இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 16, 2016

பழநி, பழக்கடை பழனி


இடம் : பழநி பஸ் ஸ்டாண்ட் இரவு 02. 36 போலீஸ்காரர் ஒருவனை அழைக்கிறார்

டேய் இங்கே வா உன் பேரென்னடா ?
பழனிங்க..

எந்த ஊருடா ?
பழநி ஸார்.

ஆங் ?
பழநி இதே ஊருதாங்க...

ஒங்கப்பா பேரு ?
பழனியப்பன் ஸார்

….? அம்மா பேரு ?
பழனியம்மாள்.

உன் வீடு எங்கேயிருக்கு ?
பழனியாண்டி காலனியிலே ஸார்.

எங்க வேலை பார்க்கிறே ?
பழக்கடையிலே

எந்தக்கடை ?
பழமுதிர்ச்சோலை அடிவாரத்துல இருக்குதுங்க.

எங்கே போயிட்டு வர்றே இந்த நேரத்துல ?
சினிமாவுக்கு ஸார்.

என்ன சினிமா ?
பழனி ஸார்.

என்ன ?
பழனி ஸார் சிவாஜி கணேசன் நடிச்சது பழசு

எந்த தியேட்டருலே ?
பழனியாண்டவர் தியேட்டருல ஸார்

எங்கே டிக்கெட்டக் கொடு
இந்தாங்க ஸார்.

என்னடா நக்கலா சினிமா டிக்கெட்டுன்னு பழனி முருகன் டிரான்ஸ்போர்ட் பஸ் டிக்கெட்ட குடுக்குறே ?
அய்யோ மன்னிச்சுடுங்க ஸார் அது நேத்து சரக்கெடுக்க பழங்குடி போன டிக்கெட்டு இந்தாங்க சினிமா டிக்கெட்டு.

ஒன்னப்பாத்தா…. சந்தேகமா இருக்கே ?
அப்படி எல்லாம் இல்ல ஸார் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அய்யா பழனிவேல் ராஜன் கூட நமக்கு நல்ல பழக்கமுங்க…..

அடி பழய செருப்பால இதுக்குமேல ஒரு வார்த்தை பேசினே தக்காளி பழத்தை நசுக்குற மாதிரி நசுக்கிடுவேன் ஓட்ரா…. ராஸ்கல்ஸ்..

(தனக்குள்) சே... என்ன இவ்வளவு பழசா இருக்கான் நல்லவேளை அவன் பொண்டாட்டி புள்ள பேரைக்கேக்கலே...

இனிமேல் இங்கிருந்தால் சரியா வராது என ஸ்டேஷனுக்கு நடையைக் கட்டினார் சப்-இன்ஸ்பெக்டர் பழனிக்குமார்.

குறிப்பு - இந்த விசயங்கள் எல்லாம் என் மனதில் உதித்தது இன்றல்ல... நேற்றல்ல பழ Sorry பல ஆண்டுகளாக ஏன்... சில மாமாங்கம் என்றும் சொல்லலாம்.


பின்குறிப்பு - நடிகர் வடிவேலுவை வைத்து எடுக்க வேண்டிய எத்தனையோ விசயங்கள் என் மனதில் பதிந்து கிடக்கின்றது என் வாழ்க்கை சூல்நிலை மாறி விட்டதால் இந்த தாமதம் இன்னும் தொடர்கின்றது... அதற்குள் அவரது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார் இப்பொழுதுகூட இதை பதிய வைக்க காரணம் என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் போவதற்கு முன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன்.

நான் கண்ட இன்பம் இந்த வலையுகமும் பெற வேண்டும் - கில்லர்ஜி

36 கருத்துகள்:

  1. நான் கண்ட இன்பம் - தவறு நான் கண்ட துன்பம் இவ்வையகமும் பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வையகம் காலம் முழுவதும் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது வலையுலகம் இன்பம் பெறட்டடுமே...

      நீக்கு
  2. ஹா.... ஹா.... ஹா.... ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஜி,

    ‘பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா! தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!’

    வடிவேலை வாழ வைக்க... வடி வேலைக் கையில் கொடுக்கவும்...!

    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  4. ஹா ஹா.. பழசுன்னு நினைச்சேன்... செம காமெடி...

    பதிலளிநீக்கு
  5. ஆகா .. ஞானப் பழம் கிடைக்காமல் போய் விட்டதே..

    அது சரி.. அபுதாபி பேருந்து நிலையத்தில் துபாய் பேருந்தை படம் பிடித்து போட்டு விட்டால் பழனி ஆகிவிடுமா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அது திண்டுக்கல் போற வண்டிதான் போர்டு மாற்ற மறந்துட்டான் போல....

      நீக்கு
  6. அமாடியோவ்... பழகிக்கிறோம் ... ethilumpudhumai.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா பழகலாம் புடிச்சா தொடருவோம், புடிக்கலைனா தொடருவோமே...

      நீக்கு
  7. நல்லது...தாங்கள் ஞானப்பழம் பெற்றதை இந்த வலையுலகமும் அறியட்டும் நண்பரே.... அப்பத்தானே உங்கள் வழிச்சென்று வலை உலகமும் ஞானப்பழம் பெறட்டும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஞானப்பழம் எனக்கு எப்பொழுது கிடைச்சது ?

      நீக்கு
  8. ஆஹா! அருமை! நீங்கள் சொல்லுவது போல வடிவேலுவிற்கு இந்த காமெடி பொருத்தமாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  9. உங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  10. ஹ ஹ ஹா! படித்தேன்,ரசித்தேன். Btw. நீங்கள் இருப்பது கொலைகாரன் பேட்டையா? (ஹி! ஹி! உங்கள் எழுத்தின் பாதிப்பு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி. பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் - கில்லர்ஜி

      இவ்வளவு சரியாக சொன்னதை அறிந்து எனக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது

      நீக்கு
  11. ‘பழனி’யை வைத்து சொற்சிலம்பாட்டம் ஆடிவிட்டீர்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  12. பழ விளையாட்டு..... ரசித்தேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. பழ பழ பழன்னு பளபளப்பா இருக்கு ஜி...
    தம 7

    பதிலளிநீக்கு
  14. பழகிடும் நண்பர், பழநி பற்றி பழங்களாக வழங்கியமைக்கு கருத்தினை பழரசமாக பதிந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் பழரச கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  15. உங்க பேரு என்னங்க?
    சிதம்பரம்..
    பொண்ணு எடுத்தது?
    தாம்பரம் .
    என்ன தொழில் செய்யறீங்க?
    பம்பரம் வியாபாரம்
    .
    கடை சின்னதா இருக்கே?
    ஆடம்பரம் புடிக்காது.
    கடை பேனர் மட்டும் பெரிசா வச்சிரீக்கிங்க
    அது விளம்பரம்.
    அது சரி. ஹேர் ஸ்டைல் ஏன் இப்படி?
    அது ஏன் சுதந்திரம்
    Comment is copying your style.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸூப்பர் கமெண்ட் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  16. எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க! ஆச்சரியமா இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  17. என்ன செய்யிறது 4 பேரை வர வைக்க இப்படி எல்லாம் சிந்திக்க வேண்டியது இருக்கே...

    பதிலளிநீக்கு
  18. ஹஹஹஹஹ்ஹ பழனி இல்லையா அதான் இப்படி விளையாடுறாரு போல...பழனியின் வீடு பழைய கழனில இல்லையா இருக்கு...

    இவன எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கே அவன் தானோ இவன்...

    பதிலளிநீக்கு