இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 06, 2024

பாதையோரக் கிளிகள்

குறுக்கு பாதையிலே சந்தைக்கு போறியடி
முறுக்கு வாங்கித் தாறேன் வேணுமாடி
காத்தாயி எனை ஒரு பார்வை பாரேன்டி
காத்தாகி பறக்குமே என் மனந்தான்டி
 
கிறுக்கு புடிச்ச கதிர்வேலு மச்சானே
நீ எதுக்கு கொக்கி போடுறே தெரியாதா
உன்னோட கொரங்குப்புத்தி புரியாதா
தினந்தோறும் அலையிறது அறியாதா
 
ஆவணி பொறக்கட்டும் கருவாச்சி
மச்சானோடு பேசி நீயும் நாளாச்சு
கொல்லையில சாமந்தி பூத்தாச்சு
இன்னும் யேண்டி வெறும் பேச்சு
 
உன்னோட பேச்சால நான் விழுந்தாச்சு
கொல்லைக்கு வந்ததால கரு’’வாச்சு
கருவாப்பயலைப்போல உருவாச்சு
பட்டணம் போயித்தானே அழிச்சாச்சு
 
அடி பூமயிலே என்னை நீ நம்பேன்டி
ஆடி மாசம் முடியட்டும் பொறேன்டி
தாலிக்கு சொல்லிட்டேன் நாந்தான்டி
தாமரைப்பூவே மறுக்காம வாயேன்டி
 
சந்தையும்தான் வந்துருச்சு மச்சானே
சாமான் வாங்கிட்டு நான் வருவேனே
துணைக்கு அப்பாவுந்தான் வருவாரே
நீயும் வீணாக அலைந்து திரிவானே
 
கூதரைக்கு பொறந்தவளே திட்டமாடி
போட்டு வாரே மறு சந்தை வரட்டுமடி
மச்சான் கிட்டே வசமாக மாட்டவேடி
நானும், வீட்டுக்கு திரும்பி போறேன்டி
 
கோபம் வேண்டாமே கருத்த மச்சான்
எனக்குள்ளே உன்னை கடவுள் வச்சான்
கோபக்கார அப்பனும் எனக்கு வாச்சான்
இன்னும் ரெண்டு மாசம்தானே மிச்சம்
 
தருவேனே நாந்தானே தன்னானே - அடி
தருவேனே நாந்தானே தன்னானே
தானானே தானானே தன்னானே – அட
தானானே தானானே தன்னானே
 
கில்லர்ஜி புதாபி
 
காணொளி

19 கருத்துகள்:

  1. என்ன இது... கிராமத்துப் பாட்டில் இறங்கிட்டீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      நவரசமும் கலந்து தானே நமது பதிவு வருகிறது...

      நீக்கு
    2. நெல்லை முன்னாலயும் எழுதியிருக்கிறாரே!

      கீதா

      நீக்கு
  2. மீண்டும் கிராமத்து வாசம்!!! நல்லாருக்கு கில்லர்ஜி

    காணொளியும் பார்த்தேன். நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கிராமத்து பாடல் நன்றாக உள்ளது. காணொளியும் பார்த்தேன். அந்தப்பாடலும் நன்றாக உள்ளது. அதே மெட்டில் உங்கள் பாடலையும் பாடிப் பார்த்தேன். நன்றாக பொருந்தி வருகிறது. உங்களின் வளமான கற்பனைத் திறனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடலை பாடி ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. உங்கள் கவிதையும், கிராமிய பாடல் காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  5. ரசித்தேன். கவிதைக்கு நடுவிலேயே ஒரு சின்னஞ்சிறு கதை!

    பதிலளிநீக்கு
  6. தன்னானே
    தின்னானே!...

    அருமை..
    அருமை..

    பதிலளிநீக்கு
  7. கிராமியப் பாடல் காணொளி நன்றாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டு ரசித்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  8. கிராமியப் பாடல் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    காணொளியும் கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி

      நீக்கு