வணக்கம் நண்பர்களே... ‘’ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே’’ என்ற
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அற்புதமான பாடலை திருமதி
வல்லிசிம்ஹன் அம்மா அவர்கள் வேண்டுகோளுக்காக எமது பாணியில் மாற்றி எழுதி
இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
அவள் இருதயத்தில் கொப்பளித்த எச்சங்களை தின்றவன் நான்
ஆள வந்தவளை –ஆள விடாமல் தடுத்து விட்டு நாளும்
பணத்தை எல்லாம் பறக்க விட்டவன் நான் இந்தக் கலைகளையே
மறந்து விட்டேன் இனி எந்தக் காலை விட்டாலும் வெட்டுவான்டி
ஞானம்பாளே பதில் சொல்லடி நீ ஞனம்பாளே பதில்
சொல்லடி நீ ஞனம்பாளே சொல்லடி நீ ஞானம்பாளே
வாங்குனது நல்லாலே
ஆலோசித்து பாரடி உனக்குள்ளே
ஆத்திரம் வருதடி எனக்குள்ளே
ஆடம்பரம் ஏனடி உனக்குள்ளே நான் ஆடிக்கார்
வாங்குனது நல்லாலே
ஞானம்பாளே நான் துன்பத்தை சுமக்கிறேன்
ஞானம்பாளே இன்பத்தை நாடி துன்பத்தை சுமக்கிறேன்
ஆடம்பரம் ஏனடி உனக்குள்ளே நான் ஆடிக்கார்
வாங்குனது நல்லாலே
தள்ளிக்கொண்டு வந்தேனே ஞானம்பாளே நான்
கதறி கதறி அன்று அழுது புலம்பினேனே
படார் படார்னு விட்டாங்கே ஞானம்பாளே
ஆடம்பரம் ஏனடி உனக்குள்ளே நான் ஆடிக்கார்
வாங்குனது நல்லாலே
ஆலோசித்து பாரடி உனக்குள்ளே
ஆத்திரம் வருதடி எனக்குள்ளே
படார் படார்னு விட்டாங்கே ஞானம்பாளே
ஞானம் வங்கிக்காரன் வாங்கி கொண்டான்டி
வாழ்க்கையே வெறுத்து விட்டேன்டி
காரை கொடுத்தவனே எடுத்து கொண்டான்டி
சாலையில் வங்கிகாரன் காட்டி விட்டான் வேலையை
வண்டி ஓட்டத் தெரிந்திருந்தும் பெட்ரோல்
போட அறிந்திருந்தும் காரை ஓட்டி போயிருந்தேன்
சாலையில் வங்கிகாரன் காட்டி விட்டான் வேலையை
மேலாளர் ஏவி விட்டான் அவனும் செய்து விட்டான் காலியே
வங்கிக்காரன் வாங்கி கொண்டான்டி
ஞானம் வங்கிக்காரன் வாங்கி கொண்டான்டி
வாழ்க்கையே வெறுத்து விட்டேன்டி
சமாச்சாரம் வேண்டாமடி ஞானம்
சமாச்சாரம் வேண்டாமடி
திரிந்தவனுக்கு சாத்தவும் வேணுமடி
ஞானம் மன்னிச்சு விட்டுடடி
சிங்காரியைத் தொட்டு சீக்கு புடிச்ச எனக்கு
சமாச்சாரம் வேண்டாமடி ஞானம்
வருடம்: 1959
படம்: தங்கப்பதுமை
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர்கள்: சி.எஸ்.ஜெயராமன், பத்மினி
இதோ பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்து விட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொலைகளுக்கே ஆளாகி இருந்து விட்டேன்
இனி எந்தக் கொலை செய்தாலும் என்னடி என்
ஞானப்பெண்ணே என்னடி என் ஞானப்பெண்ணே
ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே மனிதன்
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும் பயன் பட்டு
வருவானோ ஞானப்பெண்ணே பயன் பட்டு
வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை, குழந்தையை மறந்து
திரிந்தவனை வாழ்த்துவதாகாதடி
தங்கம் மன்னிக்க கூடாதடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
https://www.youtube.com/watch?v=CNqT7kR7JSs
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
நன்று. ரசித்தேன் ஜி. வல்லிம்மா சென்ற வருடம் கேட்ட நேயர் விருப்பம்!
பதிலளிநீக்குவாங்க ஜி
நீக்குஇதை அப்பொழுதே எழுதி விட்டேன்.
சில பாடல்களுக்கு பிறகு என்று நினைத்தபோது அம்மா பதிவுகளுக்கு வரவில்லை.
காத்திருந்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது
ஆகவே இன்று வெளியிட்டு விட்டேன்.
பாடலை இரசித்தமைக்கு நன்றி ஜி
என்னடா வல்லி எப்போக் கேட்டாங்கனு திகைச்சுப் போயிருந்தேன். ஒரு வருஷம் ஆச்சா? அவங்க ஸ்விட்சர்லாந்தில் இருந்தாங்க. அங்கே தான் இருக்காங்களா, கிளம்பியாச்சானு தெரியலை. என்னமோ அவங்களும் இணையம் பக்கம் வராமல் இருக்காங்களே! :( இப்போத் துளசியும் கொஞ்ச நாட்கள் விடுமுறைனு சொல்லி இருந்தாங்க. ஆனால் வந்தாச்சு போல!
நீக்குஆம் ஒரு வருடம் கடந்தும் வல்லிம்மா பதிவுக்கு வராததால் வெளியிட்டு விட்டேன்
நீக்குஅப்படிப் போடு...!
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி
நீக்குசிறப்பு..
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குபாடலை ரசித்தேன். ஆமாம் ஆடம்பரம் நமக்கெதற்கு. என்று யோசித்தால் ஒவ்வொருவர் செய்வதும் அவருக்குக் கீழ்பட்டவர்களுக்கு (பொருள் பலத்தால் தாழ்ந்து இருப்பவர்கள்) ஆடம்பரமாகத்தான் தோன்றும்.
பதிலளிநீக்குவருக தமிழரே இருப்பவர் ஆடம்பரமாக வாழட்டும்.
நீக்குவாழ்க்கை வாழ்வதற்கே!
பணம் இருந்தும், நமக்குக் கீழே இத்தனைபேர் கஷ்டப்படும்போது நாம் எதற்கு ரொம்ப ஆடம்பரமாக இருக்கணும் என நினைப்பவர்கள் உயர்ந்தவர்கள். நான் பொதுவா ஆடம்பரமாக வாழ்வதில்லை
நீக்குநான் ஆடம்பரமாக வாழ்ந்தது இல்லை தமிழரே...
நீக்குமீள் வருகைக்கு நன்றி
உங்கள் கவிதையை படித்து கொண்டே வரும் போது தங்கபதுமை பாடல் நினைவுக்கு வந்தது. நீங்கள் அந்த பாடலையும் பகிர்ந்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகவிதையை நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
வல்லி அக்கா இந்த படத்தில் இன்னும் ஒறு பாட்டு அதையும் பகிர்ந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு பிடித்தது என்று. முதல் அடி நினைவுக்கு வரவில்லை,"கண்ணில் விழுந்த மலர் எடுத்து கற்பு நாரில் சரம் தொடுத்து'' என்று வரும் கண்இழந்த கணவனுடன் பெரிய மணியை அடித்து கொண்டே பாடுவார். மனதை என்னவோ செய்யும் அந்த பாடல்.
வருக சகோ பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குநீங்கள் சொன்ன பாடலையும் முயற்சிக்கிறேன்.
இன்றுகூட ஒரு பாடல் எழுதினேன் "அன்பு நடமாடும் கலைக் கூட்டமே" என்ற அவன்தான் மனிதன் பாடல்.
அன்பு நடமாடும் கலைக் கூடமே! நல்ல பாடல்.
நீக்கு"வாய் திறந்து சொல்லம்மா" என்று ஆரம்பிக்கும் அந்த பாடல்.
நீக்குhttps://www.youtube.com/watch?v=6WTZwnlWhfs
தங்கபதுமை பாடல்.
ஆம் சகோ இப்பொழுதுதான் இணையத்தில் தேடி எடுத்து கேட்டேன்.
நீக்குநீங்களும் வந்து சொல்லி விட்டீர்கள் .
கவிஞர் வாழ்க வாழ்க
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபட்டுக்கோட்டையார் பாட்டை இந்தக் காலத்திற்கு ஏற்ப தேவகோட்டையார் மாற்றிப் பாடிய விதம் நன்று. நன்றி
பதிலளிநீக்குவருக கவிஞரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஆசையா... ஒரு ஆடிக்காரு வாங்கப்போயி...
பதிலளிநீக்குஅதுக்குள்ளால இவ்வளவு அக்கப்போரும் நடந்து முடிஞ்சுடுச்சா....
பாடல் வரிகளைப் பார்க்கும்போது....
தேவகோட்டையாருக்கு "அடி" கொஞ்சம் பலமோ?....
வருக நண்பரே
நீக்குஆடிக்குப் வாங்கப்போயி ஓடிப்போறது மாதிரி ஆயிடுச்சு.
உங்களோட திறமைக்குக் கேட்பானேன் கில்லர்ஜி! மிக அருமை வழக்கம் போல்.
பதிலளிநீக்குபாடலை இரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குபாடல் நல்லாருக்கு கில்லர்ஜி! ஆடி காரை ஆடியில வாங்கினீங்களோ!!! அதான் பிரச்சனையாச்சோ!!!! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
வருக சகோ
நீக்குஆம் ஆவணியில் ஆவது போயிருக்கலாம் .
அன்பின் தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குஎன்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
நான் இந்தப் பாடலை உங்களிடம் சொல்லி இருந்தேனா.
என் தம்பி நினைவில் சொல்லி இருப்பேன்.
மிக மிக நன்றி.
வலைத்தளங்கள் வந்து ஒரு வருடமா ஆகிவிட்டது!!!!
என்னையும் நினைவு கொண்டு பதிவிட்டீர்களே.
மிக நெகிழ்வாக இருக்கிறது.
கொடுத்த பாடலுக்கு நீங்கள் ''ஆடி'' பாடல் கொடுத்தது
மிக சுவாரஸ்யம். படித்து, மீண்டும் படித்த் மகிழ்ந்தேன்.
இன்று உங்கள் பதிவுக்கு வந்ததற்கு நம் கோமதி அரசு தான் காரணம்.
பலவித யோசனைகள் குழப்பங்கள் என் சிந்தனைப் போக்கையே
மாற்றிவிட்டது.
இனியாவது எழுத முயல வேண்டும்.
உங்கள் குழந்தைகளும் குடும்பமும் நலமாக
இருக்க வேண்டும்.
வாங்க அம்மா தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குதொடர்ந்து எழுதுங்கள்
வாழ்க நலம்.
நலம் விசாரித்த அன்பின் கீதா சாம்பசிவம்,
பதிலளிநீக்குஅன்பின் கீதா ரங்கன், அன்பின் ஸ்ரீராம், அன்பின் கோமதி அரசு, அன்பின் நெல்லைத்தமிழன்
மற்றும் அனைவருக்கும் என் நன்றி.
தங்களது வருகைக்கு நன்றி அம்மா
நீக்கு