இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 05, 2023

அட்லீ & இட்லி

 

தி கிரேட் தேவகோட்டை தேனம்மை வீதி இலக்கம் ஐந்தாம் எண் வீட்டில் அழைப்பு மணியை நகராட்சி அதிகாரி நாகராஜன் அழுத்தி கதவு திறக்காதபோது...

 
வீட்டுல யாரும் இல்லைங்களா ?
வாங்க என்ன விசயம் ?
 
நாங்க நகராட்சியிலருந்து வாறோம்...
எதுக்கு வாறீங்க ?
 
மக்கள் தொகை கணக்கு எடுக்கணும்
எடுங்க...
 
சொல்லுங்க..
என்ன சொல்லணும் ?
 
வீட்ல யார், யாரு இருக்கீங்க ?
நாந்தேன் இருக்கேன்.
 
என்ன செய்யிறீங்க ?
இட்லி அவிச்சிக்கிட்டு இருந்தேன்.
 
ஹலோ என்ன வேலை செய்யிறீங்கனு கேட்டேன்
அதான் சொன்னேன்ல...
 
தொழில் சொல்லுங்க. ?
அதான் சொன்னேன்லங்க
 
முதல்ல உங்க பெயரைச் சொல்லுங்க ?
அட்லீ
 
என்ன தொழில் செய்யிறீங்க ?
இட்லி அவிச்சு விக்கிறேன்
 
இதை முதல்ல சொல்லலாம்ல...
அதான் சொன்னேன்ல...
 
உங்க மனைவி எங்கே ?
உள்ளே நாற்காலியில் உட்கார்ந்துதான் இருக்கா...
 
அவங்க வேலைக்கு போறாங்களா ?
இல்லைங்க வீட்டு வேலைதான்
 
வெளியில வேலைக்கு ஏதும் போறாங்களா ?
இல்லை அவளுக்கு போன மாதம்தான் ஆபரேஷன் செய்தோம்.
 
என்ன பிரச்சனை ?
கிட்னியில பிரச்சனை
 
ஓஹோ.. மகன் இருக்காரா ?  
ஆமா.
 
என்ன செய்யிறாரு ?  
சட்னி அரைக்கிறான்...
 
வேலைக்கு போறாரா ?
அதான் சொன்னேன்ல...
 
அப்ப வீட்டிலதான் எல்லோருக்கும் வேலை. இல்லையா ?
வேலை இருக்கு.
 
என்ன வேலை ?
இப்ப வேலை இல்லையானு கேட்டீங்க.. அதான் இருக்குனேன்.
 
நான் பேசுறது புரியுதா ?
புரிஞ்சுதானே பதில் சொல்றேன்
 
சரி உங்களோட மனைவி பெயர் என்ன ?
மதியழகி விளங்காதவளேனு கூப்புடுவேன்.
 
எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க சொந்தப் பேரு என்ன ?
மொக்கச்சி
 
உங்க மனைவி வயசு என்ன ?
பொம்பளைங்க வயசை சொல்ல மாட்டாங்களே
 
யோவ்... போய் ஆதார் கார்டு எடுத்துட்டு வாயா...
இந்தாங்க எங்களோட ஆதார் கார்டு
 
ஆதார்ல.... உங்க மனைவி பெயரு மங்காத்தானு போட்ருக்கு...?
அது பள்ளிக்கூடத்துல வச்ச பேருங்க...
 
உங்க பேரு அட்லீனு சொன்னீங்க அரளிமுத்துனு போட்ருக்கு ?
அது பள்ளிக்கூடத்துல வச்ச பேருங்க...
 
உனக்கு சொந்த ஊரு எது ?
விராலிமலை
 
வயசு எத்தனை ?
ஆதார்ல போட்டுருக்குமே...
 
ஏன் நீங்க சொல்ல மாட்டியளோ...?
அதுல ஒரு வயசு குறைச்சு போட்ருக்கும் அதான்...
 
மகன் பேரு என்ன மொடக்காத்தானா ?
ஆமா எங்க குலசாமி பேரு...
 
உனக்கு மட்டும் அட்லீனு வச்சுக்கிட்டே...
என்னோட மகன் அட்லீ ஸார் ரசிகராம் அவன்தான் வச்சான்..
 
இவன் யாரு  ?
இவன் ரெண்டாவது பையன் பொடுகுமலை, வீட்ல செல்லமா புருசுழினு கூப்புடுவோம்.
 
சொல்லவே இல்லை ?
நீங்க கேட்கவேயில்லை சட்னி தாழிக்க கடுகு வாங்க போனான் இப்பத்தான் வார்றான் அதோட நானும் மறந்துட்டேன்.
 
சரி இவனோட ஆதார் கார்டு எங்கே ?
இதோ எடுத்துட்டு வாறேன்.
 
உன்னைப்போல ரெண்டு பேரை பார்த்தால் போதும்யா... விளங்கிடும்.
இந்தாங்க சின்னவனோடது.
 
என்னய்யா மகன் பேரு ரிச்சர்டுனு போட்ருக்கு ?
ஆமாங்க ஆதார் தரும்போதே இப்படித்தான் இருந்துச்சு
 
தப்பா அடிச்சு இருக்குனு சொல்லி கேட்க வேண்டியதானே ?
அதுக்கு ஐநூறு ரூபாய் கேட்டாங்க... அதான்..
 
அதுக்காக இப்படி வேற மதத்து பெயரா இருக்கலாமா ?
இதுதான் ரிச்ஷா இருக்கு மாத்த வேண்டாம்னு இவனும் சொன்னான்.
 
ரிக்ஷாவா?.
அதான் சார் ஸ்டைலு...
 
இதுக்கு மேலே வீட்ல யாரும் இருக்காங்களா.... அதச்சொல்லுயா..?.
மணி மட்டும் இருக்கான்.
 
அது யாரு மூணாவது பையனா ?
இல்லைங்க எங்க வீட்டுக் காவல் தெய்வங்க...
 
காவல் தெய்வமா... என்னையா சொல்றே ?
இப்பத்தான் பக்கத்து வீட்டு நிம்மி கூட்டிக்கிட்டு போச... இதோ வந்துட்டான்
 
யோவ் நாய் கணக்கு எடுக்க வரலை உங்க வீட்ல வேற யாரும் இல்லையே...
இல்லைங்க அம்புட்டுதான்.
 
உன்னோட போன் நம்பர் சொல்லுயா ?
எனக்கு நம்பர் சொல்ல வராது இருங்க மூத்தவன்ட்ட எழுதியாறேன்.
 
பட்டுனு எழுதி கொண்டு வாயா ?
இந்தாங்க இதான் நம்பரு...
 
ச்சே இன்னைக்கு யாரு மூஞ்சியில் முழிச்சேனோ..... என்று புலம்பிக் கொண்டே இடத்தை விட்டு நகர்ந்தார் நகராட்சி அதிகாரி நாகராஜன்.
 
கில்லர்ஜி தேவகோட்டை


Share this post with your FRIENDS…

37 கருத்துகள்:

  1. அடடா..
    அட்டுலியும் இட்டலியும்
    அதுக்கப்புறம்
    சட்டுனியும்...

    அருமை.. அருமை.

    பதிலளிநீக்கு
  2. இதென்னய்யா.. இது,?.. டெலிபோன் நம்பரக் கேட்டா பட்டு.. ன்னு எழுதியாந்திருக்கே!..

    நீங்கதானே பட்டு ன்னு எழுதி வாங்கிட்டு வாய்யா.. ன்னீங்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இடத்தில் பொம்பளைங்க இருந்தால் இப்படி சந்தேகம் வருமே...

      நீக்கு
  3. நாங்கூட அட்டுலியின் இட்டலி அர வேக்காடா இருக்குமோன்னு நெனச்சேன்!..

    பரவாயில்லே.. கல்லா கட்டிரலாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லால் கட்டாமல் இருந்தால் சரிதான் ஜி

      நீக்கு
  4. நகராட்சி அதிகாரிகளை இந்தப் பாடு படுத்தறாரே... ஓ... இத்தனை இட்லி செரிக்கணுமே என்பதற்காக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இட்லி சாப்பிட கொடுத்து இருக்காரே...

      நீக்கு
  5. அட்லி னு சொல்றீங்களே... அவர் இப்போ நிறைய பணம் வந்ததும் சதை போட்டு ஆளே மாறிட்டாரே.. பாத்தீங்களா?

    பதிலளிநீக்கு
  6. அட்லீயின் இட்லியை சுவைத்தேன்.  சட்னியில் கடுகு இல்லாவிட்டாலும் காரம் அதிகம்.  நாகராஜன் தனது பெயரை சோகராஜன் என்று மாற்றிக்கொண்டு விட்டாராம்.  அடுத்த கணக்கெடுப்பு எங்கே, நிம்மி வீட்டிலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நாகராஜன் லீவு போட்டு கும்மிடிப்பூண்டி போய் விட்டாராம்.

      நீக்கு
  7. அவர் பெயர் அட்லீயாக இல்லாமல் ஜெட்லீயாக இருந்திருந்தால் இட்லிக்கு பதில் நூடுல்ஸ் செய்து கொண்டிருந்திருப்பாரோ...

    பதிலளிநீக்கு
  8. நாளைக்கு ஏதும் பிரச்சினை வந்துடக் கூடாது..

    நா அட்டுலி.. ன்னு தான் சொல்லி இருக்கேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சட்டப்பிரச்சனை வந்து விடக்கூடாது.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அட்லி, இட்லி, கிட்னி, சட்னி வார்த்தை விளையாடலை ரசித்தேன். கணக்கெடுப்பவர் இவர் வீட்டிற்குப் பின் கண்டிப்பாக களைப்பாகி அடுத்து ஏதாவது உணவகம் நோக்கி சென்றிருப்பார். (இரண்டு இட்லியாவது சாப்பிட்டு மீண்டும் உடம்பை தெம்பாக வைத்துக் கொள்ள வேண்டி. ))) ) நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. அருமையான எழுத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. அருமையான நகைச்சுவை பதிவு.
    மதியழகி என்று அழகாய் கூப்பிடுவதை விட்டு கூட விளாங்காதவளே எதற்கு?
    காவல் தெயவம் மணியின் பேரும் ஆதாரில் கண்டிப்பாய் இருக்கனும் யார் கேட்கிறா!
    கேள்விக்கு பதில் இப்படி கிடைத்தால் நாகராஜன் சீராமல் என்ன செய்வார்?
    இப்படியெல்லாம் யோசித்து பதிவு போடுவதற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. சீறாமல் என்ன செய்வார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  12. ஹாஹாஹாஹா கில்லர்ஜி பதிவு வாசித்து சிரித்துவிட்டேன் அட்லி ய வைச்சு இட்லி செஞ்சுட்டீங்க! இல்லை இல்லை இட்லி உப்புமா கிளறிவிட்டீங்க பின்ன அந்த அதிகாரி நொந்து நூடுல்ஸ் ஆகி கடுப்பாகியிருக்கிறாரே!

    இந்த கணக்கெடுப்பு ஆதார் ல பேர் வித்தியாசம் கூப்பிடும்.பெயர்...இப்படி குழப்பம் சமீபத்துல ஒரு வாட்ஸ்அப் வீடியோ காமெடி வீடியோ வந்திச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை ரசித்து, சிரித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  13. அது என்ன விளங்காதவளேனு கூப்பிடறார். நல்லாவே இல்லை. அட்லி, இட்லி, சட்னி எல்லாம் நல்லா இருக்கட்டும். அநேகமாகக் கணக்கு எடுக்கப் போறவங்களுக்கு இப்படித்தான் அனுபவங்கள் கிடைக்கலாம். நல்லாவே யோச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அட்லீ தன்னோடு மனைவியை ஆசையாக கூப்பிடுகிறார் அதில் நாம் தலையிட முடியாது...

      பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  14. இந்த அட்லீ நமக்கு சுதந்திரம் கொடுத்த இங்கிலாந்து பிரதமர் அட்லீ தானே. அவர் இப்போ இட்லி சுடுறாரா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
  15. ஓகோ.. கீழே போட்டோவுல இருக்கிறவர்தான் அட்லீயா?!!! இருக்கட்டும்... இருக்கட்டும்...
    நான் கேட்க வந்தது என்னன்னா... இட்டலிக்கு நடுவுல இருக்குற சட்டினியில "கடுகு" ஒண்ணு முளைச்சி நிக்குதே ஒரு வேளை நம்ம அட்லீ அவசரத்துல கடுகை தாளிக்காமல் போட்டுட்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கடுகு இட்லியிலேயே முளைக்குதா ?

      நீக்கு
  16. ஐயோ பாவம் நகராட்சி ஊழியர், ஒருவழியாக்கி விட்டீர்கள். நாங்கள் ரசித்தோம் என்பது வேறு விஷயம்..:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் இது அட்லீயை கேட்க வேண்டிய கேள்வி.

      நீக்கு
  17. நகைச்சுவை நமக்கு .நகராட்சி அதிகாரி பாவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு