U.A.E
Emirates Driving Company (Government) 2000-ல் தொடங்கியது இதில் தான் பழகி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க
முடியும் முன்பு பாக்கிஸ்தானியர்கள் வாடகை கார் வைத்து சாலைகளில் பழகிக் கொடுப்பார்கள்
பிறகு போலீஸ் டெஸ்ட்டில் பாஸானால் ? லைசென்ஸ் கிடைக்கும் இதில் விபத்துக்கள்
அதிகமாகிக் கொண்டே வருவதால் அரசாங்கமே இதைப் பழகிக் கொடுக்கும் நிலையை
பிரகடணப்படுத்தினார்கள் சட்ட திட்டங்கள் கடுமையாக வகுக்கப்பட்டு அபுதாபி நகரின்
வெளிப்புறத்தில் ஏக்கர் கணக்கில் ஒரு சிட்டியை உருவாக்கினார்கள்.
முதலில் நாம் பைல் ஓஃபன் செய்வதற்குள் ஆயிரம்
பிரச்சனைகள் உண்டு வேலையின் தகுதியின் அடிப்படையை வைத்தே ஃபைல் ஓஃபன் செய்ய
முடியும் பணம் கட்டினால் ஓஃபன் செய்திடலாம் என்பதெல்லாம் கிடையாது உதாரணம்
கினீனிங் வேலை, ஆஃபீஸ் பாய், சமையல்காரர்கள், கட்டடப் பணியாளர்கள் இப்படி சிலவகை
வேலையில் உள்ளவர்கள் பைல் திறக்க முடியாது ஃபைல் திறந்தால் ? ? ? உள்ளே நுழைந்து முதலில் தியரி க்ளாஸ் படித்து
எக்ஸாம் எழுதி பிறகுதான் ஸ்டேரிங்கில் கை வைக்கமுடியும் இதற்குள் மூன்று மாதங்கள்
கடந்து விடும் அதனுள் படிப்படியாக ஆறு நிலைகள் உள்ளது மூன்று நிலைகள்வரை கூடவே ஒரு
மாஸ்டரும் இருப்பார் பிறகு நாம் மட்டும் காரில் இருப்போம் மையத்தின் உயர்ந்த
டவரில் மாஸ்டர்கள் இருந்து கண்ணாடி வழியாக கவனித்துக்கொண்டு நமது காருக்குள்
இருக்கும் ஸ்பீக்கர் வழியே சொல்ல அதன்படியே ஓட்ட வேண்டும் உள்ளேயே ஸிக்னல்,
ரவுண்டப்போர்ட், ஃப்ரிட்ஜ், ரிவர்ஸ் பார்க்கிங் இவைகளை சரியாக செய்த பிறகுதான் ஏழாவது
நிலைக்கு வெளியே வரமுடியும் அப்பொழுது மீண்டும் மாஸ்டர் வருவார் இதற்குள் ஆறு மாதங்கள்
கடந்து விடும் அதன் பிறகும் வெளியே வந்தும் இவன் டெஸ்டுக்கு தயாரா ? என்பதை சோதிக்க ஒரு டெஸ்ட் நடத்தப்படும் அதில்
பெயிலானால் மீண்டும் க்ளாஸ் நீடிக்கப்படும்.
அதன் பிறகே போலீஸ் டெஸ்டுக்கு போகமுடியும்
காரில் இருப்பது நாமும் இரண்டு போலீஸ் மட்டுமே பின்னால் வேனில் டெஸ்டுக்காக
உள்ளவர்கள் வந்து கொண்டு இருப்பார்கள் போலீஸ்காரர்கள் இருவரும் ஏதோ வீட்டு
விசயத்தைப் பேசுவது போல் பேசிக்கொண்டே வருவார்கள் எல்லாமே நடிப்புதான் நமது
செயல்கள் அனைத்தும் நொடிக்கணக்காக கவனிப்பார்கள் என்பது பலருக்கும் தெரியாது இதன்
காரணமாகவே அதிகம் பேர் பெயிலாகின்றார்கள் அதிக பட்சமாக போனால் அவர்களுடன் நாம்
காருக்குள்ளிருந்து ஓட்டிக்காண்பிப்பது பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை
இருக்கலாம் இதற்குள் நம்மை கணித்து விடுவார்கள் இது தேறுமா ? தேறாதா ? என்று இதற்குள் ஒரு வருடம் முடிந்து விடும் ஊரில்
பதினைந்து வருடம் லாரி ஓட்டியவர் இங்கு வந்து பெயிலாகி விடுவார் காரில்
உட்கார்ந்து முதன் முதலில் ஸ்டேரிங் பிடித்தவர் பாஸாகி விடுவார் இது நேரம் என்று
நாம் சொல்லக்கூடாது அவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் நுண்ணியமான சில விடயங்களை
நாம் சரியாக கொடுத்தாக வேண்டும் இல்லையெனில் நாம் லைசென்ஸ் எடுப்பது எவ்வளவு காலம்
நீடிக்கும் என்பதையும், அதன் செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதையும் சொல்ல முடியாது.
ஒரு போலீஸ் சொல்வார் பார்க்கிங்கில் நிறுத்து
உடனே வரும் பார்க்கிங்கில் நிறுத்தி விடுவான் நிறுத்தியவுடன் கேட்பார் எங்கே
நிறுத்தினே ? நீ சொன்னே இது என்ன பார்க்கிங் ? பார்த்தால் அது பேருந்து பார்க்கிங்காக
இருக்கும் இறங்கு அவனுக்குத் தெரிந்து விடும் சங்கு
ஒரு போலீஸ் சொல்வார் வேகமாக போ இவனும் போலீஸே
சொல்லிடுச்சே... எண்பதிலிருந்தவன் நூறில் அழுத்துவான் காரை பார்க்கிங்கில் நிறுத்து.
நிறுத்துவான் எவ்வளவு வேகத்துலே போனே ? அவன் சொல்வான் அந்த இடத்தில் எவ்வளவு வேகம் போட்டு இருந்துச்சு ? இவன் பார்த்திருக்க மாட்டான். இறங்கு
அவனுக்குத் தெரிந்து விடும் சங்கு
கார் போய்க்கொண்டே இருக்கும்போது ஒரு போலீல்
சொல்வார் அந்த ஸிக்னலில் யூ டர்ன் அடி இவனும் யூ டர்ன் அடித்து விடுவான் காரை
பார்க்கிங்கில் நிறுத்து நிறுத்தவும் கேட்பார் ஏன் யூ டர்ன் அடிச்சே ? நீங்கதானே சொன்னீங்க... அந்த ஸிக்னலில் யூ டர்ன்
அடிக்கலாமா ? ஸிம்ப்பிள் பார்த்தாயா ? இறங்கு அவனுக்குத் தெரிந்து விடும் சங்கு
கார் போய்க்கொண்டே இருக்கும் பின்புறம்
கார்கள் வராத சூழலறிந்து ஒரு போலீஸ் சொல்வார் சரி போதும் உடனே நிறுத்து. பயந்த
சுபாவம் உள்ளவன் போலீஸ் சொன்னார் என்பதற்காக சட்டென நிறுத்தி விடுவான் உடன்
போலீஸ்காரர் டஃபுள்ஸ் இண்டிக்கேட்டர் பட்டனை அழுத்தி விட்டு கேட்பார் ஏன் நிறுத்தினே ? நீங்கதானே சொன்னீங்க அதுக்காக நடுரோட்டுலயா ? இறங்கு அவனுக்குத் தெரிந்து விடும் சங்கு
இப்படி பல வகையான சோதனைகளை நாம் சந்திக்க வேண்டியது
வரும் அதுவும் சில நேரங்களில் ஆங்கிலம் பேசத்தெரியாத போலீஸும், அரபு பேசத்தெரியாத
இந்தியனும் மாட்டிக் கொண்டால் இந்த காமினேஷனைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எனது
நண்பரொருவர் இந்தியாவில் பத்து வருட அனுபவசாலி மெக்கானிக்கர், மிகத் திறமையான
டிரைவர் சவூதி அரேபியாவிலும் டிரைவராக ஐந்து வருடம் இருந்து லைசென்ஸ் காலாவதியாகி
தொலைத்தும் விட்டவர் அரபு நன்றாக பேசுவார் அவர் டிரைவ் செய்வதை பார்த்துக்கொண்டே
இருக்கலாம் அவ்வளவு அழகு டெஸ்ட்டுக்குப் போகும்முன் டிரைவிங்கில் அவரைவிட நான்
ஜூனியரானாலும் என்னிடமும் யோசனை கேட்டுக்கொண்டு போனார்.
01.
உட்கார்ந்ததும் பெல்ட்டை
மாட்ட வேண்டும்
02. உட்காரும் சீட் சரியாக
இருந்தாலும் சும்மாக்காச்சுக்கும் சரி செய்ய வேண்டும்
03. பின்புறத்தை காணும் கண்ணாடி
சரியாக இருந்தாலும் சரி செய்வதுபோல் பிடித்து திருகி மீண்டும் நீ பார்ப்பதுபோல்
வைக்க வேண்டும்.
04. சைடு கண்ணாடியை ஆட்டோ
மேட்டிக் பட்டன் மூலம் சரி செய்ய வேண்டும்.
05.
ஆட்டோ மேட்டிக் பட்டன்
இல்லையெனில் கைகளால் உனது புறத்தை திருகி சரி செய்யவேண்டும்.
06.
மறுபுறத்தை போலீஸ்காரரையே
திருகச்சொல்லி சரி செய்ய வேண்டும்.
07. அவரிடம் வேலை சொல்வதா என்று
நீ அவர்மீது படுத்துக்கொண்டு எட்டித் திருககூடாது.
08. கார் போய்க்கொண்டு
இருக்கும்போது அடிக்கடி இரண்டு புறமும் பார்க்க வேண்டும்.
09. பின்புறத்தையும் பார்க்கா
விட்டாலும் பார்ப்பதுபோல் நடிக்க வேண்டும்
10.
நிறுத்தச் சொல்லும் இடம்
சரியானதா ? என்பதை கவனித்து நிறுத்த
வேண்டும்.
11.
எந்த இடத்தில் வேகம் எந்த
அளவோ அதன்படியே போக வேண்டும்.
12. வேகமாக போகச் சொன்னாலும்
அளவை போலீஸாரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
13.
ஸிக்னலில் நிற்கும் பொழுது
கண்கள் ஸிக்னலில் இருக்க வேண்டும்.
14. போலீஸாரிடம் பேசும்போது
அவர்களின் திருமுகத்தைப் பார்க்ககூடாது.
15. ரவுண்டப் போர்டில் சரியாக
நாற்பது கி.மீ. வேகத்துக்கு மேல் போககூடாது.
16.
ஸ்டேரிங்கை ஸ்டைலாக ஒரு
கையில் பிடித்திருக்க கூடாது.
17.
பயந்தாலும் பயத்தை
முகத்தில் காட்டக்கூடாது.
18.
முகத்தை இஞ்சி தின்ன குரங்கு போல் வைத்திருக்க கூடாது.
எல்லாம் பக்குவமாக பதினெட்டாம்படி கருப்பர் துணை
செய்வார் என்று வாழ்த்தி அனுப்பினேன் கார் போய்க்கொண்டு இருந்திருக்கின்றது
வழக்கத்தைவிட அதிகமான நேரம் ஓட்டச்சொல்லி இருக்கின்றார்கள் கார் ஓட்டிக்கொண்டே
நண்பரும் சவூதியின் கந்த புராணமெல்லாம் போலீஸிடம் பேசிக்கொண்டே போய் இருக்கின்றார்
காரணம் வாய் காதுவரை இருக்கும் சரி போதும் நிறுத்து என போலீஸ் சொல்ல, சரியான
பார்க்கிங்கில் நிறுத்தி இருக்கின்றார் போலீஸ்காரர் கையில் பிடித்து இழுத்து இது
எதற்கு ? என்று நண்பரிடம் கேட்டு இருக்கின்றார் ‘’ஙே’’ இறங்கு போலீஸ்காரர்
கையில் பிடித்திருந்தது நண்பரின் முதுகுக்குப் பின்னால் மாட்டாமல் மடிந்து கிடந்த
பெல்ட். சங்கு
கார்கள் இன்னும் வரும்....
ஆஹா... எவ்வளவு கட்டுப்பாடுகள்? அப்படி இருந்தால்தான் உருப்படும்.
பதிலளிநீக்குவருக ஜி உண்மைதான் சாத்தியமா ?
நீக்குஇந்தியாவிலும் இப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் வந்தால் நடனராயிருக்கும். ஹு...ம்...
பதிலளிநீக்குநமது நிலை இப்படி இல்லையே ஜி
நீக்குஇப்படியொரு நகைச்சுவையுடன் ஓட்டுனர் வகுப்பு எடுத்திருப்பது
பதிலளிநீக்குஇந்த உலகத்திலேயே தாங்கள் ஒருவர் தான் என்பது எனது பணிவான கருத்து...
அதிலும்
இந்த பதினெட்டுப் படிகளில் ஏழாவது படி அருமையான நகைச்சுவை..
அதில் தவறினால் ஏழரைதான் என்பது உலகறிந்த உண்மை...
அப்படி போலீஸ் மீது விழுந்து புரள்வதாக இருந்தால்
ஓரளவுக்காவது நல்ல நறுமணம் பூசியிருத்தல் வேண்டும்..
பஹூர் எனில் உத்தமம்.. ஆனால் நல்ல பஹூர் கிடைப்பது அரிது..
பதினெட்டாவது படியின் தரிசனம் அபாரம்...
இஞ்சி தின்னா விட்டாலும் மூஞ்சி அப்படித்தான் இருக்கும் என்றால்
என்னதான் செய்யமுடியும்!?...
அன்பின் ஜி
நீக்குதங்களுக்கு தெரியாத விடயங்களை நான் சொல்லப்போவது இல்லை.
தரிசனம் கண்டமைக்கு நன்றி
மூஞ்சி அமைவது மூத்தோர் கொடுத்த கொடையே....
ஒரு நாட்டின் சட்டம் எப்படி உள்ளது என்பதை போக்குவரத்து விதிகள் கொண்டு சொல்லாம் என்பார்கள். நீங்கள் அழகாய் சொல்லி விளக்கி உள்ளீர்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎன்னென்ன தவறுகள் செய்வார்கள் என்பதை கற்றுக்கொடுத்ததே நாம் தான் ஜி...! ஹா... ஹா...
பதிலளிநீக்குஆமாம் ஜி இதுவும் உண்மையே வருகைக்கு நன்றி.
நீக்குஆஆஆஆஆஆஆ மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)).. சே..சே பழக்க தோசத்தில வந்திட்டுதூ:))..
பதிலளிநீக்குஅருமை அருமை. இதே ரூல்ஸ்தான் இங்கும்.. இவை எல்லா இடமும் பொது ரூல்ஸ்களேதான் போல, ஆனா அங்கு பொலீஸ் என்கிறீங்க.. இங்கு அதற்குரிய இன்ஸ்டக்ரர் நமோடு கூட இருப்பார்ர்.. அவர் முகத்தில்தான் சோதனை ரைம் எனில்.. ஈ ஆடாது.. ஏதோ கொலைக் குற்றத்ட்தில் நம்மைப் பிடித்துப் போவர் போலவே இருப்பார்.. முடிவில் சிரிச்சாரெனில் ஆஹா பாஸாகிட்டோம் போல என அர்த்தம்:))..
நீங்க சொன்ன 17, 18 பற்றி இங்கு கவலை இருப்பதாக தெரியவில்லை.
வருக இங்கு போலீஸ் முன்னிலையில்தான் தேர்வு நடக்கும்.
நீக்குஇந்த போலீஸ்காரர்கள் அழகாக சிரித்து பேசுவார்கள் காரணம் நண்பர்கள் போல்தான், தவறிழைத்தால் எதிரியே...
17,18 பிரச்சனை இல்லையா ? பரவாயில்லையே....
இங்கு டெஸ்டுக்கு போகும்போது ப்யூட்டி பார்லருக்கு போய் விட்டுதான் போவார்கள். (எனக்கு அவசியமில்லை)
கிளீனிங் வேலை, சமையற்காரர்கள், ஆபீஸ் உதவியாளர்கள், கட்டிடப் பணியாளர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க அப்ளை செய்ய முடியாது - இது படிக்கறவங்களுக்கு குழப்பமா இருக்கும்.
பதிலளிநீக்குபொதுவா மேலே சொன்னவர்கள் 600 லிருந்து 1000 திர்ஹாம் வரைதான் சம்பளம் வாங்குவாங்க. கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஆனால் டிரைவிங் லைசன்ஸ் இருந்து ஓட்டுநராக வேலை கிடைத்தாலோ இல்லை இருக்கும் வேலையிலேயே டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலோ, அதுக்கு சர்வ சாதாரணமாக 500-1000 திர்ஹாம் அதிக சம்பளம் கிடைக்கும். அதனால இந்த மாதிரி வேலைக்கு வர்றவங்க டிரைவிங் லைசன்ஸ் எடுத்துடறாங்க என்பதாலதான் ரொம்பக் கட்டுப்பாடு கொண்டுவந்தாங்க.
நல்ல படித்த பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கே, 2000-2007 வரை, டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது சில சமயங்களில் 1 முதல் 1 1/2 வருடங்கள் ஆகும். அதுக்கு 6000-7000 திர்ஹாம் செலவழித்தவர்களை எல்லாம் (ஒவ்வொரு முறை டிரைவிங் டெஸ்ட் பெயிலானால், இத்தனை மணி நேரம் ஓட்டும் பயிற்சி செய்துவிட்டுத்தான் திரும்பவும் டெஸ்டுக்கு அப்ளை செய்ய முடியும். அப்படி ஒரு தடவை பெயிலானால் கூடுதலாக 1000-1500 திர்ஹாம் செலவழியும்).
டிரைவிங் டெஸ்டுல எனக்குத் தெரிந்த வரை, லோகல், பெண்கள், ஏசியன்ஸ் என்ற வேறுபாடுகளெல்லாம் பஹ்ரைனில், எமிரேட்சில் பார்த்ததில்லை.
கிட்டத்தட்ட நம்ம ஊர் போல் லைசன்ஸ் தருபவர்கள் சவுதி அரேபியா மட்டும்தான் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. அவர்கள்தான் நல்லா டிரைவ் பண்ணமாட்டாங்க.
நம்ம ஊரில் இருப்பவர்களுக்கு வண்டி ஓட்டவே தெரியாது என்பது என் எண்ணம். பொதுவா இங்க எல்லாருக்கும் ரோடே, தன் சொந்த உபயோகத்துக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு, எந்தச் சட்டத்தையும் கடைபிடிக்க மாட்டாங்க. சிக்னல், லேன் டிசிப்பிளின், கார் எங்க போகணும், டூ வீலர் எங்க போகணும், வண்டியில் சிக்னல் எதுக்கு இருக்கு, ரோடில் யாருக்கு முன்னுரிமை என்று எதையுமே அறியாதவர்கள்தான் இந்த ஊரில் லைசன்ஸ் வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் எல்லாரும் கோபப்படுவாங்க. ஹாஹாஹா.
கில்லர்ஜி நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க சொல்வதற்கு முன்னால் நானே நிறையச் சொல்லக்கூடாதுன்னு நிறுத்திக்கிறேன்.
வருக தமிழரே...
நீக்குதங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.
சாதாரண வேலையிலிருந்து கம்பெனி லட்டரின் பெயரில் ஃபைல் ஓபன் செய்தவர்களும் உண்டுதான்.
சவூதியர்கள் காட்டுத்தனமாக வண்டி ஓட்டுபவர்கள், அவர்கள் எமராத்துக்குள் அவர்களது காரில் வந்தாலுமு இப்படித்தான். அவர்களால் எமிரேட்ஸ் போலீஸுக்கு தலைவலியே...
மீண்டும் நன்றி தொடர்பவமைக்கு...
உங்கள் தொடர் பதிவு முடியும்போது என் அனுபவம் எழுதறேன். நல்ல தேசங்கள்ல, அதாவது சட்டம் கடைபிடிக்கப்படும் தேசங்களில் இருந்துட்டு தமிழகம் வரும்போது, இங்குள்ள நடைமுறைகளைக் கண்டு வெறுப்பு வருவது சகஜம்தான்... எந்த ஊரு என்றாலும்.. என்பது பாடுவதற்கு நல்லா இருக்கும்..
நீக்குவருக நண்பரே தங்களது கருத்தை கண்டிப்பாக எழுதுங்கள்.
நீக்குஇப்படி எல்லாம் கட்டுப்பாடு நம் நாட்டிலும் கொண்டு வந்தால் உடனே "ஒழிக!" கோஷம் தான் எழும். கார் ஓட்டும் தனியுரிமையில் தலையிடும் அரசேனு தொலைக்காட்சி சானல்களில் பட்டிமன்றங்கள்/விவாதங்கள் நடைபெறும். இப்போவே மோட்டார் வாகனத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்துத் தானே எதிர்க்கட்சிகள் "பந்த்" நடத்தின.
பதிலளிநீக்குஆமாம் நாம் அரசை குற்றம் சுமற்றுமுன் அதற்கு நமக்கு தகுதியுண்டா ? என்பதை சற்று ஆலோசிக்கணும்.
நீக்குகில்லர்ஜி... இது சத்தியமான வார்த்தை. ரோடில், பெரும்பாலானவர்கள் ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்பதே இல்லை. ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிடணும், ஆனா இவங்க அதுக்கு வழி விடுவதே, அதன் பின்னால் வேகமாகச் செல்லத்தான். ஆம்புலன்ஸும் எமெர்ஜென்சி இருந்தால் ஒழிய சத்தம் போட்டுக்கொண்டு வரக்கூடாது (டிராபிக் விலக). இதை மற்ற நாடுகளில் கடைபிடிக்கிறார்கள். இங்கு கடைபிடிப்பதுபோல தெரியலை.
நீக்குஆனால், வீட்டுக்கு வந்துவிட்டு, இந்திய அரசியலை நார் நாராக் கிழித்து, அரசியல்வாதி மோசம் என்று இவங்கதான் பேசுவாங்க. முதல்ல சட்டத்தைக் கடைபிடிக்காமல் நாம் இருக்கிறோமே என்று நினைத்தால்தானே..
உண்மையே மற்ற நாடுகளுக்கு போன இந்தியனும் கடைப்பிடிக்கின்றான், அவனே இந்தியா வரும்போது மறந்து விடுகின்றான். காரணம் சட்டத்தின் வலிமை.
நீக்குமனிதநேயமும் மறைந்து போகிறது.
என் மகன் சொல்லி நான் அறிந்தது ட்ரைவிங் லைசென்ஸ் வாங்குவதுகஷ்டமென்று அவன் முதல் அட்டெம்ப்டிலேயே லைசென்ஸ் வாங்கி இருந்தான்
பதிலளிநீக்குவாங்க ஐயா முதல் டெஸ்டிலேயே பாஸாகுவது மிகவும் திறமையே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகார் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது பற்றி நல்ல விரிவான அலசல்கள். பயனுள்ள தகவல்களாக தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.
நீக்குதுபாயில் லைசென்ஸ் வாங்க மகனுக்கும், மருமகளுக்கும் 6 மாதங்கள் ஆச்சு.
பதிலளிநீக்குஅபுதாபியில் இன்னும் சிரமமோ. மகனை விட மருமகள் வெகு அழகாக ஓட்டுவார்.
நீங்கள் குறித்து வைத்துள்ள 18 படிகளும் ஒரு பாடமாகவே இருக்கிறது. இதப் படிப்பவர்கள் நலம் பெறட்டும்.
எல்லோருக்கும் சங்கு ஊதாமல் லைசென்ஸ் கிடைக்கட்டும்.
மிகப் பிரமாதமான நகைச்சுவைப் பதிவு. கடவுளுக்கு நன்றி நான் அபுதாபியில் வண்டி ஓட்டாமல் காப்பாற்றப் பட்டதற்காக.
துபாய்/அபுதாபி சாலையில் பறக்கும் அராபிய வண்டிகளைப் பார்த்திருக்கிறேன்.
முக்கால் வாசி விபத்துகளுக்கு,முக்கியமாக ஷே சாயது ரோடில்...அவர்களே காரணம்.
வாங்க அம்மா அபுதாபியில் லைசென்ஸ் எடுப்பது ஒரு சாதனைதான் காரணம் இந்த லைசென்ஸுக்கு உலக அளவில் மதிப்பு இருக்கிறது.
நீக்குநானும்கூட இதை வைத்துதான் ஜெர்மனியில் ரெண்ட்கார் எடுத்து ஓட்டினேன்.
கார் டிரைவிங்க் லைசென்ஸ் பெற அரசே செயல்படுவது அருமை.
பதிலளிநீக்கு18 நல்லா இருக்கிறது.
அது அதான் 12 படி கருப்பண்ண சாமி வந்தாரா பதிவில்.
முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொள்வது நல்லதுதான்.
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வைத்துக் கொண்டால் யாருக்குதான் பிடிக்கும்?
வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும், பதினெட்டாம்படி கருப்பரை ரசித்தமைக்கும் நன்றி.
நீக்குஇந்தியாவைத் தவிர பெரும்பாலான வெளிநாடுகளில் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையானவை. சிங்கப்பூரிலும் கூட ரொம்பவே கடுமை. 18 படிகள் செம...
பதிலளிநீக்குஇந்தியாவிலும் இப்படி வந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!!!!ஹூம் பெருமூச்சுதான்...
கீதா
இந்தியாவில் இப்படி சட்டங்கள் வருவதற்கு முதலில் மக்கள் நல்ல சிந்தனைக்குள் வரவேண்டும்.
நீக்குஇதற்கு சாத்தியங்கள் குறைவாகவே தோன்றுகிறது.
படிக்கப் படிக்க வியப்புதான் கூடுகிறது நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே இன்னும் வியப்புகள் இருக்கின்றன...
நீக்குதலைப்பிற்கும் புகைப்படத்திற்கும் உள்ள தொடர்பை நினைத்து சற்றே குழம்பிப்போனேன். பின்னர் தெளிவானேன்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஹா.. ஹா.. குழப்பி விட்டு தெளிவாக்குவதே நமது பாணி.
பணம் கொடுத்தால்லாம் ஃபைல் ஓப்பன் ஆகாதுன்னா அதுலாம் ஒரு ஊரா?!
பதிலளிநீக்குபத்து ரூபாய்க்கு நாங்கலாம் நாட்டையே வாரி கொடுத்துடுவோமே!
வாங்க சகோ அடுத்து மாமா ஆட்சிக்கு வந்தால் நீங்கதான் நிதி அமைச்சர்.
நீக்குஅருமையா வகுப்பு எடுத்தீர்கள் பாராட்டுகள்
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கு நன்றி.
நீக்குஅது என்ன நண்பரே!.இஞ்சி தின்ற குரங்கு முகம்..! நான் பார்த்ததே இல்லை! அந்த முகம் எப்படி இருக்கும்..???
பதிலளிநீக்குமளிகைகடையில் 50 கிராம் இஞ்சி வாங்கி அழகர்கோயில் போயி முருகனை தரிசித்து விட்டு வழியில் நிற்கும் குரங்குக்கு இரண்டு வாழைப்பழத்தோடு இஞ்சியவும் கொடுத்துப் பாருங்கள் நண்பரே...
நீக்குஅருமையான பதிர்வு.
பதிலளிநீக்குசுபா ரவீந்திரன் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஎத்தனை கட்டுப்பாடுகள் - இப்படி இருப்பது தான் நல்லது. இங்கே ஓட்டிக் காண்பிக்காமலேயே கூட லைசன்ஸ் எடுத்து விட முடிகிறது - காசு கொடுத்தால் வீட்டுக்கே வந்து லைசன்ஸ் கொடுத்துவிடுவார்கள்! :(
பதிலளிநீக்குஜி துபாயில் இருந்துகொண்டே இந்திய லைசென்ஸை கூரியரில் வாங்குகிறான் தெரியுமா ?
நீக்குதுபாயில் ஓட்டுனர் பயிற்சி மற்றும் லைசென்ஸ் வழங்குவது பற்றிய மிக விரிவான பதிவு. லைசென்ஸ் பெற்றவர் சாலை விதிகளை மீறினால் கடுமையான அபராதமும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல பதிவு.
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான் ராடார் அடித்தால் பழைய காரெனில் வண்டியை நிறுத்தி விட்டு போகும் நிலையில் இருக்கும் அபராததொகை.
நீக்கு