இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 15, 2024

அன்று உணர்வாய்...

 
ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியில் நண்பருக்கு திருமணம் இதற்கு வாழ்த்துகளை தெரிவிப்பது மகிழ்ச்சியான விடயமே.. காரணம் அப்பத்தானே அவன் நமக்கு ஒட்டுவான் இதுதான் அடிப்படை காரணம் மொய் செய்துதானே... மொய் பெறுகிறோம். என்பதே மெய். இதற்கு மணமக்களின் புகைப்படத்தை போடுவது தவறில்லை அதைப்பார்த்து மாப்பிள்ளை பெருமைப் படலாம்தானே...
 
ஆனால் அவசியமற்ற திரைப்படக் கூத்தாடன்கள் மேலிருப்பவர்கள் போன்றவர்களின் படத்தை போடுவது அவசியம்தானா ? இதை அவர்கள் பார்த்து விட்டு இவனுடைய திருமணத்திற்கு அவர்கள் சுவரொட்டிகள் ஒட்டப் போகின்றார்களா ? அதுவும் மணமக்களின் புகைப்படம் சிறிய அளவில் கூத்தாடன்களின் படம் பெரிய அளவில். அதுவும் சில திருமணங்களிஸ் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள் பார்த்து இருப்பீர்கள் அவனது ஆதர்ச நாயகன் திருமண வீட்டில் கையில் அருவாளுடன் இரத்தக்களரியாக நிற்பான்.
 
இப்படி அமங்கலமான படத்தை போடலாமா ? என்று பெரியவர்களும் கேட்பதில்லை, கேட்டாலும் ஒன்றும் மாறப்போவதில்லைதான். உலகில் ஏமாற்றுபவன் அறிவாளி, ஏமாறுபவன்தான் முட்டாள். காரணம் ஏமாற்றுவதற்கு அறிவு வேண்டும். மற்றவர்கள் ஏமாற்றுகின்றார்களோ... இல்லையோ நான் ஏமாறுவேன் என்று கங்கனம் கட்டி வாழ்பவன்தான் இன்றைய படித்த தமிழன்.
 
இதில் இன்னுமொரு கோமாளி ரசிகர்களை காணலாம் இரண்டு மூன்று கூத்தாடன்களின் புகைப்படங்கள் போட்டு இருக்கும் அதாவது நாங்கள் ஒன்றுமையாக இருக்கின்றோம் என்று இந்த சமூகத்துக்கு சொல்கின்றார்களாம். அடேய் கூதரைகளா... உங்கள் வீட்டில் இன்று அடுப்பு எரிந்ததா ? அதைப்பாருங்கள். இப்படி பணத்தை விரயம் செய்யாதீர்கள்.
 
நிச்சயம் ஒருநாள் தமிழகம் பசி, பட்டினியால் புரட்சியில் இறங்கும் அன்று உனது நாயகன் அயல் நாடு பறப்பான் குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்வதற்கு. மக்களின் கோபம் முதலில் உங்கள் மீதே விழும் உங்களது தவறுகளை அன்று உணர்வாய் மக்கள் மன்னிப்பார்களா ? என்பது உனது விதியால் தீர்மானிக்கப்படும்.
 
கில்லர்ஜி தேவகோட்டையிலிருந்து...
 
சிவாதாமஸ்அலி-
இவங்கே யோசித்து விட்டால் அவங்கெளுக்கு நல்ல வாழ்க்கை ஏது ?

7 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா... நீங்களும் ஊதும் சங்கை ஊதிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். சமூகம், நடிகர் விசய் வந்து நாட்டை முன்னேற்றப் போகிறார் என எதிர்பார்க்கிறது. விசயோ நடிகை திரிஷாவுடன் கொள்கை விளக்கத்திற்காக அயல்நாடு பறந்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  2. நடிகர் பிறந்தநாள் அன்று கோவிலில் அர்ச்சனை, அன்னதானம் என்று ரசிகர்கள் செலவு செய்கிறார்கள்.
    அவர்கள் வீட்டு பெரியவர்கள் பிறந்த நாளுக்கு இப்படி செய்தால் அவர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள் . அப்போது கூட பெரியவர்கள் "ஏன் அப்பா இப்படி செலவு செய்கிறீர்கள்" என்று தான் கேட்பார்கள்.

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி, மக்கள் முட்டாளாக இருக்கும் வரை நீங்க என்னதான் புலம்பினாலும் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சினிமா மோகம் ஒழிந்தாலொழிய சமூகம் பக்குவமடைந்து முன்னேற்றம் அடையப் போவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இந்தப் பசங்க எப்ப தங்க குடும்பத்தைக் கவனிக்கிறார்களோ, சமூகமே முன்னேறும். சினிமா பார்ப்பதையோ, அதைப் பற்றிப் பேசுவதோ தவறில்லை ஆனால் மோகம், கண்மூடித்தனமான இப்படியான விஷயங்களிலிருந்து வெளி வந்தால்தான் உருப்படும் இந்த சமூகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நல்ல கருத்துள்ள பதிவு. ஆதங்கங்கள் யாருக்கும் புரிவதில்லை. எல்லாம் படப்படத்தான் புத்தி வரும். புத்தி வரும் போது எதுவும் நிலைக்காமல் போய் விடும். இதுதானே உலக நிய(நீ)தி.. நீங்களும் நம் மக்கள் உணர்வதற்காக இப்படி நல்லெண்ணம் கொண்ட பதிவுகளை தந்து வருகிறீர்கள். மக்கள் என்றாவது இவற்றை உணர்ந்தால் நல்லது. காலம் கண்டிப்பாக நல்ல பதிலைச் சொல்லும். காத்திருப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. இந்தியா முழுவதும் ரசிகர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    தாங்கள் தேவகோட்டைக்கு வந்து விட்டீர்களா? உங்கள் பதிவு தேவகோட்டையிலிருந்து என்று காண்பிக்கிறதே..! நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு