இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 15, 2024

உணர்---ஓம்


ணக்கம் நட்பூக்களே... கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் ஒன்று நம்மில் பலரும் கேட்டு இருப்போம். ’’தென்னையை பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு பெற்றவன் மனமே கல்லம்மா பிள்ளை மனமே கல்லம்மா’’ என்ற பாடல் இன்றைய வாழ்வில் பலரும் கண்ணீர் வடித்தே வாழ்கின்றனர் ஆயினும் நமக்கு ஒரு பிள்ளை வேண்டும் அதுவும் ஆண் பிள்ளை அவன்தானே ஆப்பு வைப்பான்.
 
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு இந்த பழமொழியின் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் அவ்வளவுதான் ஆனால் இதை உணர்வுப்பூர்வமாக உணர்பவர்கள் குறைவு. நான் பிள்ளை மனம் கல்லாகவும் வாழ்ந்து இருக்கின்றேன். பெற்ற மனம் பித்தாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அனுபவமே உணர்த்துகின்றது. அன்று கல்லாக என் தந்தையிடம் இருந்ததற்கு பெற்ற மனம் எவ்வளவு வேதனைப்பட்டு இருக்கும் என்பதை உணர்ந்து விட்டேன். இன்று நான் பித்தாக துடிப்பது எனக்கு மட்டுமே விளங்குகின்றது.
 
இதன் பின்னணியில் சில மனிதர்கள். இது அவரவர்களின் பாவக்கணக்கு போலும். காரணம் நான் கல்லாய் இருந்த்தற்கான தண்டனையை பெற வேண்டுமே இறைவன் நேரடியாக வந்து கொடுக்க மாட்டார். அப்படி வந்தார் எனில் நாத்திகவாதிகள் ஒழிந்து விடுவார்களே... நாத்திகம் இருந்தால்தானே ஆத்திகத்தோடு மோதிக் கொண்டு இருக்க முடியும். உலகில் தவறுகளின் தொடக்கமே இறை பாதையை விட்டு மக்கள் விலகி கொண்டு போவதுதான். உண்டு என்றால் அவர் உண்டு இல்லை என்றால் அவர் இல்லை... இல்லை என்றால் அவர் இல்லை... கவியரசரின் உண்மை வரிகள்.
 
இஸ்லாமும், கிருத்துவமும் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பே ஒரே சமயமான சைவமும், வைணவமும் மோதிக் கொள்ளவில்லையா ? பிரச்சனை இல்லையெனில் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது என்பது இறைவனுக்கே தெரிந்து இருக்கின்றது. ஆகவே பிரச்சனையை உருவாக்கி பிறகு அமைதியை நாடுவது. புயலுக்கு பின்னே அமைதி என்ற நிலைப்பாடுதான். சைவமும், வைணவமும் அடங்கி விட்டாலும். அதன் தொடர்ச்சி விலகி வேறு வகையில் சைவமும், அசைவமும் இன்று மோ(டி)திக் கொண்டுதான் இருக்கிறது
 
கில்லர்ஜி புதாபி
 
சாம்பசிவம்-
பழைய சைவமும், வைணவமும்தான் இன்றைய சைவமும் அசைவமுமா ?

7 கருத்துகள்:

  1. நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.

    அன்பு என்பது மலையிலிருந்து கீழிறங்கும் நீர்வீழ்ச்சி போன்றது. அது எப்போதுமே மேல்நோக்கிப் பாயாது. நமது முழுமையான அன்பு நம் குழந்தைகள் மேல்தான், பெற்றோரை விட இருக்கும். அவங்களுக்கும் நம்மீது உள்ள அன்பை விட, அவர்கள் குழந்தைகளின்மேல்தான் இருக்கும். இது உலகியற்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சகோதரரே. இதுதான் உலகில் வழிவழியாக வருவது.

      நீக்கு
  2. கல்லாய் வந்தவன் கடவுளம்மா
    அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
    புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
    அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

    பதிலளிநீக்கு
  3. நானும் சில விஷயங்களை இது போல உணர்ந்திருக்கிறேன்.  நாம் முன்பு செய்ததற்கு இது பலன் என்பது போல..  கணக்கு நேராகி விடுகிறது போலும்.

    பதிலளிநீக்கு
  4. குழந்தைப் பருவத்தில் அப்பாதான் குழந்தையின் ஆதர்சம், ஹீரோ. பதின்ம வயதில் தொடங்கும் அப்பா மீதான அதிருப்தி. இருபத்தைந்து வயதில் அது உச்சத்தில் இருக்கும். முப்பதைக் கடக்கும்போது நம் பிள்ளைகள்மேல் நாம் படும் அக்கறை நம் தந்தையை நம்மை நினைக்க வைக்கும். நாற்பது வயது ஐம்பது வயதுகளில் அப்பாவின் பெருமை பூரணமாக விளங்கும்.

    இந்த சுழற்சி எல்லோருக்குமே உண்டு. உங்கள் மகனுக்கும் வரும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நலமா? வேலை பளுவெல்லாம் எப்படி உள்ளது? பதிவு அருமை.. நல்ல கருத்துள்ள வரிகள்.

    அன்பை மனம் திறந்து நம்மால் காட்ட முடியும் போது, திருப்பி வரும் அதை உணரவும் வேண்டுமல்லவோ ? அந்த இடத்தில் வழிவழியாக நாமும் வழி தவறுகிறோமோ என எனக்கும் தோன்றும். ஆனாலும் ,இது நம் வயதின் தள்ளாமையால் விளைவது எனவும் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்...! ஆனால், அந்த நேர்ந்தான் இறையருளை நாம் உணர்வும் நமக்கு ஒரு வாய்ப்பு அமைகிறது./அமைத்து தரப்படுகிறது.

    கடவுள் ஏன் கல்லானான் என நினைத்தது போய் கல்லுக்குள் ஒரு ஈரம் இருப்பதை உணர்கிறோம்.

    பொதுவாக பக்திப் பாதையில் அவரவர் கருத்துக்கள் அவரவர்களுக்கு என்றுமே உசத்திதான். எதற்காகவும், யாருக்காகவும் அதை விட்டுத் தர மாட்டார்கள். தங்களின் யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. நல்லாருக்கு கில்லர்ஜி.

    நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் யதார்த்தம். என்றாலும் கூடவே இன்னொன்றும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. குடும்பம் என்பது பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் முறை, அவர்களுக்கிடையேயான பக்குவப்பட்ட புரிதல் என்பதில் இருக்கிறது என்பது.

    கீதா

    பதிலளிநீக்கு