இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
திங்கள், மார்ச் 30, 2015
தமிழ்ச்சங்கு
வெள்ளி, மார்ச் 27, 2015
சந்தனபுரி, சந்தனப்பொட்டு சந்தானம்
புதன், மார்ச் 25, 2015
மனப்பொருத்தம்
சாம்பசிவம்-
ஞாயிறு, மார்ச் 22, 2015
மரணதண்டனை
வெள்ளி, மார்ச் 20, 2015
என்னைப்பார் யோகம் வரும்.
புதன், மார்ச் 18, 2015
பேராவூரணி, பேராசை பேச்சிமுத்து
என்னுள் எழுந்தவை நான் மண்னுள் புதையும்முன் இந்த விண்ணில் விதைத்திட விரும்புகின்றேன்.
ஒவ்வொரு மனிதனும்
சந்தோஷத்தை தேடுவதாக நினைத்துக் கொண்டு இருக்கின்ற சந்தோஷத்தை தொலைத்துக் கொண்டு
இருக்கின்றான் நமது வேதனைகள் பெரும்பாலும் நம்மைப்பற்றி இருப்பதைவிட
பிறரைச் சுற்றியே இருக்கிறது.
நமக்கு பதவி உயர்வு
கிடைக்கவில்லை என்பது பிரச்சனை இல்லை, மற்றவனுக்கு கிடைத்து விட்டதே என்பதுதான் பிரச்சனை. ஆனால் அந்த பதவி உயர்வுக்காக அவன் எடுத்துக் கொண்ட
முயற்சிகள் என்ன ? என்பதை நாம் நினைத்துப் பார்க்க
மறுக்கின்றோம் லாட்டரிச் சீட்டில் பரிசு
நமக்கு விழவில்லையே என்பதை விட, அடுத்தவனுக்கு விழுந்து விட்டதே ! என்பதுதான் நமக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது இதில் இன்னொரு வேடிக்கை
என்னவென்றால் நாம், லாட்டரிச்சீட்டு
வாங்கியே இருக்க மாட்டோம் நமக்கு மட்டும் இறைவன் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்கிறானே ?
மற்றவர்களெல்லாம் சந்தோஷமாகத்தானே வாழ்கிறார்கள். என நினைக்கிறோம் எல்லா மனிதர்களுக்குமே
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்து கொண்டே.... இருக்கிறது அது நம் கண்களுக்கு
தெரிவதில்லை.
உதாரணத்திற்கு ஒருவர்
போட்டிருக்கும் சட்டையை நாம் காண்கிறோம் அதை அழகாக சலவை செய்து போட்டு வருகிறார்
நாம் அழகாக இருக்கிறதே என எண்ணுகிறோம். ஆனால் அந்தச்சட்டையின் உள்ப்புறத்திலுள்ள அழுக்கை நாம் பார்க்கிறோமா ? இல்லை இதைப் போலத்தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள். அதை இறைவன் மட்டுமே அறிவான்.
நமது, வேதனைகளுக்கு
முக்கிய காரணம் என்ன தெரியுமா ? நாம் பெரும் பாலும் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நம்மைவிட
உயர்வானவர்கள் வாழ்க்கையைப் பற்றியே நினைக்கின்றோம் ஆனால் அவர்களைப் போல் நாமும் நல்ல எண்ணமுள்ளவராய் வரவேண்டுமென்பதை மறந்து விடுகிறோம்.
இதைத்தான்...
குமரகுருபரர் ஸ்வாமிகள்
சொல்லியிருக்கின்றார்,
தம்மின் மெலியாரை நோக்கித்
தமதுடமை
"அம்மா" பெரிதென்று அக மகிழ்க !
இதையே பாமரனுக்கும்
விளங்கும்படி
கவியரசு, கண்ணதாசன்
சொன்னார், பி.பி.ஸ்ரீனிவாஸ் மூலம்,
உனக்கும் கீழே உள்ளவர்
கோடி
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு
இந்த வேதனைகளுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன ?
ஆசைதான், ஆசையை ஒழிக்க வேண்டும் ஆசையே துன்பத்திற்கு மூலதனம் என்றார், மகான் புத்தர் ஆசைப்படுங்கள் ஆசையே மனிதனை சாதிக்க வைக்கும் என்கிறார், டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்.
இதில் எது சரி ?
இரண்டுமே சரிதான்.
ஆம், நாம் ஒரு லட்சியத்திற்காக வாழவேண்டும். லட்சியத்திற்காக ஆசைப்படவேண்டும், நான் ராணுவத்தில் சேர்ந்து இந்த நாட்டுக்காக பாடுபடுவேன், மிகப்பெரிய ஜவான் ஆவேன் என்று ஆசைப்பட்டால் அது நியாயம். இந்த வகையான ஆசையைத்தான் ஆசைப்படுங்கள், என்கிறார், டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்.
ஆனால் நாம் எப்படி ஆசைப்படுகிறோம் ?
ஜவான் டீக்கடை முச்சந்தியில நாம, மூன்று மாடி வீடு கட்டணும் அப்படின்னு ஆசைப்படுறோம், முச்சந்தி என்பதே அரசாங்க இடம் இதில் வீடு கட்ட ஆசைப்பட்டால் ? இந்த வகையான ஆசையைத்தான் ஒழிக்க வேண்டும் என்றார், மகான் புத்தர்.