வணக்கம் நண்பர்களே.. இவ்வுலகில் மிகச்சிறந்த அறிவாளியாக யார் இருக்க முடியும் ? முதல் ரகம் விஞ்ஞானிகள் காரணம் அவர்களின் கண்டுபிடிப்புகள். அவ்வகையில்
நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மனிதனின் சிந்திக்கும் திறன் இதுவரையில் 12 சதவீதமே எட்டி இருக்கிறது. மீதியும் நெருங்கினால் ? ஆனாலும் அவைகள் மனிதர்களுக்கு அழிவுதான் என்பது வேறு விடயம். இந்த சதவீத்த்தை
எட்டியவர்கள் விஞ்ஞானிகள் மட்டுமே...
இதில்
அரசியல்வாதிகள், திரைப்பட கூத்தாடன்கள் எட்டி விடமுடியாது. இந்த இளைய சமூகம்
கூத்தாடன்களை மிகப்பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு அவர்களுக்கு ராஜவாழ்க்கையை
கொடுக்கிறது. ஒருமுறை கூத்தாடி கீர்த்தி சுரேஷிடம் நிருபர் கேட்கிறார். நீங்கள்
செல்ல விரும்பு வெளிநாடு எதுவென்று ? அதற்கு அந்த
கூத்தாடி சொல்லிய பதில் நார்த் இந்தியா. பார்த்தீர்களா ? இவ்வளவுதான் இவர்களின் அறிவு.
அதிலும் இப்பொழுது
ஆடியோ ரிலீஸ், அந்த பங்ஷன் அது இதுவென்று ஏதேதோ நடத்தி அவர்கள் பணத்தை பார்க்கிறார்கள்.
ரசிகர்கள் பணத்தை கொடுத்து இதை ஏமாந்து பார்க்கிறார்கள். காரணம் கேட்டால் அவர் ஏதோ
குட்டிக்கதை சொல்வாராம். அட ஞானசூன்யங்களே... உலகம் கேட்டிராத கதைகளா ? உங்களுடைய அறியாமையால் அவர்கள் கோடி, கோடியாக சம்பாரிக்கின்றார்கள். ஆனால் நீ
எங்கு நிற்கிறாய் ? பயிர்த்தொழில் அழிந்து போய்க்கொண்டே இருக்கிறதே.. நாளை சோற்றுக்கு என்ன
செய்வாய் ? ஆனால் உனது நாயகர்கள் பணத்தோடு வேறுதேசம் பறந்து விடுவார்கள்.
இவர்களின்
உழைப்புக்கு எதற்காக... இவ்வளவு கோடிகள் ? அதேநேரம்
மிகச்சிறந்த அறிவாளிகள் என்று சொல்லக் கூடிய இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளத்தை மேலே
இருக்கும் புகைப்படத்தில் பார் குடும்பத்தை மறந்து உலகுக்காக உழைக்கும்
இவர்களுக்கும், நாட்டை உயிரைக் கொடுத்து பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கும்தானே
இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் ? உனது ஆதர்ச நாயகன்
ராஜபோகமாக வாழ்கின்றான்.இலவசமாக பல பெண்களின் சுகத்தோடும்.... மக்களுக்காக என்ன
செய்தான் ?
இவர்கள் நமக்கு
பொழுது போக்குக்காக மகிழ்விக்கின்றார்கள் என்றால் இதைத்தான் கரகாட்டம், ஒயிலாட்டம்
ஆடும் கலைஞர்களும் செய்கின்றார்கள். அவர்களை மட்டும் இந்த சமூகம் இழிவாக நினைக்க
காரணமென்ன ? இவர்கள் தரையில் ஆடுகின்றார்கள், அவர்கள் திரையில் ஆடுகின்றார்கள் இதுதான்
வித்தியாசம். இவ்வளவு சம்பாரிக்கும் அவர்கள் ஏழைகளின் உணவுக்காக பண்டைய காலங்கள்
போல இலவச உணவு விடுதிகள் கட்டி விடக்கூடாதா ? இருக்கும் பணம்
குறைந்து போய் விடுமா ?
கோடிக்கணக்கில்
சம்பாரிக்கும் அவர்களது சங்கம் கடனில் இருக்கிறதாம். இதற்காக நாடு, நாடாக போய்
நிகழ்ச்சி நடத்தி உங்களிடம் பணத்தை வாரிச்சுருட்டி அதிலும் அதிலுள்ளவர்கள்
சுருட்டுகின்றார்கள். அவர்கள் நினைத்தால் அவர்களிடம் இருக்கும் பணபலத்தால் ஒரே
இரவில் கட்டிடத்தை கட்டி விடமுடியும். ஏன் செய்யவில்லை ? சரி இந்த கட்டிடத்துக்குள் நீ நுழைந்து விடத்தான் முடியுமா ? வாயிலில் நிற்கும் நேபாளி உன்னை நெற்றியில் அடித்து விரட்டுவான்.
கொஞ்சம் சிந்தி நாம்
ஏமாறுகிறோமா... இல்லையா என்பது புலப்படும். நாட்டில் ஒருவேளை உணவுடன் உறங்கும்
மக்களின் எண்ணிக்கை கோடான கோடி அவ்வளவு பேருக்கும் நம்மால் உதவ முடியாது இயன்ற
வரையில் இவர்கள் நினைத்தால் முடியும் கீழேயுள்ள குறும்பட காணொளியைப் பார். இதில்
உயர்ந்த சிந்தனை அடங்கி இருக்கின்றது.
கில்லர்ஜி தேவகோட்டை
சிவாதாமஸ்அலி-
மீண்டும் கொரோனா வந்து அழிந்தாலும் மிச்சமுள்ளவனும் திருந்தி கொடுக்க மாட்டாங்கே...
மீண்டும் கொரோனா வந்து அழிந்தாலும் மிச்சமுள்ளவனும் திருந்தி கொடுக்க மாட்டாங்கே...
காணொளி
அய்யா ஒரு சிறு திருத்தம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் காட்டியிருப்பது பழைய (2016 க்கு முன் உள்ள சம்பள ஸ்கேல். இதனுடன் மற்ற பஞ்சப்படி, வீடு வாடகைப்படி போன்றவை உண்டு.
பதிலளிநீக்குஆயிரம் இரணடாயிரம் என்று செலவு செய்து சினிமா பார்ப்பவர்கள் இருந்தால் சம்பளமும் கோடிக்கணக்கில் தான். இவ்வளவு சம்பளம் வாங்கி என்ன பிரயோஜனம். பல நடிகர்களும் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு தான் இறந்தார்கள். சம்பாத்தியம் முழுதும் கரைந்த விதம் தான் தெரியாது.
Jayakumar
ஜெ கே அண்ணா அதெல்லாம் பழைய காலம். இப்பலாம் திரைத்துறையினர் நல்ல உஷார்தான். நல்லா இன்வெஸ்ட் பண்ணிடறாங்க. வருமானம் மற்ற வழிகளிலும் வரும் அளவு. குறிப்பாக ஹீரோக்கள், ஹீரோயின்கள், ஆனால் திரைத் துறையில் சாதாரண கேரக்டர் ரோல்ஸ் செய்பவர்கள், சில சிறிய ரோல்களில் நடிப்பவர்கள், சில நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்க மற்ற சாதாரண மக்களைப் போன்றுதான்.
நீக்குகீதா
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் இந்திய அளவில் மாநிலங்களில் எம் எல் ஏ வாங்கும் சம்பள விவரம்,. எம் பி வாங்கும் சம்பள மற்றும் சலுகை விவரங்கள் வெளியிட்டிருந்தார்கள்.
பதிலளிநீக்குஇந்த லிஸ்ட்டில் மிக அதிக சம்பளம் வாங்கும் எம் எல் ஏக்கள் நம் தமிழ்நாட்டு ஏழைப் பங்காளர்க்கள்தாம்.
இவர்கள்தான் வறுமைக்கோட்டைப் பற்றி பேசுவார்கள். மக்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருப்பார்கள்.
காணொளி ரொம்பப் பழசு. ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அது சொல்லும் கருத்து ஓகே. காட்சி செயற்கையானது.
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட பதிவு... அருமை...
பதிலளிநீக்குகாணொளியும் அருமை ஜி...
உங்கள் எண்ணங்களை சொல்லி விட்டீர்கள். சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும். காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன். உணவை வீண் செய்ய கூடாது என்பதை சொல்லும் காணொளி.
பதிலளிநீக்குகில்லர்ஜி, அந்தணச் சம்பளவிவரங்கள் பழையது. வேறு சில வசதிகள் இருந்தாலும், இப்ப கொஞ்சம் கூடியிருக்கிறது பே கமிஷனில் என்றாலும் நம் நாட்டில் அறிவார்ந்த விஷயங்களுக்கான ஊதியம் மிகவும் குறைவுதான். இதில் இராணுவமும் அடங்கும்.
பதிலளிநீக்குஇங்கு பிற ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கும் பணமும் ரொம்ப ஒன்றுமில்லை. ஆராய்ச்சிகளே குறைவு என்பதோடு, அந்தப் படிப்புக்கான சான்றிதழ்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதும் பற்றி நிறைய சொல்லலாம்.
இருந்தாலும் இதனிடையிலும் நல்லவை நடக்கின்றனதான். அது நம் கண்ணில் படுவதில்லை. அறிய வருவதில்லை.
கீதா
காணொளியின் கருத்து நல்ல கருத்து. ஆனால் அதை இப்படிக் காட்ட வேண்டுமா என்று தோன்றியது. செயற்கைத்தனமாக இருந்தது.
பதிலளிநீக்குகீதா