இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 26, 2020

பழைய பஞ்சாங்கம்


   கோவை மாநகரம் நான் எனது ஸ்கூட்டியில் தண்ணீர் பந்தலார் தெருவில் போய்க் கொண்டு இருந்தேன் சட்டென ஒரு பெண்மணி கையை குறுக்கே காட்டி நிறுத்தச் சொல்லிட நமக்கு பயம் இல்லா விட்டாலும் பெண்ணைக் கண்டால் பென்ஸ் காரும் நிற்கும் என்று சொல்வார்களே ஸ்கூட்டி எம்மாத்திரம். இரண்டாவது நாம இரக்க குணம் வேறயா.... நான் தமிழக நல்லாட்சியின் ஆணையை மதித்து தலையில் கவசம் மாட்டி இருந்தேன். நான் நின்றதுதான் தாமதம் அவள் சட்டென பின்புறம் வந்து காலைத்தூக்கி இருபுறமும் போட்டுக் கொண்டு...

புதன், அக்டோபர் 21, 2020

திருக்குறளை சுட்டிய திருக்குவளை


   தமிழ் இன்றைய இளைய தலைமுறையினரிடம் வாழ்கிறதா ? நிச்சயமாக இல்லை இதோ தமிழ் மாதங்கள் பனிரெண்டு அதன் பெயர்களைக்கூட சொல்லத் தெரியவில்லையே... வெட்டியாக தமிழ் தமிழ் என்று கூவுகிறது ஓர் கூட்டம் ஆனால் இதில் காரியத்துக்காக குரல் கொடுப்பவரையே நம்புகிறது இந்த பாமரப்பயல்கள் கூட்டம்.

சனி, அக்டோபர் 17, 2020

பெரியகுளம், பெரியவர் பெரியசாமி


துபாய் ஷேக் ஸாயித் பின் சுல்த்தான் அல் நஹ்யான் சாலையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியேறி எனது சீரூந்துக்குப் போகும் பொழுது இனிமையான குரல்
எஸ்க்யூஸ் மீ
திரும்பிப் பார்த்தேன் அழகிய தேவதையொன்று நின்று கொண்டு இருந்தது.
யூ ஆஸ்க் மீ ?
ஆமா உங்களைத்தான்...
அழகியின் அழகிய உதடுகளிலிருந்து அழகிய தமிழ் வார்த்தை அடடே..

திங்கள், அக்டோபர் 12, 2020

தொட்டில் பழக்கம் கட்டில் வரைக்கும்


   ணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பெண்கள் சகல துறைகளிலும் தடம் பதித்தார்கள் விண்வெளியில் வாழ்வதிலும்கூட பாரதி இவ்வளவு தூரம் ஆசைப்பட்டு இருப்பானா ? என்பதில் எனக்கு முக்கால் காணி அளவு ஐயமுண்டு இதில் பெண்ணினம் பெருமையே கொள்ளட்டும். அதேநேரம் மது அருந்துவதிலும் நீங்கள் போட்டி போடுவது முன்னேற்றமா ? பின்னேற்றமா ? அதற்காக ஆண்கள் மது அருந்துவது தவறில்லை என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல

புதன், அக்டோபர் 07, 2020

மாணிக்பாட்ஷாவுக்கு மணிமகுடம்

 

வணக்கம் நட்பூக்களே... நண்பர் திரு. இரா. அரவிந்த் அவர்கள் எனது மாணிக்பாட்ஷா மின்நூலை படித்து விட்டு விமர்சனம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த விமர்சனத்தை படித்து நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன் காரணம் எனது எழுத்துகள் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படுகிறதா ? என்ற ஐயப்பாடு எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது.

சனி, அக்டோபர் 03, 2020

எனது விழியில் பூத்தது (1)


  ணக்கம் நட்பூக்களே.... நான் சிறு அகவை முதலே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் சராசரியில் பார்ப்பதைவிட வித்தியாசமான கோணத்தில் பார்த்து அவைகளை படம் பிடித்து இருக்கிறேன் இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம்.