வணக்கம்
வங்கமுத்தண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடா வழுக்குப்பாறை நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்கே ?
நல்லாயிருக்கேன் சில சந்தேகம்
வந்துச்சு கேட்கலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
ஏண்ணே ஆடு.
சேவல், கோழி இதெல்லாம் அசைவம்தானே ?
ஆமாடா...
அப்படீனாக்கா...
மீன், நண்டு இதுவும் அசைவம்தானே ?
ஆமாடா... இதிலென்ன சந்தேகம் உனக்கு ?
அப்படீனாக்கா...
கோயிலுக்கு நேர்த்திக்கடன் வச்சு ஆடு, கோழி வெட்டுறவங்க, மீன், நண்டு வெட்ட
மாட்றாங்களே ஏண்ணே ?
? ? ?
சில கோயில்ல கிடா வெட்டாம
வெண்பொங்கல், வடை, சுண்டல் மட்டும் தர்றாங்களே ஏண்ணே
தம்பி அதெல்லாம் அசைவம் சாப்பிடாத சாமி, ஐயனார், கருப்பணசாமி, முனியய்யா இவங்களுக்குதான் ஆடு, சேவல் வெட்டணும்.
அப்படீனாக்கா... வெண்பொங்கல், வடை,
சுண்டல், கிடா ரெண்டையுமே மனுஷன்தானே திங்கிறான் அப்புறம் எப்படிணே அசைவச்சாமினு
சொல்றாங்க ?
? ? ?
ஏண்ணே உத்திரகோசமங்கையிலதான் சிவன்
பிறந்தார்னு சொல்றாங்களே உண்மையாணே ?
ஆமாடாத்தம்பி உலகைப் படைத்த சிவன் பிறந்த இடம் உத்திரகோசமங்கை அதனாலதான் எல்லா மக்களும் அங்கே வந்து சாமி தரிசனம் செய்துட்டு போறாங்க...
அப்படீனாக்கா... அவங்க அம்மா, அப்பா
யாருணே ?
? ? ?
ஏண்ணே திருப்பதி ஏழுமலையானை
பணக்காரச்சாமினு எல்லாரும் சொல்றாங்களே எப்படிணே ?
ஆமாடாத்தம்பி எல்லா மக்களும் அங்கே போயி கட்டுக்கட்டாக பணமும், தங்கநகை, வெள்ளி நகை எல்லாம் உண்டியல்ல போடுவாங்க தினம் பல கோடி வருமானம் அதனாலதான் ஏழுமலையானை பணக்காரசாமினு சொல்றாங்க...
அப்படீனாக்கா... இந்த விசயம்
ஏழுமலையானுக்கு தெரியுமாணே ?
? ? ?
ஏண்ணே மாரியம்மன் கோயில்ல பூ
மிதிக்கிறோம்னு சொல்றாங்களே... அது எதுக்குணே ?
தம்பி குடும்பம் நல்லா இருக்கணும்னு மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் வச்சு பால்குடம் எடுத்து பூக்குழி மிதிச்சு நடந்து வருவாங்கடா...
அப்படீனாக்கா... பூவை மிதிக்காம
ஏண்ணே தீ மிதிக்கிறாங்க ?
? ? ?
என்னணே எதுக்குமே பதில் சொல்லாம
நிற்கிறீங்க ?
ஆமாடா இப்ப நான்தான் உன்னை தூக்கிப்போட்டு மிதிக்கப் போறேன் ஓட்றா.
? ? ?
கில்லர்ஜி அபுதாபி
Chivas Regal சிவசம்போ-
தம்பி வழுக்குப்பாறை வசமாத்தான் கேள்வி கேக்குறான், மனுஷப்பயலுக பதில் சொல்ல முடியாது போலயே...
வாடா வழுக்குப்பாறை நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்கே ?
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
ஆமாடா...
ஆமாடா... இதிலென்ன சந்தேகம் உனக்கு ?
? ? ?
தம்பி அதெல்லாம் அசைவம் சாப்பிடாத சாமி, ஐயனார், கருப்பணசாமி, முனியய்யா இவங்களுக்குதான் ஆடு, சேவல் வெட்டணும்.
? ? ?
ஆமாடாத்தம்பி உலகைப் படைத்த சிவன் பிறந்த இடம் உத்திரகோசமங்கை அதனாலதான் எல்லா மக்களும் அங்கே வந்து சாமி தரிசனம் செய்துட்டு போறாங்க...
? ? ?
ஆமாடாத்தம்பி எல்லா மக்களும் அங்கே போயி கட்டுக்கட்டாக பணமும், தங்கநகை, வெள்ளி நகை எல்லாம் உண்டியல்ல போடுவாங்க தினம் பல கோடி வருமானம் அதனாலதான் ஏழுமலையானை பணக்காரசாமினு சொல்றாங்க...
? ? ?
தம்பி குடும்பம் நல்லா இருக்கணும்னு மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் வச்சு பால்குடம் எடுத்து பூக்குழி மிதிச்சு நடந்து வருவாங்கடா...
? ? ?
ஆமாடா இப்ப நான்தான் உன்னை தூக்கிப்போட்டு மிதிக்கப் போறேன் ஓட்றா.
? ? ?
தம்பி வழுக்குப்பாறை வசமாத்தான் கேள்வி கேக்குறான், மனுஷப்பயலுக பதில் சொல்ல முடியாது போலயே...
காணொளி
பதிலில்லா கேள்விகள் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு நன்றி.
நீக்குதிணற வைக்கும் கேள்விகள்தான்!
பதிலளிநீக்குவாங்க ஜி அப்படியா.... இருக்கூ.........?
நீக்குகாணொளியில் உள்ளது போல தீ மிதிப்பதை இப்போதான் காண்கிறேன். மிக ஆபத்தானது
பதிலளிநீக்குவருக தமிழரே இப்படி சொல்லாதீர்கள்.
நீக்குஆத்தா ஆபத்பாந்தவள்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் தம்பியின் எடக்கு மடக்கு கேள்விக்கு அண்ணனால் சரியான பதிலை கூற முடியவில்லையே!!
காணொளி பயங்கரமாக உள்ளது. இப்படி ஒரு பூக்குழியை பார்த்ததில்லை. எப்படித்தான் செல்கிறார்களோ ? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகேள்வியின் நாயகன் போல . அவர் கேட்ட கேள்விகளுக்கு எப்படி என்ன பதில் சொல்வது?
பதிலளிநீக்குகாணொளியில் உள்ள பூக்குழி இப்போது தான் பார்க்கிறேன். பூக்குண்டம் என கங்குகள் உள்ளதை தென்னைமட்டையால் சம படுத்தி நீறு பூத்த நெருப்பாய் இருப்பதில் பூக்குழி இறங்குதலை பார்த்து இருக்கிறேன். இது எநத ஊர்?
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஇந்த காணொளி இணையத்தில் கிடைத்தது.
காலை வணக்கம் நண்பரே...
பதிலளிநீக்குகேள்விகள் நல்லாத்தான் இருக்கு.... பதில் தான் சொல்ல முடியாது! எல்லாம் நம்பிக்கை தான்.
பூக்குழி - முன்னரும் இது போல ஒரு காணொளி கண்டிருக்கிறேன் - உங்கள் பதிவிலா என்று நினைவில்லை.
வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குசுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....
பதிலளிநீக்குதங்களது வலையுலக வரவுக்கு வந்தனம்.
நீக்குகேள்விகளால் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குகிடா கோழி வெட்டுவது எல்லாம் அந்தந்தக் கோயிலை யார், எந்த ஊர் மக்கள் நடத்துறாங்களோ அவங்க வெட்டுவதுதான்...கூடவே ஒவ்வொரு கோயில் சார்ந்த மக்களின் நம்பிக்கை வழி வந்தவை. இந்த பழக்க வழக்கங்கள். மீன் பிடிப்பதை விட நண்டு பிடிச்சு கடி வாங்குவதை விட ஆடு, கோழி பிடிச்சு வெட்டுவது எளிது என்பதால் பின்பற்றப்படலாம்!!! இரண்டாவது மீன், நண்டு எல்லாம் விட மட்டன் சிக்கன் தானே விரும்பப்படுது பெரும்பாலும்!!!! அதனால் இதெல்லாம் மக்களால் ஏற்படுத்தப்படுவது. எதிர்காலத்தில் மீனும் நண்டும் கூட வரலாம் ஏன் இப்பவே கூட ஒடிசா, மேற்கு வங்காளம், மஹாராஷ்ட்ரா, கேரளத்தில் சில இடங்களில் மீன் இறைவனுக்குப் படைக்கப்படுதாம். அது போல குஜராத்தில் ராம்நாத் சிவா ghகேலா கோயிலில் உயிருடனான நண்டை படைத்தாங்களாம்!
பதிலளிநீக்குகீதா
கூடவே சைவம் அசைவம் படையல் இதுவும் கோயிலும் கோயில் சார் அப்பகுதி மக்களும், ஆண்டாண்டு காலமாக அவர்களது நம்பிக்கை வழி வருவதுதான். ,முன்ன இருந்த மக்கள் என்ன செஞ்சாங்களோ அதை செஞ்சுட்டு வராங்க இதுல எங்க சாமி! அவர் என்ன எனக்கு இதைக் கொடு அதைக் கொடுன்னு கேட்டாரா என்ன!!
நீக்குகீதா
வருக ஆம் மனிதர்கள் தங்களுக்கு எது வசதியோ அதை சாஸ்திரமாக்கி விட்டார்கள் என்பதே உண்மை.
நீக்குதீ மிதின்னு சொன்னா தப்புங்க!!!! தீ கூட பூவா இருக்குமாம் வேண்டிட்டு நம்பிக்கையோட செஞ்சா அதான் தீக்குழி பூ மிதி!!!
பதிலளிநீக்குசரி சரி அந்த தம்பிய எங்கிட்ட அனுப்புங்க கில்லர்ஜி!! திரும்ப கேட்க முடியாதபடி அனுப்பிடறேன்!!
காணொளி - மூடநம்பிக்கையின் உச்சத்தில் ஒரு வகை!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குவழுக்குப்பாறையிடம் தங்களது முகவரி கொடுத்து அனுப்பி வைக்கிறேன்.
வழுக்குப் பாறை வழுக்கிப் போகும் அளவிற்கு கேள்விகள் கேட்கிறார். சிரிக்க வைக்கிறார். எல்லாம் நம்பிக்கைதானே. காணொளி பார்த்ததும் இப்படியும் கூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்பது தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்கு