தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 05, 2018

மனிதமூளை



னிதனின் மூளை மென்மையானது என்று படித்து இருக்கிறேன், கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் எனது அனுபவத்தில் தவறென்றே கருத தோன்றுகிறது காரணம் நான் இருபது ஆண்டுகளாக அரேபியர்களுடனும், அரேபியப் பெண்களிடமும் மட்டுமல்ல, அரபுமொழி பேசும் அனைத்து நாட்டவர்களிடமும் பழகி வேலை செய்து இருக்கிறேன் ஆயினும் நான் இதுவரை மனநல மருத்துவமனைக்கோ, மனநல மருத்துவரையோ காணப் போனதில்லை. உலகத்திலேயே மிகக் கொடுமையானது என்ன தெரியுமா ? முட்டாள்களோடு இணைந்து வேலை செய்வதுதான். But one thing Indians will make more money and send to India.

அதேநேரம் நான் இன்னும் சிலகாலம் அவர்களுடன் வாழ்ந்திருந்தால் கண்டிப்பாக என்னை மனநல மருத்துவமனையில் சேர்க்க கூடிய நிலைக்கு வந்திருப்பேன் என்பதை என்னாலேயே உணர முடிகிறது. நான் யூ.ஏ.ஈ வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்ததற்கு இதுவும்கூட ஒரு காரணம் என்றே சொல்லலாம். அரேபியர்களுடன் வேலை செய்தது எப்படி ? என்பதை இனிவரும் காலங்களில் பதிவுகளில் தரப்போகிறேன்.


நான் பல நேரங்களில் இதனைக் குறித்து யோசித்து இருக்கிறேன் இறைவன் எனக்கு மட்டும் மூளைக்கு மென்மைத்தனத்தை தரவில்லையோ... என்று ஒருவேளை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது எனது ஆரம்பகால 1996 யூ.ஏ.ஈ. வாழ்க்கை தொடங்கியபோது மனநல மருத்துவமனையில்தான் வேலை செய்தேன். அந்த நேரங்களில் இந்திய நோயாளிகளுக்கு மொழி மாற்றம் செய்ய அரேபிய மருத்துவர்கள் என்னைத்தான் அழைப்பார்கள். நாளடைவில் அவர்களுடன் பேசும் பொழுது அடுத்து கேட்க வேண்டிய கேள்வி என்ன என்பதை நானே தீர்மானித்து கேட்டு மருத்துவர்களின் பாராட்டுகளைப் பெற்று இருக்கிறேன் இவர்களின் மனநிலை ஏன் மாறுகிறது ? எப்படி மாறுகிறது ? என்பதை நாளடைவில் நானும் படித்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது இதனாலும்கூட என்னை நானே பாதுகாத்துக் கொண்டேன் என்றே சொல்லலாம்.

இன்றளவும்கூட நம்பிய உறவுகள் எல்லாம் எனக்கு செய்த துரோகங்கள், மோசடிகளை நினைத்து எனது மனம் அடிக்கடி அலைகழிப்பதை என்னால் பக்குவப்படுத்த முடிகிறது இருப்பினும் எனது கோபத்தை கட்டுப்படுத்துவதில்தான் மிகவும் கஷ்டப்படுகிறேன். என்ன செய்வது ? பிறவி முழுவதுமே நானொரு சம்சாரியாக்கப்பட்ட பிரம்மச்சாரி.

மொழி மாற்றம் செய்ய மட்டுமல்ல, நோயாளிகளுக்கே தெரியாமல் பின்புறமாக அவர்களது கைகளை மடக்கிப் பிடித்து கீழே குப்புறப் போட்டு அமுக்கி பின்புறம் ஊசி போடுவதற்கும் மருத்துவர்கள் என்னை உபயோகப்படுத்தினார்கள் பெரும்பாலும் பலசாலிகளாகவே இருப்பார்கள் காரணம் இயல்பாகவே நன்றாக உண்டவர்கள் மட்டுமல்ல, நோயாளியாக இருப்பினும் நல்ல திடகாத்திரமான உணவே எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்கு அமுக்கியது யாரெனத் தெரியாத வகையில்தான் எனது பிடியிருக்கும். மறுநாள் மயக்கம் தெளிந்தவுடன் அபு ஸினப் என்னை அமுக்கியது யார் ? என்று என்னிடமே கேட்பார்கள் அபு ஸினப் என்றால் அரபு மொழியில் மீசைக்காரரே என்று மரியாதையாக சொல்வதாக அர்த்தம். ஸினப் என்றால் மீசை அபு என்பது கௌரவமான வார்த்தை.

அமுக்கியது நானென்று தெரிந்ததோ.... பில்லியார்ட்ஸ் பாலை எடுத்து எறிந்திருப்பார்கள். மனநோயாளிகள் விளையாட பில்லியார்ட்ஸ் ? இப்பொழுது புரிந்திருக்குமே அரேபியரின் மூளை. இங்குதான் பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் இந்த விளையாட்டை நானும் படித்துக் கொண்டேன் எனக்கு மிகவும் பிடித்தமானதும்கூட நோயாளிகளில் பலவிதமானவர்கள் உண்டு சீருந்தை தானே ஓட்டி வந்து மருத்துவமனைக்கு வெளியே நிறுத்துமிடத்தில் நிறுத்தி பூட்டி, அழைப்பு மணியை அடித்து உள்ளே வந்து சாவியை வார்டின் இன்-ஸார்ஜிடம் கொடுத்து விட்டு தனது அறையில் போய் படுத்துக் கொள்பவர்களும் உண்டு. என்னிடம் தனது சீருந்தில் பாட்டு கேஸட் இருக்கிறது எடுத்து வா என்று சொல்பவனிடம் நீ போவேன் என்று சொல்வேன் அதற்கு நான் நோயாளி வெளியே போக அனுமதியில்லை என்பான். இப்படி பலவகை விசித்திரமானவர்கள் உள்ளனர்.

ஓர் ஏமன் நாட்டு நோயாளியை நமது ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய சொப்பன வாழ்வில் மகிழ்ந்து என்ற பாடலை பயிற்சி கொடுத்து பாட வைத்து இருக்கிறேன். ஒருமுறை சூடான் நாட்டைச் சேர்ந்த மனநோயாளி பெயர் அவாத் பயங்கர முரடன் என்னை...

இந்தே முஸ்லீம் ?
நீ முஸ்லீமா ?
லா
இல்லை

இந்தே ஹிந்தூஸி ?
நீ ஹிந்துவா ?
லா
இல்லை

இந்தே கிருஸ்தின் ?
நீ கிருஸ்டினா ?
லா
இல்லை

தியானா ஸ்சூ தானி ?
வேற எந்த மதம் ?
ஆச்சாரி

இந்த வார்த்தை அடுத்த ஒரு மாதம்வரை மருத்துவமனையை புரட்டிப் போடும் என்று நான் அப்போது கனவிலும் நினைக்கவில்லை அது என்ன ?

அடுத்த பதிவு ஆச்சாரியில் பார்ப்போமே...
தொடரும்....

45 கருத்துகள்:

  1. அனுபவங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன என்று தெரிகிறது. சுவாரஸ்யமான ஒரு தொடரை தொடங்கி இருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தொடர்பவமைக்கு நன்றி

      நீக்கு
  2. கில்லர்ஜி இறைவன் உங்களுக்கு மூளையை கொடுத்ததற்காக முதலில் நன்றி சொல்லுங்கள் அதைவிட்டு மென்மையாக தராமல் கடினமாக தந்துவிட்டாரே என்று குறை சொல்ல வேண்டாம்.. எனக்கு எல்லாம் உங்களுக்கு கொடுத்த மூளையை கூட எனக்கு தரவில்லை இருந்தாலும் நான் என்ன குறையா சொல்லுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் குறை சொல்லவில்லையே... மென்மைத்தனம் இல்லாத காரணத்தால் என்னை நானே பாதுகாத்துக் கொண்டேன் என்கிறேன். இதுவே நன்றிதானே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. நல்ல அருமையான கருத்தை எடுத்துத் தொடராகத் தரப் போகிறீர்கள். ஆவலுடன் படிக்கக் காத்திருக்கேன்.

      நீக்கு
    3. தங்களது காத்திருப்புக்கு நன்றி சகோ

      நீக்கு
  3. என்ன நண்பரே புதிர் போடுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆஹா உங்கள் அரபு நாட்டு அனுபவங்களா... அனுபவங்கள் நமக்கு மட்டுமல்ல அதைப் பகிர்ந்து கொள்ளும்போது அடுத்தவர்களுக்கும் பாடமாகும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து வர இருக்கின்ற பதிவுகளை ஆவலுடன் நோக்குகின்றேன்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. அனுபவ பகிர்வா ? அரபு நாட்டில் அரபு மொழி பேசி !
    கற்றுக் கொள்ளும் திறமை நிறைய இருக்கிறது உங்களிடம்.
    உறவினர்களுக்கு உதவும் தன்மையை இறைவன் கொடுத்து இருக்கிறார்.
    உறவுகள் உங்களை உணர்ந்து கொள்ளும் காலம் வரும்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரை ஆறுதல் அளிக்கிறது.

      நீக்கு
  7. தங்களது மூளை அபார மூளை நண்பரே
    தங்களின் அனுபவப் பகிர்வின் அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தொடர்வது அறிந்து மகிழ்ச்சி

      நீக்கு
  8. அறிந்து கொண்டதால், பாதுகாப்புடன் இருந்துள்ளீர்கள்...

    நல்லதொரு ஆரம்பம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வாயில்லாவிட்டால் அரேபியரை சமாளிக்க இயலாதே...

      நீக்கு
  9. அயல் நாட்டில், அயல் மனிதர்களுடனான மாறுபட்ட அனுபவங்களை விறு விறு நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. வித்தியாச அனுபவங்கள்...

    பதிலளிநீக்கு
  11. எனக்கு ஒரு சந்தேகம் ஆச்சாரி என்பது மதமா இல்லை வேரூன்றி இருக்கும் சாதியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி சார்.. என்ன மதம் என்ற கேள்வி கேட்டவனுக்கு பதில் சொல்ல இஷ்டப்படாமல் கில்லர்ஜி, அவரை சுத்தலில் விட இதைச் சொல்லியிருக்கிறார். இது கில்லர் ஜிக்கு என்ன பிரச்சனையைக் கொண்டுவந்தது என்று பார்க்க வேண்டும்.

      நீக்கு
    2. ஜிஎம்பி சார், தமிழ்நாட்டுல சைவம் வைணவம் சமணம் புத்தம் ஆகிய மதங்கள்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வேரூன்றிய மதங்கள். இவங்களுக்குள்ள கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவின. இந்துமதம் என்சிற வார்லத்தை சில நூறு வருடங்களாகத்தான் இருக்கு

      நீக்கு
    3. வாங்க ஐயா இதென்ன கேள்வி ஆச்சாரி என்பது பாழாய்போன சாதிதான்.

      நண்பர் நெ.த. அழகாக விளக்கி இருக்கிறார் (நன்றி)

      நீக்கு
  12. கில்லர்ஜி.. நீங்க அரபி மொழி கத்துக்கிட்டதை பெரிய திறமையாப் பார்க்கிறேன். தொடர் ஆவலை அதிகரிக்கிறது. பிறர் அனுபவங்கள் எப்போதும் இன்டெரெஸ்டிங்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே விளையாட்டு வினையாகி விட்டது சமாளித்து விட்டேன்.

      நீக்கு
  13. நல்ல அனுபவம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்வது...இதனால்தானோ..அபு ஸினப் நண்பரே........

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    தங்களின் அரபு நாட்டின் வாழ்க்கையின் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அனைத்தையும் படித்தேன். தங்களின் மனோ திட்டமும், மொழி கற்றுக் கொண்ட ஆர்வமும் திகைப்பூட்டுகிறது. அதற்கே பொறுமையும், நல்ல அறிவாற்றலும் வேண்டும். அந்த திறன் தங்களிடம் முழுமையாக உள்ளது. வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து தர இருக்கும் தங்கள் அனுபவப் பதிவை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

    கொஞ்ச வேலைகளின் காரணமாக என வருகை தாமதம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களது வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி.

      நீக்கு
  16. கில்லர்ஜி செம சப்ஜெக்ட். எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் வேறு. மூளையைப் பற்றி நிறைய பேசலாம் அலசலாம்...அதற்கு முடிவே இருக்காது. ஆனால் இப்படியான மனிதர்கள் பாவப்பட்டவர்கள் கில்லர்ஜி. ஏனென்றால் மனநிலை சரியில்லை என்றால் அதாவது சைக்கியாட்ரிக்/சைக்காட்டிக் ப்ராப்ளம் அது மூளை சம்பந்தப்பட்டது என்பதால் அதற்குத் தீர்வே கிடையாது. மருந்துகளால் ஒன்லி மெயின்டெனன்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட். மனித மூளை என்றதும் எனக்கு நரம்பியல் நிபுணர் அமரர் டாக்டர் ராமமூர்த்திதான் நினைவுக்கு வருவார். அசாத்திய திறமைசாலியானவர். அவர் சொல்லியது மூளையைப் பற்றி மனிதன் முழுவதும் படித்தல் அரிது அது மாபெரும் ஆழமான சமுத்திரம் என்று...

    இதைப் பற்றி பேச நிறைய உண்டு. ஆனால் இது உங்கள் அனுபவப் பதிவு என்பதால் நான் அதைப் பற்றி கருத்து சொல்லலை...

    அடுத்து அந்த ஆச்சாரி செய்த பாட்டை அறிய தொடர்கிறேன். ஸ்வாரஸ்யமான பதிவு ஜி நிச்சயமாக..!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கு நன்றி தொடர்க...

      நீக்கு
  17. அருமையான கருத்துக்கள் . நன்றி

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு அனுபவமும் நமக்குப் பாடமே.

    பதிலளிநீக்கு
  19. அனுபவத்தொடரா ! தொடருங்கள்
    நோயாளிகள் ?? அநேகமா டிப்ரெஷன்schizophrenia வந்தது போன்றோருடன் வேலை செய்தீர்களா .
    பிறப்பால் மூளைத்திறன் குறைந்தவங்க கூட வேலை செய்வது எவ்வளவோ மேல் .ஆனா இந்த போதை /மருந்து இவற்றால் மூளைத்திறன் குறைந்தவங்க கிட்ட கவனமுடன் இருக்கணும் அவர்களின் மன நிலை எப்போ எப்படி மாறுமனே தெரியாது ..
    சரி தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சரியாக சொன்னீர்கள் இங்கு எல்லா வகையானவர்களும் இருந்தார்கள். தொடர்பவமைக்கு நன்றி.

      நீக்கு
  20. அரேபியர்களிடம் பெற்றது வித்தியாசமான அனுபவம் தான். மருத்துவமனை அனுபவம் கூட வித்தியாசமானது எனலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான். தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு