இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

சுலைமாணி



இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

மன்ஸூர் அவாத்திடம் தனியாக பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவர் குழுவை வரவழைத்து என்னை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட்டார் இதற்கான லஞ்சம் அவாத் கேட்கும் போதெல்லாம் சுலைமாணி.

மன்ஸூர் வார்டு இன்-ஸார்ஜ் ஈராணியன் இவன் நல்லவன்தான் ஆனா..... நல்லவன் இல்லை காரணம் மருத்துவமனை நோயாளிகளுக்கு வரும் மருந்து, மாத்திரை, உணவுகள், தண்ணீர் பாட்டில், பால், காஃபி, டீ பவுடர்கள் இவையனைத்தையும் அவனது வீட்டுக்கு கொண்டு போய் விடுவான். இவைகளை எல்லாம் தினம் மூட்டை கட்டி அவனது சீருந்தில் கொண்டு போய் நான்தான் வைத்து வருவேன். காரில் வைப்பதற்கு ஓர் நேரம் இருக்கிறது அதை பிறகு சொல்கிறேன். இது மற்ற செவிலியர்களுக்கும் தெரியும் ஆனால் ஒன்றும் செய்ய இயலாது காரணம் மன்ஸூர்தானே தலைமையாளர். இப்பாவத்தில் எனக்கு உடன்பாடு இல்லை இருப்பினும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது காரணம் எனது நிறுவனம் என்னை இங்கு ஒப்பந்த அடிப்படையில் அடகு வைத்து இருக்கிறது மீறிபேசினால் வெளியே போகவேண்டும் வெளியே போனால் வெயிலில் வேலை செய்ய வேண்டும் வேலையும் கடினமாகும் ஆகவே நானும் உடந்தையாக இருந்தேன். அவாத்துக்கு கேட்ட போதெல்லாம் சுலைமாணி கொடுத்துக் கொண்டு இருந்தேன். நோயாளிகளுக்கும், செவிலியர்களுக்கும் சேர்த்து தினம் இருபத்து ஐந்து டப்பா பால் வரும் இதில் பத்து டப்பா மட்டுமே நான் உபயோகப்படுத்த வேண்டும் இதில் வேடிக்கை என்னவென்றால் சில நேரங்களில் மருத்துவர் குழுவும் வரும் அப்பொழுது மன்ஸூர் என்னை சப்தமாக அழைப்பார்.

முக்கியமான விசயம் மன்ஸூருக்கு நமது இந்திய மொழியான ஹிந்தி ஓரளவு தெரியும் இதில் மானக்கேடான உண்மை என்ன தெரியுமா ? மன்ஸூரிடம்தான் நான் நிறைய ஹிந்தி வார்த்தைகள் படித்துக் கொண்டேன் இது அபுதாபியை ஆளும் அன்னை அகிலாண்டாஸ்வரி மீது சத்தியம்.

அபு ஸினப்...
மீசைக்காரா...
நாம் ?
என்ன ?
சவி சாய் ஹலிஃப் மிஷான் குல்லு தொக்தோர்
அரபு மொழியில் எல்லா மருத்துவருக்கும் பால்ச்சாயா போடு என்பதை சத்தமாக சொல்லி விட்டு மருத்துவரின் அதிகார பின்புல சூழலறிந்து மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும்படி ஹிந்தியில் தூத் நஹி போலோ என்று சொல்லச் சொல்வான். அதாவது தூத் நஹி போலோ என்றால் பால் இல்லை என்பதை அரபு மொழியில் சொல்ல வேண்டும் வரும் மருத்துவர் குழுவுக்கு ஹிந்தி தெரியாது. நான் தலையை சொறிவேன் ஸாரி சொறிய வேண்டும்
உஸ்ஸூ.... ?
கோபமாக என்ன ?
மாலீஸ் மாஃபி ஹலிஃப்
மன்னிக்கணும் பால் இல்லை
ஸ்ஸூ இந்தே தொக்தோர் மெத்தே ஈஜி மாஃபி ஹலீஃப் சவி மஸ்கரா ?
என்ன நீ எப்ப மருத்துவர்கள் வந்தாலும் பால் இல்லை விளையாடுறியா ?

உடனே மருத்துவர்கள் சொல்வார்கள் டீ வேண்டாம் சிலர் மட்டும் வரட்டீ போடு என்பார்கள். உடனே நான் போயி சுலைமாணி போட்டு வரவேண்டும் இதெல்லாம் நானும், மன்ஸூரும் முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டது. இப்படி எல்லாம் பாலை மிச்சப்படுபத்தி மன்ஸூர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதில் எனக்கும் பால் சாயா கிடைக்காது அப்படியே குடிப்பதை பார்த்து விட்டால் பக்கத்தில் வந்து டீ குடிப்பதை பார்த்து ஒன்றுமே சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டுவான் மறுநொடியே வயித்தாலை ஓடிவிடும் இதற்கு பயந்து நானும் சுலைமாணி குடிக்க பழகிக் கொண்டேன்.

ஒருநாள் என்னை அழைத்து சீருந்தில் நான்கு தண்ணீர் பாட்டில் இருக்கிறது அதை எடுத்து வந்து மதியம் உணவுக்கு வரும் பாட்டிலை மாற்றிக்கொடுத்து விட்டு புதிய பாட்டிலை சீருந்தில் வைத்து விடு என்றான் நானும் அதைப் போலவே செய்து விட்டேன். பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதைப் புடுங்குமாம் அனுமாரு என்பது போல் அந்த நான்கிலிருந்து ஒன்றை நான் சுட்டு விட்டேன் மதியம் நான் சாப்பிட உட்காரும்போது அந்தப் பாட்டிலைத் திறந்தால் ? அதில் புழுக்கள் ஊர்ந்தது கண்டு அதிர்ந்தேன் காரணம் என்னவென்று பார்த்தால் அந்தப் பாட்டிலின் Expiry Date நேற்றோடு முடிந்திருந்தது. தன்வினை தன்னைச் சுடும் என்பதின் பொருள் புரிந்தது தொடக்கத்தில் சாமான்களை சீருந்தில் வைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா அதுவொரு புனிதமான நேரம் எந்த நேரம் ?

அடுத்த பதிவு தன்வினையில் பார்ப்போமே...
தொடரும்....

64 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    செய்யும் வேலை பறிபோய் விடக் கூடாதென்ற காரணங்களினால், தவறுகளுக்கு உடந்தையாக இருக்கிறோமே என நீங்கள் உள்ளூர வருந்தியது கொடுமையான காலங்கள்தான்.. படிப்பதற்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. மன்ஸூர் ஏன் இப்படி சுயநலவாதியாக இருந்தான்... மனிதர்கள் எங்குமே சுயநலமுடையவர்களாகத்தான் இருப்பார்கள் போலும். அவனுடைய நலத்திற்காக அனைவரையும் அவன் விருப்பத்திற்கு ஆட்டுவித்து... எப்படித்தான் பொறுத்துக் கொண்டீர்களோ? அடுத்து என்ன நடந்தது என அறியத் தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எல்லா இடங்களிலும் தவறு செய்பவர்கள் நிறைந்து இருப்பது உண்மையே... தொடர்பவமைக்கு நன்றி.

      நீக்கு
  2. வெளிநாட்டு வேலையில்தான் எத்துணை எத்துணை நெருக்கடிகள்
    காத்திருக்கிறேன் நண்பரே அடுத்தப் பதிவற்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. தப்பு செய்பவர்களை தட்டி கேட்க முடியாத சூழ்நிலை , அதற்கு ஒத்து போகவேண்டிய சூழ்நிலை கொடுமைதான்.

    தண்ணீர் பாட்டிலில் புழு படிக்கும் போதே கஷ்டபடுகிறது மனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எல்லா இடங்களிலும் பதவியில் இருப்பவருக்கே அதிகாரம் உள்ளது.

      சகோ முந்தைய பதிவு "ஆச்சாரி" படித்தீர்களா ?

      நீக்கு
  4. தவறு என்று தெரிந்தும் ஒத்துப்போக வேண்டிய நிலை...

    முதல் இரு பதிவுகளின் இணைப்புகளை கொடுக்கவில்லை ஜி... பதிவுகளின் தலைப்பு மட்டும் உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி பிழைப்புக்காகத்தான்...
      இணைப்பை சரி செய்து விட்டேன் ஜி

      நீக்கு
  5. அபுதாபியை ஆளும் அகிலாண்டேஸ்வரி....!!!

    ஹா.. ஹா... ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அகிலத்துக்குள் அபுதாபியும் அடக்கம்தானே ஸ்ரீராம்ஜி

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா...

      உண்மை... உண்மை!

      நீக்கு
  6. சுலைமாணி என்றால் வர டீயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நான் இங்கும் இதையே குடிக்கிறேன் பாலில் கலப்படம் இருக்கிறதே...

      நீக்கு
    2. டீ தூளிலும் கலப்படம் இருக்குமே?

      நீக்கு
    3. நிச்சயம் இருக்கும் ஆனால் அங்கு கலப்படம் இல்லை. காரணம் ஃபுட் கண்ட்ரோல் அத்தோரிட்டி ஸ்ட்ராங்.

      பப்பாளி விதையை அரைத்து கலக்குகின்றார்களே...

      நீக்கு
    4. பொதுவா கல்ஃபில் நடக்கும் உணவு சம்பந்தமான ஃப்ராடு இரண்டு வகையானது.

      1. ரீ பேக்கிங். நிறைய தானியங்கள் காலக்கெடு அதிகமாக இருந்தாலும் கல்ஃபில் அதிகபட்சம் 6 மாதம்-1 வருடம். அதனால் அந்தக் கம்பெனிகள் அல்லது ரீடெயில் செயின், ரீபேக் செய்யும். உதாரணமா, பாதாம், முந்திரி போன்றவை. ஆனால் இத்தகைய செயல் மிகவும் குறைவு. அப்போ அப்போ செக்கிங் நடக்கும். மற்றபடி எக்ஸ்பயர் ஆனவைகளைத் தூரப்போட்டுத்தான் நான் பார்த்திருக்கிறேன். நான் வேலை பார்த்த கம்பெனி, புதுப் பால் டிஸ்டிரிபியூட் செய்தது. அவர்களும் கடைகளிலிருந்து காலக்கெடுவுக்கு (பாலுக்கு 5-6 நாள்தான்) முந்தைய நாள் அவற்றை கடைகளிலிருந்து திரும்பப்பெற்று கொட்டிவிடுவார்கள். நான் கூட, முந்தைய நாளே திரும்பப் பெறுவதால், ஆபீஸ் ஸ்டாஃப் யாரேனும் எடுத்துச்செல்ல அனுமதிக்கலாமே என்று கேட்டதற்கு, இதில் கள்ளத்தனம் புகுந்துவிடும், அதனால் வீணாக்குவதே சரியான வழி என்று சொன்னார்கள். தானியங்களையும் இந்த மாதிரி ரீபேக் செய்து ரிஸ்க் எடுக்காமல், காலக்கெடுவுக்கு முந்தைய மாதத்திலேயே ப்ரொமோஷன் என்ற பெயரில் விலையை மிகவும் குறைத்து தள்ளிவிட்டுவிடுவார்கள். இது எல்லா உணவுப் பொருட்களுக்கும் (ஹார்லிக்ஸ் போன்றவைகள், பாண்ட்ஸ் பவுடர் போன்ற எல்லாவற்றிர்க்கும்) பொருந்தும்.

      2. ஹோட்டல்கள், நாள் பட்ட காய்கறிகளையோ (அதாவது மூன்றாம் தரமானது), காலக்கெடு முடிவதற்கு முந்தைய வாரப் பொருட்களையோ (இறைச்சி, கோழி சம்பந்தமானது) வாங்கி உபயோகப்படுத்துவார்கள், உணவின் உற்பத்திச் செலவைக் குறைக்க. இது சட்டப்படி தவறானது அல்ல.

      எக்ஸ்பயர் ஆன பொருட்களை கடை ஷெல்ஃபில் வைப்பது குற்றம். அதாவது பெரிய தண்டனை உண்டு. யாரும் போட்டோ எடுத்துப்போட்டாலோ அல்லது போன் செய்தாலோ போதும். அதனால் இதில் ரொம்ப கண்ணும் கருத்துமா இருப்பாங்க.

      நம்ம ஊரில் இந்த மாதிரி ஒரு கண்ட்ரோலும் கிடையாது.

      நீக்கு
    5. உண்மை பலமுறை லூலூவில் இந்த ரெய்டில் அபராதம் அடித்து பார்த்து இருக்கிறேன் நண்பரே.

      எக்ஸ்பேர் ஆன ஸ்னிக்கர் சோக்லெட்களை எரிப்பதையும் பார்த்து இருக்கிறேன்.

      நீக்கு
  7. காரில் அந்தப் பொருட்களை வைக்கும் அந்தப் புனிதமான நேரம் தொழுகை நேரம்தானே?

    பதிலளிநீக்கு
  8. அது சரி, அந்த ஊர் தண்ணீர் பாட்டிலில் எக்ஸ்பைரி தேதி முடிந்த மறுநாளே புழுக்கள் நெளியுமா? அப்போ முந்தைய நாள் அதைக் குடிப்பது கூட ரொம்ப ஆபத்தாச்சே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எல்லாம் கெமிக்கல்தானே... மேலும் கடல்நீர். அதன் பிறகு நான் ஆறுமாதம் இருந்தாலும் குடிப்பதில்லை சாதாரண பைப் தண்ணீரை குடித்து விடலாம்.

      நீக்கு
  9. நாங்கள் ராமேஸ்வரத்துக்குச் சென்றிருந்தபோது ஒரு ஹோட்டலில் சுலைமாணி கிடைக்கும் என்று எழுதி இருந்தது அதன் பொருளை நிங்கள் தான்பின்னூட்டத்தில் எழுதியதாக நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா ஒரு பதிவில் நீங்கள் எழுதி இருந்தீர்கள். நானும் விளக்கம் கொடுத்தேன்.
      நாம் லண்டன் சென்று வந்த பதிவிலும் குறிப்பிட்டேனே...

      நீக்கு
  10. மகாலட்சுமி என்னும் ஒரு தொடரில் வரும் காரக்டர்கள் போல் இருந்தது நீங்கள்தான் சீரியல்கள் பார்ப்பதில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. நான் தொல்லைக்காட்சிக்குள் என்னை சிறை வைப்பதில்லை ஐயா.

      நீக்கு
  11. அடடா...என்ன உலகமடா சாமி....தண்ணீர் கேன்களில் இங்கு வந்த அன்றே சில சமயங்களில் புழு,தூசி என இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அந்த வகையில் அங்கு டைம் முடிந்த மறுநாள்தானே புழு மிதந்தது.

      நீக்கு
  12. லஞ்சம் ஏதேனும் ஒரு உருவத்தில் எங்கும் உலவும் போல தெரிகிறதே நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே லஞ்சத்தை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது தமிழனாகத்தான் இருக்கவேண்டும். அவன்தான் இறைவனிடம் தன்னை நல்ல நிலையில் வைப்பதற்கு லஞ்சமாக முதன் முதலில் தேங்காய் உடைத்தான், பிறகு அவனே அதை பொறுக்கி எடுத்து தின்று பழகினான்.

      இப்படித்தான் பிறகு பொங்கல், கிடா, கோழி, சுண்டல், வளரும் என்று தீர்மானமாக தெரிந்ததால் தலைமுடி இப்படியே....

      என்னை சுலைமாணி கொடுக்கும் நிலைக்கு தள்ளியது ஆதி தமிழனாகத்தான் இருக்கும் நண்பரே...

      நீக்கு
    2. //"முதலில் தேங்காய் உடைத்தான். பிறகு அவனே அதைப் பொறுக்கி எடுத்துத் தின்று பழகினான்"// ஹ...ஹ...ஹ!!!

      நீக்கு
    3. வருக நண்பரே உண்மையை உளறி விட்டேனோ ?

      நீக்கு
  13. காரில் வைப்பதற்கு நேரம் இருக்கிறது என்ற சொற்றொடரின் பின்னால் ஒரு மர்மம் உள்ளதோ என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கணிப்பு சரியே...

      முந்தைய பதிவு 'ஆச்சாரி' படித்து விட்டீர்களா ?

      நீக்கு
  14. எக்ஸ்பயரி தேதிக்குப் பிறகு தண்ணீரில் புழுக்கள் - கொஞ்சம் அதீதமாத்தான் தெரியுது. பொதுவா அங்க உள்ள உணவுவகைகள் இந்தியாவைவிட பெட்டர்னு என் அபிப்ராயம்.

    அங்க ஆச்சர்யப்படற விஷயம், தொழுகை, பக்தின்னு இருக்கறவங்க (பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னால ஒரு 5-6 வாழ்துரைகள் இல்லாம ஆரம்பிக்கமாட்டாங்க. அஸ்ஸலாமு அலைக்கும்னு ஆரம்பிச்சு.. எதைச் சொன்னாலும் 'இன்ஷா அல்லா - இறைவன் விருப்பப்படி'னுலாம் சொல்வாங்க.) ஆனா இதுமாதிரி திருடறவங்களை, பொய் சொல்றவங்களை நிறைய பார்த்திருக்கேன். எனக்கு அது ஆச்சர்யமா இருக்கும். ஆனா திருடறவங்க, பொதுவா உள்ளூர் காரனாக இருக்கமாட்டாங்க. வந்தேறி அரபிக்களாக இருப்பாங்க.

    இத்தனை பால் டின்னை வச்சு என்ன பண்ணுவாங்க? ஒரு வேளை சப்ளை பண்ணற கம்பெனி தினமும் அதை வாங்கி மீண்டும் மீண்டும் சப்ளை பண்ணுமோ? ஹாஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே உணவு விடயத்தில் சரியாக நடத்துகின்றனர்.

      வந்தேறிகளின் வேலைதான் மோத்தன் 99% செய்யமாட்டார்கள்.

      விற்கலாம் டாய்லெட் பேப்பர் ரோல்கூட எடுத்து கொண்டு போவான்.

      நீக்கு
  15. ஆஆஆவ்வ் அதுக்குள் இன்னொரு தொடர் ஆரம்பமாகி விட்டதோ? நான் நடுவில் வந்து ஏறியிருக்கிறேன் ரெயினில்.. பின்பு நேரம் கிடைக்கும்போது ஆரம்பம் இருந்து படிக்கிறேன்..

    அது சுலைமாணி.. இதில்...ணி ஆ..னி ஆஅ எது சரி எனத் தெரியவில்லை.. நான் நினைச்சிருந்தது சுலைமானி எனத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இரண்டு பதிவுகள்தானே இருக்கிறது.

      வீரகேசரி எடிட்டடடடடர்ரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    2. அமெரிக்காவில் ஹரிக்கேன் புயலென படிச்சேன் :) இதோ உலக தமிழ் வரலாற்றில் முதல் முறையா ன /ண சரியா சொன்ன பூசாரால்தான் புயல்

      நீக்கு
    3. ரகுமான், சுலைமான் என்ற பெயர்களை வைத்து "சுலைமானி" அதிரடி கணித்து இருக்கிறாரோ...?

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இப்போவாவது எல்லோரும் ஒத்துக் கொள்ளுங்கோ நேக்கு டமில்ல டி ஆக்கும்:) என் முன்னால வந்த நெல்லைத்தமிழன் புரொஃபிசருக்கே இதைக் கண்டு பிடிக்க முடியவில்லை:))

      நீக்கு
  16. ஆஆஆஆஆஆஅ பாலில் பு........ளு வோ ஹையோ சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ ஃபிரிஜ்ஜில் தானெ வைத்து எடுப்பார்கள். அப்போ எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைம் முடிந்து விட்டதே ஆகவே கொம்பனியை குறை சொல்ல இயலாது.

      நீக்கு
  17. சில நேரங்களில் நமக்கு பிடிக்காத விஷயங்களை கூட பணியிடத்தில் செய்ய நேரிடும் கொடுமை சொல்லோணா வேதனையே .
    மன்ஸூர் மிக மோசமானவர் போலிருக்கே //தலையை மட்டும் ஆட்டுவான் // நினைச்சு பார்க்கவே முடியல .
    இந்த வெளிநாடுகளில் ஷெல்ப் லைஃப்ன்னு சரியா எக்ஸ்பயரி தேதிக்குள்ள முடிச்சிடனும் இல்லைனா அன்னிக்கு நைட் 9.10கு முடியும் னு எழுதியிருந்தா 9.11 க்கு fungus வச்சிருக்கும் .என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் முதன்முறை ஜெர்மனியில் கண்டுபிடித்தேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உண்மையே வேறு வழியின்றி சில நேரங்களில் வாழ்க்கை ஓடும்.

      சரியாக மறுநாளே அது பாய்ஸனாக மாறுவதை நான் பலமுறை கண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  18. இன்னைக்கு இங்கே வர்றதுக்கு கொஞ்சம் (!) நேரம் ஆகிட்டுது..

    அதுக்குள்ள இவ்வளவு களேபரமா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தேன்.

      நீக்கு
  19. தன் வினை தன்னைச் சுடுமா..?? அது எப்படி நண்பரே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே தவறுக்கு உடனடி தண்டனை.

      நீக்கு
  20. எங்கே போனாலும் ஊழலுக்குக் குறைவில்லை போல! பால், தேயிலைத்தூள், குடிநீர் எல்லாம் சரி, மருந்துகளை எடுத்துப் போய் என்ன செய்வாங்க? அந்த மருந்துகள் தேவைப்படுவோருக்கு அதிகவிலையில் விற்பாங்களோ! எதில் தான் ஊழல்னு கணக்கே இல்லாமல் போயிடுச்சே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதன் விலைகள் மிக அதிகம் எரிகிற வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம்தானே...

      நீக்கு
  21. தமிழகத்தில் உணவு பொருட்கள் மட்டும் இல்லை மருந்துகளின் எக்ஸ்பையர் தேதியை அழித்து விட்டு மீண்டும் அதிலே புதிய தேதியை பதிவு செய்து விக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா மனிதம் மறக்கும் பொழுது இந்நிலைதான்.

      நீக்கு
  22. தவறிற்கு வருந்திய தங்கள் மனோபாவம் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  23. துளசி: உங்கள் வேலை ஹப்பா கஷ்டம்தான் இல்லையா கில்லர்ஜி. அங்கும் இப்படி எல்லாமா? இதை யாரும் செக் செய்ய மாட்டார்களா அங்கு தண்டனை அதிகம் என்றுதானே கேட்டிருக்கிறேன். ம்ம்பல தகவல்கள். தொடர்கிறோம்.

    கீதா: துளசியின் கருத்துடன்...அகிலாண்டேஸ்வரி ஹா ஹா ஹா...

    ..கில்லர்ஜி இப்படி டபாய்ப்பவர்கள் தான் ஹாஸ்பிட்டலை தன் கன்ற்றோலில் வைத்திருக்கும் தாதாவோ? அங்கும் தாதாக்கள் இருக்கிறார்களே...மன்ஸூர் கிட்டத்தட்ட தாதா போல??!! சுலைமாணியும் லஞ்சத்தோடு சேர்ந்துவிட்டதா!!! சரி அந்த புனித நேரம் தொழுகை நேரம். அது சரி மன்ஸூர் தொழுகை எல்லாம் செய்யமாட்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது தேவகோட்டையில் நாலு தியேட்டரையும் விலைக்கு வாங்கணும்னு ஆசைப்பட்டால் மன்ஸூர் போன்ற மலைகளையும் சமாளித்துதான் ஆகணும்.

      நானும் இங்கு நோயாளிகளுக்கு மத்தியில் காலம் கடத்தி இருக்கிறேன் என்றால் தாதா போல நடந்து கொண்டதால்தான்.

      இவர்களிடம் அடிவாங்கி வேலையே வேண்டாமென ஓடியவர்கள் நிறையபேர் உண்டு.

      நான் இதை ஜாலியாக மாற்றிக் கொண்டேன் ஆகவே கடைசிவரை அடி வாங்காமல் காலம் தள்ள முடிந்தது.

      மன்ஸூரின் தொழுகை தன்வினையில் படிக்கவும்.

      நீக்கு
  24. இங்குதான் மருந்து அட்டூழியங்கள் நடக்குதுனா அங்குமா? ஆச்சரியம். லா (இது உங்க அரபு லா இல்லை!!!!) எல்லாம் அங்கு பயங்கரமா இருக்குமேனு....அதுலயும் இப்படி நடக்குதுனா இங்க சொல்லணுமா??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறு செய்வதற்கென்ற பிறப்பவர்கள் உலகம் முழுவதும் எல்லா மதத்திலும் உண்டு.

      நீக்கு
  25. பல சமயங்களில் நம் மனசாட்சிக்கு எதிராக வேலை செய்ய வேண்டியிருக்கிறது இல்லையா.

    சுலைமானி - நண்பர் வீட்டில் எப்போதுமே ப்ளாக் டீ தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  26. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
    வெளிநாட்டில் நிலவும் சூழல் தங்களை தவறுக்குத் துணைபோக வைத்து விட்டது. இதனை எண்ணி வருந்தி உள்ள படியால் மனசாட்சியின் உறுத்தலில் இருந்து தப்பி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தவறு செய்ய வெட்கப்படுபவனே நீதியை நாட்டுகிறான்.

      நீக்கு
  27. தன்வினை தன்னை சுடும் ..உண்மை தான்

    பதிலளிநீக்கு