இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 15, 2024

ஃப்ரான்ஸ், ஃப்ரொபஸர் ஃப்ரான்ஸிஸ்

ணக்கம் நட்பூக்களே... எனக்கு வெகுகாலமாக ஓர் சந்தேகம் உண்டு அதை தங்களிடம் கேட்கும் எண்ணத்தோடு பதிவைத் துவங்குகிறேன்.
 
ஒரு மனிதனுக்கு திருமணம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவனது திறமையால் உயர்ந்து செல்வந்தன் ஆகிவிட்டான் என்றால் அவனது மனைவி வந்த நேரம் என்று சொல்கின்றார்கள். இதை பரவலாக பார்த்தும் கேட்டும் இருப்பீர்கள்.
 
அதேநேரம் திருமணத்திற்கு முன்பு மது அருந்தாத நல்லவனாக இருந்தவன். தனது அடங்காப்பிடாரி மனைவியின் டார்ச்சரால் குடிகாரனாகி இருந்த சொத்துகளையும் இழந்து விட்டான் என்றால் மட்டும் இதற்கு காரணம் மனைவி என்று சொல்வதில்லையே ஏன் ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
ஒரு மருத்துவனைமனையில் கால் நரம்பு பிரச்சனையால் நடக்க முடியாமல் இருந்த நடராஜனை அறுவை சிகிச்சை செய்கிறார்கள். நல்ல விதமாக செய்து முடிக்கின்றார்கள். இதை மிகப்பெரிய சாதனையாக சொல்லி தங்களது மாஞ்சாக்காடு மருத்துவமனையின் பெயரை பிரபலப்படுத்தி விளம்பரம் செய்கின்றார்கள்.
 
அதேநேரம் அந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்து நொண்டிக் கொண்டு இருந்த நடராஜனை தவழ்ந்து போகும் நிலைக்கு ஆளாகும் பொழுது இதற்கு எங்களது மருத்துவமனைதான் காரணம் என்று ஆர்த்தோ மருத்துவர் ஆரோக்கியம் வெளியே சொல்வதில்லையே ஏன் ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
திருமால் வீட்டு திருமணத்தில் சமைத்த அசைவ உணவு பிரமாதமாக இருந்தது என்றால் எங்களது குரூப் சமையல் எப்பொழுதுமே இப்படித்தான் என்று எல்லோரிடமும் சொல்லி பெருமை பீற்றிக் கொள்கிறார் சமையல்காரர் காமேஸ்வரன்,
 
அதேநேரம் மொக்கையனின் சின்ன வீட்டின் குழந்தையின் காதுகுத்து வைபவத்தில் சமையல் சுவையாக இல்லை என்று புகார் சொன்னால் நீங்கள் வாங்கி கொடுத்த ஆச்சி மசால் பொடியில் பூச்சி கிடந்தது என்று சொல்கிறார்களே ஏன் ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
சில சமூகத்தார் நாங்கள்தான் விடுதலை போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்து உயிர் நீத்தவர்கள் எங்களில் பலரும் தியாகிகளாக இருக்கிறார்கள், நாங்கள் வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் என்று பொதுவெளியில் பிற சமூகத்தாரிடம் பெருமை பேசுகின்றார்கள்.
 
அதேநேரம் இதே சமூகத்தார் அரசிடம் எங்கள் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து எங்களுக்கு உதவித்தொகை வழங்கு, உரிமை வழங்கு, இடஒதுக்கீடு வழங்கு என்று கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் கோரிக்கை வைக்கிறார்களே ஏன் ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
தங்களது மகள்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர் அவர் குடிக்காத மாப்பிள்ளையாக வேண்டும், நிறைய சம்பாத்தியத்தில் இருக்க வேண்டும் என்று புரோக்கர் புருஷோத்தமனிடம் கேட்கிறார்கள்.
 
அதேநேரம் தங்களது மகனை பெண் வீட்டார் குடிகாரன் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று ஒதுங்கினால், இன்றைக்கு யார்தான் மது குடிக்காமல் இருக்கிறார்கள் என்று கொஞ்சம்கூட நியாய தர்மமின்றி வாதம் செய்கின்றார்களே ஏன் ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
தங்களது வீட்டுக்கு வந்த மருமகள் உடனே குழந்தை பெறவில்லை என்றால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யாமல் அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது எங்களது தலையில் கட்டி வைத்து விட்டார்கள் என்று குற்றம் சொல்கின்றார்கள்.
 
அதேநேரம் தங்களது மகளை கட்டிக் கொடுத்த இதே பிரச்சனையை இதேபோல் சொன்னால் மருத்துவமனை சென்று பரிசோதிக்காமல் அதற்கு தங்களது மருமகன்தான் காரணம் என்று சொல்கின்றார்களே ஏன் ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
அதேபோல ஒருவன் படித்து அம்பேரிக்கா போய் ஐ.டி.யில் வேலை செய்து நன்றாக சம்பாதித்து உயர்ந்த பதவியில் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை அவன் படித்த பள்ளி இங்குதான் படித்தான் என்று பீற்றிக் கொள்கிறது. இதில் அவனது ஆரம்பபள்ளி ஆசிரியர் ஆராவமுதன் முதல், அவனது கல்லூரி ஃப்ரொபஸர் ஃப்ராஸிஸ் வரையில் பெருமை கொள்கிறார்கள்.
 
அதேநேரம் இதே பள்ளி முதல், கல்லூரி வரையில் படித்து வேலை கிடைக்காமல் வங்கி கொள்ளையில் ஈடுபட்டு பெருங்கொள்ளையனாகி விட்ட கொல்லிமலையானை மட்டும் இவன் எங்கள் கல்லூரியில்தான் படித்தான், நாங்கள்தான் இவனது ஆசிரியர்கள் என்று சொல்வதில்லையே ஏன் ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
கில்லர்ஜி புதாபி
 
Chivas Regal சிவசம்போ-
நரம்பில்லாத நாக்கு நாலு விதம் இல்லை நாற்பது விதமாக பேசும்.

16 கருத்துகள்:

  1. மனைவி என்பவள் வேற்று வீட்டுப் பெண். அதனால் அவளை உற்சாகப்படுத்தும் விதமாகச் சொல்வார்கள். ஒருவன் நொடித்துவிட்டாலும் பழி அவள் மீதுதான் விழும்.

    இங்கு ஒன்றை எழுத நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவருடைய அக்கா திருமணம் நடைபெறும் அன்று காலை மாமனார் இறந்துவிட்டார். அறையிலேயே (மண்டப) பிறருக்குத் தெரியாமல் வைத்துவிட்டு திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு முப்பது வருட மணவாழ்க்கையின் ஒரு நாள்கூட புகுந்த வீட்டார் இந்தச் சம்பவத்தைச் சொல்லி பெண்ணை இணைத்துப் பேசியதில்லையாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      அந்த குடும்பத்தினர் உயர்வானவர்கள்.

      வாழ்த்துவோம்.....

      நீக்கு
  2. உங்க கேள்விகளெல்லாம் சரிதான். இருந்தாலும் விளம்பரம்னு வரும்போது நல்லதை மாத்திரமே சொல்லுவாங்கதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பெருமைக்காக... மாவு அரைப்பவர்கள்.

      நீக்கு
  3. கோபாலசாமி மிகப் பொருத்தமான படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இருந்தாலும் இப்படியும் ஓரவஞ்சனை.....

      நீக்கு
  4. உண்மைதான், நீங்கள் சொல்வது போல நாக்கு நாலும் பேசும், நாற்பதும் பேசும்.
    நேரத்திற்கு ஏற்றார் போல பேசும்.
    திருவள்ளுவர் சொன்னது போல நாவை காத்து கொள்ள வேண்டும்.
    பொதுநல பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. நியாயமான உண்மையான கேள்விகள். அடங்காப்பிடாரிக்கு அடங்கி குடிக்காமல் வாழ்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. அது போல் நடக்க வைக்க முயற்சி செய்தும் நடக்க முடியாமல் போனது நடராஜனின் குற்றம் இப்படிப் பேசத்தான் பெரும்பான்மையோர் விரும்புகிறார்கள். விரும்புவார்கள். மற்றவர்கள் ஓரமாக குமுறிக் கொண்டு வாழத்தான் முடியும் இங்கு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நீங்கள் கூறியவற்றில் பலதும் உண்மைதான். தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என நினைப்பவர்கள்தான் இன்று உலகில் அதிகம். இந்த நாவும் பல சமயங்களில் அவரவர் நினைப்பதை பேச ஒத்துழைத்து விடுகிறது. மனதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்வது போல், நாவையும் கட்டுப்படுத்த கற்பது நன்று. நல்ல ரசனையான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. கில்லர்ஜி! இதுதான் நரம்பற்ற நாவுடைய சமூகம்.

    ரேங்க் வாங்கும் பிள்ளைகளின் ஃபோட்டோ போட்டு விளம்பரப்படுத்தும் பள்ளிகளை விட்டுட்டீங்களே கில்லர்ஜி! என்று சொல்ல நினைத்தேன் கடைசில சொல்லிட்டீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  8. வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் எப்போதுமே அதிகம்.  தோல்வி என்பது எப்போதுமே அனாதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்து உண்மைதான்....

      நீக்கு