இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 08, 2018

ஆச்சாரி



இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவை படிக்க கீழே சொடுக்குக...

சூடான் நாட்டைச் சேர்ந்த அவாத் என்ற மனநோயாளி முரடன் அவனை எப்பொழுதுமே அவன் கேட்காமலேயே சுலைமாணி கொடுத்து சரி செய்து இருப்பேன் எனது செலவு இல்லையே எல்லாம் அரசாங்க பணம் அப்பொழுதான் நாம் காலம் தள்ள முடியும். அரபு மொழியில் பால் கலக்காத வரட்டீயைத்தான் சுலைமாணி என்பார்கள்.

இந்தே முஸ்லீம் ?
நீ முஸ்லீமா ?
லா
இல்லை

இந்தே ஹிந்தூஸி ?
நீ ஹிந்துவா ?
லா
இல்லை

இந்தே கிருஸ்தின் ?
நீ கிருஸ்டினா ?
லா
இல்லை

த்யானா ஸ்சூ தானி ?
வேற எந்த மதம் ?
ஆச்சாரி

ஸ்சூ அதா ஆச்சாரி ?
அதென்ன ஆச்சாரி ?
அதா... அதா... அதா ஸகில்
அது... அது... அப்படித்தான்.

‘’’’அபுசாதி’’’’

திடீரென்று அவன் கோபமாக கத்திய சப்தம் கேட்டு ரிசப்ஷனிலிலிருந்து வார்டு இன்-ஸார்ஜ் மன்ஸூர் ஓடி வந்தான் மன்ஸூரை அவாத் அபுசாதி என்றே அழைப்பான்.
என்ன அவாத் ?
அபு ஸினப் எந்த மதம்னு கேளு ?
அப்படியெல்லாம் கேட்ககூடாது ஸினப் நல்லவன்.
இவன் புதுசா ஏதோ மதம் சொல்றான்.
ஸினப் என்ன மதம் சொன்னே ?
இல்லையே...
இப்ப ஏதோ ஆச்சாரினு சொன்னான்.
ஆச்சாரின்னா என்ன ஸினப் ?
ஆச்சாரியா.... அப்படினா... ?
பேசிக்கொண்டே ரிசப்ஷனுக்கு வந்து விட்டோம் திடீரென்று அங்கிருந்த தொலைபேசியை புடுங்கி தரையில் அடித்தான் அவாத்.
இப்ப இவன் சொன்ன மதம் இருக்கானு எனக்கு தெரியணும்.
சட்டென எல்லோரும் சுற்றி வளைத்து பின்னால் ஊசியை சொருகி அறையில் கொண்டு போய் படுக்க வைத்து விட்டார்கள்.

மறுநாள் காலை உள்ளே நுழைந்தவுடன் பழச்சாறுடன் அவனை பார்க்கப் போனேன்.
அவாத் எப்படி இருக்கே ?
என்னைப் பார்த்தவுடன் பழச்சாறை வாங்கியவன் என்மீது ஊற்ற வீசினான் நான் சட்டென மற்றவனை இழுத்து பிடித்து என்மீது படாமல் விலகி கொண்டேன். இப்படியும் நடக்கலாமென்று யூகித்து இதற்காக நித்தியானந்தா போன்ற ஸாதுவான நோயாளியை அழைத்துப் போனேன். அவன்மீது ஊற்றிய பழச்சாறை அவன் வழித்து நக்கிக் கொண்டான் என்பது வேறு விடயம். இதற்குத்தானே சுலைமாணி கொண்டு போகவில்லை. பிறகு நான் ரிசப்ஷன் வந்து விட்டேன் நானும், மன்ஸூரும் பில்லியார்ட்ஸ் விளையாடிக் கொண்டு இருந்தோம். அவாத்தும் வந்து விட்டான் மன்ஸூரிடம் ஸ்டிக்கை கேட்டு வாங்கியவன் சுவர் ஓரமாய் நின்று கொண்டு கத்தினான்.

‘’’’அபுசாதி’’’’ இப்பவே டாக்டரை வரச்சொல்லு இல்லை இதைப்பூராம் அடித்து உடைச்சுருவேன்.
எல்லோரும் திகைத்து விட்டார்கள் எனக்கு எப்படி இருந்திருக்கும் ? வேறு வழியின்றி மருத்துவர் குழு வந்து விசாரணை நடத்தியது தனித்தனியாக, பின்பு என்னை... முதல்நாள் நான் சொன்ன வார்த்தையை அவாத் மட்டுமல்ல, மன்ஸூர் மட்டுமல்ல, மற்ற பாலஸ்தீனி, சூடானி, ஜோர்டானி, சூரி, எஜிப்திய செவிலியர்கள் அனைவரும் மறந்து விட்டார்கள் காரணம் இந்திய அதுவும் ஹிந்து மொழி வார்த்தை இதையே மையமாக வைத்து நான் மருத்துவர் குழுவிடம் நான் ஆச்சாரி என்று சொன்னதை அபுசாதி என்றுதான் சொல்லி இருப்பேன் என்று குழப்பி சமாளித்து விட்டேன் குழுவுக்கும் நான் தெரிந்தவன் என்பதால் பெரிசா மீசை வைத்து இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று கருடபுராணத்தில் சொன்னதை ஆதாரமாக வைத்து விசயத்தை பெரிதாக்காமல் முடித்து விட்டார்கள்.

பத்து தினங்கள் கடந்திருக்கும் அவாத் இன்-ஸார்ஜிடம் ஸினப் இப்ப ஏதோ மதம் சொன்னான் என்று பொய் சொல்லி பிரச்சனையாக்கி மருத்துவர் குழுவை வரவைத்து அவர்கள் வந்து என்னை வேறு வார்டுக்கு மாறச் சொல்லி விட்டு போய் விட்டார்கள். நான் வேறு வார்டுக்கு மாறியது மன்ஸூருக்கு பிடிக்கவில்லை காரணம் என்னால் மன்ஸூருக்கு நிறைய ஸைடு வருமானம் பாதித்தது அதனால் மன்ஸூர், அவாத்திடம் தனியாக பேச்சு வார்த்தை நடத்தி அவாத்தை மீண்டும் மருத்துவ குழுவை வரவழைத்து என்னை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட்டார். இதற்காக அவாத்துக்கு லஞ்சம் தரப்படுவதாக பேசப்பட்டு இருக்கிறது அந்த லஞ்சம் என்ன தெரியுமா ? அவாத் கேட்கும் போதெல்லாம் சுலைமாணி சரி நான் இல்லாததால் மன்ஸூரை பாதித்த வருமானம் என்ன ?

அடுத்த பதிவு சுலைமாணியில் பார்ப்போமே...

சாம்பசிவம்-
அவாத் பைத்தியமாக இருந்தாலும், விபரமாக பொய் சொல்லி ஆளைத் தூக்கி விட்டுட்டானே...
தொடரும்....

52 கருத்துகள்:

  1. கில்லர்ஜி எப்போது இருந்து பதிவுகளின் மூலம் அரபிக் மொழி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நான் அவ்வப்போது அவசியப்பட்ட விசயங்களை எழுதிக் கொன்'றுதானே வருகிறேன்.

      நீக்கு
  2. அதுதானே...

    நீங்கள் பாட்டுக்கு சுடச்சுட சுலைமானியைக் கொண்டு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்...

    சுலைமானியைப் பிடுங்கி உங்கள் மேல் ஊற்றி இருந்தால்!?....

    பிறவி மூடர்களிடம் கவனமாக இருந்ததால்
    பதிவுலகம் தப்பித்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எல்லாம் விபரம் தெரிந்த அகவைமுதல் எனக்கு முன்ஜாக்கிரதை உண்டு அந்த அனுபவமே என்னை வழி நடத்திச் செல்கிறது.

      //பதிவுலகம் தப்பித்தது//
      ஹா.. ஹா.. ஹா..

      நீக்கு
  3. ஓய்... சாமி!...
    அதென்ன சுலைமானி.. கலைமானி..

    அதுவா... அதான் கட்டஞ்சாயா...
    வற டீ... டீ டிகாக்‌ஷன்...

    சீனியில்லாத வற டீயும் பேரீச்சம் பழமும் அரபிகளுக்கு இஷ்டமானது....

    தின்று கொண்டே இருப்பான்..
    குடித்துக் கொண்டே இருப்பான்...

    Tea Boy க்கு நட்டு கழன்று போய்விடும்..

    ஓ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இவனுகளுக்கு டீ பைப்பு வைத்தாலும் தீராது.

      நீக்கு
  4. மாறுபட்ட பதிவு
    அருமை

    பதிலளிநீக்கு
  5. அதிக வருமானம் எப்படி?

    // பெரிசா மீசை வைத்து இருப்பவன் பொய்சொல்ல மாட்டான் என்று கருட புராணத்தில்....//

    ஹா.... ஹா... ஹா....

    அடுத்த சுவாரஸ்யமான பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிக வருமானம் அல்ல! சைடு வருமானம். ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  6. ￰வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற வடிவேலுவின் வசனம் ஞாபகம் வருகிறது.
    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. ஆகா
    மிகவும் ரசித்தேன் நண்பரே
    அதுவும் பெரிய மீசை செய்தியை ரசித்தேன்
    அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்களும் பெரியமீசைதானே ஆகவே ரசித்து இருப்பீர்கள் நன்றி.

      நீக்கு
  8. இதென்ன சோதனைக் காலம் தேவகோட்டையாரே.
    இப்படி எல்லாம் சமாளித்தீர்களா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா வாயைக் கொடுத்து விட்டு வாங்கி கட்டிக் கொண்டேன்.
      எல்லாம் 'சுழி'

      நீக்கு
  9. அராபியருக்கு மதப்பற்று அதிகமோ? அங்கு ஜாதியே இல்லையா?

    பதிவு படு சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரேபியருக்கு மதப்பற்று அதிகம் என்பதைவிட அதைப்பற்றி நேர்மையாய், பொய் சொல்லாமல் வாழ்பவர் அதிக சதவீதம் நண்பரே அதற்கே ஒரு சபாஷ்.

      "ஜாதி" அரபு மொழியில் இலக்கியப்படி அல் தாயிஃபாத் (الطائفة) என்று சொல்வார்கள் சொல்வழக்கில் சற்றே மாறுபடும் (மறந்து விட்டேன் மன்னிக்கவும் அகவை 16 ஐக் கடந்து விட்டதே)

      இந்தியரிடம் கேட்டால் ஜாதி இல்லை என்பர் சுமார் 65 ஜாதிகளுக்கு மேல் இருக்கிறது ஆதாரத்துடன் நான் சொல்வேன்.

      இதனை மையப்படுத்தி வேறொரு பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் நண்பரே
      (உங்களுக்காக துரிதப்படுத்த வேண்டும்)

      நீக்கு
    2. கில்லர்ஜி.... உங்க பாயிண்ட் சரிதான். அவர்களுக்கு மதப்பற்று என்று பெரியதாகக் கிடையாது (ஏனென்றால் அங்க மாற்று மதம் இருந்தால்தானே). ஆனா அவங்கள்டயும் பல பிரிவுகள் உண்டு. மெயினா ஷியா, சுன்னி, மற்றவைகள். அதிலேயும் வஹாபி போன்றவை.

      நீங்கள் ஜாதி என்று சொல்வது ஃபேமிலி ட்ரீயா? அதாவது ஒவ்வொருவரும் ஒரு குலத்தின் வழித்தோன்றல்கள் என்பதையா? Al Khasimi, Al Jawad போன்றா?

      நீக்கு
    3. ஆம் தமிழரே மேலே சொல்லி இருப்பது மதப்பிரிவு.
      கீழே ஆங்கிலத்தில் சொன்னது ஜாதியே எல்லோருமே அதாவது அரபுமொழி பேசுபவர்கள் தவிர்த்து பேமிலிநேம் என்றே சொல்கின்றீர்கள் அது தவறு.

      இதில் ஒரு பிரிவு மற்ம பிரிவில் திருமணம் செய்வது கிடையாது.

      (நான் பதிவு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் அதில் வாதிப்போம்)

      நீக்கு
    4. உங்களுக்கு வாய்ப்பு கிட்டியிருந்தால், அவர்களது திருமண முறை பற்றியும் எழுதவேண்டும். நான் இரண்டு நண்பர்களின் நிச்சயதார்த்தத்துக்குச் சென்றிருக்கிறேன். அது பல செய்திகளை நமக்குச் சொல்லும்.

      நீக்கு
    5. நான் ஆறு திருமணங்களுக்கு சென்று இருக்கிறேன் அந்த அனுபவத்தையும் பகிர்வேன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வாங்க இதெல்லாம் டுபாக்கூர் வார்த்தை.

      பட்டு அழுந்தினாலே எல்லாம் சாத்தியம் நான் இளம் பெண்களுடன் வேலை செய்து கொண்டே மொழி பயில்வதை அபிவிருத்தி செய்தவன் இதன் காரணமாகவே தட்டச்சும் வந்தது.

      அதாவது இயல்பாகவே பெண்களிடம் காட்டுவதற்காக ஆண்களிடம் இருக்கும் வறட்டுக் கௌரவம்.

      வருகைக்கு நன்றி மேடம்.

      நீக்கு
  11. வித்தியாசமான பதிவு. தொடரட்டும். நன்றி

    பதிலளிநீக்கு
  12. சைடு வருமானம்...? அறிய ஆவலுடன் உள்ளேன் ஜி...

    பதிலளிநீக்கு
  13. கில்லர்ஜி சார் நீங்க அரேபியாவிலா வசிக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே 2016 க்கு முன்புவரை சுமார் இருபது ஆண்டுகள் எமிரேட்ஸ் அபுதாபியில்...

      நீக்கு
  14. நல்ல வேளை சுலைமானி கொண்டுபோகவில்லை நீங்கள். கொண்டு போயிருந்தால் என்ன ஆகிறது....

    சுலைமானி - வரட்டு தேநீர் இங்கேயும் சிலர் குடிப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி மூஞ்சியில் அடித்து விட்டால் வெந்து விடுமே...

      நீக்கு
  15. ஆச்சாரி னு தலைப்பைப் பார்த்துட்டு ஏதோ அதைப் பத்தித் தான் எழுதப் போறீங்கனு நினைச்சால்! ஹிஹிஹி, தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் னு சொல்லுங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உண்மை தலை தப்பியது புண்ணியம்தான்.

      நீக்கு
  16. அனுபவம்புதுமை ஒவ்வொன்றும் ஒரு விதம்

    பதிலளிநீக்கு
  17. துளசி: நிறைய அனுபவங்கள் உங்களுக்கு கில்லர்ஜி. நல்லாவே சமாளிச்சுருக்கீங்க. ஸ்வாரஸ்யமாகவும் இருக்கிறது. தொடர்கிறோம்

    கீதா: ஹா ஹா ஹா கில்லர்ஜி இப்படி அவாத் மற்றும் மன்சூரையும் நல்லா போக்கு காட்டியிருக்கீங்க. முன் ஜாக்கிரதை முத்தண்ணா நீங்க! ஹா ஹா ஹா..இந்தக் கட்டன் சாயா குடிக்கும் பழக்கம் பல இடங்களில் இருக்கிறது ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதம் ஜப்பானில் க்ரீன் டீ . டீ செரிமொனி என்பதே அங்கு ஸ்பெஷல். பொதுவாக பால் கலந்துகுடிக்கும் பழக்கம் நம் நாட்டில் தான் என்று தோன்றுகிறது. கேரளத்தில் கூட கட்டன் சாயாதான் அதிகம்...

    ஆச்சாரி சமாளிப்பு ஹா ஹா ஹா...அதுங்களுக்கு பாஷையும் தெரியாது ஸோ உச்சரிப்பை வைச்சு சமாளிச்சுட்டீங்க!!!! இன்ட்ரெஸ்டிங்க்....தொடர்கிறோம் ஜி இன்னும் உங்கள் பழைய பதிவுகள் பார்க்கணும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்துரைக்கும், தொடர்பவமைக்கும் நன்றிகள் பல...

      நீக்கு
  18. தமிழ் ஆங்கிலம் மலையாளம் அரபி இன்னும் எத்தனை மொழிகள் தங்கள் வசம் இருக்கிறது. அனைத்தையும் பதிவின் வாயிலாக வெளியிடுங்கள் பாராட்டுகள் தங்கள் திறமைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே 2016 பிப்ரவரி பதிவு (நான்தான் கடவுள் படிக்கவும்) நன்றி.

      http://killergee.blogspot.com/2016/02/blog-post_26.html?m=0

      நீக்கு
  19. சுவாரஸ்யம் நிறைந்த அனுபவங்கள்

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    தங்கள் அரபிநாட்டு வாசம் மிக சிறந்த அனுபவங்களை கொண்டதாக உள்ளது. எத்தனை கஸ்டங்கள் .. எப்படித்தான் சமாளித்தீர்களோ... மன தைரியத்தை விடாமல் சந்தித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அத்தனையிலும் தாங்கள் அந்த மொழியை கற்று தேர்ந்தது பாராட்டுக்குரியது. இன்னமும் அனுபவ பதிவுகள் தொடர அதை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கும், பதிவை தொடர்வதற்கும் நன்றி.

      நீக்கு
  21. பல மொழி கலைஞர் என்ற பட்டம் கொடுக்கலாம்..தங்களுக்கு...!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை 'பல்வலி கலைஞர்' பட்டம் கொடுக்கவில்லை.

      நீக்கு
  22. சுவாரஸ்யம்...ஆவலுடன் அடுத்த பதிவிற்கு....

    பதிலளிநீக்கு
  23. சின்ன விஷயம் எப்படி பூதாகரமாக ஆகிடுது. எப்படியோ தப்பித்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் விளையாட்டாக பேசியதின் விளைவே...

      காரணம் நான் சிறு அகவை முதலே எல்லா விடயங்களிலும் இப்படியே பழகி விட்டேன். ஆனால் மனதுள் கபடம் கிடையாது.

      நீக்கு
  24. கருடபுராணத்தில் இதெல்லாமா சொல்லி இருக்கிறார்கள்? விக்ரம் படத்தில் இதெல்லாம் வரலியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஞானக்கண் கொண்டு படிப்பவர்களுக்கே விளங்கும்.

      விக்ரம் படமா ? ஹா.. ஹா.. ஹா.. வார்த்தைகள் குழப்பி விட்டதோ...

      அது கற்பனை மொழி, இது உண்மை மொழி.

      நீக்கு