இறைவா
துரோகங்களை மறக்கும் மனம் கொடு
கூடவே துரோகிகளை மறக்கவும் குணம் கொடு
இனி எனக்கு நாளும் உறங்கும் நிலை கொடு
வாழும் வரையில் எனக்கு நிம்மதியை கொடு
எனக்கும்கூட
வரும் கெட்ட எண்ணங்களை தடு
எதிரிகளால் வரும் இடையூறுகளையும் தடு
மனக்குழப்பங்கள் வளர்ந்து விடாமல் தடு
குரங்கு போல தாவித்திரியாத மனதை தடு
அன்று
எனது பணத்தால் நிறைந்திருந்தது வீடு
இன்று அதை இழந்ததால் வெறிச்சோடியது வீடு
எனக்கு பிறகாவது மக்கள் நிறைய வரட்டும் வீடு
எனக்கு இறுதி வரையில் நிலைக்கணும் இந்த வீடு
பாழும்
மனிதர்களிடமிருந்து எனை விலக்கி விடு
இல்லை துரோகிகளை செல்வந்தனாக்கி விடு
அதன் மூலம் எனக்கு விடுதலை அளித்து விடு
இல்லையெனில் என்னை உடனே அழைத்து விடு
எங்கு
கிடைக்கும் எனது நிரந்தர உறக்கத்தின் காடு
என்னவள் உறங்குகின்றாள் கோபாலபட்டணம் காடு
எனக்கு நிரந்தரமாய் ஆகுமா தேவகோட்டை காடு
எவ்வளவு அழகாக இருக்கிறது அபுதாபியிலும் காடு
கில்லர்ஜி அபுதாபி
கூடவே துரோகிகளை மறக்கவும் குணம் கொடு
இனி எனக்கு நாளும் உறங்கும் நிலை கொடு
வாழும் வரையில் எனக்கு நிம்மதியை கொடு
எதிரிகளால் வரும் இடையூறுகளையும் தடு
மனக்குழப்பங்கள் வளர்ந்து விடாமல் தடு
குரங்கு போல தாவித்திரியாத மனதை தடு
இன்று அதை இழந்ததால் வெறிச்சோடியது வீடு
எனக்கு பிறகாவது மக்கள் நிறைய வரட்டும் வீடு
எனக்கு இறுதி வரையில் நிலைக்கணும் இந்த வீடு
இல்லை துரோகிகளை செல்வந்தனாக்கி விடு
அதன் மூலம் எனக்கு விடுதலை அளித்து விடு
இல்லையெனில் என்னை உடனே அழைத்து விடு
என்னவள் உறங்குகின்றாள் கோபாலபட்டணம் காடு
எனக்கு நிரந்தரமாய் ஆகுமா தேவகோட்டை காடு
எவ்வளவு அழகாக இருக்கிறது அபுதாபியிலும் காடு
மனம் சற்று சலனப்பட்டிருக்கிறது போல... குழம்பும் குளம் சீக்கிரமே தெளிவடையும். கவலை வேண்டாம்.
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஇரண்டாவது வரியில் தினம் என்பதற்கு பதில் குணம் என்றிருக்கலாமோ... அல்லது மனோதிடம் கொடு என்றிருக்கலாம்.
பதிலளிநீக்குஇனி எனக்கு நாளும் உறங்கும் நிலை கொடு என்று வந்தால் அர்த்தம் பூரணமாகும், நிலைக்கு வரம் கூட சொல்லலாம்!
குரங்குபோல தாவித்திரியாத அல்ல, திரியும் மனதைத்தான் தடுக்க வேண்டும்!
மூன்றாவது கண்ணியின் கடைசி இரண்டு வரிகளில் மாற்றம் தேவை!
தங்களது விருப்பப்படி மாற்றி விட்டேன் ஜி
நீக்குநன்றி ஜி.
நீக்குபொதுவாக இதை ஒரு படைப்பாகப் பார்த்து ரசித்து, கருத்து, திருத்தம் சொன்னாலும் என் பிரார்த்தனை, உங்கள் மனமே மாற வேண்டும் என்பதுதான்.
பதிலளிநீக்குஉற்சாகமாக இருங்கள் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி
நீக்குஉங்கள் மனதில் அமைதி திரும்ப எனது பிரார்த்தனைகள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம் ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குபழசை ஏன் மீண்டும் மீண்டும் நினைக்கணும் கில்லர்ஜி? நானெல்லாம் அதை என் நினைவிலிருந்து அகற்றிவிடுவேன் (ஆனால் மறக்கமாட்டேன்). நினைத்துக்கொண்டிருந்தால் மன அமைதி கெடும்.
பதிலளிநீக்குஇன்னொன்று கில்லர்ஜி... நமக்கு பணம், பதவி, அந்தஸ்து ஏற்படுத்துவதும், அதைக் கழற்றிவிடுவதும் இறைச்செயலே. இதில் நம்முடையது என்று ஒன்றுமே இல்லை.
ஆம் நண்பரே எல்லாவற்றையும் நிகழ்த்துவது இறைவனே....
நீக்குநீங்கள் புதைக்கும் பழக்கம் உள்ளவர்களா இல்லை எரிக்கும் பழக்கம் உள்ளவர்களா?
பதிலளிநீக்குபுதைக்கும் பழக்கம்தான், எனது மூத்த சகோதரர் இறக்கும் முன் எரிக்க சொன்னதால் அப்படியே செய்து விட்டோம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களது பதிவை படித்ததும் மனதிற்கு வருத்தமாக இருந்தது. கவலைகள் வரும் போது உடலுடன் மனமும் சோர்ந்து போகிறது. இது என் அனுபவமும் கூட. அப்போது மன ஆறுதலை தேட, நம் நட்புகளிடம் பகிரலாமே எனவும் தோன்றுகிறது. உங்கள் மனவலி எனக்கும் புரிகிறது. சமீபத்தில் தங்கள் மனதில் ஏதோ காயம் பட்டு இருக்கிறது எனவும் புரிந்து கொண்டேன்.
எல்லாவற்றையும் ஆண்டவனிடம் விட்டு விட்டு தைரியமாக இருங்கள். அவன் நல்லவர்களுக்கு நல்லதை தான் செய்வான். கவலையை விட்டு மனதை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக நானும் இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ ஆம் இப்பொழுது எனக்கு இறைவன் துணை மட்டுமே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லாருக்கு கில்லர்ஜி நான் சிலது சொல்ல நினைத்திருந்தேன் அதை ஸ்ரீராம் சொல்லிவிட்டார். நான் சொல்ல நினைக்காததையும் அவரே சொல்லிவிட்டார்.
பதிலளிநீக்குகில்லர்ஜி எதிர்மறை எண்ணங்களை விலக்கி, பழையதை கடாசிவிட்டு வருத்தங்கள் விலகிட வந்திடுங்கள் கில்லர்ஜி. உங்கள் வேதனைகள் தீர்ந்திடட்டும். ஆனால் அது விடுபட நீங்கள்தான் முதல் முயற்சி எடுக்க வேண்டும் இறைவன் கை கொடுப்பான்!!! ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டே அப்படி Do your duty leave the rest to God என்று அப்படி.
கீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகலங்க வேண்டாம் நண்பரே.
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்குசகோவுக்கு மனதில் ஏதோ சிறிய குழப்பம் இருக்கு . விரைவில் தீர்ந்து விடும் . கவலை வேண்டாம் சகோ
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குமனம் வருத்தமாய் இருக்கும் போது எழுதியது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகவலைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு வேறு சிந்தனைகளில் மனதை செலுத்துங்கள்.
எனக்கும் நிறைய மன வேதனைகள் உண்டு சகோ.
நான் அவற்றை வெளியே சொல்வது இல்லை.
மனம் விட்டு பேசும் நட்பிடம், அதன் பின் கடவுளிடம் பகிர்ந்து விட்டு கடமைகளை செய்யுங்கள் மன பாரம் குறையும் , கடவுள் நம்மை வழி நடத்துவார்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.
நீக்கு