்கிறோம். இந்த பாகுபாடான குணங்களை பற்றி மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். உங்கள் இதயத்தில் ஏற்பட்ட வலிகளின் வேதனைகளை புரிந்து கொண்டேன். ஆனால், நல்லவனுக்கு அருகில் என்றும் இறைவன் இருப்பான். கவலை வேண்டாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. எத்தனை மனிதர்கள் உலகத்திலே.... அம்மா எத்தனை உணர்வுகள் இதயத்திலே என்று ஒரு ஜெயச்சந்திரன் பாடல் உண்டு. அது நினைவுக்கு வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அருமையான பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்.

      நீக்கு
  7. இறைவன் நாம் செய்யும் செயலைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான். நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு