வணக்கம் நண்பர்களே... ‘’அன்பு நடமாடும் கலைக்கூடமே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல். எனக்கு மிகவும்
பிடித்தமான பாடலாகும். இதன் சிறப்பு கவிஞர் இறுதியில் மே... மே... மே.. என்று
முடித்து இருப்பார். எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின்
இணைப்பும் கொடுத்துள்ளேன்
வம்பு உருவாகும் பிழை மாடமே பூசை விலை பேசுமே
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே
பதவிச் சூடி நாவின் காதோரமே ஏய்க்கும் புதுச் சோரமே
பதவிச் சூடி நாவின் காதோரமே ஏய்க்கும் புதுச் சோரமே
கொஞ்சல் குயில் மேலும் பலர் தின்ன அகமே
கண்ணர் நிலப் பங்கமே இச்சை பிழைக் கோட்டம் பணியாரமே
தேடும் மது மோகமே வம்பு உருவாகும் பிழை மாடமே
பூசை விலை பேசுமே
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே
துள்ளலை மடலோடும் மண்ணோடுமே இலக்கின் வழி உள்ளமே....
துள்ளலை மடலோடும் மண்ணோடுமே இலக்கின் வழி உள்ளமே....
சொல்லும் மடம் மாறும் இகழ் தூர்க்கும் கவமே
கண்ணர் நில கண்ணனே
அன்று புவி தேடும் உன் கள்வமே இன்றும் உன் பொய்வமே
காநிலம் கொல்லமும் எம் உள்ளமே சிக்கல் உம் பந்தமே
தானும் வளமெங்கும் உமிழ் தேடும் தினமே
கலகம் எமதாகுமே
இன்று புவி கந்தன் உள் கன்னமே தாவும் உருவாகுமே
வம்பு உருவாகும் பிழை மாடமே பூசை விலை பேசுமே
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே
பின்னித் தொழில் தோன்றுமே
படம்: அவன்தான் மனிதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச் சாரமே…
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
பெண்
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
வெள்ளலை கடலோடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே
வெள்ளலை கடலோடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே
மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
பெண்
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
https://www.youtube.com/watch?v=YsDde_RJdfA
நல்ல பாடல்.
பதிலளிநீக்குவாங்க ஜி கவியரசர் வரிகள்தானே....
நீக்குஜி அவர்களது கை வண்ணம்..
பதிலளிநீக்குஆகா!..
தங்களது வருகைக்கு நன்றி ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இந்தப் பாடல் அருமையாக இருக்கும். அடிக்கடி கேட்டிருக்கிறேன். தங்களின் மாற்றுப் பாடல் வரிகளும் நன்றாக உள்ளது.
/வம்பு உருவாகும் பிழை மாடமே பூசை விலை பேசுமே
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே/
இந்த முதல் வரிகளே நன்றாக உள்ளது. நானும் தாங்கள் இயற்றிய பாடலை ராகத்துடன் பாடி (மனதுக்குள்) ரசித்தேன். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பாடலை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குபாடல் அருமையான பாடல் கில்லர்ஜி!
பதிலளிநீக்குவழக்கம் போல உங்க கைவரிசை!!! ஹாஹாஹா
கீதா
வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஅருமையான பாடல் அதை உங்கள் பாணியில் மாற்றி அமைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குபாடலை கேட்டேன்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசிறப்பான பாடல். உங்கள் வரிகளும் நன்று.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குமிக அருமை...
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்கு