இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 27, 2019

தீபாவளிக்கு வந்துட்டான்...



லைப்பூ நட்பூக்கள் அனைவருக்கும் கில்லர்ஜியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகுக இவ்வருட புதுமணத் தம்பதிகள் சீரும், சிறப்புமாய் தீபாவளியை கொண்டாடி அடுத்த வருடம் புதிய உறவுகளோடு இணைந்து கொண்டாடிட இறைவன் – இறைவி அருள் கிட்டட்டும். இன்று தியேட்டரில் போய் அவசியம் காணவேண்டிய திரைப்படம் எமது நண்பர் நடித்த தீபாவளிக்கு வந்துட்டான்...

செவ்வாய், அக்டோபர் 22, 2019

கல்வியும், கலவியும்


துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கலவியும். இவர்கள் அந்த சாமியார்களைப் போல் சோம்பேறிகள் அல்லர் உழைப்பாளிகள் என்றே சொல்லலாம் காரணம் இவர்கள் காசிமணி, ஊசி முதல் திருஷ்டி பொம்மைகள் வரை விற்பனை செய்பவர்கள் இவர்களில் நரிக்குறவர்களும் உண்டு தெலுகு பேசுகிறவர்களும் உண்டு.

வியாழன், அக்டோபர் 17, 2019

அழகர்மலையிலிருந்து...


துரை, அழகர்கோவில் சென்றிருந்தேன் உறவினர்கள் சாமி கும்பிடுவதற்காக எனது மகிழுந்தில் போயிருந்தோம்.. மருமகள் எட்டு மாதமாக இருந்ததால் மலைக்கோவில் போகக்கூடாது என்ற ஐதீகத்தை மதித்து நான் மேலே போகவில்லை //இல்லாட்டாலும் கொச்சிக்கு போக கொடிகட்டித்தான் நிற்பே// என்று முணங்குவது கேட்கிறது. ஆகவே கீழே மலையடிக் காட்சிகளை தங்களிடம் பகிரலாமே என்று எமது விழிகளால் ஸ்கேன் செய்யத் தொடங்கினேன்.

சனி, அக்டோபர் 12, 2019

பேரையூர், பேட்டி பேரறிவாளன்


ணக்கம் ஐயா பேரறிவாளன் அவர்களே.. தொல்பொருள் ஆராய்ச்சியில் தோற்று தொலைந்து போய் தேடித் தோண்டியெடுத்த தங்களை எங்களது தோல் உரிப்பான் தோழன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்களுக்கு எமது வாழ்த்துகள் பேட்டியை தொடங்கலாமா ?
பேரின்பத்தமிழுக்கு வந்தனம் நன்று தொடங்கலாம்.

திங்கள், அக்டோபர் 07, 2019

நாங்குநேரி, நாயனம் நாராயணன்


01. பாசி விற்க வந்த பெண் பசி பொறுக்க முடியாமல் உணவு கேட்டாள்.

02. ராசியானவன் என்று காசியை கடையில் சேர்க்க அன்றே சீல் வைத்தனர்.

03. பிளைட்டில் கொடுத்த சாப்பாட்டு பிளேட்டை சுட்டு வந்தாள் பட்டு மாமி

04. மாடி ஏறி வந்த மங்கையர்க்கரசி படி தவறி பல்டி அடித்து கீழே விழுந்தாள்.

புதன், அக்டோபர் 02, 2019

அத்தியின் வரவு


த்தி வரதரின் வரவால் பலருக்கும் வரவு வந்து இருக்கிறது. கோயிலோரத்தில் வீடு வைத்து இருந்தவர்கள் பக்தர்களிடம் பத்து ரூபாய் வசூலித்துக் கொண்டு கழிவறையை உபயோகத்துக்கு விட்டு அரைக்கிலோ மலத்தை தன்னோட வீட்டு மனையில் சேமிச்சு வைத்து இருக்காங்களே... இவங்கே விருத்திக்கு வருவாய்ங்களா ?