இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
மறுநாள் முதல் எஜிப்திய
மாஸ்டர் வந்தார் பொதுவாக எஜிப்தியர்கள் அதிகம் பேசுவார்கள் இது அவர்களின்
ரத்தத்துடன் கலந்த பிறவிக்குணம காரணம் வாய் காதுவரை இருக்கும் ஏதாவது தவறுகளால்
போலீஸார் காரைப்பிடித்து நிறுத்தினாலும் பேசிப் பேசியே அவர்களைக் கொன்று
விடுவார்கள் இதன் காரணமாகவே பல போலீஸ்காரர்கள் அபராதம் எழுத வேண்டியவர்களைகூட
என்னை விடுடா சாமி என போய் விடுவார்கள்.
இது நகைச்சுவைக்காக சொல்லவில்லை உண்மை
நாங்கள் இருவரும் அரபு மொழியிலேயே பேசிக்கொண்டோம் மூன்று தினங்கள் அவனுடன் நல்ல
விதமாக ஓடியது கடைசி நாளில் வழக்கமான அவுட்டோர் இடத்துக்கு வந்தோம் அவன்
சொன்னபடியே ஓட்டி வந்து கொண்டு இருந்தேன் ரவுண்டப் போர்டு வந்தது அவன் சொன்னான்.
அதா தவ்வார் சீர் யஷார்
அந்த ரவுண்டப் போர்டில்
இடதுபுறம் போ
நான் ரவுண்டப் போர்டில்
போனவன் எனது கெட்ட நேரத்துக்கு ஒருவன் வேகமாக வந்து நான் இடதுபுறம் போக முடியாதவாறு
வலதுபுறம் திரும்பி அப்பாவியான என்னையும் வலதுபுறமே திருப்பி விட்டு கெட்டிக்காரப்
பயபுள்ள அவன் பறந்து விட்டான் நானும் பேசாமல் வலதுபுறமே போய்க் கொண்டு இருக்க... பார்க்கிங்கில்
நிறுத்து ஆஹா புடிச்சுட்டானே விடமாட்டானோ... தப்பு செய்தாச்சு என்ன செய்யிறது ? இவனை குழப்பி விட்டு சமாளிப்போம்.
அனா ஸ்சூ கூல் இந்தே ?
நான் என்ன சொன்னேன் உன்னிடம் ?
இந்தே கூல் ரோ யஷார்.
வலதுபுறம் போகச் சொன்னே கை காட்டினேன் இது தவறு
இந்தே வெயின் ஈஜி ?
சரி நீ எங்கிட்டு வந்தே ?
யஷார்.
வலது கை காட்டினேன்
அல்கில் அனா ஸ்சோல்
இங்கிலீஷி, லெப்ட் வெயின் ?
சரி இப்ப இங்கிலீஷில்
கேட்கிறேன் லெப்ட் எங்கே ?
இடது புறத்தைக் காட்டினேன்.
ஷா ரைட் வெயின் ?
சரி வலது எங்கே ?
வலது புறத்தைக் காட்டினேன்.
ஷா யஷார் வெயின் ?
சரி இடது எங்கே ?
ஆனால் நான் வலது புறத்தைக் காட்டினேன்.
யமீன் வெயின் ?
வலது எங்கே ?
ஆனால் நான் இடது புறத்தைக் காட்டினேன்.
ப்சு மிஷான் இந்தே ஸுகுல் மஸ்பூத் லேகின் மாஃபி
மாலும் கலம்த் அரபி
ப்சு உன்னுடைய வேலை சரி ஆனால் உனக்கு அரபி பேசத்தெரியலை
ப்சு உன்னுடைய வேலை சரி ஆனால் உனக்கு அரபி பேசத்தெரியலை
அனா மாலும்… அரபி
எனக்கு அரபி… தெரியும்
லா இந்தே அறஃப் இங்கிலீஷி லெப்ட் – ரைட் லேகின்
யமீன் – யஷார் மாஅறஃப்
இல்லை உனக்கு இங்கிலீஷில் லெப்ட் – ரைட்
தெரியுது ஆனால் அரபியிலே இடது – வலது தெரியலே
அதா யமீன், அதா யஷார் என்று சரியான திசையைக்
காண்பிக்க நான் கேட்ட கேள்வியில் அவனுக்கு வந்தது பாருங்க.... கோபம் இவ்வளவுக்கும்
சின்னோண்டு கேள்விதாங்க அது எதுனு கேட்கிறீங்களா ? இதோ இது.
மெத்தே சவி தப்தில் ?
எப்ப மாத்துனாங்க ?
ஸ்சூ ஸ்சோல் இந்தே... அதா துனியா மெத்தே ஈஜி
ஹினா அலத்தூல் ஃபீ அரபிக் அதா ஸகில் இந்தே ஸ்சோல் மெத்தே சவி தப்தில் ? ....ம்
என்ன கேட்கிறே நீ இந்த உலகம் எப்போ வந்துச்சோ
இங்கே அதிலிருந்து அரபி இப்படித்தான் நீ கேட்கிறே எப்போ மாத்துனாங்கனு..... ம்
மாலீஷ்
மன்னிச்சுக்க
ஹூம் சீல் ஸையாராஹ்
ஹூம் வண்டியை எடு
அதன் பிறகு என்னை நல்ல விதமாக ரிப்போர்ட்
எழுதி இவன் போலீஸ் டெஸ்டுக்கு ரெடியா என்ற டெஸ்டு வைக்க அனுப்பி வைத்தான் அங்கு
வந்தவன் பாக்கிஸ்தானி அவன் அடி வயிறுவரை தாடி வளர்த்து இருந்தான் அவனுக்கு இந்த
மீசையை.... எப்படி பிடிக்கும் ? நீங்களே… சொல்லுங்க... என்னை
இப்படிப் படுத்துறாங்களே....
கார்கள் இன்னும் வரும்...
நண்பர் திரு.நெல்லைத்தமிழன் புகைப்படத்தில் குற்றம் காணாமல் இருக்கணும் இறைவா!
பதிலளிநீக்குஅப்போ படத்தில் ஏதோ தப்பு இருக்கிறது போல... வெயிட்டிங் ஃபார் நெல்லை!
நீக்குஸ்ரீராம் அது வேற ஒன்னுமில்லை படத்துல ரோட் போர்டுல கில்லர்ஜி ஹவுஸ் நு ஆரோ போட்டிருக்கார் பாருங்க...அதான்
நீக்குகீதா
ஹலோ அது நான் போடவில்லை நெடுஞ்சாலைத்துறை செய்தது.
நீக்கு(கூட்டத்துல... கட்டிச்சோற்றை அவுத்து விட்டீர்களே)
ஹாஅஹா. எப்படி சமாளிக்கிறீர்கள் தேவகோட்டையாரே.
பதிலளிநீக்குநம் ஆய்ப்பாடிப் பெண்களுக்கு இடம் வலம் தெரியாதாம்.
அதுபோல அவனைக் குழப்ப நீங்கள் நல்ல வேடம் போட்டீர்கள்.
எகிப்தியர்கள் வாழ்க,லைசென்சுக்கு வழி கொடுத்தார்களே.
வாங்க அம்மா ஆமாம் உண்மையில் இழுத்து விடாமல் இருந்ததற்கு நன்றி சொல்லணும்.
நீக்குபாவம் எகிப்து காரன். அவனை இப்படி குழப்பி விட்டீர்களே
பதிலளிநீக்குவாங்க நண்பரே இதுக்கு போயி கோபப்படலாமா ?
நீக்குஇம்புட்டு அவஸ்தையா?! நூறு ரூபா கொடுத்தா எங்க ஊரில் வேலை முடிஞ்சுடும்
பதிலளிநீக்குநூறு ரூபாயா எதுக்கு ?
நீக்குஎங்க, தேவகோட்டையில டீ வாங்கி கொடுத்து ஜோலியை முடிச்சுருவோம்...
அதானே... இதை நான் ஆமோதிக்கிறேன்!
நீக்குஎதை?! நூறு ரூபாயையா?! இல்ல டீயையா?! மொட்டையா சொல்லப்படாது
நீக்குஸ்ரீராம்ஜி ஆமோதித்தது உங்களது கருத்தைத்தான் சகோ.
நீக்குநூறு ரூபாயை!
நீக்குஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
அடிவயிறு வரை தாடியா? அடேங்கப்பா... என்ன எண்ணெய் உபயோகிக்கறாங்களாம்?
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி, நீலிபிருங்காதி தைலமாக இருக்குமோ...?
நீக்குஹா ஹா ஹா நான் கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல நினைத்தேன்...சொல்லிப்புட்டீங்க ரெண்டு பேரும்..
நீக்குகீதா
ஆனாலும் கொஞ்சம் ஓவர்தான் கில்லர்ஜி...உங்க வீட்டை இப்படியே நேரா போன்னு ஆரோ போட்டிருக்கீங்க தப்பு தப்பு ரோ யஷார் ரோ யமீன் ஆக்கும்...உங்க வீடு எந்தப்பக்கம் இருந்துச்சுன்னே உங்களுக்கு மறந்து போச்சாக்கும்...நான் சொல்லிக் கொடுக்க வேண்டியதா இருக்கு...இந்த்யாவுக்கு வந்து மறந்துட்டீங்க போல!!!
நீக்குகீதா
ஹி.. ஹி.. ஹி..
நீக்குநல்லா குழுப்பி விட்டு தப்பி விட்டிர்கள் பாராட்டுகள்
பதிலளிநீக்குகவிஞரின் பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஎன்னவொரு சாமர்த்தியம் ஜி... சூப்பர்...
பதிலளிநீக்குவாங்க ஜி என்ன செய்யிறது வாழணுமே...
நீக்குஒன்னுமே புரியல உலகத்திலே....!!
பதிலளிநீக்குவருக நண்பரே அரபு சொதப்பி விட்டதோ... ?
நீக்குநல்லாக் குழப்பி விட்டுட்டீங்க! ஒரு வழியா லைசென்ஸ் வாங்கிட்டீங்க இல்லையா? அந்தப் பாகிஸ்தானி என்ன பாடுபடப் போறான்னு தெரிஞ்சுக்க ஆவலுடன்! :)))))))))
பதிலளிநீக்குஅப்படீனாக்கா... நான் பட்டகஷ்டம் பெரிதாக தெரியவில்லையா ?
நீக்குஇஃகி, இஃகி, கில்லர்ஜி வீட்டுக்குப் போற வழியை எல்லாமும் போட்டிருக்காங்களே! :P:P:P:P
பதிலளிநீக்குஆமாம் துபாய் அரசு முறையானவங்கதான்.
நீக்குஅடிவயிறு வரை தாடிவைத்தவர், முகமெங்கம் மீசை வைத்தவர் இடமல்லவா மாட்டிக்கொண்டு முழித்திருப்பார்
பதிலளிநீக்குவாங்க நண்பரே எல்லா இடங்களிலும் எல்லாம் செல்லுமா ? வருகைக்கு நன்றி.
நீக்குசூப்பர்...
பதிலளிநீக்குஎப்போ மாத்தின்னு கேட்டு ஒரு பெரிய எஸ்கேப்..
சகோவின் வருகைக்கு நன்றி.
நீக்குதேவகோட்டையார் வீடு செல்லும் பாதை எல்லாம் போட்டு இருக்கே!
பதிலளிநீக்குஆமாம் சகோ துபாய் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி.
நீக்குஇடம், வலம் குழப்பம் செய்ததது அருமை.
பதிலளிநீக்குஅடுத்து வரும் பாகிஸ்தானி அன்பர் எப்படி இருந்தால் என்ன தேவகோட்டை ஜி
சாமாளித்து லைசன்ஸ் பெற்று இருப்பார்.
சூப்பராக ரோட்டில் கார் ஓட்டி போன காணொளிகள் முன்பு வந்ததே பதிவில்.
வருக சகோ தங்களது நம்பிக்கை வீண்போகாது.
நீக்குமுன்பு காணொளிகள் கண்டமைக்கு நன்றி
கில்லர்ஜி நீங்க குழப்பிவது அரபியை மட்டுமில்ல எங்களையும்தான் ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குநீங்கதான் ஞானியாச்சே... குழப்பம் வரக்கூடாதே...
நீக்குஅரபிக் நல்ல மொழி தான்.
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி.
நீக்குஎகிப்தியர் அதிகம் பேசுவர்...
பதிலளிநீக்குஅதே சமயம் தான் மட்டுமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு பேசுவர்..
அரபிகள் என்னதான் எகிப்தியர்களுடன் பழகினாலும் - வீட்டு வாசலோடு சரி!..
அந்தக் கதையெல்லாம் நிறைய இருக்கின்றன...
அவிங்களுக்கு நேரம் சரியில்லை எனில்
ஜி அவர்களின் தொடர் பதிவில் வந்து மாட்டிக் கொள்வார்கள்..
வாங்க ஜி உண்மையான வார்த்தை.
நீக்குஹா.. ஹா.. ஹா.. கடைசியில் இப்படி சொல்லிட்டீங்களே...
வண்டி ஓட்ட உரிமம் கிடைத்ததா
பதிலளிநீக்குவாங்க ஐயா தொடர்ந்து வருக...
நீக்குஅட.... இதைத்தான் படித்துவிட்டேனே.... கருத்திடவில்லை போலிருக்கு.
பதிலளிநீக்குஎனக்கு இந்த மாதிரி தைரியம் (சாமர்த்தியம்) கிடையாது. உண்மையாவே, பொய் பேசி அவனை நம்ப வச்சுட்டீங்களே... ரொம்ப தைரியசாலிதான்.
இந்த ஈஜிப்ஷியர்கள், அரபிக்கள் என்று சொல்லிக்கொண்டாலும், நிறைய டாக்டர், எஞ்சினீயர்கள் என்று தொழில் செய்தாலும், அவங்க சுமாரான திறமை உள்ளவங்கதான்.
//உண்மையாவே பொய்பேசி//
நீக்குஹா.. ஹா.. ஹா.. எஜிப்தியர்களைப்பற்றிய எனது கருத்து நண்பரே... ஒன்னாம் நம்பர் கூமுட்டைகள்.