இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 23, 2021

இறையுணர்வு

 

வணக்கம் நட்பூக்களே...

சற்றே இடைவெளியுடன் மீண்டும் உங்கள் கில்லர்ஜி காரணம் நானும், எனது இனிய இயந்திர உறவான கணினியும் கொரோனா கொழுந்தியாளின் போக்குவரத்து தடையால் நானொரு ஊரிலும், அவளொரு ஊரிலுமாக... பிரிந்து விட்டோம் வழக்கம் போல் அலைபேசியில் பதிவிடலாமே என்று திண்டுக்கல் ஜி அவர்கள் நினைக்கலாம்.


தம்பி மகனின் உபயத்தால் அலைபேசி மேலிருந்து கீழே விழுந்ததில் வதனம் கோரமாகி விட்டது. அடிக்கடி செயலிழந்து மறைந்து விடும் இதன் காரணமாகவே சில காலமாக நான் பிறருக்கு சிறிய அளவில் கருத்துரை கொடுத்து வந்தேன். (இல்லாவிட்டாலும்..... இது அதிராம்பட்டிணம், அதிரடி, அதிராவின் மைண்ட் வாய்ஸ்)


இருப்பினும் அலைபேசியின் கடுதாசிப் பெட்டியில் (Memo) பதிவுகளை எழுதி சேமித்துக் கொண்டே வந்தேன் நிறைய பாடல்களும் எழுதி இருக்கிறேன் ஹி... ஹி... ஹி... இதற்குமேல் சேமித்தால்  Memo எனக்கே Memo கொடுத்து விடலாம் என்ற பயத்தால் இதோ கணினியை அழைத்துக் கொண்டேன். நன்றி கில்லர்ஜி    


01. ஏழையாய் இருப்பவன் தூக்கத்தை மறந்து, பணத்தை தேடி ஓடுகிறான். பணக்காரன் பணத்தால் தூக்கத்தை இழந்து தவிக்கிறான். இதைக் கண்டும் ஏழை பணத்தைத்தானே தேடுகின்றான்.


02. பணக்காரன் இந்தப் பணத்தால்தான் நமது தூக்கம் இழந்தோம் என்று அறிந்தும் அந்தப் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விட்டு நிம்மதியான தூக்கத்தை நாட விரும்பவில்லையே.


03. உதவும் எண்ணம் உள்ளவனுக்கு பணம் பிரச்சனையாக இருப்பதில்லை தன்னிடம் உள்ள ஏதோவொன்றால் உதவுகிறான். அதில் அவன் மனநிம்மதி, சந்தோஷம் கொண்டு மகிழ்கிறான்.


04. உதவாதவனிடம் பணமிருந்தும் மனமில்லை காரணம் அவனுக்கு வறுமையை கொடுக்காத இறைவன்தான். சந்தர்ப்பத்தை கொரோனா வழி கொடுத்தும் உணரும் அறிவில்லை.


05. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் எண்ணம் உள்ளவனுக்கு கொடுப்பதை மறுப்பதே இறைவன்தான். அவன் உணரும் காலம் வரும்போது ஆயுள் முடிந்து விடுகிறது.


06. கிடைத்ததை இழந்து வாழ்பவனும் நிம்மதி இழந்தே வாழ்கிறான். கொடுத்தது இறைவனே பறித்தது மனிதனே அவனை செயல் படுத்தியது இறைவன் முடிவு எல்லாம் அவன் செயல்.


07. கோடிகள் உள்ளவனும் இமயமலையில் தவழ்ந்து இறைவனை தேடுகிறான், மற்றொரு கோடி இறைவனை இழிவாக பேசுகிறான் நம்பிக்கையின்றி இவனைப் படைத்ததும் இறை.


08. முடிவைக்கண்டு உணரும்போது முடிவும் வந்து அவனைச் சேருகிறது. கண் போன பின்னே சூரிய நமஸ்காரம் என்றெண்ணியே உணர முனைகிறான், உணராதவனும் முடிகிறான். 


09. ஒருபுறம் இறைக்கு உணவளிக்க இரையை படைக்கின்றான் மனிதன், மறுபுறம் தனது இரைக்காக இறையின் ஆபரணங்களையே அபகரிக்கின்றான் மனிதன்.


10. பசித்த உயிர்களுக்கு இரை கொடுப்பது இறையின் கடமை என்பது பொதுவான நியதி. ஆனால் இறையின் உடமையை எடுத்தால் சட்டத்தால் தண்டிப்பதே நீதி.


11. இறை உண்டென்று உணர்ந்தவரும் இல்லை, இறை இல்லையென்று உணர்த்தியவரும் இல்லை. இன்று உண்டென்பவன் போலியாகிறான். இல்லை என்பவன் கேலியாகிறான்.


12. உணர்தலை எனக்கும் கொடு, உணர்ந்தவைகளை உலகுக்கும் கொடு உணர்ந்தவன் உனையே நாடட்டும் உணராதவர்களை உலகே அறியட்டும் இல்லையேல் இவ்லுலகே அழியட்டும்.


Chivas Regal சிவசம்போ-
பட்டு அழுந்தியது போல் இருக்கிறதே... போதி மரத்தில் மோதி இருப்பாரோ...

44 கருத்துகள்:

  1. கேள்வியும் பதிலுமாக அடித்தடுத்த சிந்தனைகள் சிந்திக்க தக்கவை...

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது படத்திற்காக ஒரு குறள் :-

    அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று (259)

    அதிகாரம் : புலால் மறுத்தல் என்பதால் விளக்கம் எளிதாக அறியலாம்... ஆனால் எதைப் பார்த்து இந்தக் குறள் எழுதி இருப்பார்...? அவ்வகை மூடர்கள் யார்...? அதனால் ஏமாந்தவர்கள் யார்...? - இது போன்று பல கேள்விகள் உள்ளன... பதில்களை குறளின் குரல் பதிவில் சிந்திப்போம்... நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி குறள் விளக்கத்தோடு கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. அப்புறம் ஜி... ஆயிரம் வந்த ஒரே குறள் இது தான்...! ஆமா அது எண்ணைத் தான் குறிக்கிறதா...? குறைந்தது ஆயிரம் விளக்கம் சொல்லுங்களேன் ஜி...(!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் விளக்கம் எனக்கு எட்டாக்கனி ஜி

      நீக்கு
  4. ஒண்ணுமே புரியலை. என்றாலும் வருகையில் மகிழ்ச்சி. உங்களுடைய முத்திரை காணவில்லை. யாரோ சொல்லி எழுதியது போல் உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் இதுவரை பிறர் சொல்லியதை எழுதியது இல்லை.
      இது கமலஹாசன் கருத்து போலலலலலல எழுதினேன்.

      நீக்கு
    2. அப்படியா. அவர் என்றைக்கு புரிகிற மாதிரி பேசியிருக்கார். உதாரணம் "நான் கடவுள் இல்லைன்னு சொல்லலியே. இருந்தால் நன்றாக இருக்கும்."

       Jayakumar

      நீக்கு
    3. ஹா... ஹா... ஆமா இது நல்ல குழப்பமான பதில்தான். மீள் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகள் காணவில்லையே என நினைத்தேன். உங்கள் கணினியை நீங்கள் பிரிந்திருக்கும் விபரம் எ.பியில் சகோதரர் நெல்லைத் தமிழருக்கு சொல்லியிருந்தீர்கள் என நினைக்கிறேன். மேலும் உங்கள் கருத்துக்கள் கொஞ்ச நாட்களாக எல்லோர் பதிவிலும் சுருக்கமாகவும் இருந்தது. (அதிராமபட்டிணம் அதிரடி அதிரா அவர்கள் வந்துதான் "இல்லாவிட்டாலும்" என சொல்ல வேண்டுமென சொல்லி விட்டீர்கள்.. . ஹா.ஹா.ஹா.) நீங்கள் ஏற்கனவே கைப்பேசியிலேயே முன்பெல்லாம் பதிவுகள் இட்டு வந்திருக்கிறீர்களே ..! இப்போது அதுவும் சரியாக வேலை செய்யாது போய் விட்டமையால் சிரமந்தான்..

    முதல் படம் அழகாக உள்ளது. நல்ல சிந்திக்க வைக்கும் சிந்தனைச் சொற்களுடன் கூடிய பதிவு. ஆக மொத்தம் இந்தப் பணம் படுத்தும் பாடு சொல்லி மாளாது. ஆனாலும் பணத்தை படைத்த இறைவனை நாம் எப்பொழுதும் மறவாதிருக்க வேண்டும். இறையுணர்வு நம்முள் நீடித்திருந்தால்தான் வாழ்வியல் சிரமங்கள் நம்மை ஒரளவு அழுந்தாமல் கடக்கும். அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    தொடர்ந்து பதிவுலகத்திற்கு வந்து நிறைய நல்லெண்ணங்களுடன் கூடிய பதிவினை தருவதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் முன்பே எபியில் சொல்லி இருந்தேன். ஆம் அ.அ.அ.வை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

      பதிவை ஆவலோடு படித்து நீண்ட கருத்துரையை தந்தமைக்கும், பாராட்டியமைக்கும் நன்றி

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் . பிளாக்கில் தத்துவ மழை . வெளியில் இயற்கையான மழை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்து மழைக்கு நன்றி

      நீக்கு
  7. யோசிக்க வேண்டிய விஷயங்களைப் பகிர்ந்திருக்கீங்க. பொருள் இல்லாதவர்க்கு இவ் உலகம் இல்லை. அருள் இல்லாதவர்களுக்கு அவ் உலகம் இல்லை.

    ஆனால், எது பணத்தை மேலும் மேலும் சேர்க்க வைக்கிறது என்பதுதான் புரியவில்லை. என் அளவுக்கு கொஞ்சம் லட்சங்கள் இருந்தால் போதுமே..கோடிகள் எதற்கு என்று நினைக்கும்போது, இன்னொருவன் சில கோடிகள் போதுமே அதற்கு மேல் எதற்கு என்று நினைக்கிறேன். இன்னொருவன், ஆயிரம் கோடிகளைச் சேர்க்கிறான்..இன்னொருவன் பல்லாயிரம் கோடிகளைச் சேர்க்கிறான்...

    நீண்ட காலத்திற்குப் பிறகு (ஹாஹா) பதிவுகள் வர ஆரம்பித்துவிட்டது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      போதும் என்ற மனமே பொன் செய்யும் ''மருந்து'' இதை படிப்பதோடு ''மறந்து'' விடுகிறோம் இதுதான் பிரச்சனைக்கு ஆரம்ப காரணம்.

      வாழ்த்துகளுக்கு நன்றி தமிழரே...

      நீக்கு
  8. அலைபேசியில் பதிவிடுவதா?! திதவின் திறமைக்கும் பொறுமைக்கும் அளவே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் நீண்ட காலமாக அலைபேசியில்தான் பதிவிட்டு வந்தேன்.
      காரணம் காணொளி தொகுப்புகள், சித்து வேலைகள் எல்லாமே அலைபேசியில்தான்.

      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  10. சிந்திக்க வே(தூ)ண்டிய
    கருத்துகள்தான்!

    08-ல், 'கண் போன நின்னே'
    - 'பின்னே' என்று வரணுமே?

    பதிலளிநீக்கு
  11. எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே! என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
    நீங்கள் பகிர்ந்தவை எல்லாம் நல்ல சிந்தனைக்கு உரியவை.

    நீங்கள் உங்கள் நண்பருக்கு வீடு கட்ட உதவி வருகிறேன் என்று ஒரு பதிவில் பகிர்ந்த நினைவு. அந்த வேலையால் பதிவிட முடியவில்லை என்று நினைத்தேன். நெல்லைதமிழன் அவர்களுக்கு கொடுத்த பதிவின் மூலம் வேறு இடத்தில் நீங்களும் உங்கள் கணினியும் இருப்பது அறிந்தேன்.

    இப்போதும் அலைபேசி மூலமே பதிவு என்பதை அறிந்தேன்.
    தொடர வேண்டும் பதிவுகள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி

      ஆம் மதுரையில் நண்பருக்கு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் 90 சதவீதம் நிறைவாகி விட்டது. கணினியும் வேறிடத்தில் இப்பொழுது என்னோடு...

      நீக்கு
  12. இப்போது அலை பேசி கெட்டு கணினி மூலமா பதிவு?
    வேறு புதிய அலைபேசி வாங்கி விடுங்கள். உங்களுக்கு அலை பேசி மூலம் பதிவுகள் போட முடிகிறது. எங்கு போனாலும் தடை இல்லாமல் போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இப்பொழுது கணினியில்தான் பதிவிடுகிறேன்.

      நீக்கு
  13. ஏழை தூக்கத்தை மறந்து பணத்தை தேடுகின்றான் என்றால் அவன் பணக்காரனாக ஆக வேண்டி இல்லை அவன் குடும்பம் பசியாரா அவன் பணத்தை தேடுகின்றான்

    பணக்காரன் பணத்தால் தூக்கத்தை இழந்தாலும் அவன் தன்னிடம் உள்லதை கொடுக்க ஆரம்பித்தால் பின் அவனும் ஏழை போல தூக்கத்தை இழந்து அவனும் பணம் தேட ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடம்லாம்தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஹா... ஹா.. சுற்றி வளைத்து அங்கு வருகின்றீர்கள்.

      நீக்கு
  14. கணினியும் பழுது.  அலைபேசியும் விழுது!  நேரக்கொடுமை!  அலைபேசி புதிது வாங்கியாகி விட்டதா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பழுது, விழுது அட அடுக்குமொழி அருமை ஜி

      நீக்கு
  15. தத்துவ மழை.  எல்லாமே நன்றாயிருக்கின்றன.  'தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி' என்றொரு பாடல் உண்டு.  பணத்தின்மீது ஆவல்கொண்டு அலையும் மனிதனுக்கு கிடைக்காதது அதேதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அருமையான பாடலை சொன்னீர்கள். நிம்மதி அவரவர் மனதுக்குள்தான் இருக்கிறது.

      நீக்கு
  16. மறுபடி வந்ததுக்கு நன்றி. கொரோனாவால் உங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை அல்லவா? எல்லாமே தத்துவ மழை. நன்றாய் இருக்கின்றன. முக்கியமாய்ப்பதினொன்றாம் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கொரோனாவால் எங்களது வட்டத்தில் யாருக்கும் பிரச்சனை இல்லை.
      எனது சகோதரர் உடல் நலம் சரியில்லாமல் இறந்தார் ஆனாலும் சமூகம் கொரோனா என்றே நினைக்கிறது. என்ன செய்வது ?

      நீக்கு
  17. அன்பின் தேவகோட்டைஜி,
    தங்களின் தளரா உழைப்பு நற்பயன் கொடுக்கட்டும்.
    புது அலைபேசி வாங்கி விடுங்கள். எல்லோருடனும்
    தொடர்பில் இருக்க வேண்டும் அல்லவா!!

    வீடு கட்டுவது பெரிய வேலை ஆயிற்றே.
    கட்டி முடித்த பின் படம் பதிவிடுங்கள்.

    மடிகண்ணினி வந்து சேர்ந்தது மகிழ்ச்சி.
    இனி தொடர்ந்து உங்கள் நற்கருத்துகள்
    வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    கொடுக்காமல் சேர்த்து வைத்தவர்கள்
    எல்லாம் என்ன கொண்டு போனார்கள்.
    ஒரு முறையாவது இறந்தவர் ஒருவரைக்
    கண்டால் இந்த எண்ணம் வரலாம்.

    அவரவராக மாறினால் தான் உண்டு அப்பா.
    நலமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா நலம் நலமா ?
      தங்களது அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  18. நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் பதிவை கண்டதில் மகிழ்ந்தேன்.
    தங்கள் நலன் அறிந்தும் மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  19. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.

    சிறப்பான கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  20. அருமையான கருதுகள். குறிப்பாக கடைசி இரண்டும் அள்ளுகின்றன.

    பதிலளிநீக்கு
  21. இறையுணர்வு..எனக்கு அப்பவும் சரி, இனிமேலும் சரி..சுட்டு போட்டாலும் வராது.. அறிவைப்போல...

    பதிலளிநீக்கு