காயம்பட இதயத்தை கல்லால்
அடித்து விட்டாயடி
காயல்பட்டணக்காரன் என்னை
கோபப்பட வைத்தாயடி
காடு எங்கும் எங்கள்
பாரம்பரிய சொத்து நிறைந்ததடி
வீடு தேடி வந்தவனை நாயை
விட்டு விரட்டி விட்டாயடி
எங்கள் வீட்டில் யானை கட்டி
போர் அடித்த குடும்பமடி
உங்கள் வீட்டில் பூனைக்குகூட
சோறு போட முடியாதடி
சிங்கம் போல நடந்த என்னை
அசிங்கப்படுத்தி விட்டாயடி
தங்கம் நிறைந்த குடும்பத்தை
பங்கம் விளைய வைத்தாயடி
முப்போகமும் விளைந்தது
எங்கள் வீட்டில் களஞ்சியமடி
முக்காடு போட வைத்து எங்களை
மூழ்கிப்போக செய்தாயடி
வங்கிகளுக்கே கடன் கொடுத்த
வள்ளல் பரம்பரை நாங்களடி
வாங்கி குடிக்க வழியில்லாத
ஊர் சுற்றும் கூட்டம் நீங்களடி
அழகி என்று உன்மீது ஆசை
வைத்தேன் நான் முட்டாளடி
அழுகிப் போனது உன் மனம்
என்று தெரிய வைத்தாயடி
சொந்த மாமன் மகள் மாலா
எனக்காகவே இருக்காளடி
இந்த சோமன் அவளுக்கு
என்றும் பொருத்தமானவனடி
சோமனுக்கும், மாலாவுக்கும் 16 பொருத்தம் இருப்பதாக சோலந்தூர் சோசியர்
சோனைமுத்து சொல்ல, வரும் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி
கோலாகலமாய் நடக்க இருக்கும் திருமணத்துக்கு நாமும் வாழ்த்துவோமே நட்பூக்களே...