தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 30, 2015

தமிழ்ச்சங்கு


1993 மார்ச் 30
இனையான்குடி மருத்துவர் திருமதி. ரஹிமா உஸ்மான் மருத்துவமனை.

எனது வாழ்வில் அன்றுதான் பெண்களின் பிரசவ வேதனையினை உணர்வுப்பூர்வமாக ஒருநாள் முழுவதும் உணர்ந்து கொண்ட நாள். செவிலித்தாய் வந்து கேட்டார்... இங்கே, கலைச்செல்வியோட கணவர் யாரு ? நான்தான் இதில் கையெழுத்து போடுங்கள் போட்டேன் சிறிது நேரத்தில்... இங்கே, கலைச்செல்வியோட கணவர்  யாரு ? இப்பத்தானே போட்டேன். நீங்க ? எந்த கலைச்செல்வியோட கணவர்... தேவகோட்டை கலைச்செல்வி. அப்ப, நீங்க ? நான் சூராணம் கலைச்செல்வியோட கணவர் இன்னொருவர் வந்தார் உங்க பேரு ? சண்முகம். அப்ப இதில் நீங்க கையெழுத்து போடுங்க, ஒரு நிமிசம் இது யாருடைய பேப்பர் ? தேவகோட்டை கலைச்செல்வியுடையது அப்ப நான்தானே கையெழுத்து போடணும் நீங்கதான் போட்டீங்களே... அது எனது மனைவியுடைய பேப்பர் இல்லையே... அதனால் என்ன ? அவருடைய மனைவி பேப்பரில் நீங்க கையெழுத்து போட்டீங்க இது சும்மா சம்பிரதாயத்துக்காக வாங்குறோம். இது அவசியமில்லாதது இதை நான் ஒத்துக்கிற முடியாது அந்தப்பேப்பரை கிழிச்சுப் போடுங்க, இதில நான்தான் கையெழுத்து போடுவேன். நான் சடக்கென அந்தப்பேப்பரை பிடுங்கி கையெழுத்து இட்டுக்கொடுத்தேன் அவள் என்னை நெற்றிக்கண்ணின்றி சுடுவதுபோல் பார்க்க, இவர் (சண்முகம்) எனது பேப்பர் எனகேட்க, அவள் வெடுக்கென அதெல்லாம் வேண்டாமென சொல்லி விட்டு சடக்கென உள்ளே நுழைந்து விட்டாள் இவர் என்னைப்பார்க்க, எனக்கு பாவமாக போய் விட்டது பக்கத்தில் நின்றிருந்த எனது மனைவியின் தாய்-தந்தையினரின் பார்வை சொன்னது இவன் எங்கே போனாலும் வில்லங்கம்தானா ? நான் எனது உரிமையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் இதனாலேயே என்னை பலருக்கும் பிடிப்பதில்லை அதைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை என் மனசாட்சியே எனக்கு இறைவன் இதுவே எமது கொள்கை.

சிறிது நேரத்தில் வெளியே வந்த செவிலித்தாய் இரண்டு பேருக்குமே ....ண் குழந்தை பிறந்ததாக சொல்ல, நான் அவரிடம் சொன்னேன் உங்கள் மனைவியுடைய பெயர் கலைச்செல்வி, எனது மனைவியின் பெயரும் கலைச்செல்வி இரண்டு பேருக்குமே ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரம் என்றுகூட சொல்லலாம் இரண்டும் ....ண் குழந்தை ஆகவே, ஒரே பெயர் வைப்போமா ? என்ன பெயர்  ? சொன்னேன் என்னோட மனைவிக்கிட்டே கேட்கணும்... நான் வச்சிட்டேன் என்னங்க குழந்தை இப்பத்தானே பிறந்துச்சு புண்ணியானம் செய்து ஐயர் வந்து பெயர் வைக்கவேண்டாமா ? புண்ணியம் செய்ததாலேதானே இந்தக்குழந்தை பிறந்தது எனக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க ஐயர் யாரு ? சரிங்க உடனே எப்படி பெயர் வச்சீங்க ? நான் பெயர் வச்சு இருபது வருஷமாச்சே... என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர் நகர்ந்து கொண்டார், அதன் பிறகு நான் அவர்களை சந்திக்கவே இல்லை நான் சொன்ன பெயர் வைத்திருக்க மாட்டார்கள் என்பது எமது கருத்து.

எனது மனைவி தெய்வத்திருமதி. கலைச்செல்வி கில்லர்ஜி காலை 06.00 மணிக்கு தொடங்கிய பிரசவ வலி மாலை 06.00 மணிக்குத்தான் எங்கள் அன்புச்செல்வம் பிறந்தது அறுவை சிகிச்சை இல்லை சுகப்பிரசவம் என பெருமையாக வெளியில் சொல்லிக் கொண்டோம் ஆனால் அன்று முழுவதும் எனது மனைவியோடு நானும், மனைவியுடைய அம்மா, அப்பா, சின்னம்மாவும் பட்ட வேதனை இருக்கிறதே சொல்லிமாளாது அன்றைய முதல் உணவு எங்களுக்கு இரவு 08.00 மணி. அன்று மட்டும் காலையிலிருந்து... சுமார் 12 பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கும் எனது மனைவியின் அலறல் சத்தம் மட்டுமில்லை, பிற பெண்களின் சத்தம் கேட்டு எதற்க்கும் கலங்காத நான் கலங்கியதும் அன்றுதான் அந்தப்பெண்களின் அலறல் சத்தத்தோடு எனது தாயின் முகம் நிழலாடியது நமது தாயும் நம்மைப்பெற இப்படித்தானே கஷ்டப்பட்டு இருப்பார்கள் இயல்பாகவே எனது தாயுடன் பாசமாக இருக்கும் நான் அன்றுமுதல் தாயின் அருமையை கூடுதலாக அறிந்து கொண்டேன். நாட்டில் அறியாமைவாதிகள் யார், யாரையோ தாய் எனச்சொல்கிறார்கள் என்னைப்பொருத்தவரை நடமாடும் தெய்வம் என்றால் ? அது அவனவனைப்பெற்ற தாயே தவிற வேறில்லை இது தவறென்று எந்த மானிடனோ, மதக்கொள்கைகளோ, சொன்னால் அதை ஏற்றுக்கொள்வதில் எமக்கு கசப்புணர்வு உண்டு. ஒவ்வொரு மனிதனும் தாய்ப்பாசத்தை உணர்ந்து பார்க்கும் ஒரு சந்தப்பத்தை இறைவன் மனைவி மூலமாகவும் கொடுக்கின்றான் என்பதற்க்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

குழந்தை பிறந்தவுடன் சீக்கிரம் போய் பேபி சோப், பவுடர், அப்படியே பாத்திரக்கடையில் ஒரு சிறிய சங்கும் வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள் வெளியே போய் மருந்தகத்தில் சோப்பும், பாத்திரக்கடையில் சில்வர் சங்கும் பத்து நிமிஷத்தில் வாங்கி வந்து கொடுத்தேன் சிறிது நேரத்தில் எனக்கு தகப்பன் அந்தஸ்து கொடுத்த என்னவள் மயக்கம் தெளிந்து விழிக்க... 

(பலரும் தன்னை ஆண்மகன் என மார்தட்டிக் கொள்கின்றான் அந்த பெயரை இந்த சமூகத்திற்க்கு முழுமையாக அங்கீகாரம் கொடுப்பவள் அவனது அங்கீகாரம் பெற்ற அவனது மனைவியன்றி வேறு யாருமல்ல சிறிது தாமதமானாலும் ‘’மலடி’’ எனச்சொல்லி விட்டு மறுமணத்திக்கு தயாராகின்றான் ஆண்மகன் தானும்கூட ‘’மலடன்’’ ஆக இருக்கலாமே 80தை சிந்திக்காமல் எனது வாழ்வில் பலரையும் நான் கண்டதுண்டு) 

அவளது முகம் மறுபிறவி எடுத்து வந்திருக்கின்றோம் 80தை எனச்சொல்லாமல் சொல்லியது எல்லோரும் சுற்றி நின்று கொண்டிருக்க... குழந்தைக்கு சங்கில் ஊற்றி ஏதோ கொடுத்தார்கள் அந்த சங்கை எடுத்து பார்த்த என்னவளின் முகத்தில் பிரகாசத்தைக் கண்டேன் சங்கில் எழுதியிருந்தது ‘’தமிழ்’’ ஆம் பாத்திரக்கடையில் வாங்கிய அந்த அவசரத்திலும் பெயர் வெட்டச் சொன்னேன்.


எங்கள் வம்சவிருத்தியை தளைக்க வந்த அந்த எங்கள் அன்புச்செல்வம் தமிழ்வாணன் இன்று (30.03.2015) 23 வது பிறந்தநாள் அன்பு உள்ளங்களே... நீங்களும் வாழ்தலாமே...  
ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்.
காணொளி.
வந்தீர்கள் சாப்பிடுங்கள், நேரமில்லையெனில் எடுத்துக்கொண்டு போங்கள்.
 
குறிப்பு - அன்று இன்னொரு சம்பவம் எனக்கும், மற்றொரு நபருக்கும் இரவு 8 மணிக்கு மேல் 7 ½ ஆகியது அதை அடுத்தொரு பதிவில் சொல்கிறேன்.


வெள்ளி, மார்ச் 27, 2015

சந்தனபுரி, சந்தனப்பொட்டு சந்தானம்


நெற்றியில் காதுவரை விபூதியணிந்து சந்தனப்பொட்டு வைத்திருக்கும் ஒரு மனிதர் நிச்சயம் இறைவனை நம்புகிறார் என்றுதானே அர்த்தம், எனது வாழ்வில் நான் தேவகோட்டையில், பலமுறை பார்த்து இருக்கிறேன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தில்... இல்லாத ஏழை எளிய வீட்டுக் குழந்தைகள் கல்யாண பந்தியில் உட்கார்ந்து விடும், அந்தக் குழந்தைகளை தரதரவென இழுத்து வந்து வீதியில் விட்டு சாதியைக் குறித்து நீதியற்ற முறையில் தகாத வார்த்தைகளில் பேசித்துறத்திய எத்தனையோ பெரிய(?)மனிதர்களை நான் பார்த்து இருக்கிறேன், இந்தக் குழந்தைகள் உண்பதால் இவர்களின் கௌரவம் குறைந்து விடும் எனக்கருதும் பெரிய (?) மனிதர்கள் இவர்கள்.

(இதை இறைவனும் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை, நினைத்துப் பார்க்க தெரியாத ஆத்திக மனிதர்கள்) 

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொல்கிறார்களே ! இதை இவர்கள் நம்ப மாட்டார்களா

இந்த மாதிரியான சமூக அவலங்களை காணும் போதுதான் என்னுள் நாமும் எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய காலகட்டம் அது, 

தங்களது ம(க்)களுக்கு, திருமணம் நடக்கிறது அவர்கள் நெடுங்காலம் சீரும் சிறப்புமாய் வாழவேண்டாமா ? அதற்கு மனம் குளிர்ந்த மனங்களின் வாழ்த்துகள் கூட உதவியாகுமே எப்படி ? இந்தக் குழந்தைகள் வயிராற உண்டு களித்த சந்தோஷத்தை தங்களது தாய்-தந்தைகளிடம் சொல்ல அவர்கள் வறுமையின் காரணமாய் நம்மால்தான் கொடுக்க முடியவில்லை, தங்கள் குழந்தைகள் சந்தோஷமாய் உண்டதற்கு காரணகர்த்தாவான ! அந்த மணமக்களை மனதிற்குள் வாழ்த்த மாட்டார்களா

அந்த குளிர்ந்த மனங்களின் வாழ்த்துகள்தான் கண்டிப்பாக பலிக்கும் என்பதே எமது வாதம்.

இளம் பசிக்காரனுக்கு கஞ்சி ஊற்றாதவன் புளிசேப்பக்காரனுக்கு பிரியாணி போட்டு, இறைவனிடம் என்ன பயன் பெறப்போகிறான் ?

அவன் பூசிக் கொண்டிருக்கும் விபூதியைப்போல் நாமும் ஒருநாள் சாம்பலாவோம் ? ? ? எனத்தெரியாத பல... ஆத்திக ஜடங்கள், இவர்களைவிட சில... நாத்திக ஜனங்கள் உயர்ந்தவர்களே
   
குறிப்பு - தேவகோட்டையின் சிறப்புகளை மட்டுமல்ல ! வெறுப்புகளையும், யாம் உமிழ்வோம்.


புதன், மார்ச் 25, 2015

மனப்பொருத்தம்


வாங்க, வாங்க, எல்லோரும் (வலைப்பதிவர்கள்) உட்காருங்க....

ஆமா மாப்பிள்ளையோட அப்பா வரலியா ?
அவரு பிஸினஸ் விசயமா, அந்தமானுல இருக்காரு, கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருவாரு.

நல்லது, வரட்டும்.
பொண்ணோட அப்பா பேரு ஜெயில்சிங்னு தரகரு சொல்லவும், ‘’என்னஆளுக’’ ன்னு குழம்பிட்டோம்.

அது, ஒண்ணுமில்லே அவரு ரொம்ப காலமா ஜெய்பூர்ல இருந்தாரு, அந்த ஊருக்கு தகுந்தாப்போல ஜெயில்சிங் னுபேரை வச்சுக்கிட்டாரு, மத்தபடி நாங்களும் மள்ளாங்கி ஜாதிதான், கடகுனி கோத்திரம்.
அதுசரி, நாங்களும் கடகுனி கோத்திரம்தான், பைபாஸ்ரோடு பைங்கிளியம்மன்தான், நமக்கு குலதெய்வம்.

மாப்பிள்ளை பேரு என்ன ?
சிறைமீட்டான்.

மாப்பிள்ளை என்ன படிச்சு இருக்காரு ?
சொந்த வேலை கையில இருக்கிறதால, படிப்பெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லே.

நல்லது என்ன வேலை செய்யிறாரு ?
அவுட்''டேக்கு அண்டு இன்''புட்டு

அப்படீனா புட்டு வியாபாரமா ?
இல்லே, இல்லே சொந்த பிஸினஸ்.

அப்படியா நல்லது, உள்ளூருதானா ? இல்லே....
அப்படியில்லே, பிஸினஸ் விசயமா, அடிக்கடி வேலூருக்.... SORRY வெளியூருக்கு போயிட்டு வருவாரு.

நமக்கு பூர்விகம் எது ?
பாளையங்கோட்டை.

சரி பொண்ணை வரச் சொல்லுங்கோ,
பெண் காபி கொண்டுவர...
எல்லோரும், காபி எடுத்துக்கோங்க,

பொண்ணு பேரு என்ன ?
செயின்'' செல்லாயி.

அதென்ன செயின் ?
அது ஒண்ணுமில்லே, சின்னவயசுல இருந்தே செயினுனா, ரொம்ப இஷ்டம், அதான் பேரோட சேர்ந்தே வந்துருச்சு.

அப்படீனா, பொண்ணுக்கு நெறைய செயின் போடுவோம்னு சொல்றீங்க.
ஆமாமா, இனி அவ எடுக்கிறது எல்லாம் உங்களுக்குதானே.

என்ன சொல்றீங்க ?
இல்லே, இனிமே வீட்டுல உள்ளதெல்லாம் அவளுக்குத்தானே ஒரே பொண்ணு இல்லையா, அதெத்தான் சொல்றோம்.

நல்லது.
மாப்பிள்ளை என்னமோ ? சொல்றாரு....

வேற, ஒண்ணும் இல்லே  பொண்ணுகிட்டே கொஞ்சம் தனியா பேசணுமாம்.....
அதானால, என்ன ? இப்ப இதெல்லாம் சகஜமாப்போச்சு நம்மகாலம் மாதிரியா...

தனியறையில்......
சவுக்கியமா ?
ம்.

என்னை, கல்யாணம் செய்துக்க சம்மதமா ?
ம்,

ம்னு, சொன்னா போதுமா ? பேசமாட்டியா ?
இல்லே, எனக்கு கூச்சசுபாவம்.

நகை எல்லாம் நெறையப் போட்ருக்கே....
ம்.

இது என்ன ? புதுசாயிருக்கு..
ஆமா நேத்துதான் எடுத்தேன். 

எத்தனை பவுனு ?
தெரியலை...  

நீ தானே, எடுத்தே பின்னே எப்படி தெரியாம இருக்கும்...?
அது... வந்து..

சரி என்னோட PHOTO வேணுமா ?
ம்.

மணிபர்ஸை திறந்து PHOTOவை எடுக்க, உள்ளே சலவை நோட்டுகளாக, சடச்சடவென...

ஐ, ரூவா.... நோட்டெல்லாம் புதுசா இருக்கு பேங்க்ல எடுத்ததா ?
ஆமா... வரும்போதுதான் எடுத்தேன்

எந்த பேங்கு ?
அது... வந்து தெரியலை.

நீங்கதானே எடுத்தீங்க பின்னே எப்படி தெரியாம போகும் ?
என்ன நீ தேவையில்லாத, கேள்வியெல்லாம் கேட்கிறே... ஆமா நீ செயினை எங்கே எடுத்தே ? உண்மையை சொல்லு.

அது... அது ப....ப..
பஸ்ஸுல, அடிச்சியா ?

இ.... இல்லே... ஆ... ஆமா.
அது சரி நீதான் நமக்கேத்த ஆளு.

அப்படீனா... உங்களுக்கு வேலை... அவுட்டேக்கு அண்டு இன்புட்டுனு சொன்னாங்க...
ஆமா, பிட்பாக்கெட்டு பர்சை வெளியில எடுத்தா என்னை உள்ளே வச்சுருவாங்க, இதுகூட வரும்போது பஸ்ஸுலதான் அடிச்சேன்.

ஐ........
உனக்கு சந்தோஷமா ? சரி அப்படினா நமக்கு, நல்லபொருத்தம் இருக்கு வா உடனே கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லுவோம்.

என்ன பொண்ணும், மாப்பிள்ளையும் சந்தோஷமா வர்றதை பார்த்தா எல்லாப் பொருத்தமும் இருக்கும் போலயே....
ஆமாமா, அப்படியே நம்ம சோலந்தூர் சோஸியர் சோனைமுத்துட்டே போயி பேர் ராசிக்கு பார்த்துருவோம்.

அட ஏங்க, அந்த ஆளுக்குவேற தெண்டச்செலவு மனப்பொருத்தம் இருந்தா மாலைப் பொருத்தம் கூடி வந்துரும் வர்ற ஆவணியில முகூர்த்தம் வச்சுக்கிறலாம், தட்டமாத்துங்க.
அதுவும் சரிதான், எங்களுக்கு சம்மதம்.

 

சாம்பசிவம்-

இனம் இனத்தோடதான், சேருது, இனி நாறோட சேர்ந்து நாளும் நாறும்.

காணொளி

CHIVAS REGAL சிவசம்போ-
ரெண்டும், முத்தலாயிருக்கு சொன்னா... குடிகாரப்பயல்னு சொல்வாங்கே.

ஞாயிறு, மார்ச் 22, 2015

மரணதண்டனை



மரணதண்டனை தவறென்றும், அதற்குப்பதில் ஆயுள் தண்டனை கொடுக்கலாம் எனசொல்வோரே... நீர் என்றாவது ஒருநாள் ஆயுள் தண்டனை கைதிகளின் மன நிலையை கேட்டறிந்திருப்பாயா ? எந்த வகையில் நீ தீர்மானித்தாய் ? மரணதண்டனை கூட ஒரு வகையில் விடுதலைதான் ஆம் உயிர் ''விடு''(ல்)லை நம் நாட்டில் சிறைச்சாலைகளின் அவல நிலையை கண்டறிந்தாயா ? அல்லது கேட்டுதான் அறிந்திருக்கின்றாயா ? வாழவும் முடியாமல், சாகவும் துணிவில்லாமல் மரண வேதனையில் மனநோயாளியாக, நடைபிணமாக வாழும் கைதிகளின் நிலையை நினைத்துப்பார், ஒரு தினம் வேண்டாம் ஒரு கணம் நினைத்துப்பார் புரியும்.

வெள்ளி, மார்ச் 20, 2015

என்னைப்பார் யோகம் வரும்.

சிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் ''என்னைப்பார் யோகம் வரும்'' என அப்படியானால் ஒரு புகைப்படத்தை பார்த்தாலே யோகம் வருமென்றால் ?

உயிருடன் தினம் தினம் பார்த்து அதனுடன் வாழ்வைக் களிக்கிறார்களே சலவைத் தொழிலாளிகள் அவர்களின் வாழ்வாதாரம் ஆண்டாண்டு காலமாக உயரவில்லையே ஏன்

இந்த புகைப்படத்தை எத்தனை காலம் வீட்டில் மாட்டிவைத்தால் யோகம்வரும் புகைப்படத்தை மாட்டி வைப்பவர்கள் அதை உயிருடன் வாங்கி வீட்டில் கட்டி வைத்தால் என்ன

ஒருவேளை வளப்பதற்க்கு பிரச்சனையாக இருந்தால் நம்மூரில் ஆட்டோவை வாடகைக்கு  விடுகிறோமே அதைப்போல... சலவைத் தொழிலாளிகளிடம் வாடகைக்கு விடலாமே ! அப்படி செய்தோமையானால் நிச்சயமாக அது யோகம்தான் ஏனெனில் உபரி வருமானம் யோகம்தானே !

இதற்கே இவ்வளவு யோகமென்றால் இதைவிட கூடுதல் எடையுள்ள யானையை வாங்கி வளர்த்தால் இன்னும் கூடுதலான யோகம் கிடைக்குமே ! மேலும் கோவில் திருவிழா நாட்களில் வாடகைக்கு விடலாம், அல்லது இன்னும் கூடுதலாக யோகம் வேண்டுமெனில் யானையைவிட எடையுள்ள காண்டாமிருகத்தை வாங்கி வீட்டில் வளர்க்கலாம் அதுவும் இறைவன் படைப்புதானே !

காணொளி

புதன், மார்ச் 18, 2015

பேராவூரணி, பேராசை பேச்சிமுத்து


பேரன்புடையோர்களே, இப்பொழுது பேராசையைக் குறித்து பேராவூரணி, பேரிண்ப பேச்சாளர் "பேராசை" பேச்சிமுத்து அவர்கள் பேரிடியாக பேருரை ஆற்றுவார்கள்.

தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !

என்னுள் எழுந்தவை நான் மண்னுள் புதையும்முன் இந்த விண்ணில் விதைத்திட விரும்புகின்றேன்.


ஒவ்வொரு மனிதனும் சந்தோஷத்தை தேடுவதாக நினைத்துக் கொண்டு இருக்கின்ற சந்தோஷத்தை தொலைத்துக் கொண்டு இருக்கின்றான் நமது வேதனைகள் பெரும்பாலும் நம்மைப்பற்றி இருப்பதைவிட பிறரைச் சுற்றியே இருக்கிறது.


நமக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பது பிரச்சனை இல்லை, மற்றவனுக்கு கிடைத்து விட்டதே என்பதுதான் பிரச்சனை. ஆனால் அந்த பதவி உயர்வுக்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன ?  என்பதை நாம் நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம் லாட்டரிச் சீட்டில் பரிசு நமக்கு விழவில்லையே என்பதை விட, அடுத்தவனுக்கு விழுந்து விட்டதே ! என்பதுதான் நமக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நாம், லாட்டரிச்சீட்டு வாங்கியே இருக்க மாட்டோம் நமக்கு மட்டும் இறைவன் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்கிறானே ? மற்றவர்களெல்லாம் சந்தோஷமாகத்தானே வாழ்கிறார்கள். என நினைக்கிறோம் எல்லா மனிதர்களுக்குமே வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்து கொண்டே.... இருக்கிறது அது நம் கண்களுக்கு தெரிவதில்லை.


உதாரணத்திற்கு ஒருவர் போட்டிருக்கும் சட்டையை நாம் காண்கிறோம் அதை அழகாக சலவை செய்து போட்டு வருகிறார் நாம் அழகாக இருக்கிறதே என எண்ணுகிறோம். ஆனால் அந்தச்சட்டையின் உள்ப்புறத்திலுள்ள அழுக்கை நாம் பார்க்கிறோமா ? இல்லை இதைப் போலத்தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள். அதை இறைவன் மட்டுமே அறிவான்.


நமது, வேதனைகளுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா ? நாம் பெரும் பாலும் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நம்மைவிட உயர்வானவர்கள் வாழ்க்கையைப் பற்றியே நினைக்கின்றோம் ஆனால் அவர்களைப் போல் நாமும் நல்ல எண்ணமுள்ளவராய் வரவேண்டுமென்பதை மறந்து விடுகிறோம். இதைத்தான்...


குமரகுருபரர் ஸ்வாமிகள் சொல்லியிருக்கின்றார்,
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை
"அம்மா" பெரிதென்று அக மகிழ்க !
இதையே பாமரனுக்கும் விளங்கும்படி
கவியரசு, கண்ணதாசன் சொன்னார், பி.பி.ஸ்ரீனிவாஸ் மூலம்,
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
இந்த வேதனைகளுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன ?

ஆசைதான், ஆசையை ஒழிக்க வேண்டும் ஆசையே துன்பத்திற்கு மூலதனம் என்றார், மகான் புத்தர் ஆசைப்படுங்கள் ஆசையே மனிதனை சாதிக்க வைக்கும் என்கிறார், டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்.


இதில் எது சரி ?
இரண்டுமே சரிதான்.


ஆம், நாம் ஒரு லட்சியத்திற்காக வாழவேண்டும். லட்சியத்திற்காக ஆசைப்படவேண்டும், நான் ராணுவத்தில் சேர்ந்து இந்த நாட்டுக்காக பாடுபடுவேன், மிகப்பெரிய ஜவான் ஆவேன் என்று ஆசைப்பட்டால் அது நியாயம். இந்த வகையான ஆசையைத்தான் ஆசைப்படுங்கள், என்கிறார், டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்.


ஆனால் நாம் எப்படி ஆசைப்படுகிறோம் ?

ஜவான் டீக்கடை முச்சந்தியில நாம, மூன்று மாடி வீடு கட்டணும் அப்படின்னு ஆசைப்படுறோம், முச்சந்தி என்பதே அரசாங்க இடம் இதில் வீடு கட்ட ஆசைப்பட்டால் ? இந்த வகையான ஆசையைத்தான் ஒழிக்க வேண்டும் என்றார், மகான் புத்தர்.


ஆகவே,
நியாயமான ஆசைமீது ஆசைப்படுவோம்
நியாயமான ஆசைக்கு ஒலி கொடுப்போம்
நியாயமான ஆசையே ஒளி கொடுக்கும்
நியாயமற்ற ஆசையை ஒழி ப்போம்

எண்ணம் நலமெனில், எல்லாம் நலமே,
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம், நலமே.

என்று கூறி பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன், நன்றி, வணக்கம்.

காணொளி கேட்டு காண்பீர்.