இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 10, 2024

சிந்து நதியோரம்...

ணக்கம் நண்பர்களே... ‘’சிந்து நதிக்கரையோரம்’’ என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

 
இதோ எனது பாடல்...
 
பெண்-இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்
எந்தன் காமன் தேடினான்
தமிழரசியோடு கூடினான்
தனை நாவைப் போல நீவினான்
இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்
 
ஆண்-இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்
எந்தன் காமுகி தேடினாள்
தமிழழகனோடு கூடினாள்
தனை நாவைப் போல நீவினாள்
இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்
 
பெண்-ஊஞ்சல் தளிர் வஞ்சனைகள்
மன்மோகனின் தந்திரங்கள்
ஊஞ்சல் தளிர் வஞ்சனைகள்
மன்மோகனின் தந்திரங்கள்
கெஞ்சும் மயில் வில்லிசைகள்
பாதை உந்தன் சேர்வாரிசு
 
ஆண்-தள்ளிப் படுத்தேன் சதை சதை
கிள்ளி தடுத்தாள் இதை இதை
சாய்ந்தால் என்னம்மா
இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்
எந்தன் காமுகி தேடினாள்
 
பெண்-தமிழரசியோடு கூடினான்
தனை நாவைப் போல நீவினான்
இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்
 
ஆண்-கொள்ளு தமிழ் வரம்புகளை
தள்ளி அவள் கடிந்து உண்டாள்
கொள்ளு தமிழ் வரம்புகளை
தள்ளி அவள் கடிந்து உண்டாள்
உள்ளிருக்கும் கூதலுக்கு
இல்லை தளிர் தான் படுத்தேன்
 
பெண்-கான மொழியில் சதம் சதம்
சேலை வழியில் தகும் தகும்
சாய்ந்தான் என்னவா
இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்
எந்தன் காமன் தேடினான்
 
ஆண்-தமிழரசியோடு கூடினாள்
தனை நாவைப் போல நீவினாள்
இருவரும்-இந்து விதி கரை சேரும் நந்தி வாரம்

பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1979
படம்: நல்லதொரு குடும்பம்
பாடலாசிரியர்: கவியசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா
இதோ கவியரசரின் பாடல் வரிகள்
 
பெண்-சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
 
ஆண்-சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
 
பெண்-மஞ்சள் மலர் பஞ்சனைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சனைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
 
ஆண்-சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாள் அதை அதை
காதல் கண்ணம்மா
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
 
பெண்-தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
 
ஆண்-தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
 
பெண்-வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
 
ஆண்-தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள்
இருவரும்-சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=rDhyKD1Ou3o
நன்றி கில்லர்ஜி அபுதாபி

5 கருத்துகள்:

  1. இளையராஜா இசையில் TMS சில பாடல்களே பாடி இருக்கிறார்.  எல்லாமே நன்றாய் இருக்கும்.  அதில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிந்து நதிக்கரை ஓரம் பாடல் நன்றாக இருக்கும். அதற்குதகுந்தாற் போல நீங்கள் மாற்றிய பாடல் வரிகளும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். தலைப்பை பார்த்ததுமே பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இந்தப் பாட்டு எப்படி இருக்கும்னு டக்கென்று நினைவுக்கு வரவில்லை...கேட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லையென்னு பாட்டைக் கேட்டேன்...ஆஹா எவ்வளவு அருமையான பாடல் நிறைய கேட்டிருக்கிறேன்.

    அதுக்கு உங்க முயற்சி நல்லாருக்கு கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சிந்து நதிக்கரையோரம் பாடல் நன்றாக இருக்கும்.
    உங்கள் மாற்று கவிதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு