இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 30, 2018

எண்ணம் நலமெனில்...


உலகையும், மனிதனையும், ஜீவராசிகள் அனைத்தையும் படைத்தது ஒரே இறைவனா ? இல்லை பல தரப்பட்ட இறைவன்களா ? பல இறைவன்கல்ள் இருப்பது எப்படி சாத்தியமாகும் ? ஏதாவது ஒரு இறைவன் மரணத்தை தவிர்த்திருக்கலாமே... ஒருவேளை எல்லா இறைவன்மார்களும் ஒன்றுகூடி மரணம் இல்லையெனில் எல்லா மானிடர்களும் ஆட்டு மந்தையைப்போல் ஒருபுறமே சாய்ந்து விடுவார்கள். இடப்பற்றாக்குறை வந்துவிடும் ஆகவே மரணம் பொதுவான விசயமாக இருக்கட்டுமென பேசி வைத்தார்களோ ? மதப்பிரிவினைகளை மனிதன்தானே வகுத்துக் கொண்றாடான் எல்லா மனிதர்களுமே ஒருநாள் மரணிக்கின்றோம் என்பது நிதர்சனமான உண்மை.

இன்று உலகெங்கிலும் மதக்கலவரங்களால் இனக்கலவரங்களால் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். ஒரு மதத்தினரின் வழிபாட்டு ஸ்தலங்களை மற்றொரு மதத்தினர் நாசப்படுத்துகின்றனர் அவர்களுக்கு இது தவறென்று தெரியாதா ? அல்லது அவன் சார்ந்த மதம் இப்படி செய்யச்சொன்னதா ? ஒருக்கால் சொல்லி இருந்தால் ? அதை கேட்க வேண்டிய அவசியமில்லை என அறிந்து கொள்ள முடியாத அறிவற்ற ஜீவியா மனிதன் ? வேறொரு வழியில் சிந்திக்கலாமே... நீ அவனது உடைமையை இடிக்கும் போதும், அவன் மற்றொருவனுடைய உடைமையை இடிக்கும் போதும், மற்றவன் உனது உடைமையை இடிக்கும் போதும் இறைவன்களால் தடுக்க முடியாதா ?

இந்த இடத்தில், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், உட்கார்ந்து கொல்லும் எனச்சொல்லி என்னைக் கொல்லாதே...

அன்பைப்போதி

இதை எந்த மதம் சொல்லவில்லை ? முன்பின் தெரியாத ஒரு நபரைப்பார்த்து நீ புன்முறுவல் பூத்துப்பார் அவரும் உன்னைப் பார்த்து சிரிப்பார். உனக்கு தெரிந்த, பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் அவரை அடித்துப்பார் அவரும் உன்னை அடிப்பார். ஆக நாம் கொடுத்தது நமக்கே திரும்புகிறது. ஒருவனுக்கு உதவிப்பார் உனக்கும் அந்த உதவிகள் ஏதாவது வகையில் என்றாவது கிடைக்கும். ஒருவனுக்கு தீங்கு செய்துபார் அதுவே உனக்கும் கிடைக்கும். இந்த இடத்தில், தர்மம் தலைகாக்கும் என்பதையும், தன்வினை தன்னைச் சுடும் என்பதையும் நினைக்கலாமே...

எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே...
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம் நலமே.
- கில்லர்ஜி

சாம்பசிவம்-
எல்லாம் சரி, இதை சொன்னவருக்கு பேரே சரியில்லையே...

Chivas Regal சிவசம்போ-
உலகம் பூராம் மதப்பிரச்சனையில் அடிச்சுக்கிறாங்கே... இதுல நம்ம ஊருக்காரன் ஜாதிப்பிரச்சளையில அடிச்சுக்கிறாங்கே... நமக்கு நெப்போலியன் கிடைச்சாலும் சரி, சிவாஸ் ரீகல் கிடைச்சாலும் சரி வேறுபாடு நினைக்காம ஒரே நேரத்திலே ஏத்திக்கிறோம் இதான் நம்ம ஸ்டைல்.

சிவாதாமஸ்அலி-
அடடே இதைச் சொன்னவருக்கு பேரே ஒத்துப் போகுதே...

சனி, ஜனவரி 27, 2018

இஞ்சி முரப்பா


குண்டடத்திலிருந்து அம்பிளிக்கை செல்லும் பேருந்தில் பயணிக்கிறேன் அளவான குடும்பம் ஆம் அவர்களிருவர், அவர்களுக்கிருவர் அந்தக் குடும்பம் ஏறியது இரண்டு இருக்கைகள் கொண்டதில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன் வழியில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இஞ்சி முரப்பா விற்றார் ஒரு பெரியவர் பொதுவாக நான் இப்படி திண்பண்டங்கள் வாங்கித்திங்கும் பழக்கம் கிடையாது இருப்பினும் இஞ்சி முரப்பாவை கண்டதும் நாவு ஊறியது வெகு காலமாகி விட்டதே சாப்பிட்டு என்று ஒரு பொட்டலம் வாங்கினேன் ஒரு சில்லு சாப்பிட்டு விட்டு கையில் வைத்திருந்தேன். அந்தக் குடும்பம் எனக்கு பின்புறம் அமர்ந்திருக்க அந்தக் குடும்பத்தின் மூத்தது பெண் குழந்தை ஐந்து வயது இருக்கும் அடுத்தது பையன் கைக்குழந்தை. பெண் குழந்தையை என்னுடன் மாமாவோடு உட்கார்ந்துக்கோ என்று சொல்லவும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தது என்று சொல்ல மாட்டேன் என்னை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தது எனக்கே குழப்பம் வழக்கமாக நாம்தானே கேள்வி கேட்போம் ? பக்கத்தில் இரண்டு ரவுடிகளை பாதுகாப்புக்கு ஆறு காவலர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் கொண்டு செல்கின்றார்கள். இந்தக்குழந்தை கேட்டது.
அங்கிள் இவங்க போலீஸ்காரவுங்களா ?
ஆமா ஏன் கேட்கிறே ?
நான் வேற மாதிரி நினைச்சேன்
எந்த மாதிரி ?
முனுஷிபாலிட்டியில குப்பை அள்ளுறவங்களோன்னு...
எனக்கு ஒருநொடி தூக்கி வாறிப் போட்டது காரணம் பக்கத்து இருக்கையில் இருக்கின்றார்கள் மேலும் சத்தமாகவே பேசுகிறது இந்தக் குழந்தை.
ஏன் அப்படி நினைச்சே ?
இவங்களும் அவங்களை மாதிரித்தானே காக்கி ட்ரெஸ் போட்ருக்காங்க...
டிக்கெட் கொடுக்கிறவர் கூடத்தான் இந்த மாதிரி இருக்காரு... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அவங்க காதுல கேட்டுச்சு உன்னை புடிச்சுக் கொண்டு போயிருவாங்க...
புடிச்சுட்டுப் போயி என்னை என்ன செய்ய முடியும் ? உங்களுக்கு பயமா ?
நான் இதற்கு என்ன பதில் சொல்வது அரபிக்காரங்கே கேள்வியையே திருப்பி விட்ருக்கோமே... இதை எப்படி சமாளிப்பது.... ? சரியென்று கையிலிருந்த இஞ்சி முரப்பாவை எடுத்துக் கொடுத்தேன்.
எனக்கு வேண்டாம்.
சாப்பிடு நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது.
மாமா கொடுக்கிறதை வாங்கிக்க... அந்தக் குழந்தையின் அப்பா சொல்லியும் கேட்கவில்லை.
இப்படித்தான் இருக்கணும் வெளியாள் யார் தின்பண்டம் கொடுத்தாலும் வாங்க மாட்டியா ?
வாங்க மாட்டேன்.
இப்படித்தான் இருக்கணும் நல்லபிள்ளை.
சிறிது நேரத்தில் ஒரு காவலர் தனது பேக்கிலிருந்து பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து அவர்களுக்குள் ஆளுக்கு இரண்டாக கொடுத்தவர் இந்த குழந்தையிடம் கொடுக்கவும் உடன் வாங்கி கொண்டது.
யாரு கொடுத்தாலும் வாங்க மாட்டேனு சொன்னே இப்ப வாங்கி கிட்டே ?
இது பிஸ்கட்ல...
நான் கொடுக்கும்போது வேண்டாம்னு சொன்னே ?
ஹும் அதை மனுஷன் திம்பானா ?
? ? ? ? ?
ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன் அம்பிளிக்கை வரவும் குடும்பத்தினர் இறங்கினர் கடைசியில் அந்தக் குழந்தை ஒரு வார்த்தை சொல்லிச் சென்றது பாருங்கள் இன்னும் நெஞ்சை அறுக்குது.
அங்கிள் தைரியமாப் போங்க...
கையிலிருந்த இஞ்சி முரப்பாவை தின்பதா ? வேண்டாமா ? என்று நினைத்தவாறே இஞ்சி தின்ற சிங்கம் போல் பயணித்தேன். நீ எதற்கு குண்டடத்திலிருந்து அம்பிளிக்கை போனாய் ? என்று கேட்க நினைக்கின்றீர்களா ? கோயமுத்தூரியிலிருந்து மதுரை போனால் இந்த வழியில்தானே பேருந்து போகிறது.


Chivas Regal சிவசம்போ-
நமக்கு கொடுத்தாலும் நண்பர் நெல்லைத்தமிழன் மாங்காய் ஊறுகாய் கொடுக்காத நேரத்துல நாக்குல தேச்சுக்கிறலாம். ஆசுப்பத்திரிக்கு அய்நூறு ஓவா கொடுக்காதவங்கே... செத்துட்டா ஆயிரம் ஓவாய்க்கு ரோசா மாலை வாங்கி போடுவாங்கே... ஹூம் காலக்கொடுமையடி கருமாரி.

காணொளி

வெள்ளி, ஜனவரி 26, 2018

वनदे मातरम्

वन्दे मातरम्

31 States,

1618 Languages,

6400 Castes,

6 Religions,

6 Ethnic groups,

29 Major festivals,

1 Country

Be proud to be an Indian.

Happy Republic day to All My Indian’s

(Place: United Arab Emirates in Abu Dhabi, Indian Navy Ship with Me)


காணொளி

  நம் இந்திய தேசியகொடி பட்டொளி வீசி பறக்குது பாரீர்....

செவ்வாய், ஜனவரி 23, 2018

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்


புதாபியில் இருக்கும் பொழுது ஒருமுறை என்னுடன் வேலை செய்யும் சைனா நாட்டு நண்பன் திரு. லீங் ஸுவாங் டுஸ்பு விடுமுறைக்கு சென்றவன் அவனுடைய கொழுந்தியாளுக்கு சடங்கு என்று பத்திரிக்கை அனுப்பி இருந்தான் கூடவே விசிட் விசாவும் வைத்திருந்தான் சரி டிக்கெட் செலவு மட்டும்தானே மேலும் விஷேசம் வெள்ளிக்கிழமை வைத்து இருந்ததால் அரசு வெள்ளி. சனி விடுமுறைதானே என்று பைஜூங் ரிட்டன் டிக்கெட் போட்டு பயணித்தேன் விஷேசம் கோலாகலமாக நடந்து முடிந்தது

நண்பனின் மூத்த சகலையின் மகள் லீ ஸிங் பீஜூவுடன் கில்லர்ஜி

மறுநாள் சனிக்கிழமை ஹூவாங் ஸௌட் வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தோம் வழியில் ஒரு பெண் பல பொருட்களை விரித்து வைத்து சைனா மொழியில் நம்மூரில் எதை எடுத்தாலும் பத்து ரூவா என்பது போல கூவிக்கொண்டு இருந்தாள். நண்பன் சொன்னான் நான் இப்ப செய்யிறதை காணொளி எடு முகநூலில் போடுவோம் என்றான். நானும் நமக்கென்ன பிரச்சனை வந்தால் அவன் பார்த்துக் கொள்வான் மேலும் நண்பனின் மூத்த சகலை ஊர் நாட்டாமையாக இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருந்தான் நேற்றுகூட சடங்கில் சந்தித்து பேசினோமே என்ற தைரியத்தில் எனது செல்லில் காணொளி எடுக்க தயாரானேன்.



தனது பர்ஸில் இருந்து பத்து யென் எடுத்துக்கொண்டான் நேராக அவளிடம் சென்றவன் காசை கீழே விரிப்பில் போட்டு விட்டு என்ன செய்தான் தெரியுமா ? அவனது செயலைக் கண்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் மேலும் அப்படியே பக்கத்தில் இருந்த மூத்திரச்சந்தில் ஓடினான் இதற்கு மேல் இங்கிருந்தால் நமது உயிருக்கு ஆபத்து என்று அப்படியே விமான நிலையத்துக்கு நடையைக் கட்டி அபுதாபிக்கு சென்று விட்டேன். அதன் பிறகு மறுமாதம் அவன் அபுதாபிக்கு வந்ததும் இனிமேல் உனது சங்காத்தம் எனக்கு ஆகாது என்று அவனுடன் க்கா விட்டு விட்டேன் என்ன நண்பர்களே நான் செய்தது சரிதானே ? இதோ அவன் செய்த செயலை நான் எடுத்த காணொளியில் நீங்களே பாருங்களேன் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..
 
காணொளி.
நஹ் யான், நஹ் யான், ஸெம்பூ நஹ் யான்
Nah yen, nah yen, shempoo nah yen
日元 日元 洗发水 日元
 (தமிழாக்கம் பத்து ரூபா, பத்து ரூபா, எல்லாமே பத்து ரூபா)

ஞாயிறு, ஜனவரி 21, 2018

A to Z

This is Writing Place in Germany–Stuttgart, Biergarten Park 04:30 pm 2012 Oct 16

முதலில் முன்னுரை
கீழ்காணும் ஆங்கிலம் நிச்சயமாக தவறாக இருக்கலாம் ? சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் என் உடம்புக்கு ஒத்துவராது நான் தாமரை இலையைப் போல் எவ்வளவுதான் விரிந்து கொடுத்தாலும் ஆங்கிலம், தண்ணீரைப் போல் என்னுடன் ஒட்டுவதில்லை. ஏதோமுன் ஜென்மப்பகை போல, தமிழில்தானே எழுதுகிறோம் ஒரு மாற்றத்திற்காக ஆங்கிலத்தில் எழுதுவோமே... என நினைத்து எழுதினேன் வார்த்தைகள் ஒழுக்கமான ஆங்கிலத்தில் இல்லை என்பது எனக்கும் தெரியும் But ஆங்கில எழுத்தான A, B, C, D யை வரிசையாக அமைக்க ஆசைப்பட்டேன் அதன் விளைவே இது தவறுகளுக்கு எனது முதற்கண் SORRY & THANKS for Adjustment.

Advance is not yet sanctioned.

Bad, very bad.  I am seriously

Contemplating on quitting my job, Mr. Sambasivam told

Dalen, the accountant.

Emergency? Or any crisis?

First sanction my advance.

Gaelle’s father, Mr.Zeig is in

Hospital. Please contact me after some time.

I will detail you all the matter.

Jabriga …where is she now?

Kaiser replied, she is on

Leave, Sir.

Manager is here right?

No. Not here. He is in the next room.

One minute, I will comeback. Finish all the

Pending works 

Quickly and then contact me.

Relegate all your

Social works.

Then get your money.

Urgent works are waiting, Mr. Sambasivam,

Valdemar told him.

Wait Sir please…

X-rays and scan reports have come. Any problem?

Yes, not positive.

Zeig  is no more. Got the message just now.


இதில் இடம் பெற்ற திரு சாம்பசிவத்தைத் தவிர Mr. Dalen,  Miss. Gaelle, Miss. Jabriga, Mr. Kaiser, Mr. Valdemar and Mr. Zelig அனைவரும் ஜெர்மனி நாட்டவர்கள்.


தமிழாக்கம்.

முன் பணத்திற்கான ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. பாதகம் மிகவும் பாதகம். நான் ராஜினாமா செய்வதைப் பற்றி தீவிரமாக யோசிக்கின்றேன் என்று கணக்கர் டேலியனிடம் திரு சாம்பசிவம் சொன்னார்.

அவசரத் தேவையா ? ஏதாவது நெருக்கடியா ?

முதலில் முன் பணத்திற்கு ஒப்புதல் அளிக்கவும்.

கேய்ல்லியின் அப்பா, திரு ஜேய்க் மருத்துவமனையில் இருக்கிறார். தயவாய் சற்று நேரம் கழித்துத் தொடர்பு கொள்ளவும். நான் உங்களுக்கு எல்லா விஷயத்தையும் விளக்கமாகச் சொல்கிறேன்

கப்ரிகா…. இப்போது அவர்(ள்) எங்கே இருக்கிறார்(ள்) ?

அவர்(ள்) விடுமுறையில் இருக்கிறார்(ள்) என்று கேய்சர் சொன்னார்.

மேலாளர் இங்குதானே இருக்கிறார் இல்லையா ?

இல்லை. அவர் இங்கு இல்லை. அடுத்த அறையில் இருக்கிறார்

ஒரு நிமிடம், நான் மீண்டும் வருவேன். நிலுவையில் அல்லது முடிக்கப்படாமல் இருக்கும் வேலைகளை எல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டு, அதன்பின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சமூகசேவைகள் எல்லாவற்றையும் புறக்கணியுங்கள். அதன் பின் உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளவும். திரு சாம்பசிவம், அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகள் காத்திருக்கின்றன.

தயவாய் காத்திருங்கள் ஐயா என்று வால்டேமார் அவனிடம் சொன்னார்.

எக்ஸ்ரே, ஸ்கான் முடிவுகள் வந்து விட்டன. ஏதேனும் பிரச்சனையா ?

ஆம்! எதுவும் நேர்மறையாக இல்லை.

ஜெய்க் இறந்து விட்டார். இப்போதுதான் செய்தி வந்தது.


மரணம், சில நேரங்களில்...
நெருங்குபவனை விலக்கி விடும்,
விலகுபவனை நெருங்கித் தொடும்.

இதில் திருத்தம் செய்து கொடுத்த வில்லங்கத்தாருக்கு நன்றி.

காணொளி

வெள்ளி, ஜனவரி 19, 2018

தி கிரேட் இந்தியன்


பல நேரங்களில் நான் எனது அலுவலகத்தில் அரபு மொழி பேசும் அனைத்து நாட்டவர்களிடமும் வாக்கு வாதம் செய்திருக்கிறேன் அது பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்தி முக் மாபி (இந்தியன் மூளை இல்லாதவன்) எனச்சொல்லி விடுவார்கள் எனக்கு கோபம் வந்து விடும் அது யாராக இருந்தாலும் சரி (Including U.A.E People) சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுப்பேன் இந்தியனை அயோக்கியன் எனச்சொல் ஒத்துக்கொள்கிறேன் ஏன்... என்னைக்கூட அயோக்கியன் என்றோ, மூளையில்லாதவன் என்றோ நீ நிரூபித்து விட்டால் ? சம்மதமே ஆனால் ஒட்டு மொத்தமாக இந்தியன் மூளையில்லாதவன் என்பதை ஒருக்காலும் ஏற்கமுடியாது இந்தியன் சிந்தித்து தவறுகளை செய்து விட்டு வழிகளை கடந்து தப்பித்து விடுவான் ஆனால் உன்னால் முடியாது காரணம் உனக்கு சிந்திக்கும் திறன் இல்லை ஏனெனில் மிஷான் இந்தே முக் மாபி (உனக்கு மூளை இல்லை) ஆனால் உன்னில் 90% பேர் நல்லவனாக இருக்கலாம் நானறிவேன் ஆனால் இந்தியன் 90% பேர் புத்திசாலி என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது இந்தியனை சொல்லும் நீ எனது கேள்விக்கு பதில்சொல். 

பிலாத் மால் இந்தே கம் நபர் மவுஜூத் ஆலி ?

உனது நாட்டில் விஞ்ஞானிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? 

நீ என்ன கண்டு பிடித்தாய்  ? குப்பூஸை (சப்பாத்தி போன்ற ரொட்டி) வேண்டுமானால் சொல்லலாம் அதுகூட மஷ்ரி (Egyptian) கொண்டு வந்த உணவு. பலரும் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்கள் அதில் சிலர் ஏன்... அப்துல் கலாம் இல்லையா ? என்பர் எனக்கு கோபம் உச்சிக்கு ஏறி விடும் அப்துல் கலாம் யாரு ? உனது நாடா ? எனது தி கிரேட் இந்தியன் எனது தமிழன் என்பேன், அதற்கு எங்க ஆளு என்பான் நீ பேசுவது மதவாதம் நான் பேசுவது கணக்கெடுப்பு இதிலிருந்தே தெரிகிறதா ? உனக்கு மூளை இல்லை என்பது. இதற்கு ஆதாரமாக வேலையிலிருந்தே பல விசயங்களை எடுத்து வைத்திருக்கிறேன் அதைப்பற்றி தனிப்பதிவாக போடவேண்டும் பொறுங்கள் இப்படிப் பேசியதால் நான் பலரிடம் கெட்டவன் என்ற பெயரை சம்பாரித்து இருக்கிறேன் ஆனால் இதற்காக நான் துளியளவும் கவலைப்படவோ, வெட்கப்படவோ இல்லை ஏனெனில் நான் பேசியது முழுக்க முழுக்க எனது மனசாட்சிக்கு தெரிய உண்மை, நியாயம்.


வெகுகாலமாக அரேபியர்கள் இந்த வார்த்தையை சொல்வதை கடைப் பிடித்தார்கள். தற்போது குறைந்து உள்ளது உண்மையே காரணம் இப்பொழுது அதிகமான இந்தியர்கள் பட்டதாரிகள்.