இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 10, 2024

இதுவும் வேண்டுமடா...


றவுகளே... இந்த இழிநிலைக்கு காராணம் யார் ? சேனல்காரர்களா ? இல்லை இந்த நாடகங்களை தயாரிக்கும் நாதாரிகளா ? அல்லது இதில் நடிக்கும் கூத்தாடிகளா ? நான் சொல்லவா ? மக்குகளாகவே வாழும் நாம்தான். நாம் ஒவ்வொரு தினமும் எத்தனை ஆயிரம் நபர்கள் இதைப் பார்க்கின்றோம் என்பதை துள்ளியமாக கணக்கிடும் கருவிகள் மூலம் பார்த்து இதன் தாக்கத்தை பார்வையாளர்களிடம் அதிகரிக்கின்றார்கள்.
 
முடிவு ? நமது வீட்டில் இலவு. பார்த்தீர்களா ? சோறு கேட்ட கணவன் வெட்டிக்கொலை. எந்தவொரு நாடகமாவது மக்களுக்கு நல்ல விடயங்களை சொல்கின்றதா ? இதுவும் வேண்டுமடா உமக்கு இன்னமும் வேண்டுமடா என்ற கவியரசரின் பாடல்தான் நினைவு வருகிறது. வெளிநாட்டு பெண்களைப் போல உடைகள் அணிய விரும்பும் பெண்மணிகளே... அவர்கள் இந்த மாதிரியான நாடகங்களை பார்ப்பதில்லையே.. அந்த வழியில் போகாததேன் ?
 
உங்களை நாடகம் பார்த்துதான் தீரவேண்டுமென்று யாராவது தொந்தரவு செய்கின்றார்களா ? சுயசிந்தனை செய்யுங்கள் மக்களே... இன்று உனது வாழ்க்கை முழுவதும் நாடகங்கள் பார்க்க முடியாது கணவன் போய் சேர்ந்து விட்டான் உனது குழந்தைகள் நிலை ? சரி நீ இனி யோசித்து பயனில்லை இந்த செய்தியை பார்க்கும் மிச்சமுள்ளவர்களாவது கொஞ்சம் சிந்திக்கலாமே... முன்பாவது திரையரங்கம் போனால்தான் பொழுது போக்கு இப்பொழுது கையிலேயே அலைபேசி இருக்கின்றதே... எத்தனையோ நல்ல வியடங்களும் இதனுள் இருக்கிறது. முயலுங்கள் இதன் மூலம் அறிவைப் பெறுக்குங்கள் முயற்சி திருவினையாக்கட்டும்.
 
எவனுகளோ, எவளுகளுக்கோ மஞ்சக் குளித்து நீராட நீங்கள் வெண்ணீரில் நிற்க வேண்டிய அவசியமென்ன ? வழக்கமாக நான் சொல்வது கூத்தாடன்களின் பதாகைகளுக்கு பாலூற்றி கீழே விழுந்து செத்தவன் இனி வரமாட்டான். ஆனால் இருப்பவன் பாலூற்றாமல் இருக்கலாமே... அதைப்போல மிச்சமிருக்கும் கணவர்களின் உயிராவது மிஞ்சட்டும் சகோதரிகளே...
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி -
எத்தனை கணவர்கள் மறைந்தாலும் சீரியல் மனதை விட்டு மறைவதில்லை.

6 கருத்துகள்:

  1. நான் எந்த தொலைக்காட்சியிலும் எந்த நாடகமும் - சீரியல்களை - பார்ப்பதில்லை.  எங்கள் வீட்டில் யாருமே பார்ப்பதில்லை.  

    ஆனால் OTT தளத்தில் இருக்கும் சில சீரிஸ் கள் பார்த்ததுண்டு.  அவை த்ரில்லர், அல்லது நல்ல கதை அமைப்பு கொண்டவை.  இது போன்ற நஞ்சை விதைக்கும் நிகழ்ச்சிகள் அல்ல.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவின் செய்தி பயங்கரமானது. இப்படியும் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களின் மேல் மோகம் கொண்டுள்ளனரா என அதிர வைக்கிறது. இது போன்ற நிலைகள் இனி தொடராது இருக்க வேண்டிக் கொள்வோம். வேறு என்ன செய்வது?

    முன்பு இந்த மாதிரி கவனமாக தொடர்களைப் பார்ப்பவர்களின் வீடுகளுக்கு சென்றால் கூட ஒரு உபசரிப்பு இருக்காது என கேள்விபட்டுள்ளேன். இப்போது வீட்டில் உள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால்..! சிரமம்தான்..! காலத்தின் கொடுமை இது. பகிர்வுக்கு நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ​தொலைத்தொடர்கள் பெண்களை குறி வைத்து எடுக்கப்படுவது உண்மை. ஏன் இந்த மாதிரி தொலைத்தொடர்களை பார்க்கிறாய் என்ற கேள்வி கேட்டால் மனைவி சொல்லும் பதில் "பின் என்ன செய்யறது?"

    இக்காரணங்களுக்காக என்னுடைய வீட்டில் டீ வி சமையலறை, சாப்பாடு மேஜை போன்றவற்றிருந்து பார்க்கும்படியாக ஹாலில் ஒரு இடத்தில் வைத்திருக்கிறோம். 40 இன்ச் டிவி. படம் தூரத்திலிருந்து பார்க்கலாம். OTT பற்றி பாஸுக்கு தெரியாது. OTT இல்லை. பாஸ் டிவி பார்க்க நான் இணையத்தில் மேய்வேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. நம் வீட்டில் டிவியே கிடையாது. பெரியவர்களுக்காக மிகச் சிறிய டிவி ஒன்று சில வருடங்கள் இருந்தது ஆனால் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பழக்கம் என்றுமே இல்லை. விருப்பம் சுத்தமாகக் கிடையாது. இணையம் ஒன்றுதான் நான் பார்ப்பது. அதிலேயே செய்திகள் விருப்பாமானவை என்று..

    பார்ப்பவர்களின் புள்ளிவிவரக் கணக்கில் பெண்கள் தான் கூடுதல் என்று தெரிகிறது எனவே எடுப்பவர்களுக்குக் கொண்டாட்டம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான், சிலபேர் பைத்தியம் பிடித்ததுபோல பார்க்கிறார்கள். பெண்களை மட்டும் குறை சொல்லாதீங்கோ, சில ஆண்களும் ஒழுங்காகப் பார்க்கிறார்கள் ... சிலசமயம் குறையும் சொல்ல முடிவதில்லை, வயதானோ, தனியே இருப்போர்... இதை ஒரு பொழுது போக்காகப் பார்க்கின்றனர்...
    வேறு பொழுதுபோக்கே இல்லையா எனக் கேட்கலாம், எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காது,....

    எனக்கு .. எங்கள் வீட்டில் நாடகம் என்றாலே என்னவெனத் தெரியாது.. பார்ப்பதில்லை, எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, ஆனா யாருடைய வீட்டுக்குப் போனாலும், அங்கு ரிவியில் போனால், எதுவும் சொல்லாமல் பார்த்து விடுவேன்... ஊரோடு ஒத்தோடிடுவேன்:).

    மற்றும்படி நான் நேரம் கிடைக்கும்போது, ஐபாட் டில் பயங்கரமாக கேம் விளையாடுவேனே... ஹா ஹா ஹா , பசில் ஸும் விளையாடுவேன்.. இவை எனக்குப் பிடித்தமானவை... முக்கியமாக பிளேனில் போகும்போது, நேரம் போவது தெரியாமல் விளையாடுவேன், நித்திரை கொள்ள மாட்டேன்.... ஓவரா அலட்டிட்டமோ:)

    பதிலளிநீக்கு
  6. தமிழ் மற்றும் எந்த சீரியல்களும் பார்ப்பதில்லை, மனைவி இருபது வருடங்களுக்கு முன்னால் சொன்னதிலிருந்து (அப்போ சித்தி சீரியல் ஓரிரு எபிசோட் பார்த்தேன்). நகச்சுவை நிகழ்ச்சி, சில நல்ல படங்கள், பசங்க ஆமோதிக்கும் சீரீஸ், வனவிலங்கு, வரலாறு சம்பந்தப்பட்டவை தவிர வேறு ஓடிடியில் பார்ப்பதில்லை.

    நீங்கள் எழுதியதைப் படித்ததும் காதல் திரைப்படத்தில் பெண் இன்னும் ஸ்கூலிலிருந்து திரும்பவில்லை என்பது தெரியாமல் சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்கள் நினைவுக்கு வந்தனர்.

    பதிலளிநீக்கு