இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 20, 2024

கல்யாண கோலங்கள்



ண்டி செங்கமலம் உன் மகன் மலேசியாவிலிருந்து வந்து இருக்கானாம் எப்ப கல்யாணம் ?
எங்கே சம்பாரிக்க போனவன் மலேரியா காய்ச்சலோட வந்துருக்கான்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
ன் மகன் ராகுலுக்கு இன்னுமா பொண்ணு கிடைக்கலை ?
அவனுக்கு நக்மா மாதிரித்தான் பொண்ணு வேணுமாம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
புதுவலசை பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டியாமே ஏன் ?
வீட்டுல மேக்கப்மேன் இருந்தால்தான் திருமணத்துக்கு சம்மதிப்பாளாம்..
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
ன் மகனுக்கு தஞ்சாவூரு ஏரியாவுலதான் பொண்ணு எடுக்கணும்னு சொல்றியே ஏன் ?
அவனுக்கு சோறு போட அந்த ஊருக்காரவுங்களாலதான் முடியும்.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
ண்ணையார் வீட்டுப் பொண்ணை வேண்டாம்னு சொல்றியே ஏன் ?
அவரே தொன்னையை நக்கிட்டு இருக்காராம், நம்ம புள்ளைக்கு சோறு கிடைக்காது.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோவிச்சுட்டு போயிட்டாங்களாமே ஏன் ?
பொண்ணு வீட்டுக்காரவுங்க, ஏட்டுச் சுரைக்காயை கூட்டுக்கு வச்சுட்டாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
விருந்துக்கு வந்தவங்களெல்லாம் சாப்பிடாம எந்திரிச்சு போறாங்களே ஏன் ?
புதுமையா இருக்கட்டுமேனு கரிச்சோறு போட்டாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
விருந்துக்கு வந்த மாப்பிள்ளை மூணாவது நாளே ஓடிட்டாராமே ஏன் ?
விருந்தும், மருந்தும் மூணுநாள்னு சொல்லி மூணாவது நாள் மாப்பிள்ளைக்கு மருந்து வச்சாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
திருமணச் செலவை அளவோடுதான் செய்யணும்னு உன் கணவர் சொல்றது சரிதானே அதுக்கு ஏன் சண்டை போடுறே ?
விருந்துல அளவு சாப்பாடுதான் போடணும்னு சொல்றாரு.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
ல்யாண பந்தியில வாட்டசாட்டமா நிற்கிறாரே யார் அவரு ?
வாட்டாள் நாகராஜூக்கிட்டே இருக்காராம்.
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை 
 
Chivas Regal சிவசம்போ-
இருந்தாலும் அளவு சாப்பாடு போடுறது சரியில்லையே...
 
காணொளி

19 கருத்துகள்:

  1. ரசித்தேன், அனைத்து வரிகளையும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  2. ராகுலுக்கு பொண்ணு கிடைச்சு கல்யாணம் ஆயாச்சு. ஸ்ரீராம் பத்திரிகை அனுப்பவில்லையா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பத்திரிகை வரவில்லையே...

      நீக்கு
    2. JKC Sir... என் மகன் பெயர் சொல்லி என்னை ஆச்சர்யப்படுத்துகிறீர்கள்.

      நீக்கு
    3. மகன் பெயர் ராகுலா ? மகிழ்ச்சி ஜி

      நீக்கு
  3. ​அபு தாபி திரும்பிவிட்டீர்களா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. எல்லாமே திருமண சம்பந்தப்பட்டதாக தொகுத்து தந்திருப்பதற்கு வாழ்த்துக்கள். காணொளியும் விருந்துக்கு களை கட்டுகிறது. ஆம்.. இந்த மார்கழியில் ஏற்பாடு செய்தால்தான் அடுத்து வரும் தை பிறந்தவுடன் பல திருமணங்கள் நடக்க வசதியாக இருக்கும்.

    கேள்வி பதிலாக தாங்கள் தந்த பொருத்தமான அத்தனை வரிகளையும் படித்து ரசித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  5. அனைத்து நகைச்சுவைகளும் அற்புதம் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. நகைச்சுவை நன்றாக இருக்கிறது, புதுமை கரிச்சோறு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. கில்லர் ஜி அவர்களுக்கே உரிய குறும்புப் பதிவு..

    பதிலளிநீக்கு
  8. நல்ல நகைச்சுவை, கில்லர்ஜி. ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு