இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 23, 2024

தண்ணீர்ப்பந்தல்

 

திராவிடக்கட்சிகள் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது உலகறிந்த விடயமே... ஆனாலும் இரண்டில் அதிமுகவில் திரைப்படக் கூத்தாடன் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இருந்தவரை தன்மானத்தோடு தொண்டர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. அவரது மறைவுக்குப் பிறகு திரைப்படக் கூத்தாடி செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையை ஏற்ற தொண்டர்களுக்கு முதுகெலும்பு இல்லாதவர்கள் என்பது மட்டுமல்ல, நன்றி கெட்டவர்கள் என்பது வெளிச்சமாகியது.
 
காரணம் உண்மையான எம்ஜார் விசுவாசிகளாக இருந்தால் அந்த தெண்டங்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் அனைவரும் அவரது துணைவியார் திருமதி. வி.என்.ஜானகி அவர்களின் தலைமையினை ஏற்று இருக்க வேண்டும் ஆனால் இவர்கள் ஜெ.ஜெ. பின்னால் சென்றதின் காரணம் கவர்ச்சி அரசியல் இதன் வளர்ச்சிக்கு பின்னணியாளர்கள் திரு. திருநாவுக்கரசர் மற்றும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் என்பது வேறு விடயம். பிறகு கட்சி படு வேகமாக நிமிர்ந்து வளர்ந்து ஆட்சியையும் பிடித்தது அதேநேரம் முதலமைச்சர் தவிர மற்ற அனைவரையும் நெஞ்சை நிமிர விடாமல் குனிய வைத்து வளைத்து வளர்த்தது என்பதும் உண்மை.
 
இந்தச்சூழல் திமுக தொண்டர்களுக்கு இல்லை என்பதில் எனக்கு சற்றே மகிழ்ச்சி ஆனால் இதிலும் மண் விழுந்தது ஆம் நண்பர்களே திரைப்படக் கூத்தாடன் திரு. உதயநிதி அவர்களின் வரவுக்குப் பிறகு யாரும் அதிகம் வாய் திறந்து பேச இயலவில்லை கட்சியின் மூத்த நிர்வாகிகள்கூட வாயை திறக்க முடியவில்லை என்பது வேதனை அதிலும் கட்சியின் முன்னாள் முதலாளி திரு. தெட்சிணா... மன்னிக்கவும் மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்குப் பிறகு உதயாவின் வளர்ச்சி படு வேகமாக இருக்கிறது இன்னும் அமைச்சர் பதவி கொடுக்காததின் காரணம் இவருக்கு பதவி ஆசை கிடையாதாம் நம்புங்கள் நாளை துணை முதல்வர் பதவி கொடுத்தால் என்னை யாரும் கேட்ககூடாது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
 
திமுக தெண்டங்க மன்னிக்கவும் தொண்டர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என்பதை நான் சொன்னால்தான் தெரியுமா ? அனைத்து விழாக்களின் பதாகைகளிலும், சுவரொட்டிகளிலும் ஏன் கட்சியினரின் கண்ணீர் அஞ்சலியிலும் உதயாவின் புகைப்படம் போட்டே ஆகவேண்டும் இல்லையெனில் அச்சகத்தின் அச்சாணி பிடுங்கப்படுமாமே...
 
நாங்கள் மன்னர் ஆட்சியே நடத்துவோம் கேட்பதற்கு உங்களுக்கு திராணியா இருக்கிறது என்று நாளை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
நாளை எமது பெயரன் அதாவது உதயநிதியின் மகன் கட்சியில் கொள்கை பரப்பு செயலியாக நியமிக்கப்படுகிறார் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
தண்ணீர்ப்பந்தலாம் அங்கும் உதயாவின் புகைப்படம் செலவு. செய்வது கட்சியின் அடிவருடிகளாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனாலும் எல்லா ஊர்களிலும் அச்சகத்தாரின் தலையில்தானே விழுகிறது. அதாவது பாதசாரிகளுக்கு தாகம் தீர்க்க நடைபாதையில் பந்தலிட்டு வைத்து இருக்கின்றார்கள் தாகம் தீர்க்க போனால் மண் பானை இருந்தது தண்ணீரும் இல்லை திருக்குவளையாரின் குவளையும் இல்லை. சரி போற பாதையில் ஊரணியில் தண்ணீர் மோந்து குடிக்கலாம் என்றால் ? பானையை கட்டி வைத்து இருந்தார்கள். நாட்டில் திருடர்கள் பெருகி விட்டார்கள் போலும்... ஆம் கட்சிகளும் பெருகி விட்டேதே...
 
வாக்கின் மகிமையறியா முடுமைகளுக்கு வாக்குரிமை எதற்கு ?
 
கில்லர்ஜி புதாபி

10 கருத்துகள்:

  1. தண்ணீர் பந்தலில் வெயில் காலத்தில் பெரிய பானையில் தண்ணீர் வைக்கலாம்.
    பானையில் குழாய் பொருத்தி இருக்கிறார்கள் போலும் அதனால் குவளை இல்லை என்று நினைக்கிறேன்.

    எல்லாம் விளம்பர உலகமாய் போய் விட்டது.கோடை காலத்தில் வீட்டுக்கு வீடு வாசலில் முன்பு தண்ணீர் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நலமா? பதிவில் தங்கள் ஆதங்கம் புரிகிறது. கோடையில் தண்ணீர் பந்தல் அமைப்பது நல்ல விஷயந்தான். அது பயனுள்ளதாக அமைந்தால் சரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?  அந்தக் கதைதான்.  அதிமுகவில் ஜானகி அம்மையாருக்கு நிர்வாகத்திறமை  நம்பவில்லை.  அடக்கி ஆளும் திறன் ஜெவிடம் இருந்தது.  அதனால் அதிமுக இத்தனை நாளாவது தாக்கு பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது கருத்து உண்மைதான்...

      நீக்கு
  4. திருடர்களும் பெருகி விட்டார்கள்..திருடர்களை தட்டி கேட்க முதுகெலும்பு இல்லாதவர்களும் பெருகிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு