தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 01, 2018

நீயும், நானும் பொணம்டா...



இப்பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...

னக்கு ஃபைல் ஓஃபன் செய்ய டிராஃபிக் டிபார்ட்மெண்ட் போனேன் எனது பொச்ஷிசன் Filing Clerk என்பதால் பிரச்சனை இல்லாமல் வேலை முடிந்தது பணத்தைக் கட்டி தியரி க்ளாஸ் போனேன் எக்ஸாமில் பாஸாகினேன் ஸ்கூலின் உள்ளேயே ஆறு நிலைகளையும் பழகி கொடுத்தது பாக்கிஸ்தானியரும், எஜித்தியரும் எல்லாம் கடந்து வெளியே பழகிக் கொடுக்க மாஸ்டரோடு வந்தேன்



அந்த மாஸ்டர் மலையாளி பொதுவாகவே நான் மலையாளிகளை துரும்பு போலத்தான் நினைப்பேன் இது எனது அகம்பாவம் என்று நினைத்து விடாதீர்கள் இதற்கு அடிப்படை காரணம் அவர்களின் ஒட்டு மொத்த சமூகமும் தமிழர்களை புழுவென நினைப்பது, பார்ப்பது, இதன் பொதுநல கோபமே தவிர தனிப்பட்ட கோபம் அல்ல ! இது தமிழ் நாட்டில் இருக்கும் பலருக்கும் புரிவதில்லை. அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் இதை ஒத்துக் கொள்வார்கள் என்பது எமது திண்ணமான எண்ணம். அந்த மாஸ்டரின் பெயர் இன்னும் நினைவில் இருக்கிறது சந்தேகமெனில் டாக்குமெண்ட் இருக்கிறது அவரின் பெயர் செங்கல் இஸ்மாயில் ஏனோ தெரியவில்லை முதல் நாளே எனக்கும் அவருக்கும் ஏழரை தொடங்கியது காரணம்


நீ ஏன் மீசையை இப்படி வைத்திருக்கின்றாய் ?

நண்பர்களே எனக்கு எப்படி இருந்திருக்கும் ? இவனையும் நமது குருந்தன் வாத்தியார் மாதிரிதானே மதிப்பளிக்க வேண்டும் என்று பொறுமையாக போனேன் அவன் எனக்கு சொல்லிக் கொடுப்பதைவிட சுற்றிச்சுற்றி என்னைப்பற்றியே கேட்டுக்கொண்டு இருந்தான் எனது அழகிய முகத்தையே பார்த்துக் கொண்டு எனது சிந்தனையை குழப்பினான் இவனிடம் பழகினால் நாம் போலீஸ் தேர்வில் தேறுவோமா ? இரண்டாம்நாள் ரவுண்டப் போர்டில் நான் ஏற்கனவே சொன்னதுபோல் நாற்பது கி.மீ. வேகத்தில்தான் போகவேண்டும் ஒரு வாகனம் ரவுண்டப் போர்டில் வந்து கொண்டு இருக்கும் பொழுது நான்கு புறங்களிலிருந்தும் ரவுண்டப் போர்டுக்குள் ஏறும் வாகனங்கள் அவைகள் நம்மைக் கடந்த பிறகுதான் உள்ளே ஏறவேண்டும் இது விதிமுறை அதுவொரு அவுட்டோர் ஏரியா நான் ரவுண்டப் போர்டில் வந்து கொண்டு இருக்கும் பொழுது ரயில் பெட்டி நீளமிருக்கும் ஒரு கண்ட்டெய்னர்க்காரன் ஏறி விட்டான் மொத்தமே இந்த இரண்டு வாகனங்கள் மட்டுமே நான் பின்புறத்தில் ஏதும் வாகனம் வரவில்லை என்பதை அறிந்து சட்டென பிரேக் அடித்து நிறுத்தி விட்டேன்.


(ரவுண்டப் போர்டில் வாகனத்தை நிறுத்தக் கூடாது இதுவும் விதிமுறை இது எனக்கும் நன்றாகத் தெரியும் அதேநேரம் டிராஃபிக் அதிகமாக இருந்தால் வாகனங்கள் ஊர்ந்து கொண்டு போகும் என்பது வேறு விடயம்)


நண்பர்களே.. நான் அன்று அப்படி நிறுத்தாமலிருந்தால் இன்று தாங்கள் இந்த பதிவைப் படித்துக் கொண்டு இருக்க முடியாது பொரித்த அப்பளம் தெரியுமுள்ள அதை திருச்செந்தூர் ஏரியாவில் முளைத்த வாழை இலையில் வச்சு உள்ளங்கையாலே அடிச்சுப்பாருங்க அப்படி ஆகியிருப்போம் காரும், கில்லர்ஜியும், செங்கலும் கண்டெய்ணர்க்காரன் செய்தது மிகப்பெரிய தவறு அதேநேரம் போலீஸ் பார்த்திருந்தால் அவனுடைய லைசென்ஸையே கேன்ஷல் செய்யும் நிலைகூட வரலாம் கண்டெய்னர்க்காரன் இடதுபுறம் போக செங்கல் கத்தினான் அவனைப்புடி ஓவர்டேக் அடி நானும் அமுக்கி அவனது கண்டெய்னருக்கு முன் போகவும் செங்கல் டபுள் இண்டிக்கேட்டர் பட்டனை அமுக்கி விட்டு அப்படியே நிறுத்து என்றான் நிற்கவும் இறங்கிப்போய் பஞ்சாபிக்காரனை கண்டபடி பேசி போலீஸுக்கு கால் பண்ணிடுவேன் என மிரட்ட அவனுக்கும் தெரியும் தனது தவறு போலீஸ் வந்தால் டிரைவிங் ஸ்கூல் காருக்குதான் முன்னுரிமை ஆகவே மன்னிப்பு கேட்டுக்கொண்டான் பிறகு காருக்கு வந்து எடு என்றவன் பார்க்கிங்கில் நிறுத்து என்றான்.


நீ தியரி க்ளாஸுல என்ன படிச்சே ?

சொல்லிக் கொடுத்ததை படிச்சேன்.

ரவுண்டப் போர்டில் காரை நிறுத்தலாமா ?

கூடாது.

அப்ப ஏன் நிறுத்தினே ?

நான் நிறுத்தலைனா... அவன் இடிச்சுருப்பான்.

இடிச்சான்னா.... அவனை போலீஸை வரவச்சு அவனை உள்ளே வச்சுருப்பேன்.

மீசை துடித்தது அவனை எனது ஆசான் குருந்தன் வாத்தியார் இடத்தில் வைத்திருந்ததால் மனம் பொறுமை, பொறுமை என்றது நாம் ஒரு மணிநேர க்ளாஸுக்கு நூறு திர்ஹாம்ஸ் கட்டியதில் இந்த இடத்தில் மட்டும் கால்மணி நேரத்தைக் கடத்தி விட்டானே... இவனை என்ன செய்யலாம் ?     

சொல்லு ?
முடிவா சொல்லு உனக்கு இப்ப என்ன வேணும் ?
என்ன வேணுமா... ரவுண்டப் போர்டில் காரை ஏன் நிறுத்தினே ?

நண்பர்களே நான் எப்பொழுதும் மலையாளிகளிடம் மலையாளத்தில்தான் பேசுவேன் அவர்கள் தமிழில் பேசினாலும் நான் ஒத்துப் போகமாட்டேன் இதனைப்பற்றி விரிவாக வேறு பதிவில் காண்போம் இது ஆரம்பகாலம் தொட்டு உள்ள பழக்கம் பொதுவாக நான் ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து யாரையும் திட்டமாட்டேன் சண்டை வந்தாலும் அதையும் நாகரீகமாகத்தான் திட்டுவேன் அதேநேரம் மலையாளத்தில் திட்டுவதாய் இருந்தால்  அறுவெருப்பான வார்த்தைகளைக்கூட வைத்து வசைபாடி விடுவேன் சபை நாகரீகம் கருதி சில வார்த்தைகளை தவிர்த்து நான் அவனிடம் பேசியதையே கீழே தமிழில் தருகிறேன் காரணம் அவனுக்கும் எனக்கும் ஒரே வயதுதான் இருக்கும் அவ்வளவு கோபம் நேற்றே மீசையைக் குறித்து கேட்டு விட்டான் அதன் பிரதிபலிப்பு இன்று எதிரொலித்தது


ஏண்டா முட்டாப்பயலே... உனக்கு அறிவு இருக்காடா ? எனக்கு நீ நன்றிதான்டா சொல்லணும் நான் பிரேக் அடிக்கலைனா... இந்நேரம் நீயும், நானும் பொணம்டா ஐ..... தலைப்பு வந்துடுத்து அப்புறம் நீ எப்படி பஞ்சாபியை புடுங்குவே ? எனக்குத் தெரியாதா ? ரவுண்டப் போர்டுல நிறுத்தக் கூடாதுனு... என்னைச் சொன்னியே நடுரோட்டுலே காரை அப்படியே நிறுத்தச் சொன்னியே... அது சரியா ? எவன்டா உனக்கு இந்த மாஸ்டர் வேலை கொடுத்தது வெட்டிக்........ பணத்தைக் கட்டி படிக்க வந்தா கால்மணி நேரத்தை இங்கேயே ஓட்டிட்டே பாருடா டயம் முடிஞ்சு போச்சு நாளைக்கு யேங்கூட வந்தே... நான் செத்தாலும் பரவாயில்லைனு கண்டெய்னரைப் பார்த்து அடியிலே சொருகிடுவேன் ஜாக்கிரதை.

விருட்டென வண்டியை கிளப்பிக் கொண்டு வந்து ஸ்கூலில் வந்து நிறுத்தினேன் அதுவரை அவன் என்னுடன் பேசவில்லை பொதுவாக மலையாளிகள் நல்ல அறிவாளிகள் எங்கும் பிழைத்துக் கொள்வார்கள் அதனால்தானே தமிழ்நாட்டில் அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றார்கள். அதேநேரம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அதனால்தானே பதினொரு மலையாளிகளும் நானும் ஒரே ஃப்ளாட்டில் ஆறு வருடம் வசித்தோம் நான் இறங்கி நேராக மேனேஜர் அறையை கேட்டு மூன்றாவது மாடியில் இருந்த அரபியை பார்த்தேன் உட்கார் என்றார் நடந்த அனைத்தையும் கடகடவென சொன்னேன் நான் செய்தது தவறுதான் ஆனால் அந்த தவறை நான் செய்யலைனா... இந்நேரம் காரும், நானும் அவனும் மவுத் என்றேன்.

உடன் கால் செய்து வரவைத்தார் அவன் நின்று கொண்டு இருந்தான் காரணம் இவர் அவனுக்குத்தானே மேனேஜர் எனக்கு இல்லையே... எல்லாவற்றையும் அவனிடம் கேட்டவர் அவனைத்தான் ஏசினார் இப்படிச் செய்தால் எப்படி படிக்க வருவார்கள் ? உனக்கு நாளைக்கு இவன் வேண்டுமா ? எனக்கேட்டார் வேண்டாம் வேறு அரபு பேசத்தெரிந்த மாஸ்டரை போடுங்கள் அவன் என்னை முறைத்துக் கொண்டே போனான்.... போடா லைசென்ஸ் வாங்கிட்டு உன்னை வச்சுக்கிறேன்டா.... மனசு பேசியது மறுநாள் முதல் எஜிப்தியன் ஒருவன் வந்தான் எனக்கு வாய்த்த எஜிப்தியன் மிகமிகத் திறமைசாலி வாய்தான் காதுவரை இருந்தது ஆனால் எனக்கு வாய் பிடறி வரை என்பதை அவன் அறியவில்லையே... திரிசூலம் சிவாஜி பாணியில் படிக்கவும்...

கார்கள் இன்னும் வரும்....

42 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான அனுபவங்கள் கில்லர்ஜி. மலையாளிகள் பற்றிய உங்கள் பொது அபிப்பிராயமும் அறிந்தேன். அவரை நன்றாகவே மடக்கியதோடு, பயிற்சிப்பள்ளியில் புகார் கொடுப்பதில் முந்திக் கொண்டீர்கள்... நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி
      கார் ஓட்டுவதில் பிந்தினாலும், புகார் கொடுப்பதில் முந்தணும்

      நீக்கு
  2. // வாய்தான் காதுவரை இருந்தது... ஆனால் எனக்கு வாய் பிடரி வரி என்பதை அவன் அறியவில்லையே!

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம் இன்டெரெஸ்டிங். பிறகு வருகிறேன். மாஸ்டர் மாத்தினதில் கூடுதல் செலவு ஆகியிருக்குமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஸ்டர் மாற்றுவதினால் பணம் செலவு இல்லை மொழிப் பிரச்சனையால் தினம் மாஸ்டரை மாற்றுவது இயல்புதானே...

      நீக்கு
    2. அன்றைக்கு நேரம் கிடைக்கவில்லை.

      பஹ்ரைனில், டிரைவிங் பயிற்சிக்கு புக் பண்ணியவுடனே (அதாவது இன்றைக்கு ஓட்டும் பயிற்சி 2 மணி நேரம்-அதில் 1 மணி தான் ஒழுங்கா சொல்லித்தருவாங்க. போக 1/2 மணி, வர 1/2 மணி ஆகிடும், வீட்டிலேர்ந்து அவங்க வண்டில பயிற்சி நடக்கும் இடத்துக்குச் செல்ல. அப்போ அடுத்த கிளாஸ் எப்போன்னு ஃபிக்ஸ் பண்ணிப்போம்), சில சமயம் அவங்க கேன்சல் பண்ணுவாங்க, வேற நேரம் ஃபிக்ஸ் பண்ணிப்போம். ஒரு தடவை, நான் கேன்சல் பண்ணிட்டேன், அன்று காலைல. ஆனால் அந்த மாஸ்டர்-இங்க எல்லாருமே பஹ்ரைனிதான், 2 மணி நேரத்துக்காக எனக்கு சார்ஜ் செய்துவிட்டார். அவர் கேன்சல் செய்தால் பிரச்சனை இல்லை, நான் கேன்சல் செய்தால், அதுவும் அன்று காலை கேன்சல் செய்தால் பணம் கொடுத்திடணும். ஏற்கனவே ஒரு டெஸ்ட்ல ஃபெயில் ஆயிருந்ததனால, கோபத்துல மாஸ்டரை மாற்றிவிட்டேன். அதுனால ஒரு பிரயோசனமும் இல்லை. மூணு டெஸ் ஃபெயிலாகி, கிட்டத்தட்ட 2400 திர்ஹாம் (எங்க ஊர் காசு 235 தினார்) செலவு செய்து, 5 மாதத்தில் லைசன்ஸ் கிடைத்தது. அதுல 1000 திர்ஹாம் எங்க கம்பெனி எனக்கு ரீஇம்பர்ஸ் பண்ணிடுத்து.

      அப்போல்லாம், எதுக்கு லைசன்ஸ் எடுக்கணும்னு நினைத்துக்கொண்டிருந்தேன். அதனால்தான் துபாயில் லைசன்சுக்கு முயற்சிக்கலை (93-95ல).

      நல்லவேளை உங்களுக்கு மாஸ்டர் மாற்றியதால் டிரைவிங் டெஸ்டுக்கு பிரச்சனை வந்திருக்காது.

      நீக்கு
    3. 93-94 என்றால் லைசென்ஸ் சுலபமாக எடுத்து இருக்கலாமே...

      இப்பொழுது மிகவும் கஷ்டமான நிலைப்பாடு மீள் வருகை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
    4. கில்லர்ஜி... உண்மையைச் சொல்லணும்னா, அப்போல்லாம், திர்ஹாம் செலவழிக்கும்போது (மிரண்டா பெப்சி குடிப்பது மட்டும் விதிவிலக்கு) ஒவ்வொரு தடவையும் இந்தியன் ரூபாயா மாத்தி கணக்குப் போட்டுக்கொண்டிருந்தேன். ஆபீஸ்ல ஒரு வெள்ளிக்கிழமை, பஸ்ஸில் ஊர் சுற்றலாம் என்று சொல்லி 50 திர்ஹாம் கேட்டபோது, வரவில்லை என்று சாக்கு சொன்னேன். பஹ்ரைனிலும், என் கம்பெனி, லைசன்ஸ் வாங்கினால் 1000 திர்ஹாம் தர்றேன் என்று சொன்னதாலும், லைசன்ஸ் இருந்து நான் வண்டி வைத்திருந்தால் மாதாமாதம் கொஞ்சம் பணம் தரேன்னு சொன்னதாலயும்தான் வாங்கினேன் ஹாஹா.

      நீக்கு
    5. ஹா... ஹா... நான் இருபது வருடங்கள்வரை இந்திய ரூபாயை ஒப்பிட்டு பார்த்தே செலவு செய்து வாழ்ந்தவன்.

      ஆனால் உறவுகளுக்கு செலவு செய்வதில் தயங்கவே மாட்டேன்.

      நீக்கு
  4. வரட்டும், வரட்டும், உங்கள் அனுபவங்கள் சுவையாக இருக்கின்றன. அப்பா! ஓர் லைசென்ஸ் வாங்குவது எத்தனை கஷ்டம்! இத்தனையும் வெகு விரைவில் நம் நாட்டிலும் கொண்டு வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மோடி உலகம் முழுவதும் போறாரு... அவரு நினைத்தால் கொண்டு வரமுடியாதா ?

      பணத்தையே ஒரே மாதத்தில் மாற்றினாரே...

      நீக்கு
  5. நல்ல அனுபவம். நீங்கள் ஓட்டுனர் உரிமம் வாங்கிய அனுபவங்களைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன். தொடரட்டும் அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் அனுபவப் பதிவு அருமை ஐயா
    தொடரட்டும் அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. //அவனிடம் கேட்டவர் அவனைத்தான் ஏசினார்// - இதையெல்லாம் இந்தியாவில் உள்ளவர்களால், மற்ற நாடுகளைப் பற்றி அறியாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இங்க ஒரு ஆபீஸ் என்றால் அங்கு இருக்கும் எல்லோரும் தங்கள் கீழ் பணிபுரிபவன் சொல்வதுதான் சரி என்று சொல்லி பொதுமக்களை விரட்டி அடிப்பார்கள் (கம்ப்ளெயிண்ட் செய்யும் பொதுஜனம், அதிகாரமுள்ளவராகவோ பணக்காரராகவோ இல்லை தொடர்புகள் உடையவராகவோ இருந்தால் ஒழிய)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அங்கு...
      மக்களின் எண்ணங்கள் உயர்வானவை அதன் விளைவு உயர்வானவர்களை ஆட்சியில் அமர வைத்தார்கள்.

      நீக்கு
  8. பதிவில் தலைப்பு வந்த இடம் அருமை, உயிரை காப்பாற்றிக் கொடுத்தும் அவருக்கு உங்கள் மேல் கோபம்.
    ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு முன் கிடைத்த அனுபவங்கள் அதிகம்.
    கற்றதும் பெற்றதும் நிறைய போலவே!தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரைக்கும், தொடர்ந்து வருவதற்கும் நன்றி.

      நீக்கு
  9. ஆகா..
    பதிவுக்குள் என்னையும் இழுத்து விட்டாச்சா!...

    ஒரு நாளைக்கு 10 மணிநேரம் அவிங்களோட தானே....

    அறிவாளி(!).ங்க.. அதெல்லாம் சும்மா..
    நிக்கிற இடம் ஸ்ட்ராங்கா இருக்கணும்..

    நம்ம ஆளு தலை குப்புற விழுவான்..
    அவன் 60 டிகிரியில ஆடிக்கிட்டு இருப்பான்..

    அவ்வளவு தான் வித்தியாசம்...

    ஆனால் அங்கே சந்தன முல்லைகளும் இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நிற்கும் இடம் ஸ்ட்ராங் இதுதானே முக்கியம் நன்றி ஜி

      நீக்கு
  10. கதை போல சொல்றீங்க..

    வெகு சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு
  11. சுவாரசியம் ஜி...

    எஜிப்தியன் நிலை என்னவாகுமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி விதியை மாற்ற யாரால் இயலும் ?

      நீக்கு
  12. ஹா ஹா ஹா சுவாரஸ்யமாக உண்மைகளைச் சொல்லியிருக்கிறீங்க..

    நான் இப்படித்தான் இருப்பேன்ன் எனக், கோடு போட்டு வாழ்பவர்களாக இருப்பின் உங்கள் தலைப்புச் சரிதான்.. சில நேரங்களில் ரூல்ஸ் ஐ மீறித்தான் ஆகோணும் கிட்னியை ஊஸ் பண்ணி:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நாங்க கிட்னியை சட்னி வச்சுடுவோம்.

      நீக்கு
  13. நன்கு ரசித்தேன் நண்பரே.
    வாய் தான் காது வரை என்பது "ஆயிரத்தில் ஒருவன்" படம் தானே , ஒரு வேலை பிடரி வரை என்ற வசனம் "திரி சூலமோ".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அந்த வசனம் ஆயிரத்தில் ஒருவன்தான். பிடரிவரை என்ற வசனம் திரிசூலம் அல்ல! நான் திறித்து விட்ட வசனமே...

      திரிசூலம் வசனம்
      "சுமதி நீ எப்படி இருக்கேமா..."
      இது பிரபலமானது.

      நீக்கு
  14. துளசிதரன்: கில்லர்ஜி உங்கள் அனுபவங்கள் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன. லைசென்ஸ் இங்கெல்லாம் வெகு சுலபம். இந்தியாவைத் தாண்டினால் லைசன்ஸ் பெறுவது கடினம் என்பதை அறிய முடிகிறது. தொடர்கிறோம்

    கீதா: ஹா ஹா ஹா ஹா வாய் பிடறி வரையா ஹலோ மீசைனு சொல்லிருக்கனுமோ...ஹிஹிஹிஹி...நான் அடிக்கடி நினைக்கும் விஷயம் வெளிநாடுகளைப் போல இங்கும் ட்ராஃபிக் ரூல்ஸ், லைசென்ஸ் எடுக்க ரூல்ஸ் என்று கொண்டு வரமாட்டாங்களானு

    அங்கு பாருங்க அதிகாரிகள் கஸ்டமருக்கு முன்னுரிமை அளித்து அவங்களுடைய கம்ப்ளெயின்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து மாஸ்டரையும் திட்டுகிறார்கள். இங்கு இப்படி நடக்குமா??? அது சரி கில்லர்ஜி இங்க வந்து லைசென்ஸ் எப்படி எடுத்தீங்க? அல்லது முன்னரே வைத்திருந்து அதை இங்க வரும் போது புதுப்பித்துக் கொண்டீர்களா? இங்குள்ள அனுபவத்தையும் எழுதுங்களேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது இருவருடைய கருத்துரைக்கும் நன்றி.

      இங்கு லைசென்ஸ் 1987-ல் எடுத்து அது காலாவதி ஆகிவிட்டது.

      மீண்டும் புதிய லைசென்ஸ் எடுக்க புறப்பட்டபோது நீங்கள் வெளியில் நடந்தால் காலில் முள் குத்திவிடும் ஆகவே நானே வாங்கி வந்து தருகிறேன் என்று நண்பரே (எந்த ஸூப்பர் மார்கெட்டோ) வாங்கி வந்து கொடுத்தார்.

      நீக்கு
  15. நல்ல அனுபவம் வாழ்த்துகள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. அருமை!.எதையும் நகைச்சுவையுடன் சொல்லும் ஆற்றல் கில்ல்ர்ஜிக்கு கைவந்த/வாய்வந்த கலை ஆயிற்றே!

    பதிலளிநீக்கு
  17. நன்றி கெட்ட மண்ணாங்கட்டி அதாவது செங்கல்லு நிருபிச்சுட்டான் நண்பரே!..ரூல்ஸ் பார்க்கிறானாம் வெங்காயப்பய....அப்பளமாக தப்பிச்சது மண்டயில ஏறல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே பெயர் சரியாகத்தான் வச்சு இருக்காங்க...

      நீக்கு
  18. உங்களின் அனுபவங்களை தனியாக நூலாக வெளியிட முயற்சி செய்யலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே அதற்கு முதலில் சுயசரிதம் எழுதும் அளவுக்கு வளரவேண்டும்.

      நீக்கு
  19. படிக்கும்போது சுவாரஸ்யம் மிகுந்து வரும்போது தொடரும் போடுவது நியாயமா? மலையாளிகள் பற்றிய கருத்து ஓரளவிற்கு உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் மலையாளிகளோடு இருபது வருடங்கள் இணைந்து பழகி வாழ்ந்தவன்.

      நீக்கு